14 September 2010

வவ்வவ்வெள

வவ்வவ்வெள என்ற தன் குரைப்பில் அஞ்சி, சூரியன் நகர்வதாய் கர்வம் மேலிட்டு குரலுயர்த்த, உச்சிக்கு வரவர வெப்பம் கூடி, உஷ்ணத்தின் தகிப்பு உடல் தாக்க, மரத்தடி நிழலுக்காய் ஒதுங்கி, வவ்வவ்வெள.

கூடுவிட்டு கூடு பாய்ந்து கோபத்தில் வவ்வவ்வெள.

சர்வரோக நிவாரணியாய் கூவி விற்க வவ்வவ்வெள.

இது உன் இடமில்லை வவ்வவ்வெள.

ராஷ்ட்ரபதி பரிசின் கனவென வவ்வவ்வெள.

உனக்கிங்கே இடமில்லை வவ்வவ்வெள.

அவமான மிரட்டலாய் வவ்வவ்வெள.

ஒரு வவ்வவ்வவெள, உள்ளே நுழைந்ததும் எத்துனை வவ்வவ்வெள.

பெரும்பாலும் வவ்வவ்வெள தன் பயத்தில் இருந்தே பிறக்கிறது.

எல்லா வவ்வவ்வெளக்கும் தெளிவான நோக்கம் இருக்கிறது.

தன் இருப்பை ஸ்தாபிக்க வவ்வவ்வெள.

விஸ்தரிக்க வவ்வவ்வெள.

கூட்டத்தைக் கலைத்து, பிரித்து, எதிர்ப்பை விரட்டி, மிரட்டி, ஆதரவைத் திரட்ட வவ்வவ்வெள.

உயர்ந்த நோக்க வவ்வவ்வெள.

ஆழ்மனத்தின் வவ்வவ்வெள.

கேளிக்கையைப் பார்த்து இலக்கியம் வவ்வவ்வெள.

இலக்கியத்தைப் பார்த்து மக்கள் இலக்கியம் வவ்வவ்வெள.

யாரையுமே பார்க்காமல் நாளைய தினத்தை எப்படி நகர்த்துவதென திகைப்புடன் முன்னகரும் ஜனங்களின் திசையறியா வழியறியா வவ்வவ்வெள.

என்வழியே சிறந்தவழி வவ்வவ்வெள.

சோற்றுக்காக வவ்வவ்வெள.

சோறு கிடைத்தபின், ஆத்தும சரீர சுகத்திற்காக வவ்வவ்வெள.

சுகிக்கும் வவ்வவ்வெள.

சுகிப்பிற்கழைக்கும் வவ்வவ்வெள.

முறுவலிப்பில் வவ்வவ்வெள.

எல்லை மீற வவ்வவ்வெள.

மறுப்பில் வவ்வவ்வெள.

வெறுப்பில் வவ்வவ்வெள.

கட்சி பிரிந்து வவ்வவ்வெள.

கண்மண் தெரியாமல் வவ்வவ்வெள.

வெற்றியிலும் வவ்வவ்வெள

தோல்வியிலும் வவ்வவ்வெள.

தன் இருப்பின் இடம் அறிந்த எவனுக்கும் தன்னை மதிக்கும் எவனுக்கும் மட்டுமே அடுத்தவனை அளவிட்டுப் பார்க்க அவன்  இடம் அளிக்க  சகஜீவனை மதிக்க இயலும்.

இயலாமற்போனால் வவ்வவ்வெள என்ற தன் குரைப்பில் அஞ்சி, சூரியன் நகர்வதாய்................................................................................................