30 January 2011

அயோக்கிய சிகாமணி - Air Tel #tnfisherman

சர்வீஸ் தேவைப்படுகிறது என சிவப்பு வண்ண எச்சரிக்கை, குடியரசு தினத்தில் இருந்தே கொடுக்கத் தொடங்கி இருந்தது வாகனம்.

வழக்கம்போல இன்று அதிகாலையில் எழுந்து காஃபி குடித்தபடி ஹிண்டு பார்க்கையில், இந்த சர்வீஸ் மேட்டர் நினைவு வர, இன்று வாராந்திர விடுமுறையாக வேறு இருப்பதால் இந்த ஸ்ரார்த்தத்தை வைத்துக்கொள்ள இன்று உகந்த தினம் என மெக்கானிக்குக்கு கைபேசியில் அழைத்தேன்.
மணியடித்துக் கொண்டு இருந்ததேயன்றி மனுஷன் எடுப்பதாக இல்லை. ஐஃபோனை (இரவல் கார் சவாரியை, இல்லாத கூலிங் கிளாஸை எல்லாம் எழுத்தாளர்கள் பெருமையாய், பெரும் கொண்டாட்டமாய் எழுதிக் கொள்கையில், சொந்தமாய் வைத்திருக்கும் ஒரு ஃபோனைக் கூடக் குறிப்பிட்டுக் கொள்ளவில்லை எனில், என்னையும் ஒரு எழுத்தாளனாய் யார்தான் சீந்துவார்கள்) ஆக நோ ரெஸ்பான்ஸாய் இருந்ததால் ஐஃபோனைப் பக்கத்தில் வைத்துவிட்டு, பேப்பர் பார்க்கத் தொடங்கினேன். பேப்பரின் மேல் கண் இருந்தாலும் பார்வை ஃப்ரேமின் ஒரு ஓரத்தில் இருந்துகொண்டிருந்த ஐஃபோன் ஆட்டோ மோடில் பூனைத்தூக்கத்திற்குப் போக முனைகையில் ஏதோ எழுத்துக்கள் தோன்றி மறைந்தன.

என்னவாக இருக்கும் என்கிற குறுகுறுப்பில் தட்டி எழுப்பினேன்.
பேசாத காலுக்கு - பேசிய நேரம் 0 என அவனே கணக்குக் சொல்லும் ஒரு காலுக்கு - 30 பைசாவா? என்னடா இது மெட்ராஸுக்கு வந்த சோதனை? என நினைத்து, ஏர் டெல்தானே,சரி இவர்கள் எப்போதும் இப்படித்தான் கிறுக்குத்தனமாய் எதையோ செய்வார்கள். நமது நேரத்தை வீணடித்து, கஸ்டமர்கேரில் பொறுமையுடன் காத்திருந்து என்ன இது எனக் கேட்டால் உங்கள் சொத்து அப்படியே இருக்கிறது பாருங்க என எதையாவது சொல்வார்கள், இது தேவையா என சும்மா விட்டு விட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து மெக்கானிக்கிறகுத் திரும்பவும் ஒரு கால். ரிங் போகத்தொடங்கியது. வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்தவன், திருவான்மியூரில் தனி கடை போட்டு முதலாளி ஆகியிருக்கிறான். வாழ்க. இப்போதும் நோ ரெஸ்பான்ஸ். கட்.

ஒரு கால் செய்து பேசுவதற்கு முன் நாமே கட் செய்தால், மூடிக்கொண்டு சும்மா இருக்கும் ஃபோன் இன்று மட்டும் ஏன் கணக்கு வழக்கு என்று என்னவோ காட்டுகிறது?

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், 30 பைசா அபேஸ். அடங்கோத்தா பேசாத காலுக்கு 30 பைசாவா? ஒரு வேளை ரேட் கட் பூஸ்ட்டர் முடிந்து விட்டதா? ஐஃபோன் காலண்டர் ரிமைண்டர் 29.01.2011 பூஸ்டர் ரினுவல் எனக் காட்டிற்று அப்படியெனில் அன்றுவரை இருக்கிறது என்றுதானே பொருள்.

சரி எதற்கும் இன்னொரு முறை முயற்சிப்போம். மெக்கானிக்கை அல்ல. மெக்கானிக்கிறகு நம்பர் அடித்து, ஏர்டெல் தாழியை.
அடங்கோ, 30 பைசா 30 பைசாவா சொத்தைக் கரைக்கிறானேக் கம்மனாட்டி. மெக்கானிக்காவது கொக்கானிக்காவது. வண்டிக்கு சர்வீஸ் இல்லாட்டி மயிரே போச்சு. இன்னக்கி ஏர்டெல்காரனை சுளுக்கெடுக்காம சோறுதண்ணி இல்லை.

கஸ்டமர் கேருக்குப் போட்டா, ஊரெல்லாம் சுத்தும். ஏர்டெல் அதிகாரி நம்பர் குறித்திருந்தோமே, அவருக்குப் போடலாம். இலவசம் இல்லைதான் ஆனால் வேலை சட்டென முடியக்கூடும். கட்டனம் கணக்கில் கழியக்கூடிய நம்பருக்குப் பேசினேன். எடுத்தவர் ராங் நம்பர் என சொல்லிவிட்டார்.
அடங்கொய்யாலே பேசினா 10 பைசா த்தா சும்மா இருந்தா 30 பைசாவா? இன்னாங்கடா இது?

வேறு வழியே இல்லை. தர்ம தரிசனம்தான். கஸ்டமர் கேருக்கே அடிப்போம். ஐந்து நாள் வார அலுவலகம். சனிக்கிழமையன்று வெட்டி ஆஃபீஸர். தற்சமய இண்டர்நெட் பரபரப்பில் #tnfisherman அடிக்கிற ட்விட்டு ஆஃபீஸர். அடி ஃபோனை ஏர்டெல்ல்லுக்கு.
ஏற்டெல்லில் உங்களை வரவேற்கிறோம் (வெறுப்பேற்றுகிறோம், 3G பற்றிய பெண்குரல் கொஞ்சல், அப்புறம் ஒன்னுக்குப் போக இதை அழுத்து ரெண்டுக்குபோக அதை அழுத்து, தினந்தின தெவச மந்திரம்) 

வணக்கம், ஏர்டெல்லில் இருந்து சரண்யா பேசுகிறேன், தங்களுக்கு எப்படி உதவலாம்?

