08 February 2023

மூன்று சூப்பர் ஸ்டார்கள்

45 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொள்கிறவனிடம்  என்ன எதிர்பார்ப்பீர்கள் - எழுதியிருப்பவை அமரகாவியங்களோ இல்லையோ குறைந்தபட்சம் அவன் எழுத்தில் தகவல் பிழைகளோ மொழிக் குளறுபடிகளோ தர்க்கப் பிழைகளோ இருக்காது என்று நம்புவீர்கள் இல்லையா. 

சாருவின் அடிமைச் சீடர்களைப்போல ரொம்ப வெட்டியாக இருந்தால் பெயர் என்று எழுதியிருக்கிற வழக்கமான போலிப்புலம்பல் கருமத்தைப் படித்துப் பாருங்கள். உருப்படியாக எழுத ஆசைப்படுகிறவராக இருந்தால் கீழே இருப்பவற்றைப் பார்த்தால் போதும்.

ஆற்றொழுக்காய் குட்டிக்கதையொன்றைச் சொல்ல ஆரம்பிக்கிறான் சாரு. 

இதில் அகோரியின் பெயர் விமலானந்தா என்றும் அவரது சீடரின் பெயர் ராபர்ட் என்றும் சொல்கிறானா. சரி கொஞ்சநேரம் கழித்து என்ன ஆகிறது என்று பாருங்கள் 

விமலின் பேட்டி வருகிறது. குரு சிஷ்யனின் பேட்டியைக் காண ஆர்வத்தோடு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னே வருகிறார் என்கிறான். 

இருப்பவை விமல், ராபர்ட் என்று இரண்டே பெயர்கள்தானே. 

என்னடா இது. யார் குரு யார் சிஷ்யன் என்று குழப்பமாக இருக்கிறதா. 

இருக்கட்டும் அடுத்த வரியைப் பாருங்கள் ராபர்ட் தன் குருநாதர்களின் பெயர்களைச் சொல்கிறார் என்று எழுதுகிறான் 45 வருடங்களாக எழுத்தில் குப்பை கொட்டிக்கொண்டிருப்பதாகப் பீற்றிக்கொள்ளும் சாரு. 

இப்படிக் குப்பை குப்பையாக எழுதிக் குவித்தவையெல்லாம் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்று அடித்துவிட்டு இணையத்தில் இவன் துட்டு கேட்டுக்கொண்டிருக்கிறான் என்றால் ஸீரோடிகிரி எழுத்துப் பிரசுரம், பரமாச்சாரியார் எழுத்தில் தப்பிருக்க வாய்ப்புண்டா என்று  படித்தே பார்க்காமல் எல்லாவற்றையும் அச்சடித்துத் தள்ளி மூன்றே நாட்களில் 500 காப்பி என்று அது ஏமாந்தவன் தலையில் மிலகாய் அரைத்து கல்லா கட்டிக்கொண்டு இருக்கிறது. 

ஏற்கெனவே சாருவின் ப்ளாகில் வெளியானவற்றின் காப்பி பேஸ்ட்தான் அது என்று இணையத்தில் பலரும் சொல்லிவிட்டார்கள்.

வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப்போல 

ஜெயமோகனையும் எஸ். ராமகிருஷ்ணனையும் சேர்த்துக்கொள்கிறான் 

என்று. 

இவர்கள் எல்லோரும் விரல் சூப்பிக்கொண்டு இருந்த 70களில் கசடதபற என்கிற சிறுபத்திரிகை இலக்கிய இளைஞர்களின் கலகக் குரலாக வெளியானது. 50 வருடங்கள் கழித்து அந்த இதழ் முழுவதும் இலக்கிய வரலாற்று ஆவணமாக கிண்டிலில் கசடதபற முழுத்தொகுப்பு என்கிற நூலாகக் கிடைக்கிறது. 

தமிழ் இலக்கியத்தின் ஏக சக்ராதிபதியான ஜெயமோகன், பிரைவேட் லிமிடெடாக நடத்தும் தமிழ் விக்கியில் கசடதபற பற்றி ஏதும் இருக்கிறதா என்று தேடிப்பார்ப்போமா.


இரண்டில் எதை அழுத்தினாலும் கிடைப்பது இதுதான். 


ஏன் என்று நினைக்கிறீர்கள். கசடதபற பற்றி எழுதினால் அது கிண்டிலில் கிடைப்பதைக் குறிப்பிடவேண்டும்.  குறிப்பிட்டால் 50 வருடம் கழித்து இதைத் தொகுத்து வெளியிட்டது விமலாதித்த மாமல்லன் என்பது தெரிந்துவிடும். 


