09 September 2013

அச்சடித்து புத்தகமாய் வந்திருந்தால் அது அழியாச்சுடர்

குள்ளச் சித்தன் சரித்திரம்-(ஒரு பகுதி)– யுவன் சந்திரசேகர்

பத்தி 1

அரங்கதினுள்ளே விசித்திரமான மணம் நிரம்பியிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட தூண்களின் உச்சியிலிருந்த கிண்ணக் குழிவுகளில், கனன்ற கங்குகள் மீது ஒரு விதமான மணப்பொடி தூவப்பட்டு, அவற்றிலிருந்து கிளம்பிய புகையில் நறுமணம் நிரம்பியிருந்தது. கூடத்தை நிறைத்தவர்கள் அரசாங்க உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், பிரபுக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்.

<அரங்கதினுள்ளே விசித்திரமான மணம் நிரம்பியிருந்தது> 

அடுத்த லைன் 

<நிறுத்தி வைக்கப்பட்ட தூண்களின் உச்சியிலிருந்த கிண்ணக் குழிவுகளில், கனன்ற கங்குகள் மீது>

கிரேன்ல ஏறி பாத்தாரோ எழுத்தாளர்?

<ஒரு விதமான மணப்பொடி தூவப்பட்டு> 

கிரேன் ஏறிப் பார்த்தும் <ஒரு விதமான மணப்பொடி>யாகத்தான் தெரிகிறது உறுதியாகத் தெரியவில்லை போலும்.

<அவற்றிலிருந்து கிளம்பிய புகையில் நறுமணம் நிரம்பியிருந்தது.>

முதல் பத்தியின், முதற்பகுதியில் 

<விசித்திரமான மணம் நிரம்பியிருந்து> 

அடுத்த வரியின் இறுதிப் பகுதியில் அதையே 

<நறுமணம் நிரம்பியிருந்தது> 

என தெளிவாக்கிக்கொண்ட  ‘புலன்’ அறிவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பத்தி 2

பெரும் நிசப்தம் நிலவிய அரங்கத்தின் பக்கவாட்டில், இரு ஓரங்களிலும் அலிகள் சிலர் நின்று மயிற்பீலியால் ஆன மகத்தான விசிறிகளைப் பதமாக அசைத்துக் கொண்டிருந்தனர். அவையை பாதியாய்ப் பிரித்துப் போடப்பட்ட திரைக்கு பின்னால், வளையல்களின் ஓசையும், குறுஞ்சிரிப்புகளின் மென் சப்தமும்,கிசுகிசுப்பான பேச்சுகளும் கேட்டவாறு இருந்தன. அரங்கத்தின் மேடை, பச்சை திரைச்சீலையால் மூடப்பட்டிருந்தது.

<பெரும் நிசப்தம்> 

நிசப்தத்தில் பெருசு சிறுசு எல்லாம் இலக்கிய எழுத்தாளர்களுக்கே புலப்படும் ரகசியம்.

<அரங்கத்தின் பக்கவாட்டில், இரு ஓரங்களிலும்>

குங்குமம் சிவப்பு கூந்தல் கறுப்பு போல அரங்கத்துக்கு இரு ஓரங்கள் உண்டு என்கிற எவர் கிரீன் உண்மை சொல்லப்பட்டிருக்கிறது.

<மகத்தான விசிறிகளை>

எழுத்தாளர் சொல்ல விழைவது, விசிறிகளின் காஸ்ட்டா? சைசா? விலையுயர்ந்த / பெரிய என்று எழுதி விட்டால் சப்புனு இலக்கிய கெத்து இல்லாமற் போய்விடுமோ?

பத்தி 3

இங்கிலாந்திலிருந்து வந்திருக்கும் வணிகர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி துவங்குவதற்காக காத்திருக்கிறது சபை.

இதுவரை இறந்த காலத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயில், ’காத்திருக்கிறது’ என நிகழ் காலத் தண்டவாளத்தில் தடம்புரண்டுவிட்டது.
 
