12 February 2014

குத்து! எங்குத்தமா உங்குத்தமா?

ரோசா, விஷம், வன்மம் மற்றும் திடீர்த் தாக்குதல்
by ஜ்யோவ்ராம் சுந்தர்

திங்கட் கிழமை மாலை ரோசா வசந்த் தொலைபேசியில் அழைத்து ஒரு மாலையில் என்னைச் சந்திக்க வேண்டுமென்றார். அவரை இதற்குமுன் இரண்டு மூன்று முறை – மற்றவர்களுடன் - சந்தித்திருக்கிறேன். சரி என்றேன். ஆனால் சந்திக்க வாய்க்கவில்லை.தொடர்ந்து செவ்வாய்க் கிழமையும் பேசினார். புதன் கிழமை சந்திப்பதாய்ச் சொன்னேன். புதன் கிழமை வேறு வேலையிருந்ததால் முடியவில்லை. மறுபடி புதன் கிழமை இரவு தொலைபேசி அடுத்த நாள் சந்திக்க முடியுமா என்றார். இவ்வளவு தூரம் நம்மைச் சந்திக்க ஒருவர் பிரியப் படும்போது எவ்வளவுதான் தள்ளுவது என்று அடுத்த நாள் - அதாவது நேற்று -செண்ட்ரல் அருகிலிருக்கும் பிக்னிக் ஹோட்டலில் சந்திக்க ஒப்புக் கொண்டேன்.

அவர் தொடர்ந்து இப்படிக் கேட்டது என்னை திட்டமிட்டு கொலைவெறியோடு தாக்கத்தான் என்பது தெரியாது எனக்கு.

நேற்று மாலை 6.45 மணியளவில் சந்தித்தோம். சுமார் 2-1/2 மணிநேரம் பல விஷயங்கள் (தனிப்பட்ட விஷயங்கள் உள்பட) பேசிக் கொண்டிருந்தோம். 9.30 மணிக்கு பில் வரும்போது நான் தான் கொடுப்பேன் என இருவரும் நட்புத் தகராறு செய்ய கடைசியில் ஆளுக்குப் பாதி தருவது என்று முடிவானது. வெளியில் வந்து ஒரு சிகரெட் புகைத்து விட்டுப் பிறகு சந்திக்கலாம் எனச் சொல்லி ஒன்றாக நடக்க ஆரம்பித்தோம். பூங்கா செல்ல அவரும் செண்ட்ரல் செல்ல நானும் திரும்ப வேண்டும்.

ஒரு இருட்டான இடத்தில் என் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார் ரோசா. லூசு மாதிரி வாகாக முகத்தைத் திருப்பினேன். வலது முஷ்டியை மடக்கித் தயாராக வைத்து இருந்திருப்பார் போல. fraction of a secondல் என் முகத்தில் ஓங்கி விழுந்தது ஒரு குத்து. மூக்கின் மேல் பாகத்தில் பட்டு உடைந்து ரத்தம் கொட்டத் துவங்கியது (நான் ஆஸ்ப்ரின் மாத்திரை தினமும் எடுத்துக் கொள்வதால் அதிக ரத்தப் போக்கு இருந்தது). சில நிமிடங்களுக்கு என்ன ஏது என்று புரியவில்லை. குனிந்து அமர்ந்து விட்டேன். ரத்தம் அது பாட்டிற்கு கொட்டிக் கொண்டே இருந்தது. நான் பயந்து போனேன். அருகிலிருந்த கடையிலிருந்து சிலர் ஓடி வந்து சத்தமாக யார் அடித்தது என்பதைப் போன்று விசாரித்தனர். ரோசாவும் கொட்டிக் கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்து பயந்து போனார் (என்று நினைக்கிறேன்).

ஒன்றிரண்டு ஆட்டோ நிற்காமல் செல்ல கிடைத்த ஆட்டோவை நிறுத்தி என்னை ஏற்றினார். எதிரிலிருந்த அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்தோம். அங்கே கீழே விழுந்ததாகச் சொல்லி அனுமதி கேட்டோம்.

இதற்கு நடுவில் நான் என்னுடைய மனைவியைத் தொலைபேசியில் கூப்பிட்டு அலுவலக நண்பர்களை வரச் சொல்லியிருந்தேன். அவரும் இரண்டு மூன்று நண்பர்களுடன் என்னைப் பார்க்க கிளம்பியிருந்தார்.

ரோசா வளர்மதியைக் கூப்பிட்டார். வளர்மதி பைத்தியக்காரனுக்கு தகவல் தந்தார்.பைத்தியக்காரன் டாக்டர் ப்ரூனோவை அழைத்து விவரம் சொல்லியிருக்கிறார். நடுவில் ரோசா சுகுணாவையும் கூப்பிட்டிருக்கிறார்.

என் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது. உள்ளங்கைகளில் ரத்தம் காய்ந்து போய் விரல்களைச் சுருக்கி நீட்டவே ஒரு மாதிரியாக இருந்தது. மருத்துவமனையில் அனுமதி கிடைக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது மருத்துவர் ப்ரூனோ வந்து அனுமதி பெற்றுத் தந்தார். நிறைய ரத்தம் வெளியேறியிருந்ததால் கையில் க்ளூக்கோஸும் ஏறிக்கொண்டிருந்தது. ரத்தம் நிற்க என்று நினைக்கிறேன் - ஒரு ஊசி போடப் பட்டது. பிறகு இன்னொரு ஊசியும் போடப்பட்டது.

