19 October 2011

சடையே இல்லாவிட்டாலும் பேனுக்குக் குறைவில்லை

Monday, October 17, 2011 6:37 PM கவிதா ரசனைக்கு இணையக் காப்புரிமை வைத்திருக்கும் இலக்கிய குருஜி தூக்கிப்பிடித்த, 

மொட்டை மாடியில்

புத்தகத்தை மூடி, எழுந்து
விளக்கணைக்கவும்
கணத் தாமதமுமின்றி
என் அருகே வந்தமர்ந்து
புன்னகைத்த
நிலவைக் கண்டு அதிர்ந்தேன்;
விளக்கைப் போடவும்
அது விருட்டென்று முகஞ்சுளித்தபடி
வானேறிக் கொண்டதும்
நான் கவனிக்கத் தவறியதும்
வேதனையாய் மனதிலாட.

- தேவதேவன்

கவிதைக்கு எதிர்வினையாய் எழுதப்பட்ட உம்மாச்சி காப்பாத்துவில் ஒரு பகுதியையும் அதன் பக்கவாதங்களையும் பார்க்கலாம்

<வேதனையாய் மனதிலாட>

புல்லரிப்பில் எஸ்.ராவையே இடதுகையால் (தேவதேவன்) புறந்தள்ளிவிடுவார் போலும். 

இந்தப் பதிவிவிற்கு ஒற்றைவரி உப்புமாக் கிண்டலாய் விடப்பட்டதுதான் ஜ்யோவ்ராம் சுந்தர் - Buzz - Public Mon, Oct 17, 07.28 PM

அவன்தான் எழுந்து போயிட்டானே, அப்புறம் எப்படி நிலவு வந்து அருகில் அமர முடியும் என்று மாமல்லன் மடக்குகிறார். (தேவதேவன் கவிதை பற்றி).

நான் பாவமில்லையா... யாராச்சும் என்னைக் காப்பாத்துங்க :-) அவருக்குச் [மாமல்லனுக்கு] சுட்டுப் போட்டாலும் கவிதை வராது என்பதற்கு இன்னொரு சான்று :-)

இந்த பஸ்ஸிற்கு எதிர்வினையாய் நான் எழுதியது Tuesday, October 18, 2011 1:49 AM

<வேதனையாய் மனதிலாட> மனதிலாட என்கிற வார்த்தையில் கொஞ்சமேனும் வேதனையின் சாயலாவது தெரிகிறதா? ஏதோ குஜாலாக ஆடும் ஊஞ்சலையல்லவா நினவுறுத்துகிறது.

இதற்கு எதிர்பாட்டாய் சுந்தரிடம் இருந்து வந்ததைக் கவனியுங்கள்

சிம்பிள். ஒருத்தன் மாடியில் படிச்சிகிட்டிருக்கான் விளக்கொளியில். அதை அணைக்கிறான். நிலவு வந்து அமர்கிறது. (பழக்கமின்மையால்) பயந்து போய் விளக்கைப் போடுகிறான். நிலவு வானுக்குப் போய்விடுகிறது. இத்தனை நாள் நிலவைக் கவனிக்காததற்கு வேதனைப் படுகிறான். அவ்வளவுதான்.

அவரது எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். 

ஒரு வேண்டுகோள் : அவர் எழுதும் கவிதை விமர்சனத்தையெல்லாம் ‘சீரியஸாக’ப் பேசுவது என்று அவராக நினைத்துக் கொண்டால் நானா பொறுப்பு :-)10/18 at 11.19 AM

இதற்குப் பிறகு ராஜ சுந்தர்ராஜன் சீனில் எண்டர் ஆகி கொடுத்த விளக்கம்.

//வேதனையாய் மனதிலாட// இதில், அருவமான 'வேதனை'யை 'ஆடுதல்' என்னும் உருவ வினையாக்கும் abstract x concrete குழப்பம் நிகழ்ந்திருக்கிறது. இது எதனால் என்றால், 'நிழலாட', 'ஒளியாட' என்றெல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதுதானே, அதனால். ஆனால் அவற்றையெல்லாம் காட்சிவினையாகக் கண்டிருக்கிறோம் அல்லவா? ஆனால் வேதனையை? 

பண்பட்ட கவிஞருக்கும் கூடத் துல்லியத்தை விழைவதில் சோர்வு வந்துவிடக் கூடாது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. 

[கவனிக்க: கவிஞர் தேவதேவன் என் குருபரம்பரையில் ஒருவர். (இங்கே, 'கவனம்' என்ன பொருள் தருகிறது?]10/18 at 11.49 AM (edited 10/18) at 2.18 PM

அதன் பிறகு அதே பஸ்ஸில் கவிக்கோல் பாண்டியனார் அளிக்கும் ஒப்புதல் வக்குமூலம்

ஜ்யோவ்ராம் சுந்தர் - ராஜசுந்தர்ராஜன் சார், ஆமாம், மாமல்லன் சுட்டிய பிறகு வேதனையாய் மனதிலாட வரி எனக்கும் உறுத்தியது.10/18 at 5.23 PM

இது எப்போது அளிக்கப்படுகிறது?

