06 March 2012

கேக்கூ விட்ட அபான வாயு 497

துறைக்குள்ளேயே எதிர்த்து நின்று முடிந்தவரைப் போராடிப்பார்த்து முடியாமல் போனதால் உதவி கேட்டுப்போனேனே தவிர எம்டிட்ரம் இளிப்பு காட்டுவதைப்போல ஒன்றும் ‘நல்ல’ போஸ்டிங் கேட்டுப் போகவில்லை. 

அரசியல் அதிகார பலத்தை வைத்துக்கொண்டு அடிக்கப் பார்க்கையில், ஓராண்டிற்குள்ளாகவே ஆறேழு மாற்றல்களால் பந்தாடப்படுகையில், அக்கிரமத்தையும் அறத்தோடுதான் எதிர்கொள்ள வேண்டும் என்று ஈசிச்சேர் மாமாக்கள் வேண்டுமானால் அரம் போட்டுக்கொண்டிருக்கலாம். நசுக்கி அழிக்கப்பார்க்கும் அரசியல் பின்பலமுள்ள எதிரிகளிடமிருந்து யுத்த போர் தந்திர உபாயங்களைக் கைக்கொள்ளாமல்  எப்படித் தற்காத்துக்கொள்ள முடியும். சென்றது இந்த ஒரு இடம் மட்டுமன்று, எனக்கெதிராய் நடந்துகொண்டிருந்தது அநீதி என்று முறையிட்ட இடங்கள் அநேகம். எந்தக் கல் மாங்காயில் பட்டதோத் தெரியாது. ஆனால் தளபதியிடமிருந்து சென்ற ஃபோனில் தயங்கிப் பின்வாங்கிற்று மந்திரியின் நிழல். இதில் எனக்கு எந்த குற்றவுணர்வோ குறுகுறுப்போ கிடையாது. தேவையென்றால் ராஜாவையும் பார்த்து நியாயம் கேட்டிருப்பேன்.

இப்போதுகூட, எங்கோ உட்கார்ந்திருக்கும் எனக்கு, துளியும் சம்மந்தமில்லாத காரியத்தில், அநியாயம் என்கிற ஒரே காரணத்திற்காக, எங்கோ யாருக்கோ நிகழ்ந்த அக்கிரமத்திற்கு எதிராக, எப்படி எஃபெக்டிவாகத் திரி கொளுத்தவேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறேன்.

சுவர் இருந்தால்தான் சித்திரம்.

தற்காப்பு மட்டுமின்றி, புலனாய்வில் வேலைசெய்யும் வாய்ப்பு கிடைத்தால் என்னாலும் சாதித்துக்காட்ட முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் உதவிகேட்டுப் போனதைப் போய், சொட்டைப் பாத்திரங்களுக்கு தொண்டுக்கலாயம் பூசி, உதவி நிதிதியங்களிடம் விற்று எத்தித்திரியும் எம்டிட்ரம் ஹிஹி என்று நான் போய் இளித்துக்கொண்டு நின்றதாய் சொல்கிறது. போகட்டும் பாவம் அதுவும்தான் என்ன செய்யும்? பூமியில் கால் பதித்துப் புரிகிறார் போல் எழுதத்தொடங்கினால் தானொரு எம்டிட்ரம் என்று தெரிய வந்துவிடுமே என்கிற அதன் அவஸ்தை அதற்கு. புரியும்படி எழுதமுடிவதோ ’நட்சத்திர ஹோட்டலில் காக்டெய்ல் குடித்துக்கொண்டிருக்கிறென்’’தேசிய கான கருத்தரங்கில் நான் டீ ஆற்றப்போகிறேன்’ என்கிறவிதமான ஓரிரு புட்டந்தூக்கி ட்விட்டுகள். 

