03 February 2011

பரப்பிசை மோடில் பப்பரப்பா எழுதும் இலக்கியக் கதைகள்

அதிஷா ... - ஜெமோ நல்லவர்தான்.. ஆனா.. அவரு எழுதற கதைய பத்தி மட்டும் மாமல்லன் பேசுவாரு..!7:26 pm
aravind அரவிந்த் - ஆமா பேசுவாரு.டங்கு டிங்கு டங்கு. #பின்பாட்டு.7:32 pm
Arangasamy K.V - அதிஷா , கட்டுடைசுட்டாரா ?7:37 pm

@அதிஷா ... @aravind அரவிந்த் @Arangasamy K.V: நான் பாட்டுக்கும் தேமேன்னு என் கதைய எழுத முக்கிண்டு இருக்கேன். என்னை ஏன்யா வம்புக்கு இழுக்கறீங்க.


கும்பகோணத்துப் பாப்பான் சாமிநாது வந்துருக்கறவர் ஜெயமோகன் அப்பிடிங்கறதால 

வாசலில் நின்றிருந்தவர் ‘உள்ள வாங்கோ…இருக்கார்’ என்றார் அவர் ரிடியர்டு ஆசாமி வயது முதிர்ந்தவர். அவரை ஒப்பிட்டால் வயதில் ஜெமோ நெம்ப சின்னப்பையர். 

ஆனால்

//அவர் யாரென தெரியவில்லை. ‘வணக்கம்’ என்றபடி செருப்பை கழட்டினேன். அவர் செருப்பை தன் கையில் எடுத்துக்கொண்டார். ’வெளியே போட்டா நாய் தூக்கிட்டு போய்டுது சார்… உள்ளே போங்கோ’//

வீட்டுக்கு வந்திருப்பவர் மணிரத்னம் கமல்ஹாஸன் ரஜினிகாந்த் ஆகவே இருந்தாலும் கும்பகோணத்தில் இருக்கும் வயசான பார்ப்பணர் அடுத்தவன் செருப்பைத் தன் கையால் தூக்குவாரா? தூக்குவதை எவனும் பார்த்துவிட்டான் என்றால் வம்பர்களிடையில் அவர் நடமாடத்தான் முடியுமா?  இல்லை அந்த சாமிநாதன்தான் நம்ப அரங்கஸ்வாமிவாள் மாதிரி, விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட ஆயுட்கால மெம்பரா? அப்படி உள்ள விடுங்கோ போதாதா? உமக்கும் எனக்கும் அது போதும், தம்புட்டருக்கு?


ஜெமோன்னா லோகமே செருப்பென்ன எல்லாத்தையும் தூக்கும்னு தம் புட்டத்தைத் தூக்க, நம் பிருஷ்டத்தில் வலிக்காமல் இன்ஜெக்‌ஷன் ஏத்தறாரா?

அவர் கோளாம்பியை நோக்கி துப்பிவிட்டு கும்மோணத்துல எப்பத்துலேந்து எச்சில் பாத்திரத்தை ”எச்சில் படிக்கம்”னு குறிப்பிடுவதை விட்டு ”கோளம்பி”ன்னு கூப்புட ஆரம்பிச்சாங்கோவ். கோளம்பி நாகெர்கோவில் இல்லியோ? கதை சொல்லி நாகெர்கோவில் அப்டிங்கறதால அப்பிடியோவ். அவர்தான் எல்லா ஊர் பாஷைலயும் பின்னிப் பெடல் எடுக்கறவர் ஆச்சே!


பெரியவர் ஆரம்பத்தில் பேசும்போது இருந்த கும்மோண பாஷை, பழங்கதை சொல்ல ஆரம்பிக்கையில் எக்கட போயிந்திங்கோ?. நெம்ப லோக்கலாயிடுச் சே! ஆனா பதிப்பக செட்டியாரும் ஆச்சியும் இண்ட்ரொடக்‌ஷன் ஷாட்லையே செட்டி பாஷை பர்ஃபெக்ட்டா பேசறாளே! அப்பறமென்ன? அது போறும் இந்த மக்கு மட்டிகளுக்கு, சொழட்றா பாஷைய நாம் இலக்கிய தேவர் மகன் அல்லவோ கேள்விகேட்க எவன் இருக்கான்.

