17 September 2013

கிணறும் தவலையும்

உமர்கயான். சே.ஜெ


<விமலாதித்த மாமல்லன்எழுத்தாள அறிவு கொளுந்துக்கு ஓர் பதில்....>

தமிழில் பேசுகையில் ’ழ’ வராமை பெரிய குறையில்லை. அது வட்டாரம் சார்ந்த பாரம்பரியப் பிரச்சனை. எழுதும் போதும் வருகிறதென்றால் - அவர் சரியாக எழுதுவதாகத்தான் - தாம் எழுதும் எல்லாவற்றையும் போல ழவையும் சரியாகவே எண்ணிக்கொண்டிருக்கிறார் பாவம். தூக்கிய கையைக் கொஞ்சம் தொங்க விட்டு,  ழு ளு லு இம்மூன்றில் எது சரியானதென்று பொறுக்குங்கள். இப்படி நா தடித்து குழப்பினால் எங்கள் வீட்டுப் பக்கம் வாய்ல தர்ப்பையைப் போட்டுக் கொளுத்த என்பார்கள். 

<கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஓயாத பயணமும் அதை தொடர்ந்த உடல்நலக்குறைவின் காரணமாக தாமதமாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். >

அடங்கொப்புராண கடிதமா இது! எப்பிடி எப்பிடி உங்க ஃபேஸ்புக் பக்கத்துக்கு நீங்களே கடுதாசு போட்டுக்கிறீங்களா? பழனிபாபா பத்தி ஒரு பய சொல்லிப்புட்டான்னா தந்தி இல்ல உட்டுருக்கணும் சாவகாசமா கடுதாசி போடறீங்க! ஓ இந்திய அரசு தந்தியை ஒழித்து விட்டதா? அதற்காக கிடைத்தது ஒரு வாய்ப்பு என்று நாம் இருப்பது அரபு நாட்டிலா ஓங்கிக் குரல் கொடுத்தால் குண்டியிலேயே ராடு சொருகுவான் என்று பயப்பட. இருப்பது இந்தியாதானே தந்தியை ஒழித்த தரங்கெட்ட இந்தியக் கயவாளி அரசேனு ஒரு பாட்டம் திட்டுங்க சார்.

<முகநூலில் ஓர் அறிவு ஜீவி எழுத்தாளராம்>

என் மேல எவ்ளோதான் கோவம் இருந்தாலும் இப்படிக் கெட்ட வார்த்தைல திட்டறது ஆகாது சார். உங்குளுக்கு அறிவு அரவே இல்லைங்கறதுக்காக என்னால அறிவால எல்லாம் ஜீவிக்க முடியாது சார். ஐ யாம் எ சுமால் மேன். பைல்ஸ் பிராப்ளம் வந்தா பன்றிக் கறி தின்ற சுமால் மேன். மத்த நேரம் மலையாளத்தான் பண்ணிப் போடற மாட்டுக்கறி தின்ற சுமால் பிராமின் பாய். 

<அவரின் ஒரு பதிவில் புரட்சியாளர் பழனிபாபாவை குறித்து எழுதியதை தோழர்கள் என் கவணத்திற்கு கொண்டுவந்தார்கள்>

அடேங்கப்பா நான் ஒரு 200 கோடி ரூவா கம்பெனி நடத்துற வெண்ணை என் ஃபேஸ்புக் சுவர்ல நான் எழுதினதை, இவுரு ஏழெட்டு ஆயில் கெணறு வெச்சிருக்கிற குவைத்து ஷேக்கு, இந்த நொண்ணைக்கு ப்ரிஅவேட் செக்ரெட்டரியான இவரது நண்பர்கள்  கவனத்துக்குக் கொண்டாந்தாங்களாமா? ஏம்லே ஜெயமோகனாட்டம் இந்த அக்குரும்பு பண்ணுதேரு. 

<அந்தபதிவின் படநகலையும் அனுப்பிவைத்தார்கள்.> 

சும்மா சுட்டி குடுத்தாய்ங்க சூத்தாம் பட்டையை சொறிஞ்சிகிட்டே படிச்சேன்னு சொல்லுவியா அத உட்டுட்டு வடிவேலு கணக்கா ஐயாம் செளய்ங் இன் த ரெயின் மேரி என்னா வெட்டி பில்டப்பு.

<அந்த பதிவு@https://www.facebook.com/vmaamallan?ref=ts&fref=ts என்பவரால் இப்படி எழுதப்பட்டிருந்தது///வன்புணர்ந்த தடயத்தை அழிக்க யோனிக்குள் ஜாக்கி ராடை திணித்து சுழற்றி இழுத்த ’குழந்தைக் குற்றவாளி’யைக் கொஞ்சுவது அறிவுஜீவிதம்////
இதில் என்ன சொல்லவருகிறார் என்பதை என்னை போன்ற சூனியங்களுக்கு தெரிய வாய்பில்லைதான் விடுங்கள் அது போகட்டும் நான் மேட்டருக்கு வருகிறேன்.>

நீயெல்லாம் சூனியம்கறதுதான் தெளிவான மேட்டர். நான் சொன்னது என்னங்கறதே புரியாமப் பேச ஆரம்பிச்சேங்கறதுதான் ஓய் மேட்டரே! இந்த லட்சணத்துல என் கூட விவாதம் பன்றேன்னு சவுண்டு வேற!

<பின்னுட்டத்தில்// Musthaq Ahmed தடயத்தை இப்படித்தான் அழிக்க வேண்டுமென்று கற்று தந்தது யார்?//// என்று முஸ்தஹீம் அஹமது என்பவர் கேட்கிறார். அதற்கு பதிலாக இந்த வாய்கொளுப்பு வாத்தியார் இப்படி பதில் சொல்கிறார்////வெட்றா குத்றானு வெறியூட்டிய பழனிபாபாவா இருக்குமோ வக்கீல் சார்?//// >

இதுல வாய்கொழுப்பு எங்க வந்துது? கொழுப்பு என்பதை பத்து தடவை பாராயணம் பண்ணுங்கள். அது கொளுப்பு இல்லை பாய், கொழுப்பு.

உங்கள் குழாம் விட்ட வீடியோக்களில் பழனிபாபா விட்டிருப்பதெல்லாம் சவாலா இல்லை வெற்றுச் சவடாலா? அவருடைய வாய்க்கொழுப்புக்கு எத்துனை வீடியோக்கள் வேண்டும்? போலீஸ் அதிகாரி அவதூறாகப் பேசினாரா இல்லையா என்று விசாரிக்காமல், காவலுக்கு நின்று கடமையைச் செய்பவரைப் பார்த்து மேடையிலிருந்தபடி தனக்குப் பின்னால் விசிலடிக்கும் கும்பல் இருக்கிற மமதையில் நான் நினைத்தால் உன்னை அங்கே தூக்கியடித்திருப்பேன் இங்கே தூக்கி அடித்திருப்பேன் என்று சொல்லி மிரட்டுவது கிரிமினல் குற்றமா இல்லையா? இதைச் செய்பவன் யாராய் இருந்தாலும் அவன் கிரிமினலா இல்லையா? இந்தியக் குற்றவியல் சட்டம் என்ன கூறுகிறது வக்கீல் சாரே?

இதே காரியத்தை வாயால் சொல்லாமல் தன் கீழிருக்கும் போலீஸ் காரர்களைப் பார்த்து,கண்டுகொள்ளாதே என்று கண்சிமிட்டியதால் நிகழ்ந்ததுதானே குஜராத் கலவரத்தில் ஆயிரக் கணக்கான அப்பாவி முஸ்லீம்களின் படுகொலை. 

<அய்யா மாமல்லன் அவர்களே புரட்சியாளர் பழனிபாபாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.>

எனக்கு மட்டுமல்ல வெண்ணைகளே ஆங்கில விக்கிபீடியாவுக்கும் அவர் செய்த புரட்சி என்ன என்று தெரியவில்லை. ஆங்கில விக்கிப்பீடியா ஏன், பழனிபாபா எந்த ஆண்டு பிறந்தவர் என்கிற விபரம் கூட இல்லாமல் இப்படி அழுது வடிகிறது.  http://en.wikipedia.org/wiki/Palani_Baba 

ஒட்டுமொத்த சமுதாயத்துக்கான பழனிபாபாவின் தொண்டு என்ன அன்பதை முதலில் விக்கிபீடியாவிலாவது பதிவு செய்யுங்கள். செக்ரெட்ரியேட்டில் சீட்டுக்கு சீட்டு போய் வேலை முடித்துக் கொடுப்பவர் பார்ப்பணராய் இருந்தால் அவரை என்னவென்று விளிப்பீர்கள்? அதைத்தானே தான் செய்த்தாகப் பெருமையாய் பழனிபாபாவே சொல்லிக் கொள்கிறார் நீங்கள் போட்டிருக்கும் வீடியோக்களில். 

<தன் சமுகத்திற்காக மட்டும் அல்ல அனைத்து சமுகங்களுக்காவும் போராடிய களப்போராளி.> 

பெரிய இடங்களில் காண்ட்டாக்ட் வைத்துக்கொண்டு காண்ட்ராக்ட் போடாமலே காரியத்தை முடித்துக் கொடுப்பவரெல்லாம் புரட்சியாளர்களா? 

ஆட்டோ சங்கர் வீட்டில் ரெய்டு நடத்தியதில்கூடத்தான் பெரிய போலீஸ் அதிகாரிகளின் அரசு அதிகாரிகளின் போட்டோக்கள் கிடைத்தன. 

<சொல்லும், எழுத்தும், பேச்சும் ஒன்றாக வாழ்ந்துகாட்டியவர். தமிழகத்தில் இசுலாமிய மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை எதிர்த்து தனது வீரமும், விவேகமும் நிறைந்த செயல்களால் இளைஞர்களை ஓர் அணியில் திரட்டியவர்.>

பழனிபாபாவின் வீர தீர பராக்கிரமங்களை குறைந்த பட்சம் விக்கிப்பீடியாவிலாவது பட்டியலிட்டு விவரிக்க வேண்டியதுதானே. 

<எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அறிமுகம் ஆனார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்ட திமுக, எம்.ஜி.ஆரை எதிர்க்க இவரைப் பயன்படுத்திக்கொண்டது.> 

80 தேர்தலில் திமுக மேடைகளின் முன்னணிப் பேச்சாளரே பழனிபாபாதான். ஆனால் கருணாநிதி தம்முடைய மேடைகளில் இவருடன் சேர்ந்து தோன்றினாரா? இல்லை என்பதுதான் என் கல்லூரிக்காலத்து நினைவு. ஏன் என்பது கேள்வி.

தேர்தல் முடிந்தவுடன் மேடை அகற்றப்படுவதுபோல பழனிபாபா ஏன் காட்சியிலிருந்து விலக்கப்பட்டார். அவர் உயரம் அவ்வளவுதான்.

<முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பதவிக்காலத்தில் அரசு பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.>
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE

வழக்கின் முடிவு என்ன ஆயிற்று? ஏன்? 
  
<இசுலாமிய மக்களின் பிரச்சனைகளை மட்டுமல்ல தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக தன் வீரியமிக்க பேச்சாலும்,எழுத்தாளும் களம் கண்டவர். தலித்துகள். பிற்படுத்தப்பட்டவர்கள்.இஸ்லாமியர்களின் ஒருங்கினைவையும், கூட்டு செயல்பாட்டையும் வலியுறுத்தி அதற்காக பல கூட்டமைப்புகளை உறுவாக்கி சமுக நல்லினக்கத்திற்கு பாடுபட்டவர்.>

மத நல்லிணக்கமா? கிழிஞ்சிது போ!

பழனிபாபா இப்படி ஸாகிர் நாயக் போல் (மதச் சட்டகத்துக்குட்பட்ட) அறிவுபூர்வமாய் எங்காவது விவாதித்திருக்கிறாரா?


மாறாக பழனிபாபாவின் சமூகத்தொண்டு என்ன? founder and leader of the All India Jihad Committee in Tamil Nadu, India.[1] மேலே ஸாஹிர் நாயக் விளக்கும் குரானில் கூறப்படும் ஜிஹாத்தும் பழனிபாபா தொடங்கிய ஜிஹாத் கமிட்டியும் ஒன்றா?

<அவர் எதிர்த்து நின்றது மத தீவிரவாததைதானே ஒழிய சாமனிய மக்களை அல்ல. வினைக்கு எதிர்வினை ஆற்றியவர். இன்னும் அவரை குறித்து பல செய்திகளை சொல்லிக்கொண்டே போகலாம்.>

குத்திட்டு வா நான் உன் குடும்பத்தைக் காப்பாத்தறேன் என இப்படியா?


போலீஸ் அதிகாரி சொன்னதாக சொல்லப்படுவதே கேள்விப்பட்டதுதான். இதில், இதைச் சொன்னவன் பாப்பானா இருந்தான்னா என்று கர்ஜனை வேறு. சொல்லியிருந்தால் அவன் பொண்டாட்டி பக்கத்துல படுத்து எந்திரிச்சி வந்துருப்பேன்னு பேசறது பெரிய தத்துவமாடா?

வாய்க்கு வாய் பாப்பான் பாப்பான்னு ‘திட்டின’ பெரியார்,சொல்லாத ஒன்னுக்கு , இப்படி அனுமானமா இவ்ளோ கேவலமா பேசி இருக்கார்னு ஒரு இடத்தைக் காட்டு பாப்போம். இவன்லாம் ஒரு தலைவன். இதுக்குப் பேருதான் ஹேட் ஸ்பீச். இதை முஸ்லீமுக்கு எதிரா எவன் பேசினாலும் சட்டப்படி தப்பு. அதே போல முஸ்லீம் எவனுக்கு எதிரா பேசினாலும் அதே சட்டப்படி தப்பு. வக்கீலுக்குப் படிச்ச உனக்கு சட்டம் தெரியாதா?

வர்ணாசிரம தர்மத்துல ஆளாளுக்கு ஒரு தண்டனை குடுக்கப்பட்டிருக்கு குடுக்கப்பட்டிருக்குன்னு பொழுதன்னிக்கும் கத்திகிட்டே அமலில் இல்லாத அதே வர்ணாசிரம தர்மத்தை கும்பல் கூட்டிகிட்டு உனக்கு ஒன்னு அடுத்தவனுக்கு ஒன்னுன்னு நீ அமல்படுத்தறதுக்குப் பெயர்தான் சமூக நீதியா?

<கேள்வி என்ன அதற்கு உங்களின் பதில்தான் என்ன பழனிபாபா கற்றுகொடுத்திருபாரோ என்று உங்களின் பதிலில் வன்மத்தையும் அவதூறையும் அள்ளி தொளித்துள்ளீர்கள்.>

மேலே இருக்கும் வீடியோவைப் பார்த்தபின்னும் வன்மம் என்னிடமா இல்லை பழனிபாபாவிடமா என்பதில் உங்களுக்கு ஏதும் ஐயம் உள்ளதா? இல்லை,

புண்படறதுக்குனே பூப்போன்ற மனசை உனக்கு மட்டும் ஆண்டவன் பொட்டணம் கட்டி அனுப்பிச்சானா? அடுத்தவன் மனசென்ன ஆட்டுக்கல்ல செஞ்சதா!

<இசுலாமிய இளைஞர்களுக்கு வீரத்தையும், விவேகத்தையும், அறிவுசார்ந்த நல் ஒழுக்கங்களையும் கற்றுக்கொடுத்த புரட்சியாளர் பழனிபாபா அவர்களை இப்படியான விசம் வார்த்தைகளால் அவதூறு செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.>

அப்பப்பா பழனிபாபா இசுலாமிய இளைஞர்களுக்குக் கற்றுத்தந்த விவேகத்தையும் அறிவுசார்ந்த நல் ஒழுக்கங்களையும்தான் புலிக்கொடி வீடியோ வீடியோவாய் போட்டுத்தள்ளுகிறாரே சேகுவேரா படத்துடன். அதுசரி சேகுவேரா தொழுத கம்யூனிஸ்ட் பள்ளிவாசல் எது? ஒருபுறம் இஸ்லாமிய மதம் இன்னொருபுறம் இறை நம்பிக்கையற்ற சேகுவேரா செம குஜால் காம்பினேஷன்.

<எழுத்தாளன் என்றால் வரை முறையில்லாமல் உங்கள் அறிவுஜீவிதனத்தை எப்படிவேண்டுமானாலும் காட்டலாமா...?
நாவடக்கம் தேவை.>

பழனிபாபா மட்டும் நாவடக்கத்துக்கு விதிவிலக்கா?

<உங்களின்இந்தமோசமான கருத்தை திரும்பபெறவேண்டும்.>

நாவடக்கம் இல்லாம பொத்தாம் பொதுவா பேசினதை மொதல்ல பழனிபாபாவை வாபஸ் வாங்கச்சொல்லு. அப்பறம் நான் வாபஸ் வாங்கறேன்.

