08 September 2010

வாரா வாரத் தீட்டு

மதார் said...
பக்கங்களை நிரப்பத்தான் ஒரு எழுத்தாளன் மித மிஞ்சிய கற்பனைகள் கலந்து எழுதுகிறார் என்றால் கல்கியின் பல நாவல்கள் பாகங்களில் வராமல் ஒரு சில பக்கங்களிலேயே முடிந்திருக்கும் . ஒரு தாய் குழந்தையை பெற்றெடுத்தாள் என்று ஒரு வரியில் முடிப்பதைவிட அதற்கு முன் அவளின் எதிர்பார்ப்புகள் , வலிகள் , சந்தோசங்கள் என்று வார்த்தைகளால் விவரிக்கும் போதே அத்தருணத்தை முழுமையாய் ஒரு வாசகனை உணரச் செய்ய முடியும் . நம்மையும் அறியாமல் வாசிக்கும் வார்த்தைகள் மூலமே அக்காட்சியை நம் கண் முன்னே கொண்டு வருவதுதானே ஒரு எழுத்தாளனின் கற்பனைகளும் எழுத்துகளும் ?



இப்போதுதான் சுகுமாரன் தொலைபேசியில் சொன்னார் வாளால் சவரம் செய்யாதே என்று.

என்ன செய்யறது கடைனு தெறந்துட்டா கஸ்டமர்ஸ் வந்துண்டேதான இருப்பா. மழிக்கறத மழிச்சும் செரைக்கரதை செரைச்சும்தானே ஆகனும். என்ன ஒரு பதைப்புன்னா சவரம் பண்ணிக்கும்போது அசங்காம இருக்கணும்னு அவாளுக்கு தெரியனும் எக்குதப்பா சிலும்பினா சிராய்ச்சுடும் மனசுல.

இங்கே நடந்து கொண்டிருக்கும் விவாதம் உங்களுக்கு தெரியவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

முதல் விஷயம்.

கல்கி எழுதியது இலக்கியமா?

எழுதுவது எல்லாம் இலக்கியமா?

உங்கள் வீட்டு பாப்பா எழுதியது கிறுக்கலாக இருக்கிறது என்று கூறுவது கபோதம். தான்தோன்றித் தர்க்கம். கலப்படமற்ற முட்டாள்தனம்.

அது உங்களது பொக்கிஷம் அதை காலத்திற்கும் போற்றிப் பாதுகாப்பீர்கள். குழந்தை பெரியவளாகி அவளுக்குக் குழந்தைகள் பிறந்து அவர்களை எடுத்துக் கொஞ்சும் போது, அல்லது

அந்தக் குழந்தை நிவேதிதா, கீழே வாசித்துப் போடப்பட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஏதோ கிறுக்கிக் கொண்டு இருக்கிறாள், அந்த வீட்டில் பென்ஷனில் ஹிந்து வாங்குவது அதிக செலவாகிறது என முகத்துக்கருகில் கைநீட்டி மருமகன் சொன்ன தினத்திலிருந்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு மனமே இல்லாமல் வேறு விதியும் இல்லாமல் மாறியாகிவிட்டது. வெறும் குழந்தைக் காப்பாளனாக ஆகிவிட்ட வாழ்வு. ஒரு காலத்தில் எத்தனை இணைய தளங்களில் எத்துனை எழுத்தாளர்களிடம் மல்லுகட்டியிருப்போம், இலக்கியம் பற்றி ஏபிசிடி கூடத்தெரியாவிட்டாலும். கேவலம் ஒரு பேப்பருக்கு அதை விருப்பப்படி வாங்கிக் கொள்ளக்கூட வழியில்லை. ம் இத்தனைக்கும் பென்ஷன் பணம் மிகக் கம்மியானதற்குக் காரணமே இந்தக் கடன்காரன்தான். இருக்கிற இந்த வீடு யாருக்காக. ஒரே பெண், என் காலத்திற்குப் பிறகு, வீட்டுக்காரியும் இல்லை அப்போ அவளுக்குதானே. அதற்குள் என்ன அவசரம் இன்னொரு வீட்டிற்கு. கண்னைக் கசக்கினாள் குழந்தை. ஒன்றுமே யோசிக்கவில்லை. கையெழுத்துப் போட்டு கொடுத்தாகிவிட்டது. கம்யூட் பண்ணி காசாகக் கையில் வாங்கியாயிற்று. மாமா எதுக்கும் கவலைபடாதீங்க. நா உங்க மருமகன் இல்லை மகன். நீங்க சந்தோஷமா என்னோடதான் இருக்கப் போறீங்க. கடசீ வரைக்கும் ஒரு பைசா என்றால் ஒரு பைசா செலவழிக்க விடமாட்டேன். ஆமாம் சொல்லிட்டேன். உங்க பென்ஷன் அப்பிடியே பேக்குலதான் இருக்கணும். மாசா மாசாம் நீங்க பேன்க் போவதே பாஸ்புக்கில் என்ட்றி போட மட்டுந்தான். இல்லைனா அடிச்சிகிட்டுப் போயிடுவான். அப்துல் கலாம் பென்ஷனையே ஒரு பேன்க் காரன் தன் அக்கவுண்டாட்டம் யூஸ் பண்ணிகிட்டு இருந்தான், நீங்க படிக்காத பேப்பரா? உங்களுக்குத் தெரியாத விஷயமா?

வெண்ணையாக பேசினான். ஒரே பெண் ஆசைப்பட்டுவிட்டாளே என்று கட்டிக்கொடுத்தது. சொந்தத்திலேயே சோமசுந்தரம் அலையாய் அலைந்தான். இன்னும் கூட கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் கவிதை புத்தகம் கூட ஏதோ போட்டிருக்கிறான். ரம்யா ஒரே வார்த்தையில் புத்தகத்தையே மூடிவிட்டாள். சரிதான் அப்பா அவன் ஆசைப்படுவது. ஆனால் நான் விரும்புவது அறிஞனை அல்லவா. வேற்று ஜாதிக்காரன். அசல் ஊர். அரசாங்கத்தில் பெரிய பதவி. சீக்கிரம் பெரிய அளவிற்கு முன்னேறிவிடுவான். சொந்தங்களின் அத்துனை ஜாடைப் பேச்சுக்களையும் அவமானங்களையும் சகித்துக் கொண்டது அவள் மனதிற்காக. அப்போதே ஏதோ தட்டியது. ஜாதி என்றில்லை. கொஞ்சம் இறுக்கமானவன் என்று. நல்லதுதானே பெண்ணின் வருங்காலத்திற்கு கட்டுசெட்டாக இருப்பவன் நாலு காசு சேர்த்துவைப்பானென்று. இப்படி தம்மிடமிருந்தே சேர்த்து வாங்கப் போகிறான் என்று நினைக்கவில்லையே. மூன்றிலிரண்டு பங்காக வந்த பென்ஷன் பணத்தை முன்பணமாகக் கட்டி பேங்க் லோன் போட்டு ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டான் அவன் பெயரில்.

ஸ்சலப் ஸ்சளப் கிக்ஹிகிக்ஹி

வராண்டாவிலிருந்த சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்தார். பக்கத்தில் நடைபழகிக்கொண்டிருந்த புறா வ்ர்ருட்டென்ற் குறுக்குவாட்டில் மேலெழும்பி வீட்டின் வெளிச்சுவரில் போய் நடக்கத்தொடங்கிற்று.

