13 January 2014

பொய்யின் புத்திரனே!1. என் புக்கைப் பொடச் சொல்லி நான் வந்து உங்களிடம் எப்போது நின்றேன்?

உங்களைத் தேடி உங்கள் அலுவலகம் வந்தது என் ஆபீஸ் உதவிக்காக. இலக்கிய உதவிக்காக இல்லை. அது என் இணையப் பிரவேசத்துக்கு முன்பாக. சாரு புலம்பித் தீர்க்கும் அளவுக்கு நாறநாற அடித்தது இன்னும் இணையத்தில் உள்ளது.


2. என் புத்தகத்தைப் ப்ரொமோட் பண்ணச் சொல்லி நான் எப்போது கேட்டேன். விழாவே வேண்டாம் என்றல்லவா கூறினேன். என் தளத்தில்கூட என்னைப் பிரமோட் செய்துகொள்வதைக் கேவலம் என்று நினைப்பவன் நான். இதற்கு என் தளமும் என் எழுத்துக்களுமே சாட்சி.

பணம் கொடுத்து எடுத்துக்கொண்டு போ - எனறு வாய் கிழியும்போதே புத்தகங்களைத் தயாராய் வைத்திருக்க வேண்டாமா? இந்த எக்ஸ்ட்ரீமுக்குப் போனவர், எதற்கும் தயாராய் இருக்க வேண்டாமா? நம்மை விட்டால் இவனுக்கு ஏது நாதி எனும் நினைப்பா? இல்லை 200 பிரதிகள் விற்காமல் தங்கி இருப்பதாய் சொல்வதே உடான்சா? 


இன்றைக்குள் 200 பிரதிகளைத் திருப்பிக் கொடுத்தால்தான் பணம். இல்லவிட்டால் இந்த டீல் ஓவர். பொதுவாக எல்லா டீல்களும் -அருந்ததி ராய் அக்ரிமெண்ட் உட்பட - மூன்று வருடங்கள்தானே. எழுதிக்கொள்ளப்படாத இந்த டீலிலும் புத்தகம் வெளியாகி ராயல்டி என்கிற பெயரில் இன்னும் ஒரு பைசாவைக்கூட நீங்கள் எனக்குத் தரவில்லை எனவே அருந்ததி ராய் போலவே இந்த டீலும் ஆடோமேடிக்காய் கேன்சலாகி விட்டது. இருந்தும் பணம் தர நான் சம்ம்மதிப்பது இப்படி யொரு கேவலத்தை நீங்கள் செய்தீர்கள் என்று உங்களை வரலாற்றில் கல்வெட்டாக்கத்தான்.

புக்ஃபேர் முடிந்தபின் புக்கை நீங்கள் சாவகாசமாய் திருப்பிக் கொடுத்தால் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ள நான் என்ன அவ்வளவு கேனையா? தராத ராயல்டியுடன் அதையும் சேர்த்து நீங்களே சாப்பிட்டுக் கொள்ளுங்கள். என் ராயல்டியை உங்களுக்கு நான் போடும் தர்மமாக நினைத்துக் கொள்கிறேன்.

காலச்சுவடு விற்றுத்தர முன்வந்தது என்று தெரிந்ததும் நீங்கள் பேக் அடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தே அதை வெளியிட்டேன். எதிர்பார்த்தது போலவே பேக் அடிக்கிறீர்கள் கவிஞரே!

இல்லை ஒருவேளை, எழுத்தாளனிடம் பதிப்பகத்தான் காசு வாங்கிக்கொண்டு புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும் காரியமாய் நீங்கள் இறங்கிக் கொண்டிருப்பது - வியாபார ரீதியாகப் பார்த்தால்கூட - கேவலத்தின் புதைகுழி என இப்போதுதான் உங்களுக்கு உறைக்கத் தொடங்கி உள்ளதா?


நேற்று நள்ளிரவு PDF வடிவில் வெளியான 'எழுத்துக் கலை' யைப் புத்தகமாய் வெளியிடத் துடிக்கிறார் ஒரு நண்பர். கவனியுங்கள் பதிப்பக அதிபரே! PDF வெளியாகிவிட்டத்தைப் புத்தகமாக்க விரும்புகிறார் ஒரு பதிப்பாளர். நீங்கள் ஒருவர்தான் PDF என்றாலே பேயைக் கண்டது போல் அலறுகிறீர்கள்.

அச்சுக்குத் தனி அக்ரிமெண்ட் e-publicationக்குத் தனி அக்ரிமெண்ட் என போய்க்கொண்டு இருக்கிறது உலகம். தமிழில் இதை நடைமுறைப்படுத்த கடந்த ஒரு வருடமாய் முயற்சித்துக்கொண்டிருப்பதாய் கூறினான் கண்ணன். உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது நீர் இன்னும் செட்டியார் பப்ளிகேஷன் போல அழுகுணி ஆட்டம் ஆடிக்கொண்டு அகப்பட்டதுவரை லாபம் என்று அமர்ந்திருக்கிறீர் பாவம்.

’எழுத்துக் கலை’யை மாடம் மோட்சம் கட்டுரைகளை நீக்கிவிட்டு, இந்த புத்தகக் கண்காட்சி முடிவதற்குள்ளாகவே வெளியிடுவது பற்றிப் பேச மதியம் புக்ஃபேர் வருகிறேன். அப்படியே உங்களையும் முடிந்தால், நீங்கள் இருந்தால் சந்திக்கிறேன். செக்குடன் நீங்கள் புக்குடன் இருக்கப் பாருங்கள்.

செக் ஆஃபர் இன்றோடு சரி.

போனா வராது பொழுபோனா கிடைக்காது!