கால் பண்ணி, பேசாமலே - ரிங்கு போயிக் கட் ஆனாலும் காசக் கழிச்சுடுவீங்களா?
புரியலை
(என்னாடா இது ப்ளாகு ட்விட்டுன்னு எதுல எழுதினாலும் புரியலைங்கறான். அதையாச்சும், ஏய் இதெல்லாம் தீவிர இலக்கியம் புரியாட்டி சொறிஞ்சிக்கோ போ எனச்சொல்லி மெடல் குத்திக்கலாம். பேசுறப் பேச்சே புரியலைன்னா எங்கப் போயி முட்டிக்கிறது?)
இப்ப நான் உங்க மொபைல் நம்பருக்குக் கால் பண்றேன்னு வெச்சிக்குங்க, நீங்க ஃபோனைத் தேடிகிட்டு இருக்கீங்க. இல்லே வேறே ஏதோ காரணத்தால் கால் அட்டெண்ட் பண்ணலை, ரிங்கு முழுசாப் போயி,கால் தானே கட்டாயிடுது. அதுக்கும் என்கிட்ட சார்ஜ் பண்ணுவீங்களா?
ஒரு நிமிடம் செக் பண்ணுகிறேன். காத்திருக்க முடியுமா?
சரி (வேறே விதி)
நீங்க மெய்ல் உபயோகிக்கிறீங்களா?
எப்பையாவது பார்ப்பேன். அதுக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்? மெய்ல் ஒர்க்காவறது எங்க வீட்டு BSNL wi-fi ல, மொபைல்ல வைஃபி மூலமா மெய்ல் பாக்கறதுக்கும் Air Telலுலக் காசு கழியறத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
மெய்ல் பாக்ஸ் ஓப்பனா இருந்தா எவரி அவர் சார்ஜ் ஆகும்.
என்னாது?...... இந்த அக்கிரமம் எப்பலேந்து?
24ம் தேதிலேந்து.
ஐயையோ. எவ்ளோ 30 பைசா போயிருக்கு? 24லேந்து ஒரு அவருக்கு முப்பது பைசான்னா என்ன ஆவறது?
அவ்ளவெல்லாம் போகலீங்க 24ஆம் தேதி 3 பைசா 6 பைசா...
இப்பிடி காசைக் கழிக்கப்போறோம்னு எனக்கு முன்கூட்டியேத் தகவல் சொன்னீங்களா? ஒண்ணு, கட்டண சர்வீஸ் ஆவுதுன்னு சொன்னா அதை சொல்லிட்டு செய்ய வேண்டாமா? சொன்னதுக்கான ப்ரூஃப் காட்ட முடியுமா? நாமளே வரிசைலப் போய் ஒக்காற்ற திருப்பதில கூட தண்ணி தெளிச்சுட்டுதாங்க மொட்டை அடிக்கிறான். இப்படி எந்த அனொவ்ன்ஸ்மெண்டும் இல்லாம நீங்களே காசக் கழிக்க ஆரம்பிச்சா என்னாங்க அர்த்தம்?
தவறுதான். மன்னிக்கவும்.
இது வரிக்கும் எவ்ளோ கொள்ளை போயிருக்கு? ஏம்மா! நம்பர் போர்ட்டபிலிட்டி வந்தாச்சு இப்படி ஆர்பிட்ரறியா செய்றீங்கன்னு என் ப்ளாக்ல எழுதறேன். என்மாஸா எத்தனை பேர் ஏர்டெல்லை விட்டு வெளிய போறாங்கன்னு பாக்கறீங்களா? கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போறதெல்லாம் அந்தக் காலம். ஸ்ட்ரெய்ட்டா வீடுவீடாப் போயி பிட் நோட்டீஸ் குடுக்கறது இந்தக் காலம். ஏர்டெல் மாதிரி கார்ப்பரேட் ஜெயண்ட்ஸ்ஸோட மோதணும்னா ஒரே வழி இண்டர்நெட்டுதான்.
மன்னிக்கவும். இன்னும் ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டு விடும். உங்க மெய்ல் பாக்ஸை மறக்காமல் மூடிவிடுங்கள்.
சரி மூடிக்கிறேன். இது வரைக்கும் எவ்ளோ பணம் எடுத்துருக்கீங்க?
10 ரூபாய்.
ஒத்த ரூபாய்னாலும் சொல்லாம எடுக்கலாமா?
தவறுதான் மன்னிக்கவும்.
24ஆம் தேதிலேந்து ப்ரேக் அப் குடுங்க.
24ஆம்தேதி 3 பைசா 6 பைசா ஆறு தடவை. 25ஆம் தேதி, 26ஆம்தேதி....29ஆம் தேதியிலிருந்து 30 பைசா.
ஒவ்வொரு அவருக்குமா?
ஆமாம் சார். தவறுக்கு மன்னிக்கவும். இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் கணக்கில் இந்தப் பணம் சேர்க்கப்படும்.

ஒரு பொடியன் நண்பரின் நம்பருக்குக் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வைத்தேன்.
ஒரு மணி நேரத்தில் கணக்கு நேராகும், தவறாகக் கழித்த காசு கணக்கில் ஏறும் என 10.49க்கு 8 நிமிடப் பேச்சில் அளிக்கப்பட்ட வாக்கு, எண்ணி 10 நிமிடத்திற்குள் காப்பாற்றப் பட்டிருக்கிறது.

தவறு செய்தல் மனித இயல்பு, அதைத் திருத்திகொள்வது உயர்ந்த பண்பு என ஏர்டெல்லுக்குப் பராட்டுப் பத்திரம் வழங்குவதா? 

இப்படி நடப்பதை அறியாதவர் எத்துனை பேர்? தட்டிக்கேட்காதவரை, சுருட்டியது லாபம். இதுதான் கார்ப்பரேட் கலாச்சாரமா? கழுத்துக்கு டை கட்டிய நுணிநாக்கு எதிக்ஸா? 

திருடினது தப்புதான். திருப்பிக் குடுத்துட்டோம்ல.