அச்சசோ. சாந்தா... சாந்தா... எங்கே போய்த்தொலைந்தாள். குழந்தையின் ஃப்ராக்கெல்லாம் நனைந்து விட்டது. எப்போதும் நடுவீட்டில் ஒன்றுக்குப் போவதே பழக்கமாகிவிட்டது. பண்ணுவதையும் பண்ணிவிட்டு சிரிப்பு வேறு. இந்தக் கள்ளச்சிரிப்பு ஒன்றை வைத்துக்கொண்டே ஊரைக் கொள்ளையடிக்கிறது. சாருஉ சாரு கண்ணு ஒன்னுக்குல்லாம் போய்ட்டு, கைலல்லாம் தட்டக்கூடாது மேலெல்லாம் தெரிக்கிறது பார். ஸ்சலப் ஸ்சளப் கிக்ஹிகிக்ஹி ஸ்சலப் ஸ்சளப் கிக்ஹிகிக்ஹி சொன்னால் ஜாஸ்தியாய் பண்ணும்.

இப்போது இரண்டு கைகளாலும் தட்டி ப்ப்ர்ர்ர்ர் என்றபடி கையை வாயிலும் வைத்துக்கொண்டு தாத்தாவுக்கு ஃப்ளியிங் கிஸ் வேறு. உப்புக்கரித்ததால் முகத்தில் ஒரு சுளிப்பு. மோண்டதும் இல்லாமெ அதை வாயில் தொட்டு ச்ச்சீய்ய் வைன் டேஸ்ட்டரா நீ. சிரிப்பை அடக்க முடியவில்லை. நிவேதிதாவிடம் ஒரு கெட்ட பழக்கம் சுசூ போன கொஞ்ச நேரத்திலேயே கக்காவும் போய்விடும் போதாக் குறைக்கு யாரும் பார்க்கிறார்கள் எனத்தெரிந்தால் அதைப் பிசுக்கவும் செய்வேன் எனச் சொல்லி உடம்பெல்லாம் பூசிக்கொள்ளும். அந்த அளவிற்கு விட்டால் மகளிடம் பாட்டு கேட்டாக வேண்டும்.

அவசரத்தில் எக்குத்தப்பாய் எழுந்துவிட்டார் போலும். மளுக் இடது விலாவில். இடது கையூன்றி சடக்கென எழப்பார்த்ததில் விலா பக்கத்தில் சுரீல் என வலி தொடங்கியது. சாந்தா சாந்தாஆஆஅ என்று எவ்வளவு கத்தியும். சாந்த்தாவைக் கானவேயில்லை. அந்த ஆசிரமத்திற்கு வேறு அடிக்கடி போய்விடுகிறாள். அப்படி அங்கு என்னதான் தலை போகிற வேலையோ. சொன்னாலும் கேட்பாரில்லை, எனக்கு பதில் அவள் போகிறாள். அவளே போவது நல்லது. அநேகமாய் மருமகனுக்கு அதில் ஏதாவது வரவு இருக்கும் பைசாப் பெறாத விஷயமென்றால் அந்தப் பக்கம் பார்வையே போகாது. சாந்தா.. சாந்தா... வேண்டுமென்கிற தருணத்தில் காணமல் போனால்தான் வேலைக்காரி.

இடது கையை நெஞ்சுக்காய் உயர்த்தி, வலது கையால் மிகுந்த சிரமப்பட்டு, குழந்தையைத் தூக்கினார். அதுவோ தூக்கப்படும் போது மூத்திரத்தில் நனைந்து விட்ட கிறுக்கிய பேப்பரையும் விடுவேனா என்று கிக்ஹிகிக்ஹி சிரித்தது. வாலிபம் வரும்போது, பெரிய்ய எழுத்துக்காரியாய் வரும் போல. சாய்வு நார்காலியில் உட்கார வைத்தார். இடது கை ஒரு கோணத்தில் உயர்த்தப்பட்டால் வலி குறைவாக இருப்பது போல் தோன்றியது.

