24 July 2011

ஆன்மீக சாமானம்


நான் 1983’ காசர்கோடு ஃபிலிம் சொசைட்டியில் மணி கௌலின் உஸ்கி ரொட்டி படத்தை பார்த்தேன். படம் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. பரிசோதனை முயற்சிகள் மேல் எனக்கு எப்போதுமே ஈடுபாடில்லை. எனக்கு கலை வடிவம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது. அதனாலேயே கொதார்த், லூயி புனுவல் போன்றவர்களையும் என்னால் ரசிக்க முடியவில்லை. இது என் தனிப்பட்ட ரசனையைச் சார்ந்தது. இவர்களை நவீனத்துவம் முற்றி, அது வெறும் வடிவச்சோதனையாக ஆகி, அடுத்த கட்டம்நோக்கி நகரமுடியாமல் திணறிய காலகட்டத்தின் கலைஞர்கள் என்று வகுத்துவைத்திருக்கிறேன்

ஜெ

ஆன்மா என்கிற சாமானை கதை காலட்சேபம் மூலமாய் ஆவி எழுப்புதல் போல் எழும்பச்செய்வதே கலை இலக்கியம் என்று போதிக்கும் நபரை என்ன செய்ய இயலும்?

<நான் 1983’ காசர்கோடு ஃபிலிம் சொசைட்டியில் மணி கௌலின் உஸ்கி ரொட்டி படத்தை பார்த்தேன். படம் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. >

அய்யா அது உஸ்கி ரொட்டி பரோட்டா இல்லை. படத்தின் பெயர் உஸ்கி ரோட்டி. வடகிழக்கு தென்மேற்கு என்று பண்டாரம் பரவசப் பயணம் போனாலும் வழிநெடுகக் கிடைக்கும் ரோட்டியைப் பிய்த்துப் பசியாறினாலும் எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் ஈ.வெ.ராவை ஈ.வே.ரா என்றே எழுதும் திருந்தாத திமிர் பிடித்த வாயில் தர்ப்பையைத்தான் போட்டுக் கொளுத்த வேண்டும்.

<படம் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை>

நத்தையடித்தது, போரடித்தது, புரியவில்லை எனவே பிடிக்கவில்லை என்பது எவ்வளவு அடக்கமான நேர்மையான வார்த்தைகளாய் இருந்திருக்கும். 

சினிமாவில் கதையாய்ப் படிப்பது தவிர இவருக்கு இப்போதேனும் சினிமா என்றால் என்னவென்று தெரியுமா? சினிமாவிலிருந்து வரும் காசுமேல் இருக்கும் அளவிற்கு சினிமாவின்மேல் காதல் உண்டா?

<பள்ளிநாட்களிலேயே எழுத ஆரம்பித்தேன். முதல்கதை ரத்னபாலா என்ற சிறுவர் இதழில் வெளிவந்ததாக நினைவு. இக்காலகட்டத்தில் குமுதம் விகடன் கல்கி இதழ்களில் பலபெயர்களில் கதைகள் வெளிவந்தன. ‘பாரிவள்ளல்’ என்ற குமுதம் உதவியாசிரியர் எனக்கு ஊக்கமூட்டி கடிதங்கள் எழுதினார்>

முதல் ஆற்றுப்படுத்தலே வணிக பத்திரிக்கைகளுக்கு, அதுவும் பாரிவள்ளல் என்கிற கோடம்பாக்க சினிமா செய்தித்துணுக்கு சேகரிப்பாளரால். நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தால் நாற்றம்தான் மிச்சம். 

குமுதம் விகடன் கல்கிகளில் கலை இலக்கிய சேவை பிழிந்துகொண்டிருந்த காலகட்டமான 1983ல் மணிகெளல் சினிமா புரிந்திருக்க இடியட்டுக்கு கொஞ்சநஞ்ச வாய்ப்பேனும் இருந்திருக்குமா?

வெங்கடேஷ் சக்ரவர்த்தி, ஆர்.வி.ரமணி போன்றவர்கள் மணிகெளல் பற்றி ஃபேஸ்புக்கிலேனும் விரிவாய் எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

(1980-82) <இக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பினால் ஆன்மீக நூல்களில் நாட்டம் ஏற்பட்டது.>

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் ஆன்மீகத்துக்கும் என்னையா சம்பந்தம்? ஹிந்துவின் சிறிய சந்து மட்டுமே சந்து மீதியெல்லாம் பித்தலாட்ட பொந்து என்று சொல்வதெல்லாம் எதேச்சதிகார அரசியலா? ஆன்மீகமா? 

விசால மனமுள்ளோர் படித்துப் பார்த்துக் கொள்ளவும் சூ·பி இயக்கம் – பிரமிள் (பாதையில்லாப் பயணம் / பிரமிள் (ஆன்மீக, மறைமுக ஞானப் படைப்புகள்)வெளியீடு : வம்சி புக்ஸ், 19, டி.எம். சாரோன், திருவண்ணாமலை – 606 601, செல் : 9443222997, விலை : ரூ 150/-)

<1984ல் கேரளத்தில் காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன்.......அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் ஏற்பட்டது.>

ஓ அப்போதே வயதுக்கு வந்தாகிவிட்டதா தம்பி ? 

<இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் ஏற்பட்டது.> 

ஆனால் விவாதித்துக் கொண்டிருந்தது என்னவோ 90-91 வரையில் கூட ‘பாரிவள்ளல்’களுடந்தான் போலிருக்கிறது. 84ன் தொலைபேசி நிலைய தற்காலிக வேலை 88 நவம்பரிலேயே நிரந்தரமும் ஆகிவிட்டது. ஆகவே வணிகப் பத்திரிகைக்களுக்கு எழுதிக் கொண்டிருந்ததற்கு வறுமையைக் காரணம் காட்ட முடியாது.  அங்கும் இலக்கியச் சேவைதான் பிழியப்பட்டுக் கொண்டிருந்ததெனில் தைரியமாய் எடுத்துவிட்டால் கிழக்கு மேற்காகப் புத்தகமாகி சரியான ராயல்டி கிடைக்க வழியுண்டே. சோற்றுக்கைக்கு சிறுபத்திரிகை பீச்சாங்கைக்குப் பெரிய பத்திரிகை என்று எழுதுவதற்குப் பெயர்தான் இலக்கிய தாகமா? இரண்டில் எது உண்மை முகம்? 

<1985ல் சுந்தர ராமசாமி அறிமுகமானார். என்னை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார்.>

இலக்கிய பதார்த்தம் கடையலாமா என யோசிக்க ஆரம்பித்ததே 1985ல் சுந்தர ராமசாமியின் வாசனைக்கு அப்புறம்தானே?

தானும் ஒரு பருப்பு என்றானது அதற்கும் பின்னர்தானே இருந்தாகவேண்டும்?

1983லேயே ஞானக்கொட்டைக்கு உலக சினிமா தெரிந்துவிட்டது போலும். உஸ்கி ரோட்டி பிடிக்கவில்லை.

<எனக்கு கலை வடிவம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது. அதனாலேயே கொதார்த், லூயி புனுவல் போன்றவர்களையும் என்னால் ரசிக்க முடியவில்லை.>

ஆமாமாம் உங்களால ரசிக்க முடியாததால் பாவம் கொதார்துக்கும் புனுவலுக்கும் எத்துனைப் பேரிழப்பு. 'போர்ஹே'வுக்கு எடுத்த வாந்தியை விழுங்கியதைப்போலவே இதையும் எப்போது விழுங்கப்போகிறீர்கள் என்பதைக் காண போதிய ஆயுளை இறைவன் எனக்கு அருளட்டும் என்பதே என் பிரார்த்தனை. 

அட்சராப்பியாச நுகர்வுகூட இல்லாமல் உலக இசை ஓவியம் இன்னபிற கலைகள் எல்லாவற்றையும் உமது இலக்கிய நூலாம்படையில் முடிந்து ஹிந்துத்வஆன்மீக கண்டாமணியில் கட்டித் தொங்கவிட்டுவிட முடியுமா ? இல்லை கட்டிவிட்டால் அதனால் தாங்கத்தான் முடியுமா?

கொதார்தும் புனுவலும் என்னென்ன பார்த்திருக்கிறீர்கள்? அவர்களின் படங்கள் புரிந்தனவா?அவையெல்லாம் அங்காடித் தெரு அளவுக்கு ஆன்மீக உச்ச பருப்புக்கடையல் இல்லையோ?

<இது என் தனிப்பட்ட ரசனையைச் சார்ந்தது.>

எனில், சொம்போடு கொல்லைக்குப் போகும்போது பாரம்தாங்க முடியாமல் குழுமத்து மட கும்பலாய் குருவே என மடங்கிக்கொள்ளும் புற்களிடம் சொல்லிக்கொள்ள வேண்டியதுதானே? 

ஏதோ தத்துவ தரிசனம்போல ஏனிந்த இணைய அறிவிப்பு அரிப்பு?

<இவர்களை நவீனத்துவம் முற்றி, அது வெறும் வடிவச்சோதனையாக ஆகி, அடுத்த கட்டம்நோக்கி நகரமுடியாமல் திணறிய காலகட்டத்தின் கலைஞர்கள்> 

திறந்த வெளியில் குந்தி இருக்கும்போது, புற்களின்மேல் குவியத் தொடங்கியது கோபுரமானால் சற்று நகர்ந்து ஆன்மீகமாய் முக்க வேண்டும் என்கிற ஹிந்துதர்ம பழக்கம் அறியாத காரணத்தால், மேற்கத்திய கலைஞர்கள் பாவம் தாளிட்ட அறைக்குள் இருந்த இடத்தில் இருந்தபடிக்கே நகர முடியாமல் திணறிக்கொண்டு இருந்தார்கள் போலும்.
  
ஏனைய்யா உம்முடைய ஒரு கதையை மட்டும் படித்த ஒருவன் நீர்  சரியில்லை என்கிற முடிவுக்கு வந்து உமக்குக் கடிதமாய் எழுதினான் என்றால் நொண்ணா முண்ணா கன்னா பின்னான்னாவென்று காட்டுக்கத்தக் கத்துகிறீரே, ஒரே ஒரு படம் அதுவும் ஒண்ணாங்கிளாஸ் படித்த காலத்தில் பார்த்ததை வைத்து மணிகெளலை மூட்டை கட்டுகிறீரே இது ஹராம் இல்லையா? இல்லை இதுதான் ஹிந்து அறமா?

<என்று வகுத்துவைத்திருக்கிறேன்>

ஏன்? ஆன்மீகமாகப் பெருக்கி வைக்க முடியவில்லை என்பதாலா?