விமலாதித்த மாமல்லன் என்கிற பெயரே ஏன் விக்கியில் இல்லை என்கிற கேள்வியை விஷ்ணுபுர அடிமைகளே கூடக் கேட்கத் தொடங்கிவிடுவார்களே. எனவே விமலாதித்த மாமல்லன் என்று ஒருவன் இந்த உலகிலேயே இல்லை என்று இருட்டடிப்புச் செய்துவிடுவதே உத்தமம். இதுதான் ஜெயமோகனின் அறம் முறம் எல்லாம். 

முன்னோடிகள் மூத்த எழுத்தாளர்கள் என்று எல்லோர் மீதும் மூச்சா அடித்துக்கொண்டிருந்த சாரு பழுப்புநிறப் பக்கங்கள் என்கிற இரவல் எழுத்தை வைத்து தினமணியில் ரொப்பி வைத்ததை வெட்கமே இல்லாமல் ஸீரோடிகிரி புத்தகமாக வெளியிட்டபின் சாரு, போலியாய் நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் புகழ்ந்தேத்தும் போர்வீரனாகிவிட்டான். இருந்தாலும் இந்த கசடதபற புத்தகம் பற்றி இன்னும் மூச்சு கூட விடவில்லை. 

இப்படி ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறேன் என்று நானாக வாய்விட்டுச் சொன்ன பிறகாவது அப்படியா மாமல்லன் நல்ல விஷயம் என்று, சாரு சொல்கிற மூவரில் ஒருவரான  எஸ். ராமகிருஷ்ணன் மட்டுமே இந்தக் குறிப்பையாவது எழுதினார். 

எழுத்துக் கலை புத்தகத்தின் இரண்டாவது கட்டுரையே எஸ்.ராவின் எழுத்தைப் பற்றிய விமர்சனம்தான். புக்ஃபேரில் அதை அவர் கடையில் வைக்க நான் தயங்கியபோது, பரவாயில்ல மாமல்லன் விமர்சனம்தானே என்று தம்முடையை தேசாந்திரி கடையிலேயே வைத்து அந்தப் புத்தகத்தை விற்றார்.

எழுத்துக் கலை புத்தகத்தின் கடைசி கட்டுரை அழகிய சிங்கரின் பேஸ்புக் போஸ்ட்டை விளாசித் தள்ளியது. இந்த புக் ஃபேரிலும் அவருடைய விருட்சம் கடையில் என் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

சாருவையும் ஜெயமோகனையும் விமர்சிக்கிறேன் என்பதைத் தவிர கசடதபற புறக்கணிப்புக்கு வேறு என்ன காரணம் இருக்கமுடியும். பொது அக்கறைப் பசப்பெல்லாம் சுத்த மோசடி. இவர்களின் ஒரே நோக்கம் சுயநலன் மட்டுமே.

இலக்கிய விமர்சனம்ஜெயமோகன் 


பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம் 

https://amzn.to/3TtwnqU 


ஜெயமோகனின் மாடன் மோட்சம் சிகரமா தகரமா 

https://amzn.to/3pVeVhi 


ஜெயமோகனின் படுகை 

https://amzn.to/3wH4bXA 


ஜெயமோகன் என்கிற பிறவி மொக்கை 

https://amzn.to/3R27LUw 

 

ஜெயமோகனின் கோத்திரம் என்ன? 

https://amzn.to/3AXhG8b 


ஜெயமோகன் குழுமத்தில் விட்ட குமிழிகள்

https://amzn.to/3QZhQBJ 


அயோக்கியத்தனமே ஜெயமோகனின் அறம் 

https://amzn.to/3KCPIBR 



இலக்கிய விமர்சனம்சாரு நிவேதிதா 


பிணவறைக் காப்பாளன் - போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் 

https://amzn.to/3PZVgaA 


சாரு எஸ்.ரா ஜெமோ பிறகொரு கொசு 

https://amzn.to/3e0O9RX 


சாருவின் பாகவதர் பஜனை 

https://amzn.to/3Ku0Q43 


என் வேலையும் சாருவின் லீலையும் 

https://amzn.to/3AZaIjc 


சுயகெளரவம்: சாட்டும் நோட்டும் 

https://amzn.to/3e2Sl3I