ரோசாவும் அழுது புலம்பிக் கொண்டிருந்தார் (அல்லது அதுவும் அவரது திட்டத்தின் ஒரு பகுதியா என்று தெரியவில்லை). அலுவலக நண்பர்கள் வருமுன் அசம்பாவிதம் ஏதும் நடக்காமலிருக்க ரோசாவைக் கிளம்பச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். நண்பர்கள் வரத் துவங்கியதும் அவரும் கிளம்பிச் சென்றுவிட்டார் என நினைக்கிறேன் – அவரைக் காணவில்லை.

மருத்துவரிடம் மறைக்கக் கூடாதே... ப்ரூனோவிடம் நடந்ததைச் சொன்னேன். அப்போது நண்பர்களும் மனைவியும் அருகிலிருந்தனர். வலியாலும் ஏமாற்றப்பட்ட உணர்வாலும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. நண்பர்கள் கொஞ்சம் கொதித்தாலும், விஷயம் கைமீறிச் செல்லாமல் பார்த்துக் கொண்டேன்.

இரவே டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லிக் கேட்டேன். மருத்துவர் ப்ரூனோ ஒரு ஸி டி ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றார். அதற்குள் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வந்து விசாரிக்கத் துவங்கினார். அவரிடமும்
நானேதான் கீழே விழுந்தேன் என்று சொன்னேன். அடியைப் பார்த்தால் கீழே விழுந்த மாதிரி தெரியவில்லை, யார் தாக்கினார்கள் எனச் சொல்லச் சொல்லிக் கேட்டார். நான் சொல்வது உண்மைதானென்று உறுதியாகச் சொன்னேன். நடுவில் ஸ்கேன் செய்யச் சென்றபோது மருத்துவர் ப்ரூனோவிடம் இதைச் சொன்னேன். வெளியில் வந்தால் சிவராமன் ஸ்டேட்மெண்ட் எழுதி ஒரு வழியாக இந்த விஷயம் முடிந்தது.

இரவு 1 மணி வாக்கில் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப் பட்டேன். இன்று ENT மருத்தவரிடம் கலந்தாலோசிக்கச் சொல்லி ப்ரூனோ அறிவுரை சொல்லியிருந்தார். இன்று காலை ENT மருத்துவரைப் பார்த்தேன். வீக்கம் குறைய மாத்திரையும் மூக்கிற்கு dropsம் கொடுத்திருக்கிறார். X Ray மாலையில் எடுக்க வேண்டும். இப்போது மூக்கில் தொட்டால் வலியும் இடது கண்ணின் கீழ் வீக்கமும் இருக்கின்றன. இரண்டு மூன்று நாட்களில் முழுக்கச் சரியாகிவிடுமென்று நம்புகிறேன்.

தொடர்ந்து மூன்று நாட்களாக என்னைச் சுத்திப் போட்டு அழைத்தார். மூன்றாம் நாள் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகம் வந்திருக்கும் போல. நீங்கள் சொல்லும் இடத்திற்கே வருகிறேன் என்றார். இவ்வளவு சொல்லியும் சந்திக்காமலிருந்தால் எப்படி என்று கேணத்தனமாக ரோசா வசந்த் விரித்திருந்த வலையில் விழுந்துவிட்டேன். இதுவரை இப்படி நயவஞ்சகமாக யாரும் என்னிடம் நடந்து கொண்டிராததால் நம்பிவிட்டேன்.

ஒருவனைத் தாக்க வேண்டுமென்றால், அவனை மதுச்சாலைக்குக் கூட்டிச் சென்று போதையேற்றி அடிப்பார்கள் என்று பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அறிவுஜீவுகள் எனச் சொல்லிக் கொள்பவர்களும் அதைத்தான் செய்கிறார்கள் போலும்.

அரசியல் அறம் தெருப்புழுதி என்று பேசுபவர் ரோசா. ஒருவனை ஏமாற்றி வரவழைத்து, அவனுக்கு போதையேற்றி, அவன் எதிர்பார்க்காமல் இருக்கும் சமயம் அவனை கொலைவெறியோடு அடித்து வீழ்த்துவது எந்த விதத்தில் நேர்மை என்பது எவ்வளவு யோசித்தும் எனக்குப் புரியவில்லை.

இப்போதுதான் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. நிகழ்ச்சியொன்றை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன் என்னை அவர் வீட்டிற்கு வரச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார் ரோசா. நல்ல வேளையாக அந்த நிகழ்ச்சி வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போடப்பட்டு பிறகு நடக்கவேயில்லை. சென்றிருந்தால் எனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்தாலும் கொடுத்திருப்பார்.

***

இது நான் இணையத்துக்கு வருமுன்னர் நடந்த நிகழ்ச்சி. இதன் பின்னூட்டங்கள் 300ஓ 350ஓ பார்த்ததாக நினைவு. அநேகமாய் அனைத்துப் பின்னூட்டங்களும் ஆதாரவானவை. அந்த சமயத்தில் - சம்பவம் நடந்து முடிந்த சூட்டோடு சூடாய் போடப்பட்ட பதிவு என்பதால் - ஏகோபித்த ஆதரவு கிடைத்ததில் ஆச்சரியமும் இல்லை.

இப்போது கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் முடிச்தபின் இதை வரலாற்றில் வைத்துப் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய அவசியம் குறைந்தபட்சம் எனக்கு வந்திருக்கிறது. ரோசாவை, தொடர்ந்து என்ன செய்து துன்புறுத்திக்கொண்டு இருந்த்தோ அதைவிடப் பன்மடங்கு இப்போது என்னை செய்துகொண்டு இருக்கிறது இந்த மொக்கை மூக்கு. by என்று போட்டிருப்பினும் இதன் காப்புரிமை உடைந்த மூக்குக்கும் உடைத்த முஷ்டிக்குமானது என்றே எனக்குப் படுகிறது.

