09 December 2010

பிம்பம் களைந்தால் பேரின்பம்

நட்பிற்கழகு நல்லதைப் பகிர்தல் நன்றி: சம்பத் ராஜகோபாலன்
நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமில்லை என்று ஒரு வாசகம் உண்டு. முதலில் கடும் கோபம் வரவழைத்தாலும் கொஞ்சம் யோசித்தால் நம் வாழ்நாளின் பெரும்பகுதியை இப்படித்தான் செலவழித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை எவரேனும் உணரக்கூடும்.
அந்த எவருக்காகவோதான் இது.


முகத்துக்கெதிரில் சொல்லப்படுகிறது என்கிற ஒரே காரணத்தால், படர்க்கையில் சொல்லப்படும் விஷயங்களையும் சுயம் குறித்ததாக மட்டுமே கொள்கிறோம். அதையே அண்மை முன்னிலையில், ஒருமையில் விளித்துக் கன்னத்தில் இடித்தாலும், புத்தகத்தில் என்றால் ஏற்கத் தயாராக இருக்கிறது மனித மனம்.
ஏன்?
அடுத்தவன் பார்க்கிறான் என்கிற அவஸ்தை அங்கு இல்லை. 

குழந்தைகள் தம்மை நேசிக்கின்றன. 
வளர்ந்த மனிதர்கள் தங்கள் பிம்பத்தை நேசிக்கிறார்கள்.

போகட்டும். அவர்கள் நாமில்லை. வாருங்கள் இசைகேட்போம்.
ஜோஷுவா பெல்லின் அற்புதம்
ஆவா மரியா