23 November 2012

அசோகமித்திரனுக்கும் பாடகி பிரச்சனைக்கும் ஷோபா சத்தி போடும் தந்திர முடிச்சு

2011ல் பிராமின் டுடேயில் வெளியான நேர்காணலை, பாடகி பிரச்சனையுடன் ஃபேஸ்புக்கில் தந்திரமாக முடிச்சு போடுகிறார் எழுத்தாளர் ஷோபா சக்தி.
அசோகமித்திரனின் புத்தகமே ஆயிரம் விற்றால் அதிகம் என்பதுதான் யதார்த்தம். அப்படி இருக்கையில் அவரது கமெண்ட்டுக்கு, அதுவும் பிராமின்ஸைத் தவிர எவனும் சீந்தாத பிராமின் டுடேவில் உதிர்த்த முத்துகளுக்கெல்லாம் சமூகத்தில் என்ன பெரிய வீச்சு?

ட்விட்டரில் மட்டுமே லட்சத்துக்கும் மேற்பட்ட விசிறிகளைக் கொண்ட பாடகி பொதுவெளியில் எடுக்கும் வாந்திகளுக்கு என்ன ரீச்சு? 

பெண் என்றால் பேயும் இரங்கும். எழுத்தாளர் ஷோபா சக்தி கண்மூடித்தனமாக இறங்குவதில் என்ன வியப்பு! 

நேர்மையான எழுத்தாளன், இரண்டு கண்களாலும் படித்து, பாராட்ட வேண்டியவற்றுக்குப் பாராட்டியும் கண்டிக்க வேண்டிய கருத்துகளுக்குக் கண்டித்தும் எழுத வேண்டும். 

மனதை மூடிக்கொண்டு ஜெயமோகன் போல ஒன்றரைக் கண்ணால் பார்த்தால் பல விஷயங்கள் பார்வைக்கே வராமல் போய்விடும். தரிசனக் கிண்ணியை பிடித்தபடி காலம்பூராவும் நக்கிக்கொண்டே கிடக்க வேண்டியதுதான். கிண்ணிகளுக்கா உலகத்தில் பஞ்சம்?

ஷோபா சக்தி அந்த நேர்காணலில்கூட தனக்கு வேண்டியதை மட்டுமே படித்திருக்கிறார் போலும்.

பிராமின் டுடே: நீங்கள் சமீபத்தில் அவுட்லுக் பத்திரிகையில் தெரிவித்திருந்த பிராமணர்கள் பற்றிய கருத்துகளை மீண்டும் ஒருமுறை சுருக்கமாகக் கூற இயலுமா

அசோகமித்திரன்: அதன் சாரம் இதுதான். வெளிப்படையாகப் பிராமணர்கள் ஏதும் தெரிவிக்காதப் போதிலும் உள்ளூரத் துக்கத்தில் இருக்கிறார்கள். பல பொதுத் துறைகளில் இன்று அவர்களுக்கு இடமில்லை. அவர்கள் பிறப்பைக் கொண்டு மட்டும் அவர்கள் பல தருணங்களில் குற்றவாளிகள் போலச் சுட்டிக் காட்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் விடிவே இல்லாதது போலத் தோன்றுகிறது.

பிராமின் டுடே: உங்களது எண்ணற்ற சிறுகதைகளில் காணப்படும் ஏராளமான பாத்திரங்களில் எவரேனும் இவ்விஷயத்தின் தாக்கத்தினை உணர்த்துபவர்களாக ஏன் உருவாகவில்லை? 

ஏண்ணா கதைகள்ல பிராமணப் பிரச்சாரம் பண்ணாமப்போயிட்டேள்னு கேக்கறார் டுடே பிராமீன்ஸ்

பிராமணர்களின் இன்றைய நிலை இப்படி ஆகிவிட்டதே என்று மூக்கு சிந்தும் ஜ. தியாகராஜன் என்கிற சராசரி பிராமணர், எழுத்தாளர் அசோகமித்திரனாக என்ன சொல்கிறார் என்று பார்ப்பதும்தானே நியாயம். 

அசோகமித்திரன்: எழுத்தாளனாக உலகத்தைப் பார்க்கையில் குழு குழுவாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. முதல் கேள்விக்குக் கூறப்பட்ட பதில்கூட ஒருவர் கேட்டுத்தான் பதில் கூறப்பட்டது.

இதெல்லாம் செல்லாது, அசோகமித்திரன், ’எங்கள்’ அ. மார்க்ஸ் போல பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ ஷோபா சக்தி.

மனித உரிமைகளுக்காக போராடவேண்டியே தம் வாழ்நாளை தத்தம் கொடுத்துவிட்ட அ. மார்க்ஸ் சொன்ன மனிதாபிமான மானிஃபெஸ்டோவைப் பார்த்துவிடலாமா?


ஒட்டுமொத்தமாக இனத்துவேசம் பாராட்டி பிராமண ஜாதியில் பிறந்த அத்துனைபேர் மேலும் தார் அடிக்கும் இவர்தான் கருத்தைக் கருத்தாக எதிர்கொள்ளும் கருத்து கந்தசாமி ஷோபா சக்தி சார்வாளுக்கு.

பெரியார் வாய்க்கு வாய் பார்ப்பான் பார்ப்பான் என்று சொன்னதை கருத்தாக்கமாக அல்லாது வெறும் வசையாக மட்டுமே பார்த்து அடிவயிற்றில் அமிலம் சுரந்த வண்ணம் திரியும் சாதாரண பிராமணனுக்கும் சிந்தனைச்செம்மல் அ, மார்க்ஸ்ஸுக்கும் என்னைய்யா பெரிய வெண்ணை வித்தியாசம்? எதிரெதிர் அணியில் இருக்கிறார்கள் என்பதைத்தவிர. சாம்பாரும் சால்னாவும் கிரேவிதானேய்யா! முத்தையதில் முறுங்கைக்காய் ’தான்’ பிந்தையதில் மட்டன் ’பீஸு’.

பிராமின் டுடே, டோட்டலா நம்பளவா என்று தோளில் கைபோட்டபடி அசோகமித்திரனுக்கு எப்பட்டி மம்மு ஊட்ட முயல்கிறது பாருங்கள்.

பிராமின் டுடே: தமிழ் இலக்கிய உலகில் இனிமேல் பிராணமர்கள் முன்பு போல ஒரு முன்னிலை இடத்தை அடைய முடியாது என்ற கருத்துப் பற்றி நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

அதற்கு மசியாமல் இப்படிச் சொல்ல வேண்டும் என்று, அதுவும் பிராமிண்டுடே என்கிற பிராமண ஒண்டுக் குடித்தனத்துக்குள் இதைச் சொல்லவேண்டும் என்று அசோகமித்திரனுக்கு என்னையா கட்டாயம்? 

அசோகமித்திரன்: இலக்கியத்தை உலகளாவிய மனிதாபிமான அடிப்படையில் காண்பதுதான் சரி. எந்த இனத்தைச் சேர்ந்தவரானாலும் நல்ல படைப்பாளி என்றால் எல்லாரும் வரவேற்க வேண்டும். இது இதர துறைகளுக்கும் பொருந்தும். தேர்ச்சி பெற்றவர்கள், ஆர்வமுள்ளவர்கள், பாடுபடத் தயாராக இருப்பவர்கள் எச்சமூகத்தைச் சேர்ந்தவரானாலும் நாம் மனதார வரவேற்க வேண்டும்.

முற்போக்கு பிராண்டுடன் முடியை சிலுப்பிக்கொள்வதா அல்லது முடிந்த வரை நேர்மையாக இருக்கப் பார்ப்பதா எழுத்தாளன் சிந்தனையாளன்களுக்கு எது முக்கியம்?