இப்போது ஏன் பழைய விஷயம் என்று சிலருக்குத் தோன்றக்கூடும். வரலாறு சுற்றி வருகிறது என்பதை ருசுப்பிக்கும் விதமாக இன்னொரு அசம்பாவிதம் நிகழ்வதற்குமுன் இந்த அகழ்வாராய்ச்சி முக்கியம் என்று தோன்றுவதால், பாதிக்கப்பட்ட தனி மனிதனாகவும் எழுத்தாளனாகவும் இதை அக்கக்காக அலசிப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு உடைத்த கை சைக்கோவாகவும் உடைபட்ட மூக்கு அப்பாவியாகவும் கட்டமைத்துக்கொள்ள இந் நிகழ்ச்சியை சிறந்த அயோக்கியன் அதிருஷ்ட வாய்ப்பாக எப்படிப் பயன்படுத்திக் கொள்வானோ அப்படி, தான் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்தையும் பொன்னாக்கிக் கொண்டிருக்கிறது உடைபட்ட மூக்கு.

இதனால் கிடைத்த அனுதாப அலையில் பயணித்து ஓட்டிக்கொண்டிருந்த இலக்கியப் படகு கிட்டத்தட்டக் கவிழும் நிலைமை என்னால் உருவானவுடன் இப்போது கண்ணி அறுக்கப்பட்டு இந்தப் பதிவு காணாமற் போய்விட்டது.

சாருவின் சீப்பட்டுப்போன டெக்னிக் இது. அவருக்கு வைரஸ் தாக்கி பதிவுகள் காணாமற் போகும். இதுவே வைரஸ் என்பதால் இதற்கு அந்த சிரமம்கூட இல்லை. ஆதாரமில்லாமல் அசிங்கமாய் அவதூறு செய்துவிட்டு, சீச்சீ நான் ஒன்றும் அவ்வளவு கீழ்த்தரமானவன் இல்லை என்று சொல்லியபடி, அறச்சீற்றத்துடன் இதுவே தான் எழுதியதை அழித்துவிடும். ஆதாரமில்லாத அவதூறை அனைவரின் பார்வைக்கும் படைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்கிற கேள்வியை யாரும் எழுப்ப மாட்டார்கள். ஏனெனில் இணையத்தில் தனிப்பட்ட உறவுதான் தலையாயது  பேசிக்காகப் பேசிக்கொள்ளும் அறத்தைவிட.

கடந்த நான்கு வருடங்களில் புதிதாய் இணையத்துக்கு வந்திருப்போரில் இலக்கிய ஆர்வம் உள்ளோர் அண்ணாந்து பார்க்கும் அண்ணல் குறுஜி அவர்களின் வெள்ளையான முகத்தைக் கொஞ்சம் வெள்ளாவியில் வைத்துப் பார்க்கலாமா?

***

இந்தப் பதிவை முதன்முதலாய் படித்தபோது,முதலில் தோன்றியது இருவருக்குமிடையில் என்ன நடந்தது? இந்தத் தாக்குதல் ஏன் நடந்தது? அது ஏன் இப்படி நடந்தது? என்பவைதாம்.

இந்தப் பதிவில் அதற்கான ஏதாவது தரவு உள்ளதா? 

இல்லை. 

ஏன்?

பாதிப்புக்குள்ளான மூக்கு, தன் தரப்பு மட்டுமே தெரியும் அளவுக்கு அவ்வளவு அப்பாவியா? அல்லது உடைத்த கை காரண காரியமற்ற வெற்றுக் காட்டுமிராண்டியா?

உண்மை எப்போதும் கறுப்புமில்லை வெளுப்புமில்லை. இரண்டுக்கும் இடைப்பட்டதுதான். இது ஒன்றும் கட்டைப் பஞ்சாயத்துத் தீர்ப்பன்று. இதுவே, வாழ்வு இலக்கியம் பற்றிய சரியான புரிதல் உள்ளவர்களின், உண்மையைப் சரியாகப் புரிந்து கொள்ள முற்படுவோரின் அனுபவ முடிவாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எது உணமை என்பதற்கான எளிய ஆதாரங்கள் எனக்கும் இந்த பிளாஸ்திரி மூக்குக்கும் இடையிலான மோதல்களிலேயே நிரூபணமாகி இளிக்கின்றன.

வன்முறை என்பது செயல் சார்ந்தது மட்டுமே என்கிற வாதத்தை முன்வைப்போர் அயோக்கிய சாம்பிராணிகள். உடல் வலியை விட மனதின் வலி ஆயிரம் மடங்குக் கொடுமையானது. 

மூக்கை உடைத்த முஷ்டியை அதற்கு முன்பாக மூக்கு எப்படி நோண்டிக்கொண்டு இருந்தது என்பதையும் அட்டை கிளாஸ் ஆசிரியராக, 

அவன் கிள்ளினான் சரி. ஆனா அவன் கிள்ளும்படியா நீ என்ன பண்ணினே? என்கிற கேள்வி எழுவதும் இயற்கை. இதுவரை இதைப் பற்றி யாரேனும் இப்படியான கேள்வியை எழுப்பி இருப்பார்களா? இல்லையெனில் ஏன்?

நடிக்காத, நிஜமாகவே நற்பண்புள்ள நியாயஸ்தன் செய்யக்கூடிய காரியம் என்ன?

நான் இதை செய்தேன் அதற்கு இதுவா எதிர்வினை என்பதாக அல்லவா இருக்க வேண்டும்?

அப்படி இந்தப் பதிவு தனக்கு எதிரான எதைப்பற்றியேனும் பேசுகிறதா?

விஸ்தாரமாகப் பிலாக்கணம் வைத்துக் குற்றம் சாட்டுவதிலேயே குறியாய் இருக்கிறதா இல்லையா உடைபட்ட மூக்கு?

