11 December 2012

சின்மயி விவகாரம் இன்னொரு குரல்

வாசகர் கடிதங்களை எழுதிக்கொள்கிற வழக்கம் எனக்கில்லை. மேலும்  வாசகர் கடிதங்கள் எனக்கு வருவதுமில்லை. அப்படியே அபூர்வமாக ஒன்றிரண்டு வந்தாலும் ’ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி பிரசுரத்துக்கு அல்ல’ என்று ஜேம்ஸ் பாண்டின் வீரத்துடன் 36 ஃபாண்டில் தலையிலேயே சொல்லிவிடும். கடிதமும் ஒரு பக்கத்துக்கும் குறைவாகவே வரும். 

ஃபேஸ்புக் தனிச்செய்தியில் வந்த கடிதம் இது.

எவ்விதப் பூச்சோ பாசாங்கோ இல்லாமல் பாத்திரத்தின் குரலை அதன் குரலாகக் கொடுத்துவிட்டு ஒதுங்கி நிற்பதே எழுத்தாளனின் வேலை என்பது என் இலக்கியக் கொள்கை.

இவரது குரலை இவரது குரலாகவே அளிக்கிறேன். இதில் கொங்கோ மங்கோ என்று கொட்டையைப் பிடித்துக்கொண்டு கூவி வியாக்கியானம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை என்று இந்தக் கடித்தத்தைப் படிப்போருக்கும் தோன்றினால் மகிழ்ச்சி.

உண்மைக்கு எதற்கு கோட்டும் சூட்டும், கோவணம் போதாதா? கோவணத்தோடு நிற்பது அவமானமா இல்லை குன்றின்மேல் மேல் நிற்பது பெருமையா என்பது குறித்து கவலைப்பட்டு கணக்கெடுப்பு நடத்தி லாப நட்டக் கணக்கை சரிபார்த்து அதன்பின் முடிவெடுத்தால் அவன் குமரன்தானா? சாதுர்ய சூதை அதன் பின்னால் இருந்த சூழ்ச்சியை, குன்றின் மீது நின்றதன் மூலமே உலகறியச் செய்தான் குமரன். 

சூனியம் வைத்தவன் கடவுளாய் இருந்தால் என்ன? எந்தக் கம்மனாட்டியாய் இருந்தால் என்ன? 

துணிந்தவனுக்கு துக்கமில்லை. புத்தகம் முடியும்வரை தூக்கமும் இல்லை.
To 
Maamallan, I just had a thought about write a letter to you like a jeyamohan fan to jeyamohan. just did it..i hope u dont mistake me for this 

மாமல்லன்,

இந்த சின்மயி விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து கொண்டிருப்பவன், அனால் என் நிலைப்பாடு குறித்து பேசமுடியாத கையாலாகத கும்பலில் ஒருவன் நான். நான் செய்ததெல்லாம் Dr. ருத்ரன், support rajan போன்ற சில முகநூல் பக்கங்களில் சென்று கருத்தை அறைகுறையாக பதிவு செய்ததுதான். முடிந்தது என் வேலை. அதற்கு மேல் எதுவும் செய்யாமல் அதே சமயம் இந்த விவாதத்தின் பார்வையாளன் என்ற வகையில் நின்று விட்டேன் அந்த வகையில் உங்கள் பதிவுகளை விடாமல் படித்து கொண்டும் இருக்கிறேன்.

உங்களின் சமிபத்திய பதிவுகள் உணர்விருக்கும் அனைவரும் குரல் எழுப்ப வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக நினைக்கிறேன். இணையத்தில் பலருக்கு உங்கள் குரல் ஒரு காட்டு கத்தல் என்பது போலவே தோன்றும். ஆனால் நீங்கள் எழுப்புவது ஒடுக்கப்பட்டு, ஜாமீன் என்ற பெயரால் வாய் கட்டப்பட்டிருக்கும் குற்றமே புரியாமல் அதற்காக தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் இரு உயிர்களுக்காக!!

உண்மையில் மாமல்லன், குற்றம் என்பது என்ன ?! அது செய்கையில் வருகிறதா ? அல்லது செய்தபின் மற்றவர் பார்வையில் வருகிறதா ? நேற்று வண்டியில் என் நண்பனுடன் அண்ணா நகர் நெரிசலில் சென்று கொண்டிருந்தபோது "ஸ்ரீ மிட்டாய் மந்திர்" என்ற கடையின் முன்ப முன் கூட்டத்தை காண நேரிட்டது. எனக்கு ஒரே ஆச்சர்யம், 'அது எப்படி இவ்வளவு நெரிசலிலும் இனிப்பு சாப்பிட இவ்வளவு கூட்டமா?' என்று. வண்டி செலுத்திக்கொண்டிருந்த நண்பனிடம் இதுகுறித்து கேட்டபோது அவன் சொன்னது எனக்கு இச்சம்பவத்தின் மறுபக்கத்தை காட்டியது. அவன் சொன்னது இதுதான் "மயிறு...இங்க வண்டிய ஓட்டமுடியாம ஒட்டிகிட்டு இருக்கேன்...ஸ்வீட் சாப்பிடுற கூட்டத்தை என்னத்த வாய் பாத்துகிட்டு இருக்க ?!". அது எப்படி மாமல்லன் ஒருவர் பார்வைக்கு ஆச்சர்யம், அடுத்தவருக்கு எரிச்சலாய் தோன்றுகிறது ?! உங்கள் போர்வை என்ற கதை நினைவிற்கு வந்தது எனக்கு. அந்த ராவ்ஜி போலத்தானே நாம் எல்லாம் ? இந்த சிந்தனையோடே வந்து அண்ணா நகரில் புதிதாக திறந்திருக்கும் 'விருதுநகர் பர்மா கடை' என்ற விடுதியில் உணவருந்தினேன். உணவுக்கான பணத்தை நண்பரே கொடுத்தார். ஆனாலும் அவர் முதலில் வாகன நெரிசலில் கேட்ட கேள்வி இன்னமும் என் நெஞ்சிலேயே இருக்கிறது. ஒரு வேளை இந்த உணவு ஜீரணம் ஆகாதோ ?!

செ.