ராஜ சுந்தர்ராஜனின் விளக்கத்திற்குப் பிறகு ”அதான் எனக்குத் தெரியுமே” என்கிற ரீதியில்

ஆனால் ராஜசுந்தர்ராஜன் சுட்டிக்காட்டுவதற்கு முன்பாக, மாமல்லன் சுட்டிக்காட்டியபோதே உறுத்தியது உண்மையென்றால், அதற்குப் பின்னர் அளிக்கப்பட்ட இந்த விளக்கத்தில் அது பிரதிபலிக்காததோடு மட்டுமல்ல,  உறுத்தலை ஸ்பரிசித்த உணர்வு கொஞ்சமேனும் பிரதிபலிக்கிறதா? இல்லையே அது ஏன்? மாறாக எவ்வளவு லகுவான ஒப்பேற்றலாய் எழுதப்படுகிறது!


சிம்பிள். ஒருத்தன் மாடியில் படிச்சிகிட்டிருக்கான் விளக்கொளியில். அதை அணைக்கிறான். நிலவு வந்து அமர்கிறது. (பழக்கமின்மையால்) பயந்து போய் விளக்கைப் போடுகிறான். நிலவு வானுக்குப் போய்விடுகிறது. இத்தனை நாள் நிலவைக் கவனிக்காததற்கு வேதனைப் படுகிறான். அவ்வளவுதான்.

அவரது (மாமல்லனது) எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். 

ஒரு வேண்டுகோள் : அவர் (மாமல்லன்)எழுதும் கவிதை விமர்சனத்தையெல்லாம் ‘சீரியஸாக’ப் பேசுவது என்று அவராக நினைத்துக் கொண்டால் நானா பொறுப்பு :-)10/18 at 11.19 AM

”உறுத்திய பின்பும்” இப்படி எழுதுவது எதில் சேரும்? பிரபல பெயர் குறித்தான மூட பக்தியிலா? மூடத்தனத்திலா? வறட்டுத் திமிரிலா? அல்லது சந்தர்ப்பவாதத்திலா?

இப்படியான ஒருவர் ஜெயமோகனின் நேர்மையின்மையைத் தோலுரிக்கும் TUESDAY, OCTOBER 18, 2011ஜெயமோகனுடன் விவாதத்திற்கான முதல் மூன்று சட்டகங்கள் என்கிற எம்.டி.எம்மின் கட்டுரையைப் பரிந்துரைத்து பஸ்ஸாய் விடுகிறார்.

எம் டி எம்மின் முக்கியமான கட்டுரை :

போதாக்குறைக்கு, nesamitran online - Buzz - Public 10/18 at 5.38 PM எப்படியான தர்மாவேசக் கொப்பளிப்புடன் கண்டனக்குரலாய்க் கம்பி நீட்டுகிறார்

ஜ்யோவ்ராம் சுந்தர் - ஜெமோ எப்படி வசதியாகத் தகவல்களைத் திரிக்கிறார்! எம்டிஎம் கட்டுரை எழுதியதாகவும் அதற்கு இவர் ஒற்றை வரியில் பதில் சொன்னதாகவும் சொல்கிறார். ஆனால் நிஜத்தில் ஒரு சின்ன கேள்வி பதிலுக்கு 40 பக்கக் கடிதம் எழுதியிருக்கிறார். அதிலும் அவர் இப்போது சொல்லும் மேலாண்மைப் பொன்னுசாமி பதில் இல்லை :-)

தன்னை ஊதிப் பெரிதாகக் காட்டிக் கொள்ள இவர் செய்யும் விஷயங்கள் கடுப்படிக்கின்றன.10/18 at 9.38 PM

***

”...முரண்பட்ட எண்ணங்கள் சுய கவனிப்புக்கு இலக்காகாமல், சடையில் பேன் மாதிரி சகஜமாகவும் சந்தோஷமாகவும் நம் தமிழ்ச் சிந்தனையாளர்களிடம் குடிகொண்டிருக்கும் நிலைமையை மீண்டும் ஒரு தடவை உணர முடிந்தது.”

- சுந்தர ராமசாமி (போலி முகங்கள் - சந்தர்ப்பம் : ஞானபீடப் பரிசு)


Wednesday, November 24, 2010
சுகுமாரன் கவிதையிலிருந்து ஜெயமோகன் சுட்ட மொக்கை (ஜெயமோகனின் கைதி கவிதை பற்றிய கட்டுரை)

Tuesday, November 23, 2010
ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே (சுகுமாரனின் சுவர்கள் கவிதை பற்றிய கட்டுரை)

Monday, November 22, 2010

Sunday, November 21, 2010