25 October 2011

பட்டிமன்ற வெட்டி

<நீங்கள் கருதினால் பாரதி மகாகவியே என நீங்களே வாதிட்டு எழுதமுடியுமா என்றார்கள்.>

பின்னே வேறு யாராலும் முடியவில்லை என்பதை உலகமே கண்டுவிட்டதே.
<பாரதி மகாகவி என்ற தரப்பை எடுத்திருந்தால் நான் இவ்வாறு வாதிடுவேன்.>

லபலபா லபலபா லபலபா

<அப்படி அல்ல என்று சொல்லக்கூடிய ஒருவர் பாரதியின் கவிதை பொருள்படக்கூடிய எல்லா தளங்களையும் உள்ளடக்கிய ஒரு பேசுதளத்தில் அவர் கவிதையை இந்தியஅளவில், உலகஅளவில் வைத்து ஆராய வேண்டும். அப்படி ஆராய்ந்து பாரதியின் கவிதைகளைப்பற்றி அவர் ஒருமுடிவுக்கு வந்து பாரதி மகாகவி அல்ல என்று சொல்லவேண்டும். அப்படி சொல்லாதவரை பாரதி மகாகவியே.>

குற்றவாளி என நிரூபிக்காதவரையில் சாதாரணவாளி. 

அயோத்திலேந்து திகார் வரைக்கும் அரசியல்வாதிகள் சொல்வது இதைத்தானே. 

இந்த வட்டதொட்டி விளக்கத்திற்கு விளெக்கெண்ணைய்க் குழுமும் போதாதா? இணையப் பொதுவெளி தேவையா?

பட்டிமன்ற வெட்டி. இதை யாராவது பட்டி என்று படித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. இந்தப் பட்டிமன்ற வாதத்தை நான் படிக்கவில்லை. ஐயோ பாவம் எம்டிஎம்.