என்ன செய்திருக்கும் குறுத்தெலும்புகூட இல்லாத இந்த மூக்கு என்பதற்கு எனக்கும் இதற்குமான பஞ்சாயத்தே ஆதாரம். 

மறு தரப்பு என்ன சொல்கிறதோ அதை மறுத்து தன் தரப்பு வாதங்களை வைப்பதல்லவா நேர்மையான காரியம்.

எதிர் தரப்பைக் கேள்வி மட்டும் கேட்டு அவதூறு செய்வேன். அதையும் பத்துப் பதினைந்து நிமிடங்களில் கலைத்து விட்டு என் மூக்கில் ஒட்டுப் பிளாஸ்திரியே இல்லை என்று சாதித்துக் கொள்வேன். எதிர் தரப்பு சொல்லும் விளக்கத்தைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் கீறல் விழுந்த ரெக்கார்டாய் திரும்பத்திரும்ப அவதூறையே செய்துகொண்டு இருப்பேன். அதையும் ஆதாரமாய் எங்கும் எடுத்துக் காட்ட வழியின்றி கலைத்துவிடுவேன் என்பது இணைய கெரில்லாப் போர் தந்திர வன்முறையா இல்லையா. இதில் என்ன மயிறுக்கு அவ்வப்போது காந்தி குல்லா அணிந்துகொள்கிறது இந்த மூக்கு?

காந்தியின் பிரதான அம்சமே மறு தரப்பை மதித்து கணக்கில் எடுத்துக் கொண்டு அதையும் அன்பால் அரவனைத்து, தான் மேற்கொண்ட காரியத்தில் உறுதியாய் நிற்பதுதான்.

கபட காந்திகளுக்கு அதுவும் இணையத்தில் என்ன குறைச்சல்?

தலைப்பையே பாருங்கள்.

<ரோசா, விஷம், வன்மம் மற்றும் திடீர்த் தாக்குதல்>

ரோசா - மூக்கை உடைத்த முஷ்டி

விஷம் - கருத்து ரீதியானது என்றுதான் முதலில் கருதத்தோன்றும் ஆனால் கடைசியில் இருக்கும் பன்ஞ்ச் டயலாக்தான் உண்மையில் விஷம் யாரிடம் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

< என்னை அவர் வீட்டிற்கு வரச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார் ரோசா....சென்றிருந்தால் எனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்தாலும் கொடுத்திருப்பார்.>

வெளிப்பட்டிருப்பது எவ்வளவு விஷம்?

வன்மம் - குத்திய கைக்கு குத்தப்பட்ட மூக்கிடம் வன்மம் வர முகாந்திரம் என்ன? குத்திய மூக்கை குத்துபட்ட மூக்கு என்னை நோண்டிக்கொண்டு இருப்பதைப் போலவே எப்படியெப்படியெல்லாம் நோண்டி அவதூறு செய்துகொண்டு இருந்தது? அதைப் பற்றி யாருக்குக் கவலை? பதிவில் அதைக் கண்டுகொள்ளாவிட்டால் யார் கேட்கப்போகிறார்கள்? ஐயையோ என்னைக் கொல்றாங்களே என்று எளிதாய் உணர்ச்சியைத் தூண்டுவது மட்டுமேயல்லவா மூக்கின் குறி! 

<மற்றும் திடீர்த் தாக்குதல்>

திடீர் தாக்குதலில் எங்கே வன்மம் விஷம் எல்லாம் வந்தது. இது உணர்ச்சிவசப்பட்ட சம்பவம் என்றல்லவா பொருள் தொனிக்கும்படியாக இருக்கிறது. அப்படியெனில், பதிவின் தொடக்கத்திலிருந்து முடிவுவரை பயங்கரமாகப் பிளான் போட்டுத் தாக்கியதாகச் சொல்லி இருப்பதெல்லாம் என்ன கேலரிக்கான வெற்று பில்டப்பா?

< சென்றிருந்தால் எனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்தாலும் கொடுத்திருப்பார்.> இதற்கு என்ன அவசியம். இது விஷ வன்ம மூக்கின் வில்லத்தனமா இல்லை மொண்னைத்தனமா?

சார் இணையத்துல ஏது இலக்கியவாதி? நாங்க இப்ப வந்த மொக்கை அவுரு நாலைஞ்சி வருஷம் முன்னாடி வந்த சீனியர் மொக்கை என்று அதிஷா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

<அவர் தொடர்ந்து இப்படிக் கேட்டது என்னை திட்டமிட்டு கொலைவெறியோடு தாக்கத்தான் என்பது தெரியாது எனக்கு.>

அப்படி என்றால், திடீர் தாக்குதல் என்று சொல்வது என்ன? 

< சென்றிருந்தால் எனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்தாலும் கொடுத்திருப்பார்.>

கணக்கு வாத்தியான, மூக்கை உடைத்த கை, விஷம் வைத்துக் கொல்ல வேண்டும் என்று எண்ணி இருந்தால் முட்டாள்தனமாய் வீட்டுக்கா அழைத்திருக்கும். இதே பாரில், 

<சுமார் 2-1/2 மணிநேரம்> இருந்து குடித்ததில் இடையில் உடைந்த மூக்கு சிறுநீர் கழிக்க எத்துனைமுறை சென்றிருக்கும் அதை ஒரு முறை பயன்படுத்தி விஷப் பவுடரை உடைந்த மூக்கின் கிளாசில் போட்டு கலக்கி வைத்துக் கொடுத்துவிட்டு நைசாய் இடத்தைவிட்டு நழுவி இருக்காதா?

அப்படி விஷம் வைக்கும் அளவுக்கு என்னதான் பகையுறவு இருவருக்குள்ளும்?

