16 February 2023

உலகச் சிறுகதைகள் 1 ரேமண்ட் கார்வர்

கருத்தைச் சொல்வதல்ல கதை. கதை மாந்தர்களை உருவாக்குவதன் மூலம் அவர்களோடு, தன்னைப் பொருத்திப் பார்த்து, வாசகனே கருத்தை உருவாக்கிக்கொள்ள வைப்பதுதான் கதை. எனவேதான் இலக்கியத்தில் கதை மட்டுமின்றி சொல்லப்பட்டிருக்கிற விதமும் முக்கியமாகிறது.

இப்படியெல்லாம் சுற்றிவளைத்து, படிப்பவனைக் கஷ்டப்படுத்தவேண்டுமா என்றுகூட சிலருக்குத் தோன்றக்கூடும். எல்லா விஷயங்களையும் குறிப்பாக நுண் உணர்வுகளை அரசியல்சினிமா மீட்டிங்குகளைப் போல அனைவரும் கைத்தட்டி ஆரவாரிக்கும் விதமாகச் சொல்லிவிடமுடியாது. ஆரவாரிக்கிற கும்பலே கூட, பேச்சுக்கோ பேச்சின் பொருளுக்கோ கூக்குரலிடுவதைவிடவும் குறிப்பிட்ட சொற்களுக்குத்தானே கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கின்றன. 

ஆனால், இலக்கியத்தில் குறிப்பிட்ட சில சொற்கள் மட்டும் அல்ல, ஒவ்வொரு சொல்லும் முக்கியம். சொற்களின் பொருள் மட்டுமின்றி தொனியும் முக்கியம். ஏனெனில்இங்கே எழுதப்படும் விஷயம்’, குறிப்பிட்ட வார்த்தையைக் கேட்டாலே மெய்சிலிர்த்து விசிலடித்து ஆரவாரிக்கும் மேலோட்டமான கும்பலுக்கானதில்லை, ஆழமானது. தனிமனிதனுக்கானது. 

புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் 1 வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர்