03 November 2012

ஜெயமோகன் பற்றிய பெருங்கவலை

<Court slams anti-Kudankulam agitators for protests>

கிடைத்தது மைக் என்று, நாளை நடக்கவிருக்கும் ராஜபாளையம் நாற்று கூட்டத்தில், கடுப்பை சிம்மில் வைக்காமல், ஓவராய் அறச்சீற்றத்தில் பொங்கி, கோர்ட் அவமதிப்புக்கு ஆளாகிவிடாமல், என் உயிர் நண்பர் ஜெயமோகன் உசாராய் பேசவேண்டுமே என்று, மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது. 

ஏதாவது தெரிகிறதோ இல்லையோ, கல்லூரிப்  பேச்சுப் போட்டி போல, எந்த  டாப்பிக்கிலாவது தினந்தோறும் பொங்கி கருத்து சொல்லாமல் இருந்தால், அறச்சீற்றம் ஊசிப்போய்விடும் என்பதே அவரது உண்மையான அவஸ்தை என்றால், எந்த பிரச்சனையும் வந்துவிடாத, நல்லவர்கள் என்று அவர் நம்புகிறவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையிலோ, அல்லது சாரு நிவேதிதா பாணியில் நடத்தப்படும், சாருவுக்கு நெருக்கமான நண்பரை ஆசிரியாராகக் கொண்ட பத்திரிக்கைச் செய்தியினை ஆதாரமாகக் கொண்டோ 'பொதுவெளி பொறுக்கிகளை' இன்னொருமுறை ரவுண்டு கட்டலாம். 

கூட்டத்திற்குப் போய்விட்டு, கூடங்குளம் போன்ற பற்றி எரியும் சம்பவத்தைப் பற்றிப் பேசாமல் ஜகா வாங்குவது எப்படி? 

ஏற்கெனவே இருக்கிற எஸ் வி ராஜதுரை கேஸ் போதாதென்று கண்ட்டம்ட்டு கேஸ் வேறு வேண்டுமா என்று குறுங்குழுமம் அறிவுரைத்தால், அஞ்சுவது அஞ்சாமை பேதமை என கூட்டத்தையேகூட ரத்து செய்துவிடலாம். 

கூடங்குளப் போராட்டம் பற்றிய கோர்ட் கண்டணத்துக்கு உங்கள் எதிர்வினை என்ன என்று, நாமாக மடல் எழுதி கேட்டுக்கொண்டால் தவிர ஏன் பேசவில்லை என்று யார் கேட்கப்போகிறார்கள்?