இந்தக் கதையின் மிக மோசமான மெலோட்ராமாவையும் (அந்த மெலோட்ராமாவை அட்டகாஸமாய் சொன்னதனாலேயே அவனவனும் சாமியாடிக்கொண்டு இருக்கிறான்) தாண்டி, கொஞ்சமேனும் இதை உயர்த்துவதே, சம்பந்தப்பட்ட அனைவரும் பெரியவர், செட்டியார், ஆச்சி என அனைவரும் வன்மம் பாராட்டாமல் ஒருவரை ஒருவர் மன்னித்து அமைதிக்குத் திரும்பி அவரவர் வாழ்வைக் கசப்பிலிருந்து மீட்டெடுக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.

கதை இப்படி இருக்கையில், பெரியவரின் நிழலான, உதாரணத்திற்கு சொன்னால் ஜெமோவுக்கு அரங்கசாமி K.V. போல இருக்கும் சாமிநாதன், செட்டியார் ஃப்ளாஷ்பாக்கை எடுத்துக் கொடுக்க வேண்டி,


//சாமிநாதன் சிரித்து நல்ல கதைஇவருக்கு சோறுபோட்டு வளத்தேன்னுல்ல சொல்லிட்டிருக்காரு..என்றார். பின்னர் ஒரு பெரிய கதை இருக்கெ அண்ணாசொல்லுங்கோஎன்றார்.// 

பாஸ், கதை தற்கொலை செய்து கொள்ளும் இடம் இதுதான். சம்பந்தப்பட்டவர் அனைவரும் மன்னித்தான பிறகு பல வருடங்கள் கழித்து, இன்னமும் செட்டியார் சோறு போட்டு வளத்தேன்ல சொல்லிகிட்டு இருக்காரு என்றால் என்ன அர்த்தம் கேரெக்டரைஸேஷன் காலி. 

செட்டியார் இன்னும் வன்மத்தோடு இருக்கிறார் என்றுதானே பொருள். இல்லை ஜெயமோகனின் செருப்பெடுத்த எடுபிடி சாமிநாதன் சுவாரஸியத்திற்காகச் சொல்கிறார் எனில், அவரது சென்ஸிடிவான, உதவி செய்வதுகூடத் தெரியாவண்ணம் செய்யும் சென்ஸிடிவான சாமிநாதன் கேரெக்டர் வன்மம் நிறைந்தது என்றல்லவா ஆகிவிடும்.

50கள்ல பியூனுக்கு 100 ருபாயா சம்பளம்? அப்ப தங்கம் என்ன விலைங்கண்ணா? கதாசிரியருக்குத் தெரியலேன்னா நிழலாகத் திரியும், வியாபார காந்தத்தைக் கேட்கலாமே. ஜெயமோகன் மத்திய அரசு வேலையில் சேருகையில் என்ன பதவி? என்ன சம்பளம்? 1983ல் அறிவித்து 1986ல் அமலுக்கு வந்த 4வது சம்பள கமிஷனில் பியூனுக்கு என்ன சம்பளம்? முதல் பே கமிஷனுக்கு முன்னாலேயே பியூனுக்கு எனபது 100 ஜெயமோனிஸ கருப்பு வெளுப்பு எக்ஸ்ட்ரீம் ஸ்க்ரீம்ஸாக அல்லவா இருக்கிறது.


யோவ் இதெல்லாம் ஒரு பேச்சுப் போக்கில் சொல்வது அதைப்போய் இவ்வளவு ஸீரியஸாகவா எடுத்துக் கொள்வது? என கேட்கக்கூடும், அது எனது வன்மத்தை சித்தரிப்பதாய்க்கூட ஆகிவிடக் கூடும். ’பெருசு’ஆகப் பேசுவதும் ஜெமோ என்பதால்தான் இந்த எக்ஸ்ட்ரீம் சொல்லாடல் தகவல் கம் அடித்துவிடல்.