சரி ஒழிந்தது சனியன். நேற்றைய சனியன் நேற்றோடு தொலைந்தது என்று இருந்தால். இன்று இதை எழுதி முடிக்கப்போகையில் இந்த க்ஷணத்தில், 
தரித்திரம் திரும்பவும் நேற்றைப்போலத் தொடக்கத்தில் இருந்தா? ஐயகோ!
தற்போது தொடர்பில் வந்தது யோகப் ப்ரியா. 
தங்களுக்கு எப்படி உதவலாம். 
(எள்ளும் கொள்ளும் விடுவதன் மூலம்) நேற்றைய கதை மொத்தத்தையும் மூச்சுமுட்ட சொல்லி முடித்தால், வந்த பதில்
உங்க ப்ரெளசர் ஆன் ஆகியிருக்கு! (ட்ரெளசர் கூடத்தான்) 
ஏங்க! ப்ரெளவ்சர் ஃபோன்ல இருக்கறது. அதை நான் என்ன பண்ண முடியும்?நான் உங்க இண்டர்நெட்டே யூஸ் பண்றதில்லையே!
இல்லைங்க, உங்க ஃபோனுக்கு GPRS ஆக்ட்டிவேட் ஆகியிருக்கு!
என்கிட்ட wi-fi தானே இருக்கு! 
இல்லை எங்க ரெக்கார்டு படி GPRS ஆக்ட்டிவேட் ஆகியிருக்கு! அதை உங்க ஃபோன்லதான் செட்டிங்ஸ்ல மாத்தணும்.
GPRS வேணும்னு நான் கேட்டேனா? ஏங்க நான் கேக்காத ஒன்னுத்த நீங்களே ஆக்டிவேட் பண்ணுவீங்க. பண்ணி இருக்குன்னு சொல்லவும் மாட்டீங்க. காசும் எடுத்துக்குவீங்க. என்னாங்க இது அநியாயம்? மொதல்ல GPRSஐக் கட் ண்ணுங்க. கழிச்ச காசைக் கணக்குல சேருங்க.
அது எப்படி சார் முடியும்?
தப்பு உங்களுதுதான! நேத்து பண்ணினீங்களே!
அது ரேர் கேஸ்ல பண்ணினது
இது என்ன புது கேஸா? அதே கேஸ்தானே? 
ரத்தம் சூடேற லபோ திபோவெனக் கத்தத் தொடங்க்னேன் ஜாக்கிரதையாக. (இதற்குத்தான் பெண்கள் மூலமாக பேசுகின்றன கார்ப்பரேட் சங்காமங்கிகள். மனநோயாளிகள் கடைப்பிடிக்கும் அதே டெக்னிக். பெண்ணை விட்டு செருப்பால் அடிப்பேன் எனச்சொல்ல வைத்தால், உங்களால் பதிலுக்கு ஓத்தா ங்கொம்மா எனத் திட்டவாவது முடியுமா? எல்லாவற்றிலும் போல, சண்டை என்று வந்தாலும் ஆணும் பெண்ணும் சமம்தானே என்று அப்பாவியாக நம்பி, ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. வன்புணர்ச்சி புண்புணர்ச்சி எனச்சொல்லி கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதைமேல் ஊர்வலம் விட்டுவிடுவார்கள்). 
நான் சைவ பாஷையில் குய்யோ முறையோவென்று கத்திக் கொண்டிருந்தேன். 
இப்ப இம்மீடியட்டா GPRSஐ டீ ஆக்டிவேட் பண்றீங்களா இல்லியா? ஆக்டிவேட் ஆனதே எனக்குத் தெரியாது. இன்னாங்க இது அக்கிருமம்.....
இங்கேந்து ஒரு SMS டீஆக்டிவேட் பண்ணிட்டதா வரும். அது வந்ததும் டீஆக்டிவேட் ஆயிடுச்சின்னு அர்த்தம். 
கால் கட்டாவதற்குள் கீய்ங் கீய்ங் 
எனக்கேத் தெரியாமல் என்பின்னால் ஒருத்தன் அடிப்பான். அதை எனக்கு அறிவிக்கவும் செய்யாமல் அதற்கான கட்டணம் என என்னிடமே பிக் பாக்கெட்டும் அடிப்பான்.

என் மனைவியை நான் புணர்வதற்குதான் இன்னும் எவனும் டிக்கெட் போட ஆரம்பிக்கவில்லை போலும்.

இந்திய ராணுவத்தால் சுடப்படவேண்டிய அயோக்கியர்கள் கோட்டும் சூட்டுமாய் எல்லையே இல்லாமல் கோடிகளில் புரண்டுகொண்டு இருக்கையில், அப்பாவி மீனவனை எல்லை தாண்டிவிட்டான் என்று கொல்கிறது இலங்கைக் கடற்படை #tnfisherman