16 February 2023

இராசேந்திரசோழனின் சாவி

எந்த அரசியலைச் சார்ந்தவராக இருந்தாலும் கட்சி எங்கேயாவது கண் சிமிட்டிவிடும். இந்தக் கதை என்றில்லைபொதுவாகவே இவர் கதைகள் எதிலுமே அசல் வாழ்க்கையும் மனித அடி மனத்தின் ஆசைகள் பாலியல் விழைவுகள் குணங்கள்தாம் வெளிப்படுகின்றனவேயன்றி சார்பையே காணமுடிவதில்லை. 

அரசியலை விடுங்கள் பாத்திரங்களுக்கிடையில் கூட சார்பு காரணமான சாய்வைப் பார்க்கமுடிவதில்லை. எந்த பாத்திரத்திற்கும் இவர் ஒலிபெருக்கியாகவோ வக்கீலாகவோ இருப்பதில்லை. அதற்காகக் கதைகளில் அமைதி தவழ்கிறதா என்றால் அதுவுமில்லை. வசவுகள் முதல் அடிதடி வரை வாழ்வில் இருக்கிற எதற்கும் குறைவில்லை. அனைத்தும் அப்பட்டமாகக் கொட்டிக்கின்றன. இவ்வளவு இருந்தும் கதைகளில் சத்தமேயில்லை. 

எதுவுமே சொல்லாததைப் போலசொல்லாததே இல்லை என்கிறபடிக்கு எல்லாவற்றையும் சொல்வது சாமானிய காரியமில்லை. இது பெரிய கைகளுக்கே உரிய எளிய சாயல்.

என்ன செய்திருக்கிறார் எப்படிச் செய்திருக்கிறார்