30 December 2010

எட்றெட்றா நாக்குமுக்க நாக்குமுக்க நாக்குமுக்க

சட்டபூர்வ நடவடிக்கை எடு!

ஆதாரம் இல்லாமல் ஒருவனை ஊழல் பேர்வழி லஞ்ச லாவண்யம் இடைக்காலப் பணி நீக்கம் என்று அத்தனை பண்ணாடைகள் அவதூறு செய்ததற்கும் சேர்த்து காக்கா குருவி பன்னி மேல் நடவடிக்கை எடு!

நான் வகிக்கும் பதவிக்கு, அனுமதி வாங்க வேண்டிய அனைத்திற்கும் அனுமதி வாங்கி இருக்கிறேன். அறிவிக்க வேண்டிய அனைத்தையும் அரசுக்கு அறிவித்தும் இருக்கிறேன்.


அவன் சொன்னான் நான் சொன்னேன் நாங்கள் சொல்லிக்கொண்டதும் கிள்ளிக் கொண்டதும் கொஞ்சிக் கொண்டதும் எல்லாம் நடந்தது 94ல் அதற்கு முன். அப்ப உன் அமைப்பு இருந்ததா?

அப்பறம் எந்த மசுர வெச்சு பஞ்சாயத்து. 
குடும்பத்தைப் பிரிப்பவன் நானில்லை எனவே தான் பல விஷயங்களில் அமைதி காக்கிறேன்.

நீ யார்ரா நாட்டாமை நடுவுல!

இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதும் அதற்காக பாடுபடுவதும் ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும். இந்தியாவின் இறையாண்மையைக் கேள்வி கேட்பவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு சமர் புரிவது இந்தியக் குடிமகனாக மட்டுமல்லாது ஒவ்வொரு மத்திய அரசு ஊழியனின் கடமையும் ஆகும். அந்த உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகே ஒருவன் அரசு ஊழியனாக முடியும். 

ஒரு இந்தியனாகவும் ஒரு அரசு ஊழியனாகவும் தன் கடமையை அதாவது இந்திய இறையாண்மையைக் கேள்வி கேட்கும் - அந்த இறையாண்மை கொடுக்கும் ஜனநாயகத்தைக் கேடையமாக்கிக் கேள்வி கேட்கும் - எந்த அமைப்பையும் எதிர் கேள்வி கேட்பது தவறா?

இதை எந்த முன்சீப் கோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போய் கேட்கலாம். 

இல்லை எனில் இருக்கவே இருக்கிறது சிபிஐ அலுவலகம் பஞ்சாயத்தை அங்கே வைத்துக் கொள்ளலாம்.

தனியாள் தரங்கெட்டத் தனமாய்ப் பேசியதைத் தனியாக வந்தால் தனியாக நின்று சந்திக்கத் தயார்

தனியாளாக நின்று தட்டி தூக்கி வரும் அமைப்பபையும் சந்திக்கத் தயார்

தனியாளுக்கு வக்காலத்தாக அமைப்பு வந்தால் தனியாக நின்று அதையும் சந்திக்கத் தயார்

வாய்க்கு வந்தபடி இந்திய அரசியல் சட்டத்தைப் பேசவும், இடக்கு முடக்கா கேள்வி கேட்டுட்டா அதே சட்டத்தைக் காட்டி மெரட்டவும் இந்தியக் குற்றவியல் சட்டமும் கோர்ட்டுகளும் உங்கூட்டு மீன் குழம்பா! 

அயோத்தி தீர்ப்புக்கு செய்த எதிர்வினைகள் அரசியல் சட்டத்தை மதித்தவையா? அது கோர்ட் அவமதிப்பா இல்லையான்னு மொதல்ல எந்தக் கோர்ட்டுலப் போயி கேக்கலாம்.

சட்டம் தெரியாதவனிடம் போய் உன் சமத்காரம் காட்டு!

அதுக்கு அப்பறமா சட்டப்படி நடவடிக்கை எடு! 

எட்றெட்றா நாக்குமுக்க நாக்குமுக்க நாக்குமுக்க.