08 December 2010

நீ நம்பும் ஒரே காரணத்தால் ஒரு போதும் பொய் உண்மையாகிவிடாது

@ வடகரை வேலன் அவர்களின் சமூகத்திற்கு பொடியன் விமலாதித்த மாமல்லன் பணிவன்போடு சமர்ப்பித்துக் கொள்வதாவது:

//வடகரை வேலன் - இந்தப் பதிவை 11.38 க்கு எழுதி இருக்கிறீர்கள். அவரது பதிவு வழக்கம்போல 12 மணிக்கு வெளியாகி இருக்கிறது.

அதற்குள் ஏன் இந்த அலப்பறை?

அநேகமாக செட்யூல் செய்வதற்குப் பதில் பப்ளிஷ் செய்திருப்பார். அஸ் செட்யூல்ட் இப்ப வெளியாகி இருக்கு.

வழக்கமாக நான் சொல்வதுதான் உங்களிடம் ஜெமோவுக்கு எதிரான ஆயுதம் உண்மையிலேயே இருக்கலாம், ஆனால் அதைப் பிரயோகிப்பதில் தடுமாறி விடுகிறீர்கள்.1:20 am//

இது என்னைப் பத்தி உங்க எக்ஸ்பர்ட் கமெண்டுண்ணே!


அண்ணே இது பாலபாரதி பஸ்ஸுண்ணே அதுல மேட்டரைப் படிக்கசொல்லொ அப்பிடியே டைமையும் நோட் பண்ணிக்குங்கண்ணே!

//யெஸ்.பாலபாரதி - yes.balabharathi - வாங்க எல்லோரும் வரிசையில.. :))) Dec 7

அதிஷா ... - தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வச்சுகிட்டு பக்கத்துலயே உக்காந்துக்கவேண்டிய பதிவு. பகிர்வுக்கு நன்றிDec 7

ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - முழுசா படிக்கலை. வெளிய கிளம்பிகிட்டிருக்கேன். இதை ஏன் டெலீட் செஞ்சுட்டாரு ஜெமோன்னு மட்டும் தெரியலை?5:05 pm

Asif Meeran AJ - // அருந்ததியை முதலில் உலகப்புகழ்பெறச்செய்து பின் நம் மீது சுமத்தி நம் சிந்தனையை ஊடுருவியிருப்பது இந்தியாவை சிதிலப்படுத்த விரும்பும் மேலநாட்டுச் சக்திகளே என்று பொதுப்பார்வையில் உணர முடியும்.// ஒத்துக்குறேன் ஜெமோ பகடி எழுதவும் செய்வார்ன்னு ஒத்துக்குறேன்7:17 pm

யெஸ்.பாலபாரதி - yes.balabharathi - நண்பா- ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னதை பார்க்கலையா நீங்க?! டெலீட் செஞ்சுட்டாராம்.9:45 pm//

கொஞ்சம் உத்துப் பாருங்கண்ணே

யெஸ்.பாலபாரதி பாலபாரதி பஸ் ஸ்டார்ட் பண்ணும் போது டைம் எண்ண்ண்ணே 3.30 pm

பதிவை ஏன் ஜெமோ டிலீட் பண்ணிட்டாருன்னு தெரியலைனு சுந்தர் சொல்லும் போது டைம் எண்ணண்ணே 5.05 pm

அண்ணே இங்க ஸ்டாப் வாட்சை ஸ்டார்ட் பண்ணிக்குங்கண்ணே!