என்னடா இது புதிசாய் பாகவதர் அரிதாரம் என்று கொடுத்திருந்த சுட்டியை அழுத்தினால் போய்ச் சேர்த்த இடமோ பிரபல கிழடுகள் சாஸ்திரீயமாய் துள்ளிவிளையாட அரவனைத்த இன்னுமொரு களம். இதையெல்லாம் சுட்டி கொடுத்து ட்விட்டுப்போட்டுத் திரிந்தாக வேண்டியது அறிஞர் நிர்பந்தம். இதையும் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொண்டால்தானே தன்னை நல்ல விலைக்கு வெளிநாட்டில் மார்க்கெட் செய்து விற்றுக்கொள்ளலாம்.

பளபளப்பாய் இருந்தாலும் கோமணத்துணி கோமணத்துணிதானே. அதில் குர்த்தா தைத்து ’கோங்கோ மாங்கோ’ என்று லேபிள் ஒட்டி வேண்டுமானால் வெளிநாட்டில் விற்கலாம். உள்ளூர்க்காரனிடம் ஒப்பேற்ற முடியுமா? 

யாரிடமோ உதவிகேட்டுப் போக இடையில் வந்த எழுத்தாளக் கேக்கூ, இவனெல்லாம் ஒரு ஆளா என்கிற இளக்காரத்தில், போகிற போக்கில் குமாஸ்தா எழுத்தாளன், மாஜி எழுத்தாளன் என்று தற்பெருமையோடு அடித்து வைத்தது. 

ஆனாலும் பாருங்கள் அதற்கு அஸ்தியில் ஜுரம்தான். கேக்கூவைப்போன்ற இன்னொரு கோழையை எங்குமேப் பார்க்க முடியாது. கலக்கியதாய் பீற்றிக்கொள்ளும் தன் இலக்கிய வாழ்வில், உள்ளூர அது வெற்றுக்கோழை என்பதற்கு ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் உண்டு. அவ்வளவு ஏன் கேக்கூ எப்படியான கோழை என்பதற்கான எடுத்துக்காட்டு அந்தப் பதிவிலேயே இருக்கிறது. என்னதான் உதவிகேட்டு வந்திருக்கும் ஏதிலி என்றாலும் அவன் திரும்ப அடிக்காமலிருக்க வேண்டுமே என்கிற பயத்தில் எப்படி எலும்புத்துண்டை வீசுகிறது என்று பாருங்கள்.

<அரசியலில் மிக உயர்ந்த இட்த்தில் என் நண்பர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக, ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் எனக்கும் நண்பர். > 

மேலோட்டமாய்ப் பார்த்தால், அப்போ பாத்த ஆள் இல்லே. இப்போ நான் எவ்ளாம் பெரிய ஆள் தெரியுமா? என்கிற வழக்கமான சுயதம்புட்ட தட்டாகவே தோன்றும். உதவி கேட்டு நிற்பவன் மத்திய அரசு ஊழியன் என்கிற பின்னணியோடு பார்த்தால் ’ராகுல் என் நண்பருக்கு நண்பர்’ எனவே, மூர்க்கப்பயலே என்னை முறைத்துக்கொள்ளாதே. சமத்தாய் இருந்தால் நான் உனக்கு எல்லா பிஸ்கட்டும் போடுவேன். 

இதுதான் வெள்ளந்தியான எழுத்தாளனின் அடையாளம். இது காட்டும் விஸ்வரூபம் எததனை பைசா தேறும்?

