03 December 2012

கட்டத்துரை என நம்பவைத்த கைப்புள்ளைக்கு

ஷோபா சக்தியின் கப்டன் கதையைப் படித்து அசந்துபோய் ஷோபா சக்தி என்றாலே அடேங்கப்பா என்று நினைத்துவிட்டது என் தவறாகத்தான் இருக்க வேண்டும்.

ஜெயமோகன் சாரு  நிவேதிதா எஸ்.ராமகிருஷ்ணன் போல எதையுமே முழுதாகத் தெரிந்துகொள்ளாமல் தப்பும் தவறுமாக அசால்ட்டாக அடித்துவிடுவதில் ஷோபா சக்தியும் இன்னொரு இலக்கியக் கைப்புள்ளைதானா?
எவன் பாலியல் அவதூறு செய்தான்?
யாரை பாலியல் அவதூறு செய்தான்?
புகார் யார் கொடுத்தார்கள்?
புகார் என்ன?
புகாருக்கு முன்பகை காரணமா?
அந்த முன்பகை என்ன?
இந்தப் பிரச்சனையை நான்-பெயலபிள் அவென்ஸாகக் கொண்டுபோக வன்மத்துடன் எவ்வளவு காலமாக என்னென்ன சூழ்ச்சிகள் யார்யாரால் நடத்தப்பட்டன?

எந்த எழவும் தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை. ஆனால் கருத்து கருத்தாக இருக்கவேண்டும் என்று கைப்புள்ளையாக கர்ஜித்தால்தான் இவன்களெல்லாம் எழுத்தாளன்கள்.

சின்மயியிடம் சில கேள்விகள் Thursday, March 29, 2012 என்று ராஜன் எழுதியிருப்பதை இந்த எழுத்தாள நியாயத் தராசு ஒப்புக்காவது ஓரப்பார்வையாக ஒருமுறையாவது பார்த்தாரா? இப்படிக் கேள்விகள் கேட்டது முதல்  ரா’ஜென்’ என்று போட்டுக்கொண்டு சின்மயி பற்றி ஒரு சொல் கூடக் கூறாமல் அவன் அமைதி காத்ததாவது இந்தக் கைப்புள்ளைக்குத் தெரியுமா? சென்ற ஆண்டே சின்மயி ’ராஜன் மீது மட்டும்’ புகாரைக் கொண்டுபோய்க் கொடுக்க, இதிலெல்லாம் எங்கம்மா கேஸ் இருக்கு என்று சைபர் கிரைமால் அது நிரகரிக்கப்பட்டதாகக் கூறப்படுவதேனும் தெரியுமா?
இந்த ’ராஜன் முதலானவர்கள்’ என்பதில்தான் சதியே இருக்கிறது என்பதைத் தனியாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். புகாரும் கைதும் பொதுவெளியில் ஆபாசமாகப் பேசுவதைப் பற்றியா? இல்லை சின்மயியை அவரது அம்மாவை இணையத்தில் ஆபாசமாகப் பேசியதைப் பற்றியா? ஆம் என்றால் நான் பேசியதைக் காட்டுங்கள் என்றுதானே ராஜன் கேட்கிறான்.

லீனா மணிமேகலை எழுதிய மார்க்ஸ் கவிதைக்கு, வினவு கோர்ட்டில் ஷோபா சக்திக்கு தூக்குதண்டனை கொடுத்தால் அது சரியா? என்னதான் நெருக்கமான நட்பு என்றாலும் லீனா முதலான ஷோபா சக்தி உள்ளிட்டோர் மார்க்ஸைப் பற்றி அவதூறாக எழுதிய கவிதை எனக் குறிப்பிட்டால் அது சரியா?