பத்தி 4

திரை மெல்ல உயர்கிறது. மேடையில் நடுநாயகமாக அவன் உட்கார்திருக்கிறான். அவையின் வலது வரிசையில் முன் ஓரத்தில் அரியாசனம் போன்ற இருக்கையில் வீற்றிருக்கும் பாதுஷாவை நோக்கித் தலை தாழ்த்துகிறான், தன் வலது கையை மார்பில் பதித்தவாறு.

டைம் மெஷின் நிகழ் காலத்தில் ஸ்டெடியாகப் போகுமா?

பத்தி 5

இவனுடைய குரு மிகப்பெரிய இசை மேதையாம். தன் சங்கீதத்தால் மேகங்களைப் பொழிய வைக்கவும், தீபத் திரியில் நெருப்பு ஏற்றும் வல்லவராம். இவனைப் பற்றியும் விசேஷமாக சொன்னார்கள். தன் சித்தம் போன விதமாக நாடோடியாக அலைகிறவனாம் . இந்தத் தலைமுறைப் பாடகர்களில் முதன்மையானவன் என்கிறார்கள்.

<இவனைப் பற்றியும் விசேஷமாக சொன்னார்கள்.>

பத்தி 4கில் தொலைவிலிருக்கும் மேடையில்  ’அவன்’ என அறிமுகமானவன் அடுத்த  பத்தியில், பக்கத்தில் வந்து அமர்ந்து ‘இவன்’ ஆகிவிட்டானா?

<வைக்கவும்> <ஏற்றும்>

’உம்’ மன்னாப் பிரச்சனை எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் போல, டைப்பிங் மிஸ்டேக்காகவும் இருக்கலாமோ என்னவோ 

பத்தி 6

கன்றின மிளகாய்ப் பழம் சிவந்திருக்கின்றன அவன் கண்கள். பிடரியில் அலைஅலையாய்ப் புரள்கிறது ஒழுங்குபடுத்தப்படாத கேசம். சித்த சுவாதீனம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். குதப்பிய வெற்றிலைச் சாறு குருதிக் கோடாகக் கடைவாயோரம் வழிகிறது. தனக்கு இடது புறம் இருக்கும், வாயகன்ற பித்தளைப் படிக்கத்தில் உமிழ்கிறான்.

அரங்கத்தில் உட்கார்ந்து அனைத்தையும் விவரிக்கும்  பத்தி 10ல் ‘நான்’ என வரும் கதா பாத்திரம், முன் வரிசையில் அரியணைக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறது என பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் 

<கன்றின மிளகாய்ப் பழம் சிவந்திருக்கின்றன அவன் கண்கள்.> 

கண் சிவந்திருப்பது தெரியுமா?

ராஜா காலக் கதையில், மேடையில் இருப்பவன் மீது ஆர்க் லேம்ப்பா அடித்துக் கொண்டு இருக்கிறது? அல்லது ’மகத்தான’ LED திரை இரு ஓரங்களிலும் வைக்கப்பட்டு இருக்கிறனவா ஸூம் செய்து கண் சிவந்திருப்பதைக் காட்ட?

பத்தி 7

அவனுக்கு பின்னால் இரு புறமும் தூண்கள் போல நின்றிருக்கும் தந்தி வாத்தியங்களில் இருந்து கனத்த ரீங்காரம் எழுகிறது. அவையில் அமைதி படர்கிறது. வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று இசைவாகுவதற்கு வெகு நேரம் பிடிக்கிறது. பாடகன் தன் மடியில் கிடத்தியிருக்கும் சிறு வாத்தியத்தில் தன் விரல்களை அலையவிட்டுக் கொண்டிருக்கிறான். இதுவும் தந்தி வாத்தியம் தான். சீரான இடைவெளியில் இழுத்துக் கட்டப்பட்ட கம்பிகளுடன் அகலமான சட்டகம் போல இருக்கிறது.