<அவரை இதற்குமுன் இரண்டு மூன்று முறை – மற்றவர்களுடன் - சந்தித்திருக்கிறேன்.>

அவரிடம் தனியாய்ப் போய் பழக்கமில்லை என்பதுதான் இதற்கு அர்த்தமோ?

மெய்யுலகில் நேரடிப் பரிச்சயமே சொல்லிக்கொள்ளும்படிப் பெரிதாய் இல்லை எனில் மெய்நிகர் உலகின் பகையாகத்தான் இருக்க வேண்டும் என்றல்லவா பொருள் ஆகிறது? சும்மா சும்மா ஜாடைமாடையாகக் குத்திக்கொண்டிருந்ததற்கு எதிர்வினைதான் மூக்குக்குக் கிடைத்த இந்த குத்தோ? மெய்யுலகில் குத்தினால் வன்முறை மெய்நிகர் உலகில் குத்தினால் வன்முறை இல்லை. 350 கமெண்டுகளில் இந்தக் கேள்வியை எழுப்பிய எதிர்க்குரல்கள்  எத்துனை?

<இவ்வளவு தூரம் நம்மைச் சந்திக்க ஒருவர் பிரியப் படும்போது எவ்வளவுதான் தள்ளுவது > 

இது என்ன பகடியா? பரிதாபத்தைத் தூண்டும் புலம்பலுக்கிடையில் பகடிக்கு ஏது இடம். என்னைக் குத்திட்டான் தடவிக்குடு என்கிற மாட்டின் கழுத்துத்தூக்கலன்றி வேறென்ன இது?

<அடுத்த நாள் - அதாவது நேற்று -செண்ட்ரல் அருகிலிருக்கும் பிக்னிக் ஹோட்டலில் சந்திக்க ஒப்புக் கொண்டேன்.>

ஒருத்தர் குறுஷேவ் இன்னொருத்தர் கென்னடி இடையில் ஓடிக்கொண்டிருந்த பனிப்போர் பூங்கா ரயில் நிலையத்துக்கும் செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் இடையில் பூதாகாரமாய் வெடித்ததில் மூக்கு சிதறிவிட்டது. உலகப்போர் மூளாத குறை போங்கள்.

<பில் வரும்போது நான் தான் கொடுப்பேன் என இருவரும் நட்புத் தகராறு செய்ய கடைசியில் ஆளுக்குப் பாதி தருவது என்று முடிவானது.>

அவனவன் குடிச்சதுக்கு பிச்சைக்காரத்தனமா அவனவன் குடுத்துக்கறதுக்கு லேபிளு ’நட்புத் தகராறு’ # இலக்கியத்தைக் கலக்கிட்டீங்க போங்க. 

<பிறகு சந்திக்கலாம் எனச் சொல்லி ஒன்றாக நடக்க ஆரம்பித்தோம்.> 

இதுதான் நகுலன் இஸ்கூல் இசுபெசாலிட்டி. அப்பறம் பாக்கலாம்னு சொல்லிட்டு அப்பறம் ஒண்ணும் பேசாம ஒருத்தரை ஒருத்தர் பாக்காம ஆனா ஒண்ணா நடப்பாய்ங்க.

< பூங்கா செல்ல அவரும் செண்ட்ரல் செல்ல நானும் திரும்ப வேண்டும்.>

பிரிய வேண்டும்னுகூட சொல்ல மனசு வராத எங்கள் தங்கமான மூக்கு.

<ஒரு இருட்டான இடத்தில் என் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார் ரோசா.>

ஓலக்கால் சீலக்கால்னு ஒண்ணா இல்ல ராசாவும் ரோசாவும் நடந்துகிட்டு இருந்ததா கொஞ்சம் முன்னாடிதானம்மா சொன்னே?

<வலது முஷ்டியை மடக்கித் தயாராக வைத்து இருந்திருப்பார் போல. fraction of a secondல் என் முகத்தில் ஓங்கி விழுந்தது ஒரு குத்து.>

வலது கையை உபயோகித்தார் இந்த இடதுசாரி சிந்தனையாளர்னு உள்ளர்த்தம் தொனிக்கச் சொல்கிறார் நகுல உபாசகர். வாங்கின குத்துல நட்சத்திரம் பறக்க சொல்லோ, வலது இடதுலாம் வேற தெரியுதா? டீடெய்லிங் சார் இலக்கிய டீடெய்லிங். நடந்ததைத் தத்ரூபமா நரேட் பண்றார் நவீனனுக்குப் பிறந்த அதீதன்.

<மூக்கின் மேல் பாகத்தில் பட்டு உடைந்து ரத்தம் கொட்டத் துவங்கியது (நான் ஆஸ்ப்ரின் மாத்திரை தினமும் எடுத்துக் கொள்வதால் அதிக ரத்தப் போக்கு இருந்தது).>

அசோகமித்திரன் கெட்டாரு டீடெய்லிங்கில். டாக்டர் பார்த்து எங்க உடைஞ்சிருக்குனு சொல்றதுக்கு முன்னாலையே,மூக்கு எங்கு உடைந்திருக்கிறது என்று தெரிகிற அளவுக்கு, ’பயமுறுத்தும் பார்வை’ தீக்ஷண்யம் இல்லாவிட்டால் இணையத்தில் இலக்கிய குறுஜி ஆகிவிடமுடியுமா?

ஆனால் மூக்கின் இலக்கிய கொள்கையான உயர்ந்த படைப்பாளி ஓரிரு விவரிப்பிலேயே காட்சியைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடவேண்டும் என்கிற கண்டிஷன் எதிர்காலத்தில் வரப்போகும் எதிரிக்கு மட்டுமே பொருந்தும் இல்லையா?

