05 December 2012

இவை புத்தகமாய் வந்தால் புழல் விருது கிடைக்குமோ?

Tuesday, November 13, 2012 தீபாவளியன்று ரிலீஸான பிராமணர்களா வாமனர்களா வுக்கு இரண்டே நாட்களில் Thursday, November 15, 2012 அன்றே 

என்கிற விருது கிடைத்திருப்பதை இப்போதுதான் அறிய நேர்ந்தது. உங்களுடன் இதைப் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சமீபத்தில்தான் ஷோபா சக்தி - லீனா மணிமேகலை ஜாய்ண்ட் வென்ச்சர் மூலம் சிறிய விருது ஒன்று கிடைத்தது என்று பார்த்தால் அதற்கும் முன்பாகவே இந்த மாபெரும் விருது கிடைத்திருக்கிறது.

குழுமத்தில் போய் ஜெயமோகன் விடுவதையொத்த பாணிதான் என்றாலும் ’அம்மா’ என்கிற அனுமாரின் குறிப்பால எனக்குதான் இந்த விருது என்பது தெள்ளத் தெளிவாயிற்று.

நா ஷேவிக்கற ஆள்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் சும்மா விடுவாரா? யூகேல இருக்கற அம்பி ரூபத்துல வந்து அடே பையா அது சாட்சாத் நீயேதான்னு அடையாளப்படுத்திட்டார்.
பத்தேளோன்னோ நம்ப பாஸாதி கோயில் மடப்பள்ளில கஷ்கத்தை சொறிஞ்சிண்டு புளியோதரை கிண்டினவாள்ளாம், யூகே போனதும் செஃப் ஆயி பவுண்டுல சம்பாதிக்க ஆரம்பிச்சுடறா. ஷூத்ராளுக்கும் தலித்தாளுக்கும் இந்த சாமர்த்தியம் ஷுட்டுப்போட்டாலும் வருமோ? எவனாச்சும் எதாச்சும் பேஷினானோ கரண்டிய எடுத்தமா தோள்ல சாத்திண்டமான்னு நடையக் கட்டிண்டே இருக்கற இண்டிபெண்டட் ஜாப்னா நம்பாத்து அம்பிக்கு.

விருது பற்றிய முழு விபரம் கீழே:
 
தனித்தனியாய் இணையத்தில் வரும்போதே பாவம்,தாங்க முடியவில்லையே, புக்ஃபேருக்கு இவை புத்தகமாய் வந்தால் புழல் விருது கிடைக்குமோ?

//பாச்சுப் பிள்ளையை யாரோ கருநாகப்பள்ளி லெனின் என்று சொல்லிவிட்டார்கள். உடனே அவன் புரட்சிக்கு ஆயத்தமாகாமல் லெனின்தாடி வளர்க்க ஆரம்பித்தான். இயற்கையும் அவனுடன் ஒத்துழைத்து, அவனுக்கு லெனினைப் போன்ற முன் வழுக்கையை ஏற்படுத்திக் கொடுத்தது. கக்கத்தின் இடுக்கில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, தலையைப் பக்கவாட்டில் சாய்த்து, சிற்றடிகள் எடுத்துவைத்து அவன் மேடை முன்னால் வரும்போது, நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும், அவன் தன்னை லெனின் என்று நினைத்துக் கொண்டிருப்பது. அவன் வாயைத் திறக்கும்போது ஒரு காலி தகர டப்பாவை சுத்தியலால் ஒரு சிறுவன் அடித்துக்கொண்டிருந்தால் எழும் சத்தம்தான் என் காதில் விழுந்துகொண்டிருக்கும். நான் அவனிடம் சென்று, ‘நீ லெனின் இல்லை; கருநாகப்பள்ளி பாச்சு பிள்ளைதான் என்று சொன்னேன். அன்றிலிருந்து அவன் என்னுடைய ஜென்ம விரோதியாகிவிட்டான். இப்போது அவன் எழுத்திலும் பேச்சிலும் ‘சிலர்’ ’சிலர்’ என்று சொல்லி (சிலர் இவ்வாறு சொல்லி வருகிறார்கள்; சிலர் இவ்வாறு எழுதி வருகிறார்கள் என்றவாறு) திட்டுவதெல்லாம் என்னைத்தான். திருச்சூர் ஓரியண்ட் புத்தகக் கடையில் நான் அவனை அகஸ்மாத்தாகச் சந்தித்தபோது ‘ஒருமைக்கு எதற்குப் பன்மையைப் பயன்படுத்துகிறாய்? என்று கேட்டேன். அவனுக்கு மிதமிஞ்சிய கோபம் வந்துவிட்டது. ‘ஆறு மாதங்களுக்குள் சரித்திரத்தில் உன் பெயர் இல்லாமல் ஆக்கிவிடுவேன்’ என்று சவால் விட்டுவிட்டுச் சென்றான். சரித்திரமும் அவன் பெண்டாட்டி கார்த்யாயினி வைக்கும் மரவள்ளிக் கிழங்குக் கறியும் அவனுக்கு ஒன்றுதான்.’//

பக்கம் 95



//”இவர்கள் சொந்தம் பராட்டிக்கொள்வது அனைத்தையும் நான் மறுக்கிறேன்.” ஒரு கலந்துரையாடலில் ஜே.ஜே. சொன்ன இவ் வாக்கியம் குறுந்தாடி இலக்கிய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது. இந்த வாக்கியத்தின்பின் ஜே.ஜே. சேகரித்துக்கொண்டிருக்கும் அர்த்தங்களைப் பற்றிச் சிறிதும் உணர்வில்லாமல் கிளிப்பிள்ளைகள்போல் மேடைதோறும் உதிர்க்கிறார்கள். ‘என் எதிரிகளை நான் வெறுக்கிறேன். என் சிஷ்யர்கள் என்று சொல்லிக்கொண்டு வருகிறவர்களைப் பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது’ என்று ஜே.ஜேயே ஒரு கூட்டத்தில் சொல்லும்படி ஆகிவிட்டது. ஆனால் சிஷ்யர்கள் இதைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் கன்னங்களில் செல்லமாகத் தட்டியதைப்போல் எடுத்துக்கொண்டு விட்டார்கள்.

பக்கம் 91 

- ஜே.ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி