23 February 2014

உணர்வும் உணர்ச்சியும்

திருமுருகன் காந்தி, தேசிய ஊடகத்தில் கத்தோ கத்து கத்தி தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்ததன்படி பார்த்தால், ராஜீவ் கொலையின் பின்னால் இருப்பவர்கள், சுப்ரமண்ய சுவாமியும் சந்த்ரா சாமியும் என்று ஆகிறது. ஒரு வாதத்தத்துக்கு இதை உண்மை என்று எடுத்துக் கொண்டால், மனித வெடிகுண்டான தனுவும் சிவராசனும் சுபாவும் இந்தியர்களாகவும் ஏர் உழவன் சின்னம் வைத்திருந்த அப்போதைய ஜனதா கட்சி உறுப்பினர்களாகவும் அல்லவா இருந்திருக்க வேண்டும்? இப்படிப் பார்த்தால் அஞ்சா நெஞ்சன் பிரபாகரனின் வீரத்துக்கல்லவா பேரிழுக்கு வந்து சேரும்! 

இந்த சேம் சைட் கோல் போட முடியவில்லை என்றாலும் முதல் தமிழனாய் திருமுருகன் காந்தி, தேசியத் தொலைக்காட்சியில் அட்லீஸ்ட் முயன்றாரே என்று இனையத் தமிழனுக்குதான் எத்துனைப் புளகாங்கிதம்?

2002ல் எடுக்கப்பட்ட இந்த வீடியோவின் மூன்றாம் நிமிடத்தில், ஆங்கிலத்தில் மூன்று கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதல் கேள்வியை, ராஜீவ் கொலைச் சம்பவம் என்று குரல் தாழ்த்தி பாலசிங்கம் பிரபாகரனிடம் தமிழில் விளக்குகிறார். பிரபாகரன் அந்தக் கேள்வியையே தவிர்த்து பதிலளிக்கிறார். (பார்ப்பனப்?) பெண் பத்திரிகையாளரின் குரல், "மூணு கேள்வி கேட்டார் ஒண்ணுத்துக்குதான் பதில் வந்துது" என்று விடாப்பிடியாக இரண்டுமுறை கேட்கிறது. அதற்கு, அருகில் பிரபாகரன் அமர்ந்திருக்க, பாலசிங்கம், "ஆமாம் மட்றது வந்து it has no relevance" என்று மென்று முழுங்கி, "we have already said, we don't want to dig into the past. It is regard to Mr. Rajiv Gandhi..." என்று ஏன் சொல்ல வேண்டும்? இதற்கு அர்த்தம் என்ன?

சு.சுவாமி ச.சாமிகளை ராஜீவின் கொலைப் பழியிலிருந்தும் சதிப் பழியிலிருந்தும் காப்பாற்றதான் பாலசிங்கமும் பிரபாகரனும் பூசி மெழுகுகிறார்களா?


கொன்றவர் வீரத்தமிழன் பிரபாகரந்தான் ஆனால் சு.சுவாமி ச.சாமிகள் தூண்டுதலால்தான் ராஜீவைக் கொல்ல மனித வெடிகுண்டை அவர் ஏவினார் என்று இந்திய தேசிய ஊடகத்தில் திருமுருகன் காந்தி அம்பலப்படுத்திவிட்டார் என்றுதான் தமிழ் இணையப் போராளிகள் ஆரவாரிக்கிறார்களா!

தீவிரமான தீர்க்கமான உணர்வு காரியத்தில் சாதிக்கும் என்பதற்கு சரித்திரமும் வெற்று உணர்ச்சிக் கூப்பாட்டுக்கு திருமுருகன் காந்தியும் சாட்சியமாக நிற்கிறார்கள்.