எந்தப் பார்வையில் எழுதுவது என்பதை எழுத்தாளன் முதலிலேயே முடிவுசெய்ய வேண்டும். ’நான்’ பார்க்கையில் தொலைதூர நுணுக்க விவரிப்புகளைத் தவிர்க்க வேண்டும். நுட்ப விவரிப்புகளே முக்கியம் எனில் பறவைப் பார்வைக்குப் போய் அவ்வப்போது தாழப் பறந்து கொள்ளலாம். தப்பும் தவறுமாய் எழுதிவிட்டு நான் லீனியர் நீ ஜூனியர் என்றெல்லாம் சமாளிக்கக் கூடாது. ஆடத்தெரியாதவர்கள் கூடத்துக்கு ஃபாரின் பெயர் வைத்துக்கொண்டால் மட்டும் போதுமா?

பத்தி 8

மூன்று கருவிகளும் பொருந்திய தருணத்தில், அவற்றுடன் இழைந்து மிருதுவாக எழுகிறது அவனுடைய குரல்.

<மூன்று கருவிகளும் பொருந்திய தருணத்தில்> 

ராஜா காலத்தில் ஸ்ருதி கூட்டியபடியே,  பாட்டு ஆரம்பித்துக் கொண்டு இருந்தது போலும். என்னதான் ராஜாவுக்கு இயற்கை முட்டுகிறது என்றாலும் இது சாத்தியமா? இத்துனைக்கும் இதை எழுதிய ஆசிரியர், ஜெயமோகனின் பயணக் கச்சேரிகளில் ‘பாரப்பா பழநியப்பா’ போன்ற சினிமா கீர்த்தனைகளை திறம்படப் பாடும் சங்கீத வித்துவான்.

பத்தி 9

மிக மெதுவாக மிக மிக மெதுவாக அரற்ற ஆரம்பிக்கிறது. சுழன்று சுழன்று வேகமெடுக்கிறது. சன்னமான தூறலாகத் தொடங்கி சிறு தாரைகளாகக் கூடி, கனத்த மழைக் கம்பிகள் போல வர்ஷிக்கிறான். அவனது வேகத்துடன் இணையாக சஞ்சரிக்கிறது என் மனம்.

<அரற்ற ஆரம்பிக்கிறது.>

ஆலாபனை ஆரம்பிச்சுடுத்தாமா? சங்கீத சீசன்ல மியூசிக் அகாடெமில வந்து இதைச் சொல்லு. அம்பினு கூடப் பாக்காம அப்பளம் பண்ணிடுவா!

<கனத்த மழைக் கம்பிகள் போல வர்ஷிக்கிறான்>

மழைனா இன்னா வர்ஷம்னா இன்னா? ரெண்டும் ஒண்ணுதானே. சமஸ்கிருதம் கலந்து எழுதினா ’ஒரு இதுவா’ இருக்கும்கறதுக்காக எதைவேணா எடுத்து கலப்பியா? நீ குடிக்கிற சீம சரக்குல சீமெண்ணைய எடுத்து ஊத்துவியா, சீ க்கு சீ வருதுன்றதுக்காவ?.

பத்தி 10

இது நாள் வரை நான் கேட்டறியாத என் ரகசிய உட்குரலை நான் கேட்க உதவும் வண்ணமாக அவன் பாடிக் கொண்டிருக்கிறான். தன் குரலை அல்ல, குரலுக்கு பின்னாலுள்ள எதையோ உணர்த்தும் பொருட்டு தான் அவன் பாடுகிறான் என்று தோன்றுகிறது. அவன் முன்னிறுத்தும் அந்தப் பின்புலத்தில் தொற்றிக் கொள்ள என் மனம் மிகவும் சிரமப்படுகிறது. சுனையாக ஊரும் வேட்கையுடன் சுவாசம் ஒடுங்கி ஆழ்கிறேன். மந்தை வசியத்துக்கு ஆளான மதக்கூட்டம் போல அவையோர் கிறங்குகிறார்கள்.

<இது நாள் வரை நான் கேட்டறியாத என் ரகசிய உட்குரலை நான் கேட்க உதவும் வண்ணமாக அவன் பாடிக் கொண்டிருக்கிறான்.>

ஊத்தலா எழுதறதுன்னு முடிவு பண்ணிட்டா காற்றுக்கென்ன வேலி கடலுக்குன்ன மூடி?