உள்ளே போய் பீரோமேல் தேடினார். கிடைக்கவில்லை. திறந்தார். எக்கச்சக்க டிரஸ்கள். இருவரும் வேலைக்குப் பொகும் வீட்டில் இருக்கத்தானே வேண்டும். அவர் வேலைக்குப் போன காலத்தில் மூன்று பேண்ட் மூன்று சட்டை. மூன்றாவது செட்டுக்கே, பெண்குழந்தை பிறந்து விட்டது, கரையேற்றியாக வேண்டும் என்ற குற்றவுணர்வுடன் இருந்தார். வீட்டுக்காரி அதற்கும் ஒரு படி மேலே. பெண்குழந்தை பிறந்து விட்டது சிக்கனமாக இருக்க வேண்டும் என்று ஒரு தீபாவளிக்குக் கூட பட்டுப்புடவை எடுத்துக் கொள்ளாதவள். போயே சேர்ந்துவிட்டாள் புண்ணியவதி. தாயில்லாத பிள்ளை என்று அவள் கேட்ட எதையுமே தட்டியதில்லை. கடைசியில் தம் நிலைமை தட்டுகெட்டுவிட்டது. கேவலம் ஒரு மூவ் ஆயின்மெண்ட் கூட தட்டுப்பட மாட்டேன் என்கிறது.

துணி கலைந்து விடக்கூடாதே என ஜாக்கிரதையாக வலதுகையாலேயே அடுக்குகளை நகர்த்திக் கொண்டிருந்தவர் கண்ணில் பழைய பேப்பர் போல பட்டது. தெய்வமே... விக்கித்துவிடார். பழுப்பேரிய அந்த சிறிய கிறுக்கல் நோட்டுப்புத்தகம் ரம்முகுட்டியுடையது. அலுவலகத்திலிருந்து கொண்டு வந்து கொடுத்தது. அதைக்கொண்டுவந்த தினம் மழை பெய்தது கூட நினைவுக்கு வந்தது. அன்று பைக்கை, புறா நடைபழகிய இடத்துப் பக்கதில்தான் வழக்கம் போல விட்டு ஸ்டாண்ட் போடுவதற்குள், எந்த அறிவிப்புமின்றி வெயிலடித்துக் கொண்டு இருக்கையிலேயே சரெட்டென வெயிற்தூரல் சாற்றியது. அவசரமாய் சைட் பெட்டியிலிருந்து வெளியிலெடுத்து குனிந்த உடம்பிற்குள் மறைப்பதற்கு முன் ஓரத்தில் கொஞ்சம் நனைந்துவிட்டது.

துணி அடுக்கும் கலையாமல் நோட்டும் கிழியாமல் லாவகமாக கொஞ்சம் கொஞ்சமாக வெளியிலெடுத்தார். அப்படியே சல்லாத்துணி காற்றில் தவழ்ந்து விழுவதே போல மெல்ல கீழே உட்கார்ந்தார். பிரித்தார். ரம்யா VIII - B என்று எழுதப்பட்ட அந்த நோட்டுப் புத்தகத்தில் டியர் மிஸ் எனத்தொடங்கிய வார்த்தைகள் நீர்விழிப் பார்வையில் வாக்கியங்களாக நீளத்தொடங்கின. பரவசத்தில் படிக்கத்தான் முடியவில்லை.

ஸ்சலப் ஸ்சளப் கிக்ஹிகிக்ஹி வெளியில் பறவை பார்த்ததோ என்னவோ காலாட்டும் கொலுசோடு, கைத்தட்டலும் சேர்ந்து கொண்டது.



மிஸ்டர் மதார் இன்னும் முப்பது நாற்பது வருடம் கழித்து இது உமது கதையாகக் கூட இருக்கலாம்.

