24 January 2011

லலிதா ராம் - சஞ்சய் சுப்ரமண்யம் நடுவில் நாட்டாமையாக மாமல்லன் என்று ஒரு அற்பன்




Ramachandran Mahadevan

 to me
show details 1:54 PM (3 hours ago)

regards
Ram
**************************************************************
150 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் பூத உடல் நீத்த, மான்பூண்டியா பிள்ளை பிள்ளையின் இசையை நேரடியாகக் கேட்டவர் இன்று எவருமில்லை. லலிதா ராம் தமது கட்டுரைக்கான தகவல் மூலங்களாக மேற்கண்ட சுட்டியில் உள்ள கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

//தவிலின் அடிப்படையில் உருவான ’புதுக்கோட்டை வழியை’ தொடக்கி வைத்தவர் கஞ்சிரா வித்வான் மான்பூண்டியா பிள்ளை என்பவரே. இசை என்பது பரம்பரை சொத்தாய் கருதப்பட்டு வந்த காலத்தில், இசைத் துறைக்கு எந்த சம்பந்தமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த ஒருவர் இசையில் ஒரு புதிய வழியே ஏற்படுத்தியுள்ளார் என்னும் விஷயம் கதைகளில் வருவது போலத் தோன்றுகிறது.

இருப்பினும் பழநி சுப்ரமணிய பிள்ளை ரேடியோவில் ஆற்றிய உரை, முனைவர் பி.எம்.சுந்தரம் கூறிய தகவல்கள் மற்றும் ஸ்ருதி முதலான பத்திரிக்கைகளில் வந்த குறிப்புகளைப் பார்க்கும் போது நம்பத்தான் வேண்டியிருக்கிறது.

இவரைப் பற்றிய விவரங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.//

சஞ்சய் சுப்பிரமண்யம் சுட்டி இயங்குகிறது, ஆனால் தளம் http://www.sangeetham.com இயங்கவில்லை. அழுத்தினால் வருவது.

 அதில் manpoondia என்று தேடினால் கிடைப்பது கீழே இருப்பதுதான்.
சஞ்சய் சுப்ரமண்யம் ஒரு முக்கியமான கர்நாடக சங்கீத வித்வான். லலிதா ராம் என்கிற ராமச்சந்த்ரன் மகாதேவன் கர்நாடக இசையில் ஆழ்ந்த ஆய்வாளர்.

என்சிற்றிவுக்கு எட்டியவரை இருவருமே இசையில் தி.ஜானகிராமன்கள்தான். ஒருவர் தி.ஜாவின் கதை மற்றவர் தி.ஜாவின் கட்டுரை.

இருவருக்கும் நடுவில் என்னை வைத்து உரையாடுவது எப்படி இருக்கிறது என்றால், 

உங்களுக்கு ஏதும் பிரச்சனையா? உங்களிடம் யாரும் பிரச்சனை பண்ணுகிறார்களா எங்களிடம் வாருங்கள், இன்றேல் நாங்களே உங்களைத்தேடி வருகின்றோம், எங்கள் சேவை உங்களுக்குத் தேவை என்று சொந்த சொம்புடன், இணையத்தில் உஞ்சவிருத்தி செய்பவர்களைப் போல இருக்கிறது.

மான்பூண்டியா பிள்ளை பற்றிய உலகத்திற்கான தகவல் ஊருணி, பழநி சுப்ரமணிய பிள்ளை ரேடியோவில் ஆற்றிய உரை ஆளாளுக்கும் அவரவர் கையளவு மொண்டு அடுத்தவருக்கு அளிக்கலாம். அட்டி இல்லை. 

இசையா என்ன விலை எனக்கேட்கும் மாமல்லன் என்கிற இந்த அற்பனுக்கு  பொவுஷு கொடுத்துக் கூடவே குடையும் கொடுத்து ராத்திரி பகல் என்றில்லாமல் விரித்துக் கொண்டு திரிய விடாதீர்கள் சாதனையாளர்களே! உங்களுக்கு என் வந்தனங்கள்.