07 March 2012

எளக்கியத்த வளக்கப்போறோண்டி விஸ்தாரமா விவாதிச்சி...

<இந்த விவாதங்களையும், ஜோக்கர் கதையையும் ஒரு சேர புத்தகமாகப் போடலாம் என்று தோன்றுகிறது. யாராவது பத்ரியிடம் என் சார்பாகப் பேசுங்களேன்…> 

தூள் பகோடாவையும் எதுனா ஒரு வெலை போட்டு எட்துக சொல்லுபா 

யோவ் யாருய்யா இந்தாளு? வெள்ளந்தியா பேசிக்கினே வேட்டிய உருவறான். வார்னிங் சொல்லிவை பாஸ்கர். இப்பிடியே அடுத்த கமெண்டும் போட்டான்னா வட்டத்தைவிட்டே தூக்கிடு.

சோட்டாணிக்கரை பகவதி! ஹே இறைவி! பிறவிப் பழக்கத்தையெல்லாம் இப்புடி என் வாயாலையே பப்ளிக்காப் போட்டு ஒடைக்க வெக்கறியே! எழுத வைப்பது இறைவின்னுதானே சொன்னேன். திருடவைப்பதும் இறைவின்னு சொல்லலியே. உண்மையான (அட்லீஸ்ட் இப்போதைக்கு) பக்தன் மீது ஏனிந்தக் கொலைவெறி?

<எனக்கு இது முற்றிலும் ஒரு ஒற்றைத் தன்மை வாய்ந்த கதையாகத்தான் பார்க்க முடிகிறது. நான் ஏதோ மூடன் மாதிரி உளறிக் கொண்டே இருப்பது மாதிரி இருக்கு எனக்கு. சாருவின் எழுத்தைப் பற்றி யோசித்தால் இந்தப் பிரச்சனை அடிக்கடி வந்து விடுகிறது.>

பாஸ்கர் இது யாருன்னு கவனிங்க. ஒற்றைத் தன்மை தட்டைத்தன்மைன்னு உ.த.எ வார்த்தையை எல்லாம் யூஸ்பண்ணி கோல்போஸ்டை விட்டுட்டு, பார்வையாளர் காலரியப் பாத்தே கன்னாபின்னான்னு பந்தை ஒதைக்கிறான் பாருங்க இந்தாளு. இவுனுங்கள்ளாம் என்னையோ கதையவோப் பாராட்ட வந்தாமேரியேத் தெர்லியே. 

ஓ! நிந்தாஸ்துதின்னு எடுத்துக்க சொல்றீங்களா? பாத்தீங்களா அந்த காலத்துலையே சமஸ்கிருதத்துல நெகடிவ் பப்ளிசிட்டிக்கு என்னாமா பேரு வெச்சிருக்காங்க பெரியவங்க! 

(என்னையா இது சமஸ்கிருதத்தைப் பாராட்டி எளுதி ஒருமணிணேரமாச்சு இன்னும் ஐசிஐசியைல அகெரிக்க டாலர் எதுவும் கிரெடிட் ஆவக்காணமே. சுஜாதாவை சேக்க விட்டுட்டமோ)

< A Joker is here என்று சொன்னால்தானே சரியாக இருக்கும்? >

isக்கு பதிலா எதை வேண்ணாலும் போட்டுக்கோ. ’தல’யோட எழுத்துக்கு ஆயுசு இன்ஃபினிட்டின்னு சொல்ல ஒரு பயலுக்கும் துப்பில்லையே. எப்புடி கமெண்ட் போடணும்னு ஏற்காட்ல ஒரு பட்டறையை ஏற்பாடு பண்ணூங்க. அங்க நான் எலிகாப்டர்ல வந்து எறங்க யார் ஸ்பான்ஸர் பண்ணப்போறீங்க?  என்ன ட்ரான்ஸ்லேஷனுக்கே ஃபண்ட்டில்லியா? மொழிபெயர்ப்புதான் முக்கியம். நான் மட்டும் முழிபெயர்ந்து வெளிநாட்டுக்குப்போயிட்டா கெலிகாப்டர் இன்னா சொந்தமா பிளேனே வச்சுக்கலாம். அதுக்காவத்தான் ராப்பகலா பிளான் பண்ணிகிட்டு இருக்கேன். அது வரிக்கும் செலவில்லாத திட்டமா, நாம்பளே நாலு ஐடில உள்ள நொழைஞ்சி கமெண்ட் போட்டுக்கலாம், அராத்து அந்த ஐடி மேட்டரைக் கொஞ்சம் ரெடி பண்ணிக்குடுங்க.

<ரொலான் பார்த் (Roland Barthes) எழுதிய Image Music Text என்ற புத்தகத்தில் இருக்கும் சில பகுதிகளைப் படித்தால் ஜோக்கர் மற்றும் சாருவின் நாவல்களைப் புரிந்து கொள்ள உதவும்.

(வருண், உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏற்காடு வருகிறீர்களா? என் மெயில் ஐடிக்கு எழுதுங்கள்>

பாஸ்கர் கம்பெனி செலவுல வருணுக்கு ஒரு டிக்கெட் போடுங்க. வசதியான கையா! இங்கிலீஷ்லல்லாம் மேற்கோள்காட்டினதுலையே தோணிச்சி.  அப்ப   கம்பெனி செலவு மொத்தத்தையும் தூக்கி இவுருகிட்ட டிக்கெட் போட்ருங்க. இவுருக்கு ப்ளாக் இருக்கா பாருங்க ரெகுலரா படித்ததில் பிடித்தது லிங்க்கு குடுத்துடலாம். 

பிச்சைக்காரன் தனியாவே பெரியாளாவப்பாக்கறாரு போல. உ.த.எவுக்கு விமர்சன்ம் எளுதறாரு. உதஎ, ஆழமான புரிதல்னு நக்கலடிக்கிறாப்புல இந்தாளுக்கு லிங்க்கு குடுத்ததுல கவுந்துட்டாப்புலப்போல. அது இன்னா இதுவரிக்கும் துரோக புத்திரன்னு எழுதிகிட்டு இருந்த ஆளு இப்போ ஞாநி மனுஷ்ய புத்திரன்னு எழுத ஆரம்பிச்சுட்டாப்புல. நம்புளுக்குத் தெரியான எப்ப இறகு முளைச்சிது?

எக்ஸைலைக் கொண்டாடு கொண்டாடுன்னு கொண்டாடின ரெட்டைப் பதிவனுங்க, எளுத்தாளன்னு டைட்டில் போட்டதும் அபிலாஷாகிட்ட்  ஆடப்போயிட்டானுங்க.

இந்த துரோகியாச்சும் பறந்து போயிடாம சோட்டாணிக்கரை பகவதி நீதாம்மா பாத்துக்கணும்.