Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts
Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts

24 July 2011

ஆன்மீக சாமானம்


நான் 1983’ காசர்கோடு ஃபிலிம் சொசைட்டியில் மணி கௌலின் உஸ்கி ரொட்டி படத்தை பார்த்தேன். படம் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை.

04 June 2011

இப்படி ஒருவர் இருந்தார் - எல்லாமாக

(கடிதத்தின்) நகல்

அன்பான ராமசாமி,
13.06.86

தங்களுக்குக் க்டிதம் எழுதி அநேகமாக ஒரு மாதம் ஆகிறது என நினைக்கிறேன். இந்த ஒரு மாதத்தில்தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள் எனக்குள்.

24 April 2011

விகாரங்களும் விஸ்வரூபங்களும்

ஜெயமோகனின் ஆர்வலர் ஒருவருக்கும் எனக்கும் சில மாதங்களுக்கு முன் ஜெமோவை விமர்சித்தது குறித்து சிறு மனஸ்தாபம் உண்டானது. அவர் ட்விட்டரில் என்னைப் பற்றிக் கொஞ்சம் மோசமாய் எழுதினார். என்னளவிற்கு இல்லை, எனினும் அவரளவிற்கு மோசம் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்த எளிய எதிர்வினையாக அவரை ப்ளாக் செய்தேன். 

18 April 2011

விதி சமைக்கிறவர்களாய் வேஷம் கட்டாத அசல் ஆளுமைகள்

’அன்பளிப்’பைப் பற்றி ஹிந்துவில் மதிப்புரை எழுதிய நேரத்தில் க.நா.சு.விற்கும் அழகிரிசாமிக்கும் நேர்ப்பழக்கமே கிடையாது. அதுமட்டுமல்ல, அழகிரிசாமி ரகுநாதனுடைய உலகத்தைச் சேர்ந்தவர். ரகுநாதனுடைய உலகத்திலிருக்கிறவர்களுக்கு க.நா.சு.வைப் பிடிக்காது. ரகுநாதனுக்குக் க.நா.சு.வைச் சுத்தமாகப் பிடிக்காது.

14 April 2011

கொடுக்கவா எடுக்கவா? நோ பீஸ் ஆஃப் மைண்ட்!

நற்பண்புகளின் அறவுருவாய்த் திகழும் ஜெயமோகன் அவர்களின் சமீபத்திய திருவாய் அமுது, ஞானபீடம் April 13th, 2011. 


”வாசித்தேன். 
என்பேரைச் சொல்லியிருந்தீர்கள். நன்றி. நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை.” 


நிறைய எழுதுதல் என்பதை மட்டுமே தகுதி எனக் கொண்டால் எந்த விருதும் ஜெயமோகனைத் தவிர எவருக்குமேக் கிடைக்க வாய்ப்பில்லை என்பது எவருமே மறுக்க முடியாத உண்மை.

06 April 2011

ஐரோப்பிய நாவலாசிரியர்களைப் பற்றி கொல்லிப் பாவையில் சுந்தர ராமசாமி

அது அந்தக் காலம். உயர்ந்த விஷயங்களை எழுத்தாளர்கள் வாசகனுக்கு எடுத்துச் சொல்லியது.

இது இந்தக் காலம். எழுத்தாளர்கள் தங்களை உயர்வாய் எடுத்துச் சொல்லிக் கொள்ளுவது. 

எழுத்தாளன் தன்னைப் பற்றிப் பெருமையாய்ப் பேசவேக் கூச்சப்பட்டது அது அந்தக் காலம்.

தன் பெருமையைத் தானே பேசுவதோடு அல்லாமல் எப்படி எல்லாம் தன்னை வாசகன் பெருமையுடன் பேச வேண்டும் என்று வகுப்பெடுப்பது இது இந்தக் காலம்.

விசிலடிப்பதை நிறுத்தி, எழுத்தைப் பற்றிக் கொண்டு ரசிகன் தீவிர வாசகனாகப் போவது, அது எந்தக் காலம்? 

எழுத்தாளர்கள் பெயர் உதிர்க்காமல்,எழுத்தாளர்களைப் பற்றி எழுதி எழுத்தாளர்களை உருவாக்கிய பொற்காலத்தில் இருந்து சில பக்கங்கள்.