<சில நிமிடங்களுக்கு என்ன ஏது என்று புரியவில்லை.>

அடங்கொப்புரானை இது சத்தியமா எனக்குப் புரியலைய்யா. முந்தின வாக்கியத்துல மூக்கு எங்க ஒடைஞ்சி இருக்குன்னு துல்லியமா தெரிஞ்ச ஆளுக்கு எப்படி அடுத்த வரியிலியே என்ன ஏதுனு தெரியாம என்னா கன்பீசன்?

<குனிந்து அமர்ந்து விட்டேன்.>

நீ என்னிக்கி நெஞ்சு நிமிர்ந்து நிண்ணுருக்கே? தரையோட தரையா இல்ல தவழ்ந்து தொழில் செஞ்சிகிட்டு இருக்கே! அப்பறம் அடி வேற பட்டிருக்கு. 

<ரத்தம் அது பாட்டிற்கு கொட்டிக் கொண்டே இருந்தது.> 

அது சரி முன்னபின்ன வண்டியோட்டி உழுந்து வாரி எழுந்து வர எக்ஸ்பீரியன்ஸ்லாம் நமக்கு ஏது? நடவண்டி ஓட்டும்போது உழுந்ததோட செரி. அதுக்கப்பால வக்கணையா அடுத்தவனை அண்டி அண்டிதான பொழைப்பே ஓடிகிட்டு இருக்கு.

 <நான் பயந்து போனேன்.>

ஆல்வேய்ஸ் அல்லு கழண்டுதான் கெடக்கறீங்க. அப்பப்ப அல்ட்டிக்கிறது சும்மானு எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே!

<அருகிலிருந்த கடையிலிருந்து சிலர் ஓடி வந்து சத்தமாக யார் அடித்தது என்பதைப் போன்று விசாரித்தனர்.>

தத்ரூப விவரணை

<ரோசாவும் கொட்டிக் கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்து பயந்து போனார் (என்று நினைக்கிறேன்).>

இது அதைவிட தத்ரூபம். தாம் செய்த காரியத்தின் விளைவைக் கண்டு ரோசாவும் பயந்துதான் போனார் என்றுதான் நான் நினைக்கிறேன். நான் எவ்வளவு நல்லவன் என்பதைக் காட்டிக்கொள்ள ஆனாலும் வாசகர்களே உங்களது அனுதாப ஓட்டுகளைக் குத்தப்பட்ட எனக்கே குத்த வேண்டும் தவறிப்போயும் ரோசாவுக்குக் குத்திவிடாதீர்கள்.

<ஒன்றிரண்டு ஆட்டோ நிற்காமல் செல்ல கிடைத்த ஆட்டோவை நிறுத்தி என்னை ஏற்றினார்.>

ஏற்றியது யார்? ரோசாதானே! இலக்கியத்தில் நிறைய விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிச் செல்வதில்தான் இருக்கிறது விசேஷ சுவிசேஷம்.

<எதிரிலிருந்த அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்தோம். அங்கே கீழே விழுந்ததாகச் சொல்லி அனுமதி கேட்டோம்.>

கதை பன்மைக்கு மாறி விட்டதே. கூட இருந்தது யார்? விஷம் வைத்துக் கொல்லப்பார்த்த சமயம் பார்த்துக்கொண்டிருக்கிற அதே ரோசாதானே?

<இதற்கு நடுவில் நான் என்னுடைய மனைவியைத் தொலைபேசியில் கூப்பிட்டு அலுவலக நண்பர்களை வரச் சொல்லியிருந்தேன். அவரும் இரண்டு மூன்று நண்பர்களுடன் என்னைப் பார்க்க கிளம்பியிருந்தார்.>

கமெண்ட் ரிசர்வ்டு

<ரோசா வளர்மதியைக் கூப்பிட்டார். வளர்மதி பைத்தியக்காரனுக்கு தகவல் தந்தார்.பைத்தியக்காரன் டாக்டர் ப்ரூனோவை அழைத்து விவரம் சொல்லியிருக்கிறார். நடுவில் ரோசா சுகுணாவையும் கூப்பிட்டிருக்கிறார்.>

மக்யா நாளே மரணப்படுக்கையிலிருந்து எழுதினாலும் நடந்ததை விவரிப்பதில்தான் எவ்வளவு விசேட கவனம் # உயர் இலக்கியம்

<என் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது. உள்ளங்கைகளில் ரத்தம் காய்ந்து போய் விரல்களைச் சுருக்கி நீட்டவே ஒரு மாதிரியாக இருந்தது.>

என்ன மாதிரியாக என்று இலக்கிய வாசகன் ஃபாரத்தைப் பூர்த்தி செய்துகொள்ளட்டும்.

<மருத்துவமனையில் அனுமதி கிடைக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது மருத்துவர் ப்ரூனோ வந்து அனுமதி பெற்றுத் தந்தார்.>

ஒரு லாபம் ஒரு இடைஞ்சல். இதை உலகப் புகழ்பெற்ற மூக்கு எப்படி சமாளிக்கிறது என்பதை பின்வரும் பகுதிகளில் கவனமாய்ப் பாருங்கள்.

<நிறைய ரத்தம் வெளியேறியிருந்ததால்>

முதல்ல <ரத்தப் போக்குன்னீங்க> இப்ப <ரத்தம் வெளியேறியிருந்ததால்ன்றீங்க> விபத்துக்கு பதில் எதோ சீக்குன்னு நெனச்சிக்கறாப்புல இருக்கு டிஸ்கிரிசன்.

<கையில் க்ளூக்கோஸும் ஏறிக்கொண்டிருந்தது.>

ஓ அப்ப, உங்க உடம்புல இப்ப ஓடிகிட்டு இருக்கறது க்ளுகோஸ்னு சொல்லுங்க. ஆனா பர்மனெண்ட்டா ஓடிகிட்டு இருக்கறது சரக்குதான் இல்லியோ?