பாவம் இது தமிழில் எழுதிய கட்டுரை இங்கிலீஷில் மொழிபெயர்க்கப்பட்டு ‘லண்டன்’பத்திரிகையில் வெளியாக முதலில் அந்துமணியிடம்  வாலாட்டியாக வேண்டும். அப்புறம் மொழிபெயர்ப்புக்காக நீ செய்யேன் நீ செய்யேன் என்று சின்னச்சின்னப் பிள்ளைகளிடத்திலெல்லாம் வாலாட்டியாக வேண்டும். ஆள்பிடித்துக் கால் பிடித்துப்போய் தமிழில் பேசிய மீட்டிங்கை , ஏதோ ஃப்ரென்ஞ்சு பிரசிடெண்டே அழைத்துப் பேசக்கேட்டுக்கொண்டதுபோல் காட்டிக்கொண்டாக வேண்டும். மீட்டிங்கை ஆங்கிலத்திலேயே பேசிப் பொளந்து கட்டியதுபோல ‘லண்டனில்’ காட்டிக்கொள்ள, அந்த மீட்டிங்கில் விடுபட்டுப்போனதை எழுதுகிறேன் பேர்வழி என்று மீந்துபோன வடை மக்யாநாள் வடகறி ஆவதுபோல் தன் தளத்தில் அவந்திகா என்கிற அத்தியாயத்தை லிப்போக்ரமெடிக்காக எழுதியதாய் சொல்லிக்கொண்டது, லண்டன் பத்திரிகையில் முழு நாவலே லிப்போக்ரமெடிக்காய் ஆகிவிடுகிறது. போதாக்குறைக்கு அது ஆங்கிலத்தில் லிப்போக்ரமேடிக்காய் மொழிபெயர்க்கப்படவில்லை என்று பழியைத் தூக்கி பிரீதம் சக்ரவர்த்தியின்மேல் போட்டும் ஆயிற்று. ஏன் இப்படிப் பொய் சொல்ல வேண்டும்? இங்கிலீச்ஜ்ஹ் கட்டுரையைப் படித்த இன்னொரு கேக்கூ எவனாவது இங்கிலீஷ் ஸீரோவைப் படித்துத் தொலைத்து இதில் பக்கத்தத்துக்குப் பக்கம் ஒரு வரு கிற தே என லெட்டர் போட்டுவிட்டால் என்ன செய்வது என்பதற்காகத்தான் இந்த முன் ஜாமீன்.

<my Tamil lipogrammatic novel, Zero Degree, without A and one, was not translated into English lipogrammatically.>

கேக்கூ க்ளெய்ம்பண்ணிக்கொண்ட அவந்திகா அத்தியாயமே லிப்போக்ரமேடிக் இல்லை அதில் எத்துனை ’ஒரு’க்கள் வருகின்றன என்பதை மண்குதிரை வெட்டவெளிச்சமாக்கிவிடவில்லையா? சாரு என்கிற டுபாகூரு

கேக்கூ கப்படிப்பதைப்போலத் தமிழில் எழுதியதை அதே கப்படிக்கும் விதமாக அப்படியே மொழிபெயர்த்தால்தானே அவர் நல்ல மொழிபெயர்ப்பாளர். தமிழ் கப்படிப்பை ஆங்கிலத்தில் அத்தராக்குவது மோசடி இல்லையா? 

சாதாரண மனிதர்களுக்குக் குசு பின்னாலிருந்துதான் வெளியேறும். என்ன இருந்தாலும் கேக்கூ எட்டுபேரை அங்கத்தினர்களாய்க் கொண்ட பின் நவீனத்துவ பேரியக்கத்தின் பிதாமகன் அல்லவா அதனால்தான் அவருக்கு மட்டும் அபான வாயு முன்னாலிருந்து வெளிப்படுகிறது.

<இப்போது நாம் ஜனாதிபதி பரிசு என்றால் என்ன என்று கொஞ்சம் பார்க்கலாம்.  ப்ரைமரி ஸ்கூல்களில் நன்றாகப் படித்து, கிருத்திருவம் எதுவும் செய்யாத பசங்களுக்கு பெஸ்ட் ஸ்டூடண்ட் என்று சொல்லி சிலேட்டும் பலப்பமும் கொடுப்பார்கள். அந்த மாதிரி அவார்ட் வாங்கும் பசங்கள் பின்னாளில் உருப்படவே உருப்படாது. அது போன்ற அவார்டு தான் ஜனாதிபதி அவார்டு. உதாரணமாக, சிரிப்பு நடிகர் விவேக் பத்ம ஸ்ரீ அவார்டு வாங்கியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்…>


எல்லாத் துறைகளிலும் பாஸு பெயில் உண்டு. தேர்வோ தர நிர்ணயமோ இல்லாத ஒரே ஒரு இடம் உண்டென்றால் அது இணையவெளியில் உள்ள இலக்கியவெளி மட்டும்தான். இங்கே எவன் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் வெளிக்குப்போகலாம். கேள்விமுறையே இல்லாமல் கழித்துக்கொண்டே கிடக்கலாம்,