அந்தப்பெண் அந்த நோட்டுப்புத்தகத்தில் எழுதியிருப்பது வெற்றுக் குழந்தைமை எழுத்தாக இருப்பினும் கூட அது அந்த தந்தைக்கு பொக்கிஷமையா பொக்கிஷம். அவள் வளர்ந்தபின் அப்பனுக்கு தனது நடவடிக்கைகள் மூலம் காயம் மட்டுமே கொடுத்திருந்த போதிலும். அவனுக்கு அவள் மகள். அந்த நனவோடையின் நீட்ச்சி நதிகளைத்தாண்டும். அதன் முன்பாக, உயிர் போகும் வலிகூட அவனுக்கு துச்சம்.

நோட்டுப்புத்தகத்தில் இருக்கும் எழுத்தின் தரத்தைப் பற்றிப் பேச எவனுக்கும் அருகதை கிடையாது.

ஆனால் அவளோ அல்லது அவள் அப்பன் காரனோ பத்திரிகையில் கதையாக வெளியிட்டல்?

எல்லோருக்கும் பேச உரிமை உண்டு. திருடினால்தான் சட்டம் வரும், விமர்சித்தால் அல்ல.

உங்கள் தாத்தாவின் டைரி இருக்கிறது, அதில் காலையில் எழுந்தேன். காற்றடித்தது. பல் விளக்கினேன். பார்வை தெளிந்தது. மூக்கு சிந்தினேன் ஆதி மூலமே தெரிந்தது என்று தின நிமயங்களைத் தொட்டுக்கோ தொடச்சுக்கோ என்று உடான்ஸ் சேர்த்து எழுதியது உமது குடும்ப சொத்து.

கத்தரிக்காய் வெளஞ்சு கடைக்கு வந்தால், உருட்டியும் பார்ப்போம் பெறட்டியும் பார்ப்போம். மொண்ணை எழுத்தில், திண்ணை மொழுகல் மோசடி நடக்கும், ஆனால்  விமர்சிக்கக் கூடாது. இதற்குப் பெயற்தான் இலக்கிய சர்வாதிகாரம்.

வாய் கிழிய எவன் எதிர் குரல் கொடுத்தாலும் பாஸிஸ்ட்டு என்று ஊளையிடும் சொறி நாய் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பவிசை பார்க்கிறீரா. SMS உரையாடல்
"kakkoos padiththen gamagama" Jul 23, 2010 10.07 PM

SMS "Hey man i am in coorg. will catch you wen i am back"

"Thanks for provoking me to write. But i am not for a fight with you" Jul 25, 2010 11.32 AM

யானை கொசு கதை. இது கூட அத்தோட ஒரிஜினல் இல்லை. ஜெயமோகன் அண்ணா இதுக்குக் குடுத்த யானையை ஏதோ ஒரு ஜந்து கடிக்கும் அதற்கு அது சொறிந்து கொள்ளும் அதைப் பார்த்து அந்த ஜந்து ஐயா நான் கடிச்சி யானைக்கு வலிச்சிடிச்சி என பீற்றிகொள்ளும். 

இது திருடி சாக்கடையாக்கி தன் பேர்ல போட்டுக்கிச்சி. 

நம்ப இலக்கிய திருட்டுதான் புக்காவே வந்துருக்கே. காலக்கிறமமா அட்டவணைப் போட்டுன்னா அம்பலப்படுத்தியிருக்கா. நம்பப் பேர்ல வந்த கதைகள்ல முக்காலே மூனுவீசம் படிக்கக் செடைச்ச கதைகள். அடுத்தவன் கதைல அவன் பேரை அடிச்சிட்டு நம்ப பேரை எழுதினதுதான் ஒரே எழுத்துப் பணி.

அத்த சுத்தற எளசுங்களா ஒரு வார்த்தை.

பீர் வாங்கிக் குடு மோர் வாங்கிக் குடு தொட்டுக்க அத்தையும் வாங்கிக்குடு. ஓசில கெடைச்சா எத்தவேண்ணா தின்னும்.

ஆனா நீ எழுதின கதையை மட்டும் படிச்சிப் பாக்க சொல்லி குடுக்காதே. அது அது பேர்ல வந்துடும்.

