09 February 2014

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...

<<நான் இப்ப என்னவா இருக்கேனோ,>

லட்சங்களைக் கொண்டுபோய் வாராவாரம் வாடகைக் கார்களில் வைக்கும் பாடு மாமாவாக இருக்கிறாய்.>

***

ஹலோ நான் *** பேசறேன். எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன். இப்ப நான் சர்வீஸ் டேக்ஸ்ல இல்லை...

அது தெரியும். ***தானே இருகீங்க.

நாம்ப பேசி ரொம்ப நாள் ஆச்சே. நான் அங்க போயி ஒரு வருஷம்தானே ஆகுது.

இதைத் தெரிஞ்சிக்கிறது ஒரு விஷயமா? உங்க சைட்டைப் பாத்தா போதாதா! அது சரி நீங்க இருக்கற எடத்துல கண்டெய்னரை இன்ஸ்பெக்ட்தானே பண்ண முடியும்? எக்ஸ்போர்ட்டுமா பண்றீங்க?

அடப்பாவி மனுஷா நீர் எங்கையா இதையெல்லாம் படிக்கிறீரு?

ஏன்? நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்க பிளாகைப் படிப்பேனே!

ஓ அப்படியா ரொம்ப நன்றி. என்ன திடீர்னு என் நம்பருக்கு...!

”லட்சங்களைக் கொண்டுபோய் வாராவாரம் வாடகைக் கார்களில் வைப்பவர்”னு எழுதி இருக்கீங்களே யாரு சார் அந்தாள்?

ஹஹ்ஹஹ்ஹா...

என்ன சார் சிரிக்கிறீங்க?

ச்சும்மா சிரிச்சேன். சிரிக்கிறதுகூட குத்தம்னு CRPC சொல்லுதாய்யா? ஹஹ்ஹஹ்ஹா...

சிரிக்கிறது இருக்கட்டும். நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை. யாரு அது லட்சங்களைக் கொண்டுபோய் வாராவாரம் வாடகைக் கார்ல வைக்கறது? CAB எங்க பார்க் பண்ணப்பட்டிருக்கு? எதுக்கு வைக்கிறாங்க? நீங்க எழுதி இருக்கறதைப் பார்த்தா லைவ் கேசா இருக்கும் போல இருக்கே. சொல்லுங்க அது யாரு. ஃபோன்ல வேண்டாம்னா நேர்ல மீட் பண்ணலாம். எங்க பாக்கலாம்னு சொல்லுங்க.

தொடர்ந்து படிக்கவும் தொடர்புபடுத்திப் படிக்கவும்

சார் இலக்கிய நடையெல்லாம் வேணாம். இது section 12 of the Prevention of Corruption Act, 1988. கேட்டதுக்கு சுத்தி வளைக்காம பதில் சொல்லுங்க சார்.

ஏதேது விட்டா சம்மன் பண்ணிடுவீங்க போல இருக்கே.

இப்ப ஃப்ரெண்டா கேக்கறேன். அது யார் என்ன ஏதுனு சொல்லசொல்லி அஃபீஷியலா டீட்டெய்ல் ஸ்டேட்மெண்ட் எடுக்க விட்டுறாதீங்க சார் என்னை. சரி அப்பறம் பேசறேன்.

மேற்படி உரையாடலில் பங்கேற்ற மறுமுனை மனிதர் சிபிஐ இன்ஸ்பெக்டர். யார் யாரெல்லாம் படிக்கிறார்கள் என்னை. அடக் கஷ்டகாலமே!