<ரத்தம் நிற்க என்று நினைக்கிறேன் - ஒரு ஊசி போடப் பட்டது. பிறகு இன்னொரு ஊசியும் போடப்பட்டது.>

எங்கெங்கே ஊசிகள் போடப்பட்டன என்று விவரித்து இருந்தால், அக்கூ பங்சர் செய்யப்பட்ட பாடி போன்ற தோற்றம் வாசகனுக்கு உண்டாகி அனுதாபம் இன்னும் எச்சாகி இருக்கும்.

<ரோசாவும் அழுது புலம்பிக் கொண்டிருந்தார்>

இது ஏன் இங்கு சொல்லப்படுகிறது? புரூனோ சாட்சியாக அருகில் நிற்கிறாரே. ரோசாவைக் கல் நெஞ்சக்காரனாகக் காட்ட முடியவில்லையே. என்ன் செய்ய ஓ மை காட் எதற்கும் அவர் அழுததையும் சொல்லி வைப்போம்.

ஆனால் அம்பி மாமா லேசுப்பட்ட ஆளா என்ன அடுத்து அடைப்புக் குறிக்குள் என்ன் சொல்கிறது என்பதைப் பாருங்கள்.

<(அல்லது அதுவும் அவரது திட்டத்தின் ஒரு பகுதியா என்று தெரியவில்லை).> 

திட்டத்தின் ஒரு பகுதியா? ரூம்போட்டு பிளான் பண்ணி மூக்குக் குறிவைத்துக் குத்தி இருக்கார் என்பதை மறந்து விடாதேயுங்கள் இணைய மக்காள்!

<அலுவலக நண்பர்கள் வருமுன் அசம்பாவிதம் ஏதும் நடக்காமலிருக்க ரோசாவைக் கிளம்பச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்.>


<நண்பர்கள் வரத் துவங்கியதும் அவரும் கிளம்பிச் சென்றுவிட்டார் என நினைக்கிறேன் – அவரைக் காணவில்லை.>

ரெம்ப நியாயமான நினைப்புதே!

<மருத்துவரிடம் மறைக்கக் கூடாதே... ப்ரூனோவிடம் நடந்ததைச் சொன்னேன்.>

ரிப்பீட்டே! நல்லவன்! எனக்கு நானே நல்லவன்! சொல்லிலும் செயலிலும் நல்லவன்.

<அப்போது நண்பர்களும் மனைவியும் அருகிலிருந்தனர். வலியாலும் ஏமாற்றப்பட்ட உணர்வாலும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது.>

தன்னைத் தள்ளி நின்று பார்க்கும் உன்னத இலக்கியம்.

<நண்பர்கள் கொஞ்சம் கொதித்தாலும், விஷயம் கைமீறிச் செல்லாமல் பார்த்துக் கொண்டேன்.>

பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே - ஆனால்
பதிவு போட மறக்காதே என் நெஞ்சே!

<இரவே டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லிக் கேட்டேன்.>

மூக்கில் அடிபட்டதற்கு இந்த அலப்பறையா கெளம்பு கெளம்பு சீரியஸா அடிபட்ட பேஷண்ட்டெல்லாம் இருக்காங்க பெட்டை காலி பண்ணு என்று அவர்கள் சொல்வதற்கு முன்னால்.... (<இரவே டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லிக் கேட்டேன்.>)

<மருத்துவர் ப்ரூனோ ஒரு ஸி டி ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றார்.>

பயப்படறா மாதிரி ஒண்ணும் இல்லை என்கிற ஸ்டாக் டயலாக் கள்ள எடிட்டிங்கில் காணாமல் போய்விட்டத்தோ?

<அதற்குள் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வந்து விசாரிக்கத் துவங்கினார். அவரிடமும் நானேதான் கீழே விழுந்தேன் என்று சொன்னேன்.>

அடிபட்டு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடைக்கையில் கூட நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன்!

<அடியைப் பார்த்தால் கீழே விழுந்த மாதிரி தெரியவில்லை, யார் தாக்கினார்கள் எனச் சொல்லச் சொல்லிக் கேட்டார். நான் சொல்வது உண்மைதானென்று உறுதியாகச் சொன்னேன்.>

கோரஸ்! ஓஹோ ஓ! உய்ய யாஹு உய்ய யாஹு உய்ய யாஹு!

<நடுவில் ஸ்கேன் செய்யச் சென்றபோது மருத்துவர் ப்ரூனோவிடம் இதைச் சொன்னேன்.>

நிஜ மனிதர்கள், தங்கள் அகத்தை ஜெயமோகன் கதைகளில் சாட்சிகளற்ற ஏகாந்தத்தில் திறந்து காட்டுவார்களே அதுபோல போலீஸ்காரர் இதைக் கேட்கையில் துரதிருஷ்டவசமாய் சுற்றி யாருமில்லை. எனவே போலீஸ்காரர் இப்படிக் கேட்டதாய் புரோனோவிடம் இப்படி நடந்ததாய்ச் சொல்லி பதிவு செய்திருக்கிறேன். நான் சொல்வது உண்மையா இல்லையா என்பதை யார் வேண்டுமானாலும் புருனோவிடம் கேட்டு உறுதி செய்துகொள்ளலாம்.

எதை? போலீஸ்காரர் கேட்டும் ரோசாவைக் காட்டிக்கொடுக்கவில்லை என்பதையா அல்லது ’போலீஸ்காரர் கேட்டதாக’ புருனோவிடம் சொல்லியது உண்மையா இல்லையா என்பதையா?