நம்பளோட தக்கிணியூண்டு SMS க்கு இது இவ்ளோ பெரிய பதிவே போட்டுருக்கேன்னு நான் ஒரு  SMS விட்டேன்

"For my few words you have to defend with pages. Ha ha ha" SMS

ஜந்து " idhula oru perumiya. Nithyananda compared himself with jackson"

நான் "Man u r Nithyananda's Ex-Sishya so u too comparing yourself with Stephen Hawking. Adraa Sakkai. So when r u coming back. I can feed you with matters for u r 'Katturaikal'

ஜந்து "You r poison. Stop your shit and nonsense"

துர்வாசர் கோச்சிண்டுட்டாரே என்று ஃபோன் போட்டால்

ஜந்து SMS "I don't want to talk to u. You are venom"

நான் "So u r no different from rest of the world. Criticise everything under the sun. But nobody has the right to give the complement back to u. THIS is called fascism".

எது கற்பனை எது புனைவு எது கனவு எனப் பிரித்து மேய்ந்து கொள்ளுங்கள். நான் மாடு தின்பவன். எனக்கு எதுவும் புனிதப் பசு கிடையாது.

என்னுடைய பூணூல், என்னிடம் இல்லை. அது வாஸ்து சாஸ்திரப்படி வாசலை எதிர்கொண்டு சிரிக்கும் புத்தனின் மேல் உள்ளது. வேண்டுமானால் நீங்களும் எடுத்துக் கொள்ளலாம், இரவலாக, ஆகிவந்த பூணூல், அது எத்துனையொ ஆவணி அவிட்டங்களை பார்த்தும் பழசாகவே உள்ளது. எவனாவது என்னைப்பார்த்து என்ன இருந்தாலும் நீ அதானே என்று வவ்வவ்வே காட்டினால் ங்கோத்தா அதேதாண்டா என்று சட்டைமேல் போட்டுக்கொள்ள அது தேவைப்படும் அதனால் அதை புத்தனிடம் கொடுத்திருக்கிறேன்.

கல்கி எழுதியது இலக்கியமில்லை. பயன் எழுத்து. ஒரு காலத்தில் பெரும்பாலான பிராமண குடும்பங்களில் மாதவிலக்காகி மூன்று நாட்கள் பெண்கள் ஒரு மூலையில் உட்காருவார்கள் ரெஸ்ட் கொடுக்கிறோம் என்ற பாவ்லாவில். அப்போது கல்கியின் தண்டி தண்டி புஸ்தகங்கள் வாசிக்கப் பயன் பட்டன. (இபோதும் சில வீடுகளில் இது நடைமுறையிலும் நிர்பந்தத்திலும் இருந்து வருகிறது. ஒருவர் ’புர்கா’ அணிவதைக் கண்டித்துப் பேசினால் அது விடுதலை உணர்ச்சி தேசாபிமானம். ஆனால் ஒரு பயலாவது இதை பேசவோ எழுதவோ செய்வானா. அது வீடுக்குள்ளே ப்ரைவஸி. தர்க்கரீதியாக நியாயப்படுத்திகொள்வதில் நம்மை யாராலும் ஜெயிக்க முடியாது.)

கல்கியும் சாண்டில்யனும்  முடி அரும்பா பருவத்து மாபெரும் இலக்கியங்கள். அவ்வளவுதான். இதைக்கேட்டு உமக்கு கை விறுவிறுத்தால் அட்ரஸ் தருகிறேன் என் வீட்டுக்கு வாரும். கொடுக்கப் போகிறீரா வாங்கிக்கொள்ளப் போகிறீரா என்பதற்கு உத்திரவாதமில்லை.

உம்ம எழுபதுகள் கண்முன்னே வந்ததா இல்லையா உமது முப்பதுகளிலேயே. இது இலக்கியமில்லை ஓய். ”செய்திறன் நேர்த்தி.” ச்சும்மா உமக்காக செய்து காட்டிய ஜில்பான்ஸ்.