இப்போது நான் பேசிக்கொண்டிருப்பதால் உன் கவட்டைக்கு நடுவில் ஈரமாகி இருக்கிறதா என 21வயசு பெண்ணுடன் சாட்டில் பேசுவது, என்பதைத்தவிர எப்படி சாருவுக்கு இண்டர்நெட்டில் வேறு எந்த எழவும் தெரியாதோ அதைப்போலவே மற்ற எழுத்தாளன்களுக்கும் ஒரு மசிரும்  தெரியாதுபோலும். விட்டுத்தொலை என்றால், ஷோபா சக்திக்கு ஜெயமோகன் போலவே இலக்கிய மசுரிலும் பிரச்சனையா?
ஒரு மசுரும் தெரியாமல், ”வண்ணநிலவன் என்ற ராமச்சந்திரன் என்ற துர்வாசர்” என்று இப்படிக் கேவலமான ஒன்றை எழுத உங்களுக்கு வெட்கமாய் இல்லையா ஷோபா சக்தி?

எஸ்தர் கதை எழுதப்பட்டது 1974கில்
வண்ணநிலவன் என்கிற உ.நா.ராமச்சந்திரன் துக்ளக்கில் வேலைக்குச் சேர்ந்தது 1976இல்

உ.நா.ராமச்சந்திரன், துக்ளக்கில் சேரப்போவதும் ராமச்சந்திரனாகவோ துர்வாசராகவோ எழுதப்போகிறார் என்பதும் பிரியத்துக்குரிய நம் எஸ்தருக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? 

புலி இயக்கத்தில் நீர் சேரப்போகிறீர் என்று திரவ உருவில் இருந்தபோதே உமக்குத் தெரியுமா? இயக்கத்தில் உம்மை சேர்த்துக்கொண்ட பிரபாகரனுக்கோ இல்லை உமக்கோதான் தெரியுமா பின்னாளில் நீர் விலகப்போகிறீர் என்பது?

வண்ணநிலவனின் எழுத்து எனக்கு உயிர். அதை இப்படி தத்துபித்தென அவதூறு செய்பவனைப் பார்த்து போடாங்கோத்தா மடக்கூதி என்றுதான் நான் கொந்தளிப்பேன்.

நீர் சொன்னதை அப்படியே லீனா மணிமேகலை சொல்லி, நான் இதே வார்த்தைகளில் எதிர்வினை ஆற்றினால் அது பாலியல் தாக்குதல் ஆகிவிடும் இல்லையா? போங்கடா டோமரைங்களா.

தலித்தைப் பற்றி அவதூறு பேசுவதும் சேரி வாழ் மக்களின்மீது அறிவுகெட்டத்தனமாய் திருட்டுப் பட்டம் கட்டுவதும் பிராமணாள்ளாம் நாசால வேல பாத்து டாலர்ல சம்பாதிச்சிண்டு இருப்பா ஹேன்னு ஒருத்தி சொன்னால் பார்ப்பனரல்லாத  ஒருவனுக்கு நம்பளையெல்லாம் நரகல்னு சொல்லுதா இந்தம்மா என்று கோபம் வராதா?

பெண் என்றால் என்னவும் பேசலாம் இணையாகப் பேசினால் ஆணாதிக்கம். பாலியல் அவதூறு இல்லையா?

பெரியாரிஸ்டான நீர் அடிக்கடி கோட் பண்ற பெரியாரின், நீ வாழும் தெரிவில் இருப்பவன் இது பதிவிரதை வீடு என்று போர்டு எழுதி வைத்தால் உன் வீட்டை அவன் வேசிவீடு என்று சொல்கிறான் என்றல்லவா பொருள்? தன்னை பிராமணன் என்று சொன்னால் உன்னை அவன் சூத்திரன் என்று சொல்கிறான் என்று பொருள் என்று நீர் காலச்சுவடு கண்ணனிடம் பொங்கியது என்ன சும்மா பூச்சாண்டி காட்டலா?

சீ பே என்றுதான் இதை முடிக்க நினைத்தேன். என்னதான் இரட்டை நாக்கு இருந்தாலும் என்னை அசர வைத்த கப்டன் கதையை எழுதியவரல்லவா ஷோபாசக்தி எனவே இப்படி ரீஜெண்டாக எழுதி முடிப்பதுதான் சரி.

லீனா போன்ற மொக்கைகளோடு நெருங்கிப்பழகினால் இப்படித்தான் பூவும் நாராகிவிடும் ஷோபா சக்தி.