<வெளியில் வந்தால் சிவராமன் ஸ்டேட்மெண்ட் எழுதி ஒரு வழியாக இந்த விஷயம் முடிந்தது.>

ஆனால் இணையத்தில் இன்னமும் தொடர்கிறது. இது நடந்து நாலுவருடமாகியும் சமயம் வாய்க்கும்போதெல்லாம் ரோசாவை இணையத்தில் குத்திக்கொண்டேதான் இருக்கிறது உடைபட்ட மூக்கு.

<இரவு 1 மணி வாக்கில் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப் பட்டேன். இன்று ENT மருத்தவரிடம் கலந்தாலோசிக்கச் சொல்லி ப்ரூனோ அறிவுரை சொல்லியிருந்தார். இன்று காலை ENT மருத்துவரைப் பார்த்தேன். வீக்கம் குறைய மாத்திரையும் மூக்கிற்கு dropsம் கொடுத்திருக்கிறார். X Ray மாலையில் எடுக்க வேண்டும். இப்போது மூக்கில் தொட்டால் வலியும் இடது கண்ணின் கீழ் வீக்கமும் இருக்கின்றன. இரண்டு மூன்று நாட்களில் முழுக்கச் சரியாகிவிடுமென்று நம்புகிறேன்.>

இவ்வளவு நோக்காட்டுக்கு இடையிலும் இதையெல்லாம் நானே வேறு எழுத வேண்டி இருக்கிறது. சொல்லாமல் விடுவதைப் புரிந்து கொள்வதே இலக்கிய வாசகனின் அடிப்படை லட்சணம்.

<தொடர்ந்து மூன்று நாட்களாக என்னைச் சுத்திப் போட்டு அழைத்தார்.>

தொடர்ந்து நெட்டுல நீ என்ன செஞ்சிகிட்டு இருந்தே. ரோசாவை நோண்டிகிட்டே இருந்தியா இல்லையா? உண்மையைச் சொல்லு. உக்கி போட்டுச் சொல்லு.

<மூன்றாம் நாள் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகம் வந்திருக்கும் போல. நீங்கள் சொல்லும் இடத்திற்கே வருகிறேன் என்றார். இவ்வளவு சொல்லியும் சந்திக்காமலிருந்தால் எப்படி என்று கேணத்தனமாக ரோசா வசந்த் விரித்திருந்த வலையில் விழுந்துவிட்டேன்.>

என்ன இருந்தாலும் நீ எவ்வளவுமுறை நோண்டி இருந்தாலும் முன்கூட்டியே, ”மவனே என் கைல கண்டி கெடைச்சே உன் மூக்கை உடைச்சிடுவேண்டா” அப்பிடினு ஒரு வார்த்தை ரோசாவை சொல்லி இருக்கணும்னு எதிர்பாக்கிறியா ராசா?

<இதுவரை இப்படி நயவஞ்சகமாக யாரும் என்னிடம் நடந்து கொண்டிராததால் நம்பிவிட்டேன்.>

பொதுவாக நானும் என் ஆருயிர்த் தோழன் பைத்தியக்காரன் கே. என். சிவராமனும்தான் நயவஞ்சகமாக எல்லோரிடமும் நடந்துகொள்வோம் வேறு யாரும் அப்படி எங்களிடம் நடந்து கொள்வதில்லை.

<ஒருவனைத் தாக்க வேண்டுமென்றால், அவனை மதுச்சாலைக்குக் கூட்டிச் சென்று போதையேற்றி அடிப்பார்கள் என்று பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அறிவுஜீவுகள் எனச் சொல்லிக் கொள்பவர்களும் அதைத்தான் செய்கிறார்கள் போலும்.>

அதானே. எங்களைப்போல் மெய் நிகர் உலகில் விட்டு அடிப்பதை விட்டுவிட்டு எப்படி மெய்யுலகில் வைத்து அடிக்கலாம்?

<அரசியல் அறம் தெருப்புழுதி என்று பேசுபவர் ரோசா. ஒருவனை ஏமாற்றி வரவழைத்து, அவனுக்கு போதையேற்றி,>

ஏன், ரோசா போதையில் இல்லையா ராசா? தான் குடிக்காதபோதும் பாதி பில்லைக் கொடுக்கும் அளவுக்கு தர்மப் பிரபு இல்லையே எனக்குத் தெரிந்த ரோசா?

<அவன் எதிர்பார்க்காமல் இருக்கும் சமயம் அவனை கொலைவெறியோடு அடித்து வீழ்த்துவது எந்த விதத்தில் நேர்மை என்பது எவ்வளவு யோசித்தும் எனக்குப் புரியவில்லை.>

அதற்கான காப்புரிமை என்னிடம் மட்டுமே அல்லவா இருக்கிறதுனு சொல்ல வரியா ராசா?

<இப்போதுதான் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது.>

கிளைமாக்சை கெத்தா வைக்க வேணாமா!

<நிகழ்ச்சியொன்றை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன் என்னை அவர் வீட்டிற்கு வரச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார் ரோசா.>

இடக்கரடக்கல் நிகழ்ச்சியா வெளியில் வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்கிற அளவுக்கு அப்படி என்ன நிகழ்ச்சி. எதுனா பிராமனார்த்தமா?

<நல்ல வேளையாக அந்த நிகழ்ச்சி வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போடப்பட்டு பிறகு நடக்கவேயில்லை. சென்றிருந்தால் எனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்தாலும் கொடுத்திருப்பார்.>

கெட்டவன்! அவனுக்கு அவனே கெட்டவன்! சொல்லிலும் செயலிலும் கெட்டவன்!

ஓஹோ ஓ! உய்ய யாஹு உய்ய யாஹு உய்ய யாஹு!