இன்றைக்கு இணயத்தில் இருக்கும் எந்தக் கதைக்கும் இது மேல் என்றால் சத்தியமாக எனக்குப் பெருமை இல்லை. இனையத் தமிழ் ஆகக் கீழே உள்ளதென்று அர்த்தம்.  தத்ரூபத்தைத் தத்ரூபமாகவும் கனவைக் கனவாகவும் புனைபன்தான் கலைஞன்.

http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/08/blog-post_17
இந்தக் குரல் எங்கேர்ந்து வருது. ஒரிஜினல் அனுபவத்துலேர்ந்து. இதுதான் ஆரம்ப எழுத்தாளனுக்கான அடிப்படை.

எழுதி எழுதி கை பழகணும். பொய் பழகக் கூடாது. கற்பனையப் பொயின்னு சொன்னவன் கம்மனாட்டி. கற்பனை பொய் இல்லே. அதுதான் விதை கவிதைக்கு.  செயல் திறன் கூடி, அனுபவம் கூடி, விஷயத் தேர்வு வந்து, தெளிவு வந்து. நிஜத்தில் இல்லாத ஒன்னை கற்பனையா உருவாக்கி, அதுக்குக் கண்ணு மூக்குக் காதொல்லாம் வந்து, அதுங்கூட வாழ்ந்து, முயங்கி, தள்ளி நின்னு நீ அதுல இருக்கறதை நீயே பாக்கும் போது, எழுது. அப்பிடி எழுதியும் ஒரு வேளை அது இலக்கியமாய் வராமல் கூடப் போகலாம். ஆனால் ஒரு நாளும் பொய்யாக மட்டும் இருக்காது.

(இந்த பேற்படி பத்தி 11.33 PM கிட்டத்தட்ட 9.30 க்கு ஒரிஜினல் அப்லோடட். இப்பதான் சேர்க்கிறன். மதார் எழுதிய ”மாடுகளுக்கும் பாசம் , உணர்ச்சிகள் உண்டு”  என்கிற பதிவை படிக்க ஆரம்பிச்சி முழுசா முடிச்சேன். என்ன ஒரு ஆச்சரியம். நெறைய புக்கை மொதல் பேஜே தாண்ட முடியாதவன் நான். அதுக்குப் பின்னூட்டமா எழுதின பத்திதான் இது. எழுதும் போதே இழுத்துக்கிட்டுப் போச்சி கை.  இந்தக் கட்டுரைல வந்துருக்க வேண்டியது என்பதனால் இங்கே சேர்க்கிறேன். நன்றி மதார். நீங்கள் ஒரு பெண் என்பது கட்டுரை முடியும் தருவாயில்தான் தெரிந்தது.  அனுமார் பக்தன் கடைசீலதான பிள்ளையார்கிட்ட போவான். இது ஒரு வளர்ந்த ஆண் என்கிற தொனியில் சற்று விட்டேற்றியாய் எழுதிவிட்டேன். அதற்காக மாப்பு கேட்டுக்கொள்கிறேன். கடைசீ வரி முத்தாய்ப்பு - அவர்களுக்கு எங்கே தெரியும் நான் அதிகம் பழகியது மனிதர்களை விட மாடுகளிடம்தான் என்று  - முதல் வரிகளை மேன்மைப் படுத்துங்கள். வீட்டிற்கு முகப்பு முக்கியம் மாடுகளைப் போலவே.
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/08/blog-post_17

