11 December 2012

ஐன்ஸ்டீன் ஜாடை

ஐன்ஸ்டீன் ஜாடையில் இருந்தால்
போட்டோவில் சிந்தனையாளனாகவும்
தோன்றுமேயென
ஒத்திகை பார்க்க
தலையை
சிலுப்பிக் கொண்டார் எழுத்தாளர்.

கபாலத்திலிருந்த
புறா இறக்கை
தாமதித்து கீழே விழுந்தது.

இது எப்படி இங்கேயென
முழித்த முழியை
இதுதான் இருக்கிறது இங்கேயென

ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பாய்க்
காட்டிற்று கண்ணாடி.