13 December 2010

ஜெயமோகன் என்கிற தம்புட்டன்

ஜெயமோகன் அவதரிக்க ஜெயமோகன் மனமுவந்து ஜெயமோகன் தேர்ந்தெடுத்த ஜெயமோகனின் தமிழ்நாட்டில் ஜெயமோகனின் காலகட்டத்தில் ஜெயமோகன் தீர்மானிக்கும் ஜெயமோகச் சூழலில் ஜெயமோகன்  எழுதுவதை ஜெயமோகனின் வாசகர்கள் ஜெயமோகன் போல்படித்து ஜெயமோகனாய் ஆவதற்காக...

ஜெயமோகன் வலைப்பூவில் ஜெயமோகன் வெளியிட்டிருக்கும் ஜெயமோக்கக் கடிதங்களில் இருந்தும் ஜெயமோகனிடம் இருந்தும் சிந்திய முத்துக்களில் சில கீழே....

எடுக்கவா? கோர்க்கவா?

===============================
திரு ஜெயமோகன் அண்ணனுக்கு வணக்கம்,
................................

நட்புடன்,
சுதாகர்.ப


 அன்புள்ள சுதாகர்,

நன்றி. ஆ.மாதவன் போன்ற படைப்பாளிகளைக் கௌரவிக்கும்போது //நாம் செயல்பட்டுவரும் இந்த படைப்புச்சூழலையே கௌரவிக்கிறோம். இது நமக்காக நாம் செய்துகொள்வதே//
ஜெ
==============================================

அன்புள்ள ஜெ

//என்னைக்கேட்டால் ஒரு இலக்கியவாதிக்கு மிகச்சிறந்த விருது என்பது நல்ல இலக்கிய விமர்சகன் அவரைப்பற்றிய விரிவான கட்டுரையை எழுதுவதே . ஆ.மாதவனுக்கு அதை நீங்கள் முன்னரே செய்துவிட்டீர்கள். தமிழினி வெளியீடாக வந்த ஆ.மாதவன் கதைகளுக்கு நீங்கள் எழுதியிருக்கும் பின்னுரை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த இலக்கியவிமர்சனக் கட்டுரைகளில் ஒன்று.//
சிவம்

அன்புள்ள சிவம்

//நன்றி. இந்த விருதை ஓர் இலக்கிய விமர்சகன் என்ற நிலையில் இருந்தே முடிவுசெய்கிறேன். ஆகவேதான் விருதுடன் ஒரு நூலும் வெளியாகிறது. விருது பெறுபவரின் தகுதியைப்பற்றிய மதிப்பீடு- அறிக்கை அது. சொல்லப்போனால் விருதை விட அந்நூலைத்தான் முக்கியமானதாக கருதுவேன்//

ஜெ
=====================================================
அன்புள்ள ஜெ சார்

நான் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்னுடன் பேசும் சிலர் ஆ.மாதவனுக்கு நீங்கள் விருது அளிக்கக்கூடாது என்றார்கள். ஏனென்றால் அவர் மூத்த எழுத்தாளர் என்று சொன்னார்கள். //விஷ்ணுபுரம் பேரில் விருதளிப்பது பொருத்தம் அல்ல என்றார்கள். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

அன்புச்செல்வம்

அன்புள்ள அன்பு

//விஷ்ணுபுரம் யார் சொன்னாலும் மறுத்தாலும் தமிழின் முதன்மையான இலக்கிய ஆக்கம். அதன் முக்கியத்துவத்தை மிகச்சிலரே இன்று உணர முடியும்.// தமிழில் என் வாசகர்குழு ஒன்று உருவாகும்போது அது விஷ்ணுபுரம் பெயரில் அமைவது மிக இயல்பானதே

//இம்மாதிரி சில்லறைக்குரல்களை அலட்சியமாகத்தாண்டிச்சென்றே நான் அடைந்தவற்றை நெருங்கியிருக்கிறேன்.//

ஜெ

முழுக்க படித்து முத்துக் குளிக்க: விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 


கடைசி //....// குறியிட்ட பஞ்ச் டயலாக் பல பொற்காசுகள் பெரும். அந்த வரியின் நீட்சியாய் ”மணிரத்தினம் போன்ற பலவற்றை” என நீங்களாக சேர்த்துக் கொண்டால் அது ஜெயமோகன் குற்றமல்ல உங்களின் குதர்க்க சில்லறைக் குரலையேக் குறிக்கும்.

