28 January 2014

உத்தம புத்திரன் பார்ட் - 3

புத்தகத்தில் இருக்கும் 30 கதைகளும் ஒட்டுமொத்தமாய் PDFஆக வெளியிடப்பட்டதால், பதிப்பாளரால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, 16.01.2014 அன்று, மனுஷ்ய புத்திரனிடமிருந்து, மீட்டெடுக்கப்பட்ட விமலாதித்த மாமல்லன் கதைகள், 2014 புத்தகக் கண்காட்சியில் விற்பனையான விபரம் கடைவாரியாகப் பின்வருமாறு:

1. டிஸ்கவரி - 17 (ex-ஓனருக்குச் சொந்தமான 3 பிரதிகள் உட்பட)

2. அகநாழிகை - 8 

3. காலச்சுவடு - 8

4. டிங்கு புக்ஸ் - 5

எந்த பதிப்பகமும் விற்பனை உரிமையை எடுத்துக்கொள்ள முன்வராததாலும் எவ்வித மார்க்கெட்டிங் நெட்வொர்க்கும் எந்த காலத்திலும் வைத்துக்கொள்ளாத விட்டேத்தி என்பதாலும் 1994-95லிருந்து எழுத்தாளனிடம் கிடக்கும் அறியாத முகங்கள் (இரண்டாம் பதிப்பு) உயிர்த்தெழுதல் புத்தகங்களை, விற்காமல் கிடப்பவை, பெஸ்ட் செல்லர் என்று இலக்கியவாதிகள்போல் காட்டிக்கொண்டே இளக்காரம் பேசும் இணைய பிழைப்புவாத ஒட்டுண்ணிகளின் கவனத்துக்கு: 

எழுத்தாளன், தனது எழுத்தின் தரத்துக்கு மட்டுமே கேரண்ட்டி - ஏனெனில் அது அவன் சார்ந்தது அவன் மனம் சார்ந்தது.

விற்பனை, வியாபார சாமர்த்தியம் சார்ந்தது பணம் சார்ந்தது - உண்மையான கலைஞனுக்கு சம்மந்தமே இல்லாதது.

கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...

- ஜெயகாந்தன்


யாரையும் அண்டி நிற்கத் தேவையில்லாத PDF நீடூழி வாழ்க!