13 February 2014

முதல் போட்டு ராயல்டி எடுத்த முதல் எழுத்தாளன்

விமலாதித்த மாமல்லன் கதைகள் 145 பிரதிகளுக்கான ₹18270 காசோலை காலச்சுவடில் ரெடி. இப்போது நான் வேலை மீதிருப்பதோ மீஞ்சூருக்கு சற்று முன்னால் # (12/02/2014)

நூலகங்களுக்காக புத்தகங்களை வாங்கிய சிங்கப்பூர் மணி வேலனுக்கு நன்றி. இப்போதேனும் நான் அளித்த செக்கை வங்கியில் செலுத்தி என் மீதிருக்கும் அடுத்தவர் பணத்தை வைத்திருக்கும் தார்மீக சுமையிலிருந்து என்னை விடுவிக்கும்படி மனுஷ்ய புத்திரனை வேண்டிக்கொள்கிறேன் 

#

கே.என்.சிவராமன் போன்ற சும்பன் கம் சொம்பன்களுக்கு!

மனுஷ்ய புத்திரன், எழுத்தாளனுக்கு விற்ற 211 பிரதிகளில் காலச்சுவடு 145 கிழக்கு 25 டிஸ்கவரி 20 அகநாழிகை 10 டிங்கு புக்ஸ் 5 கண்காட்சி + ஆன்லைன் விற்பனை. 6 கம்பெனிக்கு # விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகம் கதம். இனி PDFல் மட்டுமே கிடைக்கும் - செத்தபின் செம்பதிப்பு வரும்வரை

பிகு: உலகெங்கும் எங்கெங்கே இந்தப் புத்தகம் விற்காமல் தேங்கிக் கிடக்கிறது என்கிற தகவலை உயிர்மை அளித்தால் காசுக்கு வாங்கி காலச்சுவடு கிழக்கு மூலம் விற்றுத் தரப்படும். 

# நோ கேஷ் ஒன்லி செக்

#

விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகத்தை விற்ற மற்றவர்கள் சீக்கிரம் பணம் கொடுக்கும்படி வேண்டிக்கொள்ளப் படுகிறார்கள். (அந்தப் பணம்தான் எழுத்தாளனின் 10% ராயல்டி)

2014 புத்தகக் கண்காட்சியில் ஒரே ஒரு காப்பி விற்றதென மனுஷ்ய புத்திரன் சந்தோஷப்பட்டுக்கொண்ட - கைக்காசு பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட, சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் புத்தகத்தின் நூற்றுச் சொச்சம் பிரதிகளை அன்பளிப்பாய், நூலகங்களுக்கு அனுப்பும் கொரியர் செலவுக்கு - (சென்னைக்குள் ₹15 தமிழ்நாட்டுக்குள் ₹25) அது பயன்படும்.