எனது அப்பா சித்தப்பா பெரியப்பா மாமா பாட்டன் பூட்டன் பட்டனுக்குப் பாட்டன் பூட்டனுக்குப் பூட்டன் என்று என் வம்சாவளி ரொம்ப நீண்டது. அதுல எல்லா தேசத்துக்காரளும் இருப்பா. குறிப்பா ஏகப்பட்டபேர் ருஷ்யாவுல இருந்தா, ஐரோப்பாவுல இருந்தா, ஃப்ரான்ஸ்ல இருந்தா இன்னும் பொஸ்தகங்களா இருந்துண்டிருக்கா. என்னோட தாத்தாக்கள்தான் இவாள்லாம் நம்ப முன்னோர்கள்னு மொழிபெயர்த்து சொல்லிக்குடுத்தா இல்லாட்டா நானும் ஒம்ம மாதிரிதான் கோத்திரம் தெரியாம அலஞ்சுண்டிருந்திருப்பேன். இதுல ஒரு வேடிக்கை என்னனா எங்க ஸ்கூல்லயே நான்தான் அடி முட்டாள். வடிகட்டின சோம்பேரி. ஆனா நேக்கே தரத்துலக் கொஞ்சூண்டு கொறைஞ்சாலும் எதுவும் ஜீரணமாறதில்லை. அப்படி ஒரு அஜீரணன். புனைப்பெயருக்கு காப்பிரைட் இல்லை. அஜீரணன். தாராளமா எடுத்துக்குங்கோ.

ஓய் சொதந்தரம் 47 ல கெடச்சுதோ அலை ஓசை அஞ்சாவுதோ நாலாவுதோ  பாகத்துல முடிஞ்சுது. அதே சொதந்திரம் 57 ல கெடைச்சிருந்தா எட்டோ பத்தோ பாகம் போயிருக்கும். ஆம்படையாளுக்கு வரது மாசா மாசம். பத்திரிகைத் தொடர்கதைகளுக்கு வரது வாரா வாரம்.

லைஃபை சொல்லுடான்னா சீன் சீனா சொல்லிண்டிருக்கான்.

கோட்டைப் போட்டாலே கோட்டொவியமா. 

ஒரு கதை கருப்பு வெள்ளையா இருக்கா இல்லே கருப்பும் இருக்கு வெள்ளையும் இருக்கு கொஞம் கொழப்பமாவும் இருக்கு எல்லாம் கலந்த மாதிரியும் இருக்கு.

அண்ணா லைஃப் அப்பிடிதான்ணா இருக்கு.

மகாபாரதம் எப்பிடி இருக்கு நல்லவன் கெட்டதும் செய்யறான். கெட்டவன் நல்லதும் செய்யறான். அவனவனுக்கு அததுக்கான நியாயமும் இருக்கு. ஆனாலும் ஒருத்தன் செஞ்சதைக் சரி தப்புன்னு கட்சி கட்டவும் முடியறது.

வியாசன் எங்க இருக்கான். எந்த கேரெக்டர் அவனோடது. எல்லாத்துலயும் அவன் இருக்கான். எதுலயும் அவன் இல்லை.

ஆட்டைவிட எஸ்.ராமகிருஷ்ணன் ஒவரா மேஞ்சுண்டே இருக்கார், புல்லு தீந்தப்பறமும்னு நான் சொன்னேன்.

அதுக்கென்ன என் தலையக் குடுப்பேன்னு க்யூகட்டி நின்னா குடுத்துக்கோ. எனக்கென்னப் போச்சு.

போப்போறது உந்தலை உம் மசிறு

வலிக்கப்போறது அவர் வாய் அவர் தாடை

நேக்கு அவ்ஸ்ரமா முட்றது வரட்டா.

ரொம்ப நேரமா போகாம இத்த ஒமக்காக அடிச்சிண்டிருக்கேன். இத்த விட அது ஒசத்தி அத்யாவஸ்யமும் கூட.

அது எப்டி வரும்போது அடக்க முடியாம வரதோ அதே போலதான் இலக்கியமும்.

வரணுன்னா வரும். வராதப்போ முக்கினாலும் வராது. படிக்கறதா இருந்தாலும் சரி. எழுதறதா இருந்தாலும் சரி.