ஐஸ்வர்யா ராயை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். 

ஐஸ்வரியா ராயும் அருந்ததிராயும் 

 

தில்லிமுல்லு என நினைக்கிறேன் தேங்காய் சீனிவாசன் வேலைக்கு வந்தவரிடம் நேர்முகம் செய்வார்.


தேங்காய்: அது என்ன

வே.வ: சட்ட சார்

தேங்காய்: அது தெரியிது சட்டையில என்ன

வே.வ: (சட்டையைத் தூக்கிப்பிடித்தபடி பூரிப்புடன்) பொம்ம சார்

தேங்காய்: சட்டைல பொம்ம அதுல என்ன பெரும

 

பவா செல்லத்துரை என்னை அழைத்து மிஷ்கின் என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். மிஷ்கின் பின் என்னிடம் பேசினார். மிஷ்கின் பின் என்னிடம் பேசினார். அவர் கார் அனுப்ப நான் அவரது அலுவலகம் சென்றேன். 


மிஷ்கினின் நந்தலாலா

 

காலாகாலமாக, வேளாவேளைக்கு காபி டீ சோறு போட்டு எல்லோருக்கும் வந்து போக வண்டியும் கொடுக்கும் ஒரே தொழில் தமிழ்நாட்டில் சினிமாதான். 

 

ஜெயமோகனுக்கு மிஷ்கின் வண்டி அனுப்பி அழைத்துச் சென்று கெளரவித்தார். தினத்தந்தி தலைப்புச் செய்தியாய் இதைப் போட்டிருக்கலாம். தமிழுக்குத் தொண்டாற்றும் நல்ல வாய்ப்பை இழந்து வரலாற்றில் பின் தங்கிவிட்டது தந்தி.

சாதாரண மனிதர்களான நாமெல்லாம் நாமோ அல்லது நமது நண்பரோ எதையேனும் சாதித்தால் அதைப் பாராட்டும் முகமாக, ட்ரீட் கொடுப்போம். ஜெயமோகன் யுகபுருஷர் அல்லவா ட்ரீட் கொடுக்கிற பெயரில் ஆ. மாதவனுக்கு இல்ட்ரீட் கொடுக்கிறார்.

டிசம்பர் சீஸனில் ஜெயமோகன் ஒரு கட்டுரைப் புத்தகம் வெளியிட்டு எக்ஸ்ட்ரா பேஜ் குத்திக் கொள்கிறார். அந்த விழாவில் அப்படியே ஆ. மாதவனுக்கும் ஒரு விருது அளிக்கிறார். அந்த விருது தற்செயலாக ஜெயமோகனின் நாவலின் பேரில் இருக்கிறது. இதைத் தப்பாய்ப் பேசும் சில்லறைகளைத் தாண்டிப்போய்தான் சினிமாவில் காசு பொறுக்கியாக வேண்டும். 

எல்லா தமிழிலக்கியத் தாத்தாக்களும் தமிழின் முதன்மையான இலக்கிய ஆக்கம் விஷ்ணுபுரம் விருதுக்காக, வரிசையில் நின்று தம் முறை சீக்கிரம் வருமா என கழுத்தை நீட்டிக் காத்திருக்க வேண்டியதுதான் தத்தமது அட்டைகிளாஸ் சாதனைப் புத்தகங்களுடன்.

மெளனியிடம் ஒருவர் கேட்டார். தங்களின் சாதனையைப் பாராட்டி சாகித்திய அகாதெமி போன்ற அமைப்பு விருது கொடுத்தால் என்ன செய்வீர்கள். வெவரமான தாத்தாவின் பதில் என்ன தெரியுமா?

பணத்தை வான்கிக்கொள்வேன். விருதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி விடுவேன். Because award 'stinks'.

தன் புட்டத்தைத் தன் கையால் தன் தலைமேல் தானே தூக்கிக் கொண்டு திரிபவனை தம்புட்டன் என்று அழைப்பது தப்பா?