Asif Meeran AJ கமெண்ட் டைம் பாருங்கண்ணே 7.17 pm

அப்பால யெஸ்.பாலபாரதி கமெண்ட்டும்போது டைம் 9.45 pmணே

விமலாதித்த மாமல்லன் அலப்பறை ஆகிப் பதிவு போட்ட நேரம் உங்க மேலான வார்த்தைகள்படியே 11.38 ண்ணே

வடகரை வேலன் அண்ணே ஒரு பதிவு 3.30க்குப் போட்டு ஷெட்யூல்ல இருந்தா ரீடர்ல வருமாண்ணே! இல்லே ப்ப்ளிஷ் பண்றதுக்கு நடுஜாம்ம் 12.30 மணி முகூர்த்தமாண்ணே. இலக்கிய அறிவு மட்டும் இல்லேண்ணே, எனக்கு கணினி அறிவும் கிடையாதுண்ணே! கொஞ்சம் விளக்குங்க. 5 மணிக்கு காங்கலைனா அதுக்குக் காரனம் என்னண்ணே. 7 மணி நேரமா காணாமப் போனப் பதிவு எப்படிண்ணே மாமல்லன்கற வடிகட்டின முட்டாள் 11.38க்கு ஜெயமோகன் தளத்தின் ERROR 404 – NOT FOUND படத்தோடப் பதிவு போட்டதும் டப்க்குனு 12 – 12.30க்கு திரும்பவும் அப்பியர் ஆவுது. நித்ய சைதண்ய யதியோட மகிமையா இருக்குமோ!

ஜெயமோகனானந்த ஸ்வாமிகள் ஆழ்ந்த சிந்தனைல பல்வெளக்கறதை மறந்துட்டு வெறிச்சி பாத்துகிட்டு இருக்காரு. ஏதோ எங்களை மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் அல்லாடிகிட்டு இருக்கற நீங்கதான் சொல்லணும். நீங்க சொன்னாலும் அவர் திருவாய்மொழியாவே எடுத்துக்கிடுவொம்.

அது ஜெயமோகனோடப் பதிவுக்ங்க அவரு போடட்டும் நீக்கட்டும் அது அவரொட உரிமை.

என் ஓஹோ எந்தன் புரட்சி அவரைப் பத்தியதே இல்லைங்கறது உங்களுக்குத் தெரியாமப் போனதன் காரணம், பாவம் ஜெயமோகக் கபோதத்துல இருக்கறதால நீங்க படற அலப்பறைனாலதான்னு உங்களுக்கு இப்பவாச்சும் புரியுதுங்களா?

 

புரிய வேண்டியதுக்குப் புரிஞ்சிடுச்சி. இது வரைக்கும் மூணு முக்கு முக்கிடிச்சி.


முக்கல் 1
முன்னாளுக்கு ஜெமோவை கண்டு பெறாமை - ஜெமோவுக்கு ராயை கண்டு பொறாமை #இலக்கிய_ஆமைகள்


முக்கல் 2
எய்தவே வராதவனெல்லாம் எய்தாளன்னு சொல்லிக்கலாம் ஆனா பாட்டாளியா இல்லாதவனெல்லாம் பாட்டாளிக்காவ ஆவாஜ் குட்க கூடாதாம் #வெட்டிநாயம்


முக்கல் 3
கடசியா டிவிட்டுன ரெண்டையும் மறுபடியும் டவிட்டுவேன்... #சேந்திச்சோ_சேறலயோ

வடகரை வேலன் அண்ணே இப்ப சொல்லுங்க அலப்பறை யாருக்கு?


குருபீட பக்தியினால பாக்கறதெல்லாம் பகவானுக்கு எதிரானதுன்னே தெரியற உங்களோட அவஸ்தை அலப்பறையா?


இல்லை


The guerrilla must move amongst the people as a fish swims in the sea.
இப்படி மாவோ சொன்துக்கு அர்த்தம்: உன் புரட்சி எச்சத்தை கெடைச்சவன் தலைல போட்டுட்டு கழுவிக்காமப் பற அப்பிடிங்கறதா?


அப்படிப் பறக்கறதுக்கு பேரு அலப்பறையா? இல்லையா?


ஹிந்து ஞான மரபும் இணைய கம்யூனிஸ்ட்டுகளும் சமயம் கெடைக்கும் போதெல்லாம் எதிரெதிரா திரும்பி நிக்கிறாப்பலப் போஸ் மட்டும் குடுத்துகிட்டு கை குலுக்கிக்கிறாங்க. என்ன அலப்பறையோ அந்த மகேசனுக்குதான் தெரியணும் இல்ல மாவோவுக்கும் தெரிஞ்சிருக்கலாம், எல்லாம் ஒரு நம்பிக்கைதான் நம்புளுக்கு நம்பளது அவாளுக்கு அவாளோடது.


நான் ஏன் அந்தப் பதிவு எழுத நேர்ந்தது.


வடகரை வேலன் அண்ணே நீங்க ஒரு ஆஃபீஸ்ல வேலை பாக்குறீங்க. ஒரு பொறுப்பான பதவி. ஜெயமோக சந்நிதானமாட்டம் விரும்பி எடுத்துகிட்ட டெஸ்பேட்ச் கிளார்க் உத்தியோகம் கிடையாது. அட அதுலக் கூட பாருங்க நம்ம இணையவெளியின் புரட்சிப் பறவைகளாட்டம் ஆஃபீஸ் டைம்ல இலக்கியம் எழுதி சம்பளம் வாங்கி பொறுப்பை புறக்கணித்து பாராசைட்டா வாழலாம்னு அர கொற நக்ஸலைட்டுகளுக்கு ஆன்மீக குருதான் வழிகாட்டியா இருந்திருக்காரு.


அண்ணே உங்க ஆஃபீஸ்ல இயங்கற அதிகார மாஃபியாவுக்கு எதுரா அம்பலப் படுத்துதல்ல நீங்க எறங்கறீங்க. அட ஒரு பேச்சுக்கு சொன்னேங்க எந்த நார்மல் மனுஷணும் செய்ய மாட்டான்னு தெரியாதா? அதெல்லாம் புத்திசாலிகளுக்கானது இல்லைங்க. முட்டாளுக்கானது. இல்லாட்டி ஜெயிக்கவே முடியாத சண்டைல இறங்கி அதி உயர் அதிகாரிக்கு எழுதற அஃபீஷியல் லெட்டர்ல


Shrewd survivors with sycophancy reach the ‘Promised Land’ 
Outspoken ones are left to lurch in no man’s land 


Socrates 399 BC is remembered beyond millenniums, 
but merciless history has erased those who handed down ‘guilty verdict’ on him.

எத்தனை பேருண்ணே எழுதுவீங்க. எழுதினா பன்னீரா தெளிப்பாய்ங்க அட்சான் ட்ரான்ஸ்வர் புட்ரான்னு, ஜாய்ன் பண்ணி 27ஏ நாள்ல என்கேந்து வந்தியோ போடா அங்கியேன்னு.

அண்ணே நாம எல்லாரும் நெம்ப புத்திசாலிங்கண்ணே. Weapons are an important factor in war, but not the decisive one; it is man and not materials that counts. இதெல்லாம் டீக்கடை பெஞ்சோட சரி. எங்க புட்டம் புண்ணாகாதோ அங்கதான் புரட்சி பேசுவோம். அதுவும் முகமூடி மாட்டிகிட்டு. இத்த ஊங்கொட்டிக் கேக்க ஒரு கூட்டம் அலையிது.

அதே மாதிரி, எந்த காலத்துலையோ ஐஸை சப்பிட்டு எவனோ போட்ட குச்சியை எடுத்து நக்கி இதுதான் முதல் குச்சி ஐஸ்னு சொல்லுவோம். இலக்கிய சந்நிதானங்களை யாரும் கேள்வி கேட்டுட முடியுமா என்ன?

வடகரை வேலண்ணே அலுவலகத்தில், நீங்க தண்டிக்கப் பட்டிருப்பது அநீதின்னு நெனச்சா என்னண்ணே செய்வீங்க. உப்புப் போட்டு சாப்புட்றவன் குறைந்த பட்சம் செய்யக் கூடியது என்னண்ணே. லீவ் போட்றது  இல்லீங்களாண்ணே. அதாண்ணே நானும் செஞ்சேன்.

கருவறை நுழைவுப் போறாட்டம் பற்றிய கருத்து வேறுபாட்ல ஆரம்பிச்சது நீ திட்ட நான் திட்டன்னு போயி, வன்மம் ஆகி புரையோட ஆரம்பிச்சி எப்பிட்றா அடிக்கறதுன்னு பாத்து. இவன் லீவுல இல்லை ஆஃபீஸ்ல சஸ்பெண்ட் பண்ணிட்டாங்கன்னு ஒரு பொய்யை எல்லா எடத்துலையும் எச்சமிட ஆரம்பிச்சுது ரெண்டு மாசமா.

இந்த திங்கக்கெழமை  FAXல் லீவ் லெட்டர் அனுப்பினால் ஏற்கிற அதிகாரி, attendanceயும் அப்படியே அனுப்பட்டுமா சார் என்றால் ஃபோனிலேயே முறைக்கிறார்J
அப்பிடின்னு ஒரு ட்விட் போட்டா

ஆபீசாண்ட வராதேன்னு கய்த்த புட்சு வெள்ள தள்னப்புறம் இன்னாத்துக்கு லீவு லெட்டர் கொட்த எய்தோட சேந்து மூளயும் முன்னாளா பூட்சா #உளவுஎளவு

81லேந்து நேரடி பழக்கத்துனால வீராச்சாமிமேல இருக்கற மரியாதையும், நம்பிக்கைக்குறிய இடங்கள்லேந்து கேள்விப்பட்ட தகவல்களால மருதையன் மேல இருக்கற மதிப்பும், எழுத முடியாம தவிச்சிகிட்டு இருந்தப்போ 94ல ருத்ரன் செய்த உதவியால ஏற்பட்ட நன்றியும் எதையும் சகிச்சிக்கணும்கறதுக்கான எழுதப்படாத விதியா என்ன?

இதுதான் நான் லீவ் லெட்டர் அனுப்பின FAX No.26246200 இந்த நம்பரை Chennai.bsnl.co.in தளத்துல ஃபோன் நம்பர்ல அடிச்சா 26246200 DEPUTY COMMISSIONER OF CENTRAL            T N H B, M M D A EAST, MOGAPPAIR EAST,CHENNAI,600037 இந்த அட்ரஸ் வரும்.

விமலாதித்த மாமல்லன் என்கிற பெயரில் எழுதும் C.நரசிம்மன் என்கிறவன் விடுப்புல இருக்கானா இல்லை இடைக்கால வேலை நீக்கத்துல இருக்கானான்னு கேட்டு உறுதி செய்துகிட்டுதான் இந்த அவதூறைத் தொடரணும்.

இப்பவும் சொல்றேன் என்னை மட்டும்னு இல்லை யாரையும் யாருக்கும் விமர்சிக்கிற உரிமை இருக்கு. ஆனா அது பொய்யை அடிப்படையா வெச்சு இல்லை. பொய்யை உண்மை போல் திரிச்சும் இல்லை. நீ நம்பும் ஒரே காரணத்தால் ஒரு போதும் பொய் உண்மையாகிவிடாது.

மற்றபடி அது என்னைப் பார்ப்பண பாதம்தாங்கிங்கறதோ நான் அதைப் பன்னி நாயேங்கறதோ தாராளமாகத் தொடரலாம் ஏனென்றால் ஆயிரம் சொன்னாலும் நாம் இருப்பது ஜனநாயகம் தவழும் இந்தியத் தாய்த்திரு நாட்டில், கம்யூனிஸ காராக்கிரகத்தில் இல்லை அல்லவா.

ஜெய் ஹிந்த்.