<தன் குரலை அல்ல, குரலுக்கு பின்னாலுள்ள எதையோ உணர்த்தும் பொருட்டு தான் அவன் பாடுகிறான் என்று தோன்றுகிறது. >

இதுவுமதே

<அவன் முன்னிறுத்தும் அந்தப் பின்புலத்தில் தொற்றிக் கொள்ள என் மனம் மிகவும் சிரமப்படுகிறது.>

ஸ்கூட்டில தொத்தி ஏறவே இவ்வளவு கஷ்டமா? உஸ்ஸ்ஸ்ஸபா

<சுனையாக ஊரும் வேட்கையுடன் சுவாசம் ஒடுங்கி ஆழ்கிறேன்.>

வேட்கை என்னா ’சுனையாக ஊரும் வேர்வை’யுடன்னு கூடப் போட்டுக்கோ எவன் கேக்கப்போறான். இல்லே அர்த்தம்தான் என்னா பெருசா மாறிடப்போவுது?

<மந்தை வசியத்துக்கு ஆளான மதக்கூட்டம் போல அவையோர் கிறங்குகிறார்கள்.>

<மந்தை வசியம்> 

யூ மீன் மாஸ் ஹிப்னாடிசம்?

<மதக்கூட்டம்>

ஆவியெழுப்பும் சுவிசேஷக் கூட்டம் ஆர் யானைக் கூட்டம்? அந்தக்கால ராஜ சபை மீஜிக் பவர், இந்தக்கால ராஜா சார் ட்விட்டர்களோட அலப்பறைய விட ஜாஸ்தியா இருக்கும்போல இருக்கே.

பத்தி 11

கச்சேரியின் இரண்டாம் பகுதி தொடங்குவதற்கு முன்னான இடைவெளியில் என் மனம் ஒப்பீட்டில் இறங்குகிறது. என்னுடைய தேசத்தின் சாஸ்திரிய சங்கீதத்துக்கும் இவன் பாடும் சங்கீதத்துக்கும் உள்ள வேறுபாடு புலனாகிறது. எங்களுடைய சங்கீதத்தில் நிசப்தம் என்பது, ஒரு ஒலித் துணுக்குகும் மற்றதுக்கும் உள்ள இடைவெளி. இவனுடைய சங்கீதத்தில், ஓசையின் பின்னுள்ள திரையாக செயல்படுகிறது நிசப்தம். மனதில் அலையாடும் எண்ணக் குவியலைக் புறக்கணிக்கும் பொருட்டே இவர்கள் சங்கீதத்தில் ஆழ்கிறார்கள் என்று படுகிறது.

<எங்களுடைய சங்கீதத்தில் நிசப்தம் என்பது, ஒரு ஒலித் துணுக்குகும் மற்றதுக்கும் உள்ள இடைவெளி. இவனுடைய சங்கீதத்தில், ஓசையின் பின்னுள்ள திரையாக செயல்படுகிறது நிசப்தம்.>

மீஜிக்னா இசையா ஓசையா? 

ஓசையின் பின்னுள்ள திரை நிசப்தம்

எங்களுடைய சங்கீதம் இவனுடைய சங்கீதம் “மாற்று மெய்மை”

பத்தி 12

தாள வாத்தியம் உடன் சேர்கிறது. அவன் இசையின் வேகம் அபரிமிதமாக கூடியிருக்கிறது. முன்னோக்கி நீட்டிய கைகளால் காற்றில் சித்திரம் வரைகிறான்.தன் மனதின் ரகசிய தாழ்வாரங்களில் ஊறும் ஒலித்தாதுக்களின் வரி வடிவத்தை எழுதிக் காட்ட முனைபவன் போல. மானசீக மரம் ஒன்றை இரு கைகளாலும் பற்றி குலுக்கி உலுப்புகிறான். ஒலிச்சிதறல்கள் போல ஒலிப்புள்ளிகள் இறைந்து பரவுகின்றன.

