15 January 2014

எவனுக்கும் வெட்கமில்லை!


கரூர் மாவட்ட துணை நூலகத்துக்கே விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகம் சென்றடந்துள்ளது என்றால், அந்த வருடத்து அரசு ஆணையே 600க்கு மேல் இருக்கக்கூடும் என்பது என் கணிப்பு. 

இப்போது 2011,2012 மற்றும் 2013 ஆண்டுகளுக்கான நூலக அரசு ஆணை வந்திருப்பதாய் கேள்விப்படுகிறேன். எனவே 2010 டிசம்பரில் வெளியான என் புத்தகத்துக்கு அரசு ஆணை வந்திருக்கவேண்டும் என்பதை டிக்கோடிட்டு சொல்லத் தேவையில்லை.

அச்சிட்ட புத்தகங்களே 600 என்றும் 500 என்றும் நேரத்துக்கொரு டான்சாடுகிற மனுஷ்ய புத்திரனின் தகர டப்பா தார்மீகத்தில் எவ்வளவு நசுங்கல்கள் என்பதை RTI எளிதாய் காட்டிக் கொடுத்துவிடும்.

மணி பிரஸ்ஸில் நடத்தப்போகும் விசாரிப்பும் அச்சுக்குக் கொடுத்த ஆர்டர் எவ்வளவு, எத்துனைமுறை கொடுக்கப்பட்டது என்பதைத் தெளிவாக்கிவிடும். அதற்கெல்லாம் கணக்கு வழக்கு இல்லை எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்று மழுப்பப் பார்த்தால் முழுமூச்சாய் இறங்கி துறைவாரியாக துப்பறியத் தொடங்கவேண்டியதுதான். 

ஒரு RTI கூடப் போடாமல், RTI போடுவேன் என்று பல இடங்களில் அந்நியோன்யமாகப் பேசியே தகவல்களைத் திரட்டி பில்டரைப் பம்ப்படித்த கதையை ஏற்கெனவே எழுதி உள்ளேன். முகமும் நகமும்

அந்த ஆள், துட்டை வைத்துவிட்டு 200 புக்கை எடுத்துக்கொண்டு போ என்று ஃபேஸ்புக்கில் சொன்னதை 'லைக்' பண்ணிய கே.என்.சிவராமன் போன்ற, எச்சிற்கலைக்காக வாலோடு சேர்த்து சூத்தையும் ஆட்டும் நாய்கள் எல்லாம், செக்கு இங்கே புக்கு எங்கே என்று நீதி கேட்டு, நான் செக்கோடு உயிர்மைக்குப் போனபோது, எவன் மயிரைப் பிடுங்கப் போனான்கள்?

உயிர்மை கடையில் இரண்டு நாட்களாய், 200 பிரதிகள் கிடக்கட்டும், என் புத்தகம் ஒன்றுகூட இல்லையே, அதற்கு இந்த பத்திரிகையாளப் பக்கிகள் எல்லாம் எவனுடையதை 'லிக்கிக்'கொண்டு இருக்கிறான்கள்?

அடச்சே வியாபாரி பிழைத்துப் போகிறான் என்று மனுஷ்ய புத்திரனைக்கூட மன்னித்தாலும் மன்னிப்பேன். ஆனால் எப்போது எந்தப் பக்கம் சாய்ந்தால் மேடையேறலாம் மாலை மாற்றிக்கொள்ளலாம் என்கிற கூட்டல் கழித்தல்களோடு நான்கு கால்களில் ஊர்ந்து கொண்டிருக்கும் ஜந்துக்களா! உங்குளுக்காகதானடா எழுதினான் விக்ரமாதித்யன் இந்தக் கவிதையை.

எது குறித்தும்
எனக்கொன்றும் வெட்கமில்லை
வெட்கப்பட
நானொன்றும் குழந்தையில்லை
வெட்கப்பட வேண்டியதும்
நானில்லை

நான்
பெய்யும் மழை
வீசும் காற்று
எரியும் தீ
வழங்கும் பூமி
கவியும் வானம்

இங்கே
இடங்கெட்டுக் கிடக்கலாம்
சூழல் நாறித் தொலைக்கலாம்
இயல்பு அழிந்திருக்கலாம்
தன்மை மாறியிருக்கலாம்
முறைமை திரிந்திருக்கலாம்

முட்டாள்களுக்கும்
முரடர்களுக்கும் மத்தியில்
மூளையையும்
மனத்தையும்
முழுசாகக் காப்பாற்ற முடியாமல் போகலாம்

சுட்டு விரல் நீட்டி
கொட்டி முழக்கி
எத்தைக் காட்டி
வித்தகம் பேசுகிறீர்கள்
செத்தபிறகு
சிவனென்றும்
சுயம்புலிங்கமென்றும்
சொல்லிக்கொண்டிராதீர்கள்

எரிகிறபோதே
தெரியாத முண்டத்துக்கு
இருட்டில் என்ன தெரியும்

நரம்பில்லாத நாக்கு
நாலும் பேசும்தான்
நல்லது
நக்கவும் துழாவவும் மட்டுமே
நாக்கை வைத்துக்கொண்டால் போதும்...

