03 February 2011

பரப்பிசை மோடில் பப்பரப்பா எழுதும் இலக்கியக் கதைகள்

அதிஷா ... - ஜெமோ நல்லவர்தான்.. ஆனா.. அவரு எழுதற கதைய பத்தி மட்டும் மாமல்லன் பேசுவாரு..!7:26 pm
aravind அரவிந்த் - ஆமா பேசுவாரு.டங்கு டிங்கு டங்கு. #பின்பாட்டு.7:32 pm
Arangasamy K.V - அதிஷா , கட்டுடைசுட்டாரா ?7:37 pm

@அதிஷா ... @aravind அரவிந்த் @Arangasamy K.V: நான் பாட்டுக்கும் தேமேன்னு என் கதைய எழுத முக்கிண்டு இருக்கேன். என்னை ஏன்யா வம்புக்கு இழுக்கறீங்க.

ஆண்டன் செகாவின் ‘காதலைப் பற்றி’ கதை ஆங்கில PDF

முந்தைய பதிவில் கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் கதையைப் படித்துவிட்டு ஒரு இணைய நண்பர், சாருதான் வழக்கம்போல, தன் பாணியில் கு.ப.ராவை செகாவோடு ஒப்பிட்டிருந்தார் என்றால் உங்களுக்கு என்ன ஆயிற்று?  என்று பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டார்.

02 February 2011

சாரு நிவேதிதாவுக்கு நன்றி!

எளிய தமிழில் என்ன ஒரு அறிமுகம். 

இரண்டாவது கைக்குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்ளும் இளம் பெண்ணின் லாவகத்துடன் இலக்கிய ஜாம்பவான்களின் அறிமுகம் - தாஸ்தாவஸ்கி, ஆண்டன் செகாவ், கு.ப.ரா.

01 February 2011

சார் இந்தக் கவிதைல உங்களுக்கு என்ன சார் புரியலை?

பிரமிளின் கவிதைகள் புத்தகத்திலிருந்து நன்றியுடன்

ஆவி குமுதம் ஜூவி வாசிக்கிறேன், கல்கி சாண்டில்யன் கரைத்துக் குடித்திருக்கிறேன், சுஜாதாவை சுவாசிக்கிறேன், வைரவரிகளைப் பூஜிக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு மேலே இருக்கும் கவிதை புரியவில்லை என்றால் கோளாறு என்னிடமா? என்று கேட்கும் ஒரு மனிதரிடம் வார்த்தைக் கொல்லர் லா.ச.ராவில் தொடங்கி வார்த்தைப் பேச்சாளர் ஜெயகாந்தன் வரையில் கொஞ்சம் தூள் பக்கோடாவாகவாவது கடித்துத் தின்று மென்று பாரும், ஆரம்பத்தில் பேதியாகும் போகப்போக செட்டாகும். அதற்கப்புறம் இவர் கவிதையை முயற்சித்துப் பாரும் புரியக் கூடும் எனலாம். 

லேபிள் மோகம்! பற்றி இரண்டு மறுமொழிகள்



லேபிள் மோகம்! பற்றி இரண்டு மறுமொழிகள் பதிவில் ஒன்றும் பஸ்ஸில் ஒன்றுமாக.


பதிவில் பெருந்தேவி:

//விற்பனைக்கு அல்லவே அல்ல என்கிற திடசித்த அன்பான கோணங்கியை, எழுத்தில் மட்டும் மனுஷ குலத்தின்மேல் துளியும் இரக்கமற்ற நரமாம்ஸப் பட்சிணியாக மாற்றியதன் முழு பாபம் நாகார்ஜுணனையே சாரும்.//

31 January 2011

லேபிள் மோகம்!



சாரு நிவேதிதாவின் ப்ரில்லியண்ட் பீஸ்! 

நாகார்ஜுணன், சிரஸாசனம் செய்தபடி புத்தகத்தை மட்டும், நேராக வைத்துக் கொண்டு படிக்கிற பெரிய படிப்பாளி என்பதுதான் எனது நெடுநாளைய எண்ணம்! இப்போது கொஞ்சம் எளிமையாக எழுத முயற்சிப்பது போல் தோன்றுகிறது. 

30 January 2011

அயோக்கிய சிகாமணி - Air Tel #tnfisherman

சர்வீஸ் தேவைப்படுகிறது என சிவப்பு வண்ண எச்சரிக்கை, குடியரசு தினத்தில் இருந்தே கொடுக்கத் தொடங்கி இருந்தது வாகனம்.

29 January 2011

ஆசப்பட்டுக் கேட்டுட்டார் சாரு, ட்விட்டிட்டாப் போச்சு #tnfisherman


#tnfishermanக்காக லீனா கவிதையில் ட்விட்டினால் - உப்பு கரிக்கும் மயிரைப் பிடுங்குங்கள் எவன் குறியிலிருந்தேனும். மகிந்தாவுடையதாய் இருப்பின் மகிழ்ச்சி.

படிக்கிறேள்ங்கறதே பிடிக்கறதே! ##tnfisherman

படித்ததில் பிடித்தது இல்லே, 
தற்காலத் தமிழிலக்கியப் பேராளுமைகள்ளாம் என்னையும் படிக்கிறேள்ங்கறதே பிடிக்கறதே!!!!!!

கடவுளென நம்பிய கற்சிலை #tnfisherman

கடவுளென நம்பிய கற்சிலை

அதிவேகக் கடற்குதிரையில் 
சவாரிக்கும் சீருடைகளிலிருந்து 
”எல்லை தாண்டினாய்” என
சீறுகின்றன குண்டுகள்.  

27 January 2011

எழுத்தாளர்களும் #tnfishermanனும்

#tnfisherman சாரு ட்விட்டினால் - ராஜபக்சேவின் குதத்திலே சதம் அடிப்போம் என்று என் தேகம் நாவலில் எழுத நினைத்திருந்தேன்.மிஷ்க்கின் இது தெரியாமல் சரோஜாதேவி என்கிறார்.

தவம் - தி.ஜானகிராமன் சிறுகதை

26 January 2011

ஜேபி ராஜேந்தரன் என்கிற ஜேய்பீ ராஜேந்தரன் என்கிற ஜேய்பீ ராஜ்

நடுவிரல் காட்டி என்னைத் தேவடியாள் பையன் என்று அழைத்து, அதை ஒற்றை எழுத்தாக சுருக்கி விடுபட்டவற்றிற்கு நட்சத்திரக் குறியிட்டு, இந்திய மெடிக்கல் கவுன்ஸிலின் அட்ரஸ் எது எனக் கேட்டதும், அந்த பஸ்ஸையே முற்றிலுமாய் நீக்கிவிட்வர். 

இணையத்தையே கிடுகிடுக்க வைக்கும் ஆஹா என்றெழுகின்ற யுகப்புரட்சி மண்டபத்தின் முட்டுக் கொடுத்தலோத் தாங்கிப்பிடித்தலோ அல்லது காமாக்ஷியின் கடாக்ஷமோ இல்லாத நான் ஒரு தான்தோன்றிப்பயல் என்கிற காரணத்தால், தனியாகவே இந்தத் தாக்குதலை எதிர்கொண்டேன். 

அதன் பிறகு நான் அவமானங்களைக் கடந்தால்தான் ஆன்மீகம் என்கிற தனிப் பதிவாய்ப் போட்டதும், இன்னும் இரண்டு மூன்று வாரங்களில், என்னைப் பற்றி சைக்கோ அனலைஸ் செய்து எனக்கே அனுப்பப்போவதாய்ச் சொல்லி, எழுதி எழுதி கலைத்துக் கொண்டிருப்பவர். இன்றும் பல்வேறு பெயர்களில் எவ்வளவு முறை எங்கெங்கே ப்ளாக் பண்ணினாலும், என்னைத் தொடர்கிற, கோவை / பிர்மிங்காம் சைகை யாட்டிரிஸ்ட்டு பிறந்த இடம் காஞ்சி என்று ஒரு முறை கூகுள் ப்ரொஃபைலில் குறிப்பிட்டு இருந்தார்.
JP Rajendran, Jaypee Rajendran, jaypee raj

24 January 2011

Indian Camp a short story by Ernest Hemingway

சும்மா ரிப்போர்ட் செய்வது போன்றதொரு நடை. ஏதோ நடந்தது, அதை நான்  பார்த்தேன், பார்த்ததை சொல்லிவிட்டுப் போகிறேன், மற்றபடி நான் என்னதக் கண்டேன், எனக்கென்ன தெரியும் என்பது போல எழுதப்பட்ட கதை.

இந்தக் கதையைப் பகலில் படித்து வேலை ஓடவில்லை என்றாலோ, இரவில் படித்து தூக்கம் வரவில்லை என்றாலோ, நீங்கள் வழக்கு தொடுக்க வேண்டிய இடம் ஹெமிங்வேவின் சமாதி தர்கா கல்லரை, என் மீது அல்ல. 

லலிதா ராம் - சஞ்சய் சுப்ரமண்யம் நடுவில் நாட்டாமையாக மாமல்லன் என்று ஒரு அற்பன்




Ramachandran Mahadevan

 to me
show details 1:54 PM (3 hours ago)

regards
Ram
**************************************************************