<மானசீக மரம் ஒன்றை இரு கைகளாலும் பற்றி குலுக்கி உலுப்புகிறான்.> 

குலுக்கி உலுப்பி அலப்பி பலப்பி குலப்பி சொதப்பி-ன்னு இன்னும் நாலஞ்சு போட்டுருக்கலாம்.

<ஒலிச்சிதறல்கள் போல ஒலிப்புள்ளிகள் இறைந்து பரவுகின்றன.>

என்னா ஸ்பெஷல் எஃபெக்ட்டு! அந்த ராஜ அவையில மீஜிக் கேட்ட அத்தினிபேருக்கும் கண்டிப்பா கண்ணு அவிஞ்சிருக்கும்.

பத்தி 13

குழைவான அவன் குரலிருந்து அபூர்வமான தனிமை ஒன்று பீய்ச்சியடிக்க ஆரம்பிக்கிறது. அது கரும் மேகக் கூடம் போல அரங்க விதானத்தின் கீழ் தொங்குகிறது.அரங்கத்தில் தனிமையின் இருள் சூழ்கிறது. அவனும் நானும் மட்டுமே பகிர்ந்து கொள்ள மீந்த தனிமை வெளியில் இருவருக்குமான பொதுத் தொடர்பாக வரையறுக்கப்பட்ட ஒலித் தொகுப்பு ஸ்தாபிதமாகி இருக்கிறது. தடமற்ற ஒலிச்சாலையில் அந்தகன் போல் அவன் குரல் பற்றி தொடர்கிறேன்.

<குழைவான அவன் குரலிருந்து அபூர்வமான தனிமை ஒன்று பீய்ச்சியடிக்க ஆரம்பிக்கிறது.>

loparet tablet அப்ப கண்டுபிடிக்கலியோ?

<அது கரும் மேகக் கூடம் போல அரங்க விதானத்தின் கீழ் தொங்குகிறது.>

லிக்விடா பீச்சி அடிச்சது அடுத்த வரிலையே கொதகொதன்னு சாலிட் ஆயிடுச்சா பாஸ்?

பத்தி 1ல அரங்கதினுள்ளே விசித்திரமான கப்பு நிரம்பியிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட தூண்களின் உச்சியிலிருந்த கன்னக் குழிவுகளில் பொகை வந்துச்சின்னுலாம் சொன்னப்போ அது ஓப்பன் ஏர் தியேட்டர்னு இல்லை வாசகன் நினைப்பான்? இப்ப அரங்க விதானம்னா, என்னா அர்த்தம் தூண்கள் இல்லாத விதானமா? இல்லே ஷாமியானா போட்டு இருந்திச்சா?

ஒரேமுட்டா ஓப்பன் ஏர் ஆடிட்டோரியம்னும் சொல்லிட முடியாது, பிகாஸ்,

சைடால மகத்தான மயிற்பீலி விசிறி வெச்சி அடிச்ச வெவரணை எல்லாம் என்னாவுறது?

<அரங்கத்தில் தனிமையின் இருள் சூழ்கிறது.>

டேடி எனக்கொரு டவுட்டு? 

தனிமைனா இருள் அப்ப கும்பல்னா ஒளி இல்லியா டேடி? 

<அவனும் நானும் மட்டுமே பகிர்ந்து கொள்ள மீந்த தனிமை வெளியில் இருவருக்குமான பொதுத் தொடர்பாக வரையறுக்கப்பட்ட ஒலித் தொகுப்பு ஸ்தாபிதமாகி இருக்கிறது. >

மீந்த தனிமை வெளி - மீந்தது வடையா இருந்தா மக்யா நாள் வடைகறி ஆயிடும். மீந்தது தனிமை வெளி அதாலதான் இலக்கிய ஆயிடுச்சி.

<தடமற்ற ஒலிச்சாலையில் அந்தகன் போல் அவன் குரல் பற்றி தொடர்கிறேன்.>

இப்பிடியே மானாவாரியா எய்திகினு இருந்தா வாசகன் எல்லாம் மயிரைப் பிச்சிகிட்டு அங்கதன் ஆயிர வேண்டீதுதான்.

