01 February 2011

லேபிள் மோகம்! பற்றி இரண்டு மறுமொழிகள்



லேபிள் மோகம்! பற்றி இரண்டு மறுமொழிகள் பதிவில் ஒன்றும் பஸ்ஸில் ஒன்றுமாக.


பதிவில் பெருந்தேவி:

//விற்பனைக்கு அல்லவே அல்ல என்கிற திடசித்த அன்பான கோணங்கியை, எழுத்தில் மட்டும் மனுஷ குலத்தின்மேல் துளியும் இரக்கமற்ற நரமாம்ஸப் பட்சிணியாக மாற்றியதன் முழு பாபம் நாகார்ஜுணனையே சாரும்.//

மன்னித்துக்கொள்ளுங்கள் மாமல்லன். உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நீங்களும் இப்படி எழுதுவது வருத்தம் தருகிறது. கோணங்கி விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத குழந்தையா, நாகார்ஜுனன் தான் அவரைக் கடத்திக் கொண்டு போய் ‘கடின’ மொழியைக் கற்றுக்கொடுத்தாரா? மார்க்வெஸ் இதழ் சிற்றிலக்கியச் சூழலின் ஒரு தருணம். மொழிப் பரிசோதனை என்னும் உன்மத்தம் சிலரைப் (நானும் உண்டு அதில்) பிடித்திருந்த காலகட்டம். அது தோற்றிருக்கலாம், ஆனால் அதில் நான் பெற்ற/கற்றுக்கொண்ட விஷயங்களும் உண்டு; அதேபோல, கோணங்கியும் நாகார்ஜுனனும் கூட பெற்றிருப்பார்கள்/கற்றுக்கொண்டிருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். இவ்விஷயத்தில் நாகார்ஜுனனை தனித்து தாக்குவது, படைப்பாளி-புனைவெழுத்தாளர் x ’அறிவுஜீவி’ விமரிசகர்-கட்டுரையாளர் என்ற இருமையைக் கட்டமைத்து, இதில் பின்னதைத் தாக்கும் anti-intellectual பாவனையாகவே தெரிகிறது. (சாருவுக்கும் எழுத நினைத்தேன். ஆனால், அவர் தளத்தில் பின்னூட்டம் போட வசதியில்லை. இதைக் கடிதமாக எழுதும் அளவுக்கு எனக்கு முனைப்புமில்லை. )
அன்புடன்
பெருந்தேவி
கூகுள் பஸ்ஸில்: nesamitran online - //சாரு நிவேதிதாவின் ப்ரில்லியண்ட் பீஸ்! //


சார் இந்த சீரோ டிகிரின்னு தெளிவா புரியுற நாவல் ஒண்ணு வந்ததே அதுவா ? ? ?:
***************** 

//ப்ரில்லியண்ட் பீஸ்!// என்பது மு.க. ஸ்டாலினும் நாகார்ச்சுனனும்…
என்கிற அந்தக் கட்டுரையைக் குறித்தது மட்டுமே என்று புரிந்து கொள்வது கூடக் கடினமாகிவிடும் அளவிற்குக் கோணங்கி பிரேமையா? 

அதெப்படி சும்மா சூத்தாம்பட்டையைத் தரையில் வைத்துக் குந்துவதைக் கூட புரியாத பாஷையில் எழுதுகிற நீங்கள், திட்ட வருகையில் மட்டும் திட்டவட்டமாகக் குத்துகிறீர்கள்? 

புரியாமப் போயிடுமோங்கற பதற்றத்தோட எழுத வேண்டிய அவசியமில்லை. ஆனா தப்பித்தவறிப் புரிஞ்சிடப் போவுதேன்னு பதறிக்கிட்டு எழுதனாதான் நெம்பர் #1 இலக்கியமா? 

என்னை விலைக்கு வாங்கப்போற கூதியான் இனிமேல்தான் பிறந்து வரணும். அதே சமயம் வன்மத்துக்குக் கோட்டுசூட்டு மாட்டிக் கொண்டாடறவனும் நான் இல்லை.

எனக்கு சரின்னு பட்டது, அய்யையோ அதையே அவனும் சொல்லிட்டானே அதனால அது சரியில்லேன்னுதான் சொல்லணும்னு ஆகிவிடாது.

பெருந்தேவியின் நேர்மையான பாசாங்கற்ற எதிர்கருத்தின் முன் மண்டியிடவும் தயங்க மாட்டேன்.

எனக்குத் தெரிந்த அறம் மறம் புறம் எல்லாம் இவ்வளவுதான்.