25 December 2010

உயிர்மையும் வினவும் சிரிப்பானும்

இருக்கவே இருக்கு


புரட்சிகர நூல்களை 

வெளியிடும் பிரமுகர்கள் யார்?


ஒருவர் நீரா ராடியாவின் சென்னைத் தோழியின் நெடுநாளைய நண்பர்

மற்றவர் செம்மொழி மாநாட்டின் கவின் முகப்புகளை அமைத்த கலைஞர்



இதிலென்ன பிரச்சனை


ஒரு பிரச்சனையும் இல்லை

இதனால் இவர்களின் அறிவும் கலையும் 

இம்மியும் குறைந்துவிடவில்லை



தத்துவம் கொள்கை 

தனிமனித உறவு

அனைத்தும் தனித்தனி
என்பதறியா புரட்சிக் குருடில்லை





தீட்டைத் தொட்ட 

குழந்தைகூட தீட்டாகிவிடும்

என்கிற
தீவிர கருஞ்சட்டை
நக்ஸல்பாரி மாவோயிஸ்டுகளான
ஆச்சார
வல்லபேச ஐயரும்
ரங்கராஜ அய்யங்காரும்
தீட்டிலிருந்து 
சுத்திகரித்துக்கொள்ள
என்னதான் தீர்வு?



திலீப்குமாரின் 

குஜராத்தி பாட்டியின்

தீர்வுதான்



கங்காஜலம் தெளிங்கோ



டீக்கடை பெஞ்சின்

டிராயர் இல்லாத காக்காவுக்கு?


இருக்கவே இருக்கு

இலவச கோமியம்

* * * * * * * * * * * * * 
இதன் பின்னணி 

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா! 

மேற்காட்டிய கவிதையை பஸ்ஸில் எழுதி இருந்தேன். அதற்கு பின்னூட்டமாக கீழ்கண்டது வந்திருந்தது.

”Dr R K Rudhran - இந்நாள் சியெம்மின் முன்னாள் பணியாள் விழாவுக்கு வருவது நட்பினாலா கொள்கையினாலா?


டாக்டர் சார் அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

ஆக வினவு கூட உயிர்மை போலவே - இன்னும் சொல்லப் போனால் இந்நாள் சியெம்முக்கு மிக நெருக்கத்தில் - அதிகார மையத்திற்கு அணுக்கத்தில் இருந்தபடிதான் இறையாண்மையை எதிர்த்துப் புரட்சி பண்ணிக்கொண்டு இருக்கிறதோ தகவலுக்கு நன்றி.

உயிர்மை பதிப்பகத்தையும் புத்தகவெளியீடுகளையும் எள்ளி நகையாடுவதாக நினைத்து பதிவு போட்டுக்கொண்டார் வினவு என்கிற ப்ளாகர். 

சிரித்தால் மனிதர்களின் முகம் இயல்பிலிருந்து மாறும். ஆரவாரித்து சிரித்தால் முகம் கோணிக்கொள்ளவும் கூடும். முகம் கோணிக் கொண்டிருக்கிற ஒரே காரணத்தால் சிரிப்பதாய் எண்ணிக் கொள்வது, இருமுடி கட்டில் இருக்கிறது ஆன்மீகம் என்பதற்கு ஒப்பான, சூரியனைப் பார்த்து அழகு காட்டும் ஓணான் புரட்சி.

ஆர் எஸ் எஸ்ஸுக்கு குரு கோல்வால்கர்
பஸ்ஸுக்கு குரு ஜ்யோவ்ராம் சுந்தர்
வினவுக்கு ஒரு மருத்துவ குருஜி 
ஆனால் அவர்
ஆதரவாளரா ஆப்பாளரா? 

வினவின் பதிவில் வந்த டிஸ்கிக்கும் மருத்துவர் அய்யா அவர்களின் மேற்கண்ட பின்னூட்டத்திற்கும் இருக்கும் பொருள் பொருத்தம் பார்த்துப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

டிஸ்கி 1: பணி மாற்றமா, பணி உயர்வா, விசாரணையிலிருந்து விடுதலையா, ரியல் எஸ்டேட்டா, கட்டப் பஞ்சாயத்தா, நூலக ஆணைக்கு தள்ள வேண்டுமா, எதையும் புத்தகமாக போட வேண்டுமா – உடனே உயிர்மை பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெறும் பதினைந்து சதவீத கழிவைக் கொடுத்து உலகத் தரமான சேவையை பெறுங்கள்…

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் புரட்சிக்கு தம்மை தத்தம் கொடுத்து விட்டமையால்தான் வினவர் இதையெல்லாம் யூஸ் பண்ணிக் கொள்வதில்லை என சொல்ல வருகிறார் போலும் ருத்ரன் அய்யா அவர்கள்.

சமூகத்தில் மதிக்கத்தக்க கெளரவமான நபர்களெல்லாம் ஏன் இப்படி சிரிப்பான்கள் ஆகிவிடுகிறார்கள்.

மூடக் கொள்கையின் மோகம் கோமாளியாகவும் ஆக்கிவிடுமோ?

டாக்டர், எனக்குப் பெரிய ஆசையெல்லாம் இல்லை. வினவின் நட்பிற்காகவோ இல்லை கொள்கைக்காவோ புத்தக வெளியீட்டிற்கு வருகைதரும் அதிகார மைய பூசாரியாரிடம் சொல்லி திருப்பதி ஸ்பெஷல் தரிசனத்திற்கு ஒரு ஜோடி டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்யுங்கள் அது போதும். 

முகப்பேரிலிருந்து நந்தனம் பணிமாற்றத்திற்கு பெருமாளிடம் முறையிட்டுக் கொள்கிறேன். 

கூடவே புரட்சியும் சீக்கிரம் வரட்டும் என போனஸாக வேண்டிக் கொண்டும் வருகிறேன்.