பத்தி 14

அவன் சொல்லி நான் புரிந்து கொள்வது என்றில்லாமல், அவன் சொல்லும் முன்பே எனக்குள் ஒலிக்கும் தனிமையின் காத்திரத்தை வலுவாக உணர்கிறேன்.

எஸ். நாங்களும் கீழ்பாக்கத்தில் இருக்கும் காத்திரத்தை வலுவாக பீல் பண்றோம்.

பத்தி 15

அவனுடைய வேகம் நாலாவது ஐந்தாவது ஆறாவது கதியில் பாய்கிறது. எனக்குள் சிந்தனை அடங்கிய நிசப்தவெளி உருவாகிறது. மனம் அசைய மறுக்கிறது. அவன் பாடும் வேகத்தில் என்னுள் அசைந்து கொண்டிருந்த தாளம் நின்று போகிறது. அடி வயிற்றிலிருந்து ஒரு ஏக்கம் பீறிட்டுக் கிளம்புவதை உணர்கிறேன்.

<ஒரு ஏக்கம்> 

தமிழ் எழுத்தாளன்களை எப்பத்தான் இந்த ‘ஒரு’ விடுமோ ஒரு தெரியலை.

ஒண்ணா பீய்ச்சுது இல்லாட்டி பீறிடுது. எதுவுமே உங்குளுக்கு நார்மலாவே நடக்காதா பாஸ். 

பத்தி 16

மூச்சுத் திணறத் திணற நிசப்தத்தின் இருட்ச்சிறைச் சுவர்களுக்குள் ஒடுங்குகிறேன். நண்பனே ... என் அருமந்த நண்பனே. இசைஞனே.. என்னை மீட்க வந்த இறையே...

ரொம்ப ஓவரா இருட்ச்சிறைச் ச்வர்களுக்குள் ஒடுங்கிகிட்டா அந்த இசைஞன் மீட்க எவ்ளோ கஷ்டப்பணும் கொஞ்சம் கருனை காட்டுங்க பாஸ்.

பத்தி 17

கூடம் வாஹ் ... வாஹ் ... என்று ஆர்ப்பரிக்கிறது பெரும் தேஜஸூடன் மிளிர்ந்த அவன் முகம், ஓசை ஓய்ந்த தருணத்தில் விகாரமாக வெளிறி இருக்கிறது. கரகோஷம் உரத்து எழும்பொது, தன் அந்தரங்கத்தைப் பிறர் அறியத் தந்ததில் அவமானமுற்றவன் போலக் கூசுகிறது அவன் முகம்.

<பெரும் தேஜஸூடன் மிளிர்ந்த அவன் முகம், ஓசை ஓய்ந்த தருணத்தில் விகாரமாக வெளிறி இருக்கிறது. >

மேக்கப் கலைஞ்சு போச்சுனா டச்சப் பாயைக் கூப்புட வேண்டீதுதானே?

<கரகோஷம் உரத்து எழும்பொது, தன் அந்தரங்கத்தைப் பிறர் அறியத் தந்ததில் அவமானமுற்றவன் போலக் கூசுகிறது அவன் முகம்.>

என்ன மயித்துக்கு அப்புறம் மேடை ஏறிப் பாடவந்தானாம்? 

அண்ணன் எழுதின நாவல் சூப்பர். ஜெயமோகனுக்கு அடுத்தபடி அண்ணந்தான் நிரந்தர இலக்கியவாதி வாஹ் வாஹ் என்று அரங்கசாமியும் ஜடாயுவும் செல்வேந்திரனும் ஆர்ப்பரித்தால், வெளிக்கி முட்டி, அண்ணா சாலையில அண்ட்ராயர் அவுக்க முடியாதவன் மாதிரி வெளிறிப் போகுமா யுவன் மூஞ்சி?

இதுக்குப் பேருதான் ஓத்லா ரைட்டிங். உச்சி முகர்வோர் முகர்ந்து கொள்ளலாம்.