//சொல்லுங்கோமெயின் பாயிண்டுக்கு வரலியேஎன்றார் சாமிநாதன்.எதுக்குடா அதெல்லாம்? பொணம் சிதையிலே எரியறப்ப எல்லாம்தான் சேர்ந்து எரியறது. காமம் குரோதம் மோகம் எல்லாமேலைஃபிலே இதுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்லடா…’ .சாமிநாதன் இல்லண்ணாஅவரு தெரிஞ்சுகிடணும்…’ என்றார். பெரியவர் என்னைப்பார்த்து சிரித்து இவரு வேற மாதிரி ஆளு. இவருக்கு கதவெல்லாம் தானா தெறக்கும். இல்லேன்னா மனுஷன் ஒடைச்சிருவார்.சில ஜாதகம் அப்டி…’ என்றார்.//



//பெரியவர் என்னைப்பார்த்து சிரித்து இவரு வேற மாதிரி ஆளு. இவருக்கு கதவெல்லாம் தானா தெறக்கும். இல்லேன்னா மனுஷன் ஒடைச்சிருவார்.சில ஜாதகம் அப்டி’ என்றார்.//


இதென்னமோ கோர்ட்வேர்ட் போல. மணிரத்தினம் சாருக்கு SMS குடுக்கறார் ஜெமோ. ரேட்டக் கூட்டிப் போடுங்கோன்னு சொல்லியோ என்னமோ யார் கண்டா? எல்லாம் பெரிய எடத்து சமாச்சாரம். நாம் அன்னக்காவடிகள் நமக்கெதுக்கு அதெல்லாம். நாம உண்டு நம்ம பிசாத்து இலக்கியம் உண்டுன்னு இருந்துட்டுப் போறதுதான் நல்லது.

மிஸ்டர் அரங்க்ஸ் இதெல்லாம் சிறிலோ பெரிலோ பாக்கவேண்டிய ப்ரூஃப் மிஸ்டேக்குன்னு சொல்லமாட்டீங்கல்ல. என்ற நாஞ்சொல்றது!

உலோகத்து விற்பனை வேகத்துல கண்ட ருசி ஆனந்தவிகடன் அழுக்காச்சி மெலோட்ராமாக்களை அடிச்சி பின்னுதோ!

ஐயையோ, ஜெமோவின், நதிக்கரையில் பீமனின் கோமணத்தை அடிச்சி தொவைச்சதிலே நார்நாரா இருக்கு. எல்லாம் ட்ராஃப்ட்ல இருக்கு.

இப்பிடி எழுதிண்டே போலாம் அவ்ளோ இருக்கு!

ஆனா இதெல்லாம் எனக்குத் தேவையான்னு, நானே மறு பரிசீலனையில இருக்கும் போது, ஏன்யா என் கதையை எழுதவிடாமல் என் எதிர்காலத்தை இருட்டாக்க இப்படி ஒரு கொலைவெறி கூட்டுச்சதி!

நானோ பதினாலு வருஷத்துல முப்பது கதை எழுதிட்டு, அது சிறுகதையா, நெடுங்கதையா, குறுநாவலான்னு கூட லேபிள் போட்டுக்காம பெக்க பெக்கேன்னு கணக்குவழக்கே இல்லாமப் பேசிண்டேத் திரியற பேமானி.


கேரளத்தில் பாப்புலரான பாய் கதைல வர பாயைத் உச்சாணிக்குத் தூக்க, மத்த பாத்திரங்கள் எல்லாத்தையும் அடிமட்டத்திற்குக் கொண்டுசெல்வது என்பதுதானே ஆனந்தவிகடன், அங்காடித் தெருவில் செய்துகொண்டு இருப்பது. அதையே இணையத்தில் நெய்ய ஜெமோ மாதிரி ஒரு பீமன் தேவையா? இப்படியே செய்துகொண்டு இருப்பவன் பீமனா இல்லை அரிதாரமற்ற அவதாரமற்ற வாமனனா?

சிந்திக்க வைப்பது இலக்கியம் - மூக்கு
சிந்த கைக்குட்டை எங்கே எனத் தேட வைப்பது பரப்பிசை!  

சிந்திப்பதும் சிந்துவதும் அவரவர் தேர்வு. மூளையும் மூக்கும் அவரவர் பிதுரார்ஜிதம். பிறத்தியான் போய் கிண்டிவிடவோ சிந்திவிடவோ முயல்வது, அவ்வளவு லேசான காரியமா என்ன?