22 March 2011

எழுதிப் பார்ப்பதும் எழுதியதைப் பார்ப்பதும்

இளைஞர் ஒருவர் (இளைஞர் என்பது கூட அவரை வயதானவராய் ஆக்கிவிடக் கூடும்) மின்னஞ்சலில் சுட்டி கொடுத்து, அவரது கதையைப் பற்றிய, என் கருத்தைச் சொல்லும்படிக் கேட்டிருந்தார். 

படித்துப் பார்த்தேன். பதில் எழுதத் தொடங்கினேன். எழுதி முடித்த போது அவருக்கான பிரத்தியேகமாக அல்லாது, பொதுவாக வந்திருப்பதாகப் பட்டது. பிறகு அவருக்கு கீழ்க்கண்ட வரிகளை அஞ்சல் செய்தேன்.

<இதைப் பதிவாக என் தளத்தில் ஏற்றிக் கொள்வ்தில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை எனில் வலையேற்ற உத்தேசம்.>

அவரது பதில்,

18 March 2011

நீ கேளேன்! நீ கேளேன்!

என்னிடம் ஒரு பழக்கம். ஒன்று பிடித்துவிட்டால், எனக்குப் பிடித்தவர்களை ஓட ஓடத் துரத்திப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் அடுத்தவர் மனநிலை பற்றிய எண்ணமே இருக்காது. இது தவறு என்று எல்லோரையும் போல எனக்கும் தெரியும். ஆனால், ஒருவன் மேல் சாமி வந்திருக்கையில் செய்யும் காரியங்களுக்கு அவன் எப்படிப் பொறுப்பாக முடியும்? என்னிடமிருந்து தப்பித்துக் கொள்ளாதது, மாட்டிக் கொண்டவரின் தவறும்கூடத்தான் இல்லையா? ஆனால் இந்த தர்க்கத்தில் இருக்கும் நியாயம், என்னைத் தவிர இந்த உலகில் ஒருவருக்குமே ஏன் புரிவதில்லை.

24 February 2011

மன்னிக்கவும் மேற்கொண்டு படிக்க முடியாமைக்கு சிறு விளக்கம்!


ஆயிரமாயிம் பக்கங்கள் எழுதின பேராளுமையின் எழுத்தாய்யா இது. காண்ட்ராஸ்ட் தூக்கறதுக்காக, இவ்ளோ கண்ட்ரைவ்டாவாய்யா எழுதுவான் ஒருத்தன். 

//’சார், இங்க எல்லாம் முனிசிபாலிட்டியிலே இருந்து கொண்டு வந்து போடுற ஆளுகளாக்கும்.  பிச்சைக்காரங்க, நரிக்குறவனுங்க இந்தமாதிரி’ என்றார் 

07 February 2011

பள்ளம் - சுந்தர ராமசாமி

1979ல் ’சுவடு’ என்கிற சிறுபத்திரிகையில் வெளியான கதை. 

06 February 2011

கேட்டதும் அடிப்பவனே சென்ஷி! சென்ஷி!



fromசென்ஷி senshe 
toRam Prasath ,
விமலாதித்த மாமல்லன்
dateSun, Feb 6, 2011 at 10:43 AM
subjectநாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 10:43 AM (1 minute ago)
நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி

நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம் நாகராஜன்! மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில் இவர் உருப்படி ஒன்றுகூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. புரட்டிப் பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ, அசிங்கியம்!’ என்று சொல்லிவிட்டார்களாம்!

ஜி.நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி


எழுதத் தொடங்கிய பாலக நாட்களில் தேடித்தேடி ஈறினைக் கீறி பல்முளைக்க வைத்துக் கொண்ட நெல்மணிக் கட்டுரைகள்.

19 December 2010

ஜே ஜே சில குறிப்புகளில் ஒரு குறிப்பு

சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளில் இருந்து ஒரு குறிப்பு

13.4.1947: ஒரு பைசா கூட இல்லை என்ற நிலை................நன்மைகள், உதவிகள், தான தர்மம், சமூக சேவை, இவற்றிற்குப் பின்னாலுங்கூட விரோதங்கள், கொடுமைகள், ஆங்காரம், துர்புத்தி, பொறாமை எல்லாம் இருக்க முடியும். மிக மோசமான அகந்தை சோறும் கறியுமாக வெந்து ஆயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகளின் வயிற்றை நிரப்புவதைப் பார்த்திருக்கிறேன்.