பழனிபாபா பற்றிய என் கருத்துக்கான ஆதாரம் நீங்கள் வெளியிட்ட அவர் பேச்சுக்களிலேயே இருக்கும்போது, அது எப்படி மோசமானது ஆகும்? அதுதான் அவரது இயல்பு என்பதல்லவா நிரூபணம். திரும்பப் பேராவிட்டால் என்ன கீசிபுடுவியா?

<பின்னுட்டமிடுபவர்களின் சுயவிபத்திற்குள் போய் அவர் முஸ்லீமா..? கிருத்துவனா..? நாதிகனா என பார்த்து பார்த்து அதற்கு தகுந்தார்போல் வன்மத்துடன் பதில் அளிக்கும்>

எலேய் என்னவோ அவன் பெட்ரூமுக்குள்ள எட்டிப் பாத்தாப்புல என்னா சவுண்டு உடறே?பொதுவெளில எல்லாரும் பார்ப்பதற்காக  ஃபேஸ்புக்கில் எழுதப்பட்டிருப்பதைத்தானே பார்த்தேன்?

<உங்களின் அறிவு கொளுந்துதனத்தை என்னி வியக்கிறேன்.>

வியந்துகிட்டே கெடக்க வேண்டீதுதான் இந்த ஜென்மத்துல உனக்கு வரப்போறதில்லை. ஏன்யா முஸ்லீமா..? கிருத்துவனா..? நாத்திகனானு பாத்து அதுக்கேத்தாப்பல அவனவன் டுபாகூரை அம்பலப்படுத்துவது எழுத்தாளனின் தலையாய கடமை இல்லையா? இல்லை கருத்துச் சுதந்திரத்தில் இதெல்லாம் சேர்த்தி இல்லையா?

<நீங்கள் என்ன விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்.>

கரீட்டு. சும்மா வேலீல போன ஓணானை, டேக் பண்ணி வேட்டிக்குள்ள இழுத்து விட்டுக்கினுக்கிறியே நீயி, அது மேரியா மேன்?

<இந்த பதிவு உங்களின் பதிவுக்கு எதிர்வினையே. நாகரிகமாக எழுதியிருக்கிறேன். தங்களின் கருத்தை திரும்ப பெறவில்லை என்றால்>

என்னா அண்ணா சாலையில அமெரிக்க தூதரகத்துக்குக் கருப்புக் கொடி காட்டப்போறியா?

<நாங்கள் சாமனிய மனிதர்கள்>

எல்லாருக்கும் இருக்கறதுதாண்டே!என்னம்போ நீ மட்டும்தான் சாமான்ய மனிதனாட்டம்!

<எங்களின் வார்த்தைகள் நீங்கள் எதிர்பார்க்கும் நாகரிகத்தோடு இனி இருக்காது. >

அடிங்க... என்ன கொளுப்பு இருந்தா என்னையைப் போயி நாகரிகமானவன்னு அவதூறு செய்வே!

ஃபேஸ்புக்குல திட்டுவோம்னு மெரட்ட்ரியா? வீரமணி கோஷ்ட்டிங்க திட்டாததை என்னா பெருசா நீ திட்டிறப் போற? ஓத்தா ங்கொம்மா பாப்பாரத் தேவிடியாப் பையா உன் வக்கப்லரி இவ்ளதான. என்ன ழ ழு வரவேண்டிய எடத்துல எல்லாம் எச்சி பிசிறடிக்க ள ளுனு எளுதப்போறே. ஏய் இதுக்கெல்லாம் பயந்தவன் எழுத வரமுடியாது மச்சி.

<குறிப்பு: உங்கள் கருத்திற்கு எதிர்கருத்திடுபவர்களை பிளாக் செய்யும் ஜனநாயகவாதியாம் நீங்கள் விரைவில் என்னையும் பிளாக் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.>

அட நண்டு பிடிச்சிடுச்சே! புள்ள அறிவுக் கொளுந்து.

தவளைகூட ஒரு நாள் தக்கி முக்கி சுவர்தாண்டி வெளியுலகைக் கண்டுவிட முடியும். தவலைக்குக் கிணற்றுச் சுவரும் கழுத்தில் சுற்றிய கயிறுமே கதி.

மதமெனும் தாலி - கட்டிக்கொண்டவனுக்கு
மேல் மாடி காலி.