- விக்ரமாதித்யன்


ஞாநி தனது பாரதி கோட்டோவியத்தை தேசிய உடமையாக்கியிருப்பதாக நேற்று பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தன. இந்தப் புத்தக கண்காட்சியில் இது முக்கியமான நிகழ்வு.

இன்னொரு முக்கியமான நிகழ்வு விமலாத்தித்த மாமல்லன் இரண்டாண்டுகளுக்கு முன்பு உயிர்மை வெளியிட்ட அவரது கதைத் தொகுப்பை தானே இலவச பி.டி.எஃப் பாக அவரது இணைய தளத்த்தில் வெளியிட்டு தன்னை தேசிய உடமையாக்கிக்கொண்டிருப்பதாக பரபரப்பான செய்திகள் அடிபடுகின்றன. கல்கியின் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு தேசிய உடமையாக்கப்பட்டிருக்கும் விமலாதித்த மாமல்லனின் கதைப் புத்தகத்தை பெரிய அளவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பதிப்பகங்களும் போட்டி போட்டுக்கொண்டு பெரிய அளவில் அச்சிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. காலச்சுவடு இதற்கு அரவிந்தனை பதிப்பாசிரியராகக் கொண்டு ஒரு செம்பதிப்பைக் கொண்டு வந்து அதை நவீன க்ளாசிக் வரிசையில் சேர்க்க இருப்பதாகவும் நேற்று கண்காட்சியில் ஒரே வதந்தி...

மேற்படி கதாசிரியர் இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட தனது புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்திற்கு குறைந்த பட்சம் ஒரு தகவல் தெரிவித்துவிட்டு இந்த தேசிய உடமையாக்கும் திருப்பணியை செய்திருக்கலாம். அச்சிட்ட 500 பிரதிகளில் 200 பிரதிகள் கையில் இருக்கின்றன. அவரது ராயல்டி தொகை போக மீதித் தொகையை செலுத்திவிட்டு அந்தப் பிரதிகளை அவர் பெற்றுச் சென்று அவரது புத்தகத்தின் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

புத்தகம் விற்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எந்தக் கவலையும் பொறுப்பும் இல்லாமல் நூல்களை பதிப்பிக்கும் என்னைப் போன்ற ஒரு பதிப்பாளன் மதிப்பிற்குரிய எழுத்தாளர்கள் சிலரிடம் இருந்து கிடைக்கும் இது போன்ற செருப்படிகளால் அயரப் போவதில்லை. மாறாக கடந்த ஐந்தாண்டுகளில் உயிர்மை பதிபித்த பல இளம் எழுத்தாளர்கள் எவ்வளவு பிரதிகள் செல்வ்வாணியாகியிருக்கிறார்கள் என்ற கணக்கு விபரத்துடன் அவர்களது செலாவாணியாகாத நூற்றுக்கணகான பிரதிகளை அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட எண்னியுள்ளேன்.

வருடத்திற்கு 50 பிரதிகள் கூட விற்காத கவிஞர்கள் சிலர் மனுஷ்ய புத்திரன் ராயல்டி தராமல் தாமதம் செய்கிறான் என பிரச்சாரம் செய்யும்போது எனக்கு உண்மையிலேயே கண்ணீர் வருகிறது. அது என்னைப் பார்த்தல்ல. தங்களுடைய ஸ்திதி என்னவென்றே தெரியாமல் இவ்வளவு கெத்தாக பேசுகிறவர்களைப் பார்த்து.

இரண்டாண்டுகளுக்கு முன்பு விற்காத எதையும் பதிப்பிக்க மாட்டேன் என்று பதிரி ஷேசாத்ரி எழுதியபோது நான் அவரை விமர்சித்து எழுதினேன். ஆனல் இப்போது பத்ரி சொல்வதுதான் சரி என்கிற முடிவுக்கு கிட்டதட்ட வந்துவிட்டேன்.