19 November 2021

சரியும் தப்பும் சரியா தப்பா

Jan 18 10:07:51 2015

எழுத்தாளர்களைப் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது - உரிமைக்குரல் ஸ்டாலின்
எழுத்தாளர்களின் பாதுகாப்பு கருதி,

நாமக்கல் போன்ற சிறுநகர எழுத்தாளர்களிடமிருந்து பேனாவும்
சென்னை போன்ற பெருநகர எழுத்தாளர்களிடமிருந்து மடிக்கணினியும்
நாகர்கோவில் எழுத்தாளரிடமிருந்து கீபோர்டும் பிடுங்கப்படும் - அம்மா பிச்சை 

66Aவுக்கு சீக்கிரமாய் AB எங்கே கிடைக்கும் (பூவுலகின் நண்பர்கள் சுந்தர் போன்ற சகாயவிலை களப்பணி பேச்சாளர் கோஷ்டி வேண்டாம். கோர்ட்டுக்குப் போகும் தொழில்முறை வக்கீலைப் பரிந்துரைக்கவும்) - முழு நேர ப்ரூஃப் ரீடர் கம் மோட்டார் மெக்கானிக் ஆகிவிட்ட மாஜி எழுத்தாளர்


சரியும் தப்பும் சரியா தப்பா
January 19, 2015

...மக்களைப் பற்றி எழுத நமக்கிருக்கும் கருத்துரிமைச் சுதந்திரம், நம்மை எதிர்த்து கண்டித்து துண்டறிக்கை வெளியிட அவர்களுக்கு இல்லையா? சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மைகூட கருத்துரிமைச் சுதந்திரம் பற்றி, அரைமணி அவகாசத்தில் பக்கம்பக்கமாய் எழுதி ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்துவிடும் கல்லூரிப் பேராசிரியர்களான நமக்கு ஏன் இல்லை. எதைப் பற்றியும் எழுதும் சுதந்திரம் எழுத்தாளனாய் எனக்கு வேண்டும். ஆனால் நான் எழுதியதை எதிர்க்கும் கண்டிக்கும் உரிமையோ சுதந்திரமோ எவருக்கும் கிடையாது என்பது, எழுத்தில் எந்த ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்தோமோ அதே ஆதிக்க மனப்பான்மையுடன்தான் எழுத்தாளர்களாக நாங்கள் இருக்கிறோம் இருப்போம் என்கிற ஆணவமல்லாது வேறென்ன?.



நான் ஏன்?
Sunday, March 1, 2015

நல்ல எழுத்தாளனின் திறமைக்கு சவால் விடும் இடம் சம்பவமன்று. நிகழ்ந்த சம்பவத்துக்கான பின்புலமே. சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மனித மனத்தின் அவஸ்தையே. அதை விடுத்து சம்பவத்தின் அதிர்ச்சிகரத்திலேயே உழன்று கொண்டிருப்பது அதன் உக்கிரத்தைக் கெடுத்து கிளுகிளுப்புக்கு சரித்துவிடும் எழுத்தாளன் அறியாமலேயே. கிளுகிளுப்பின் இடம்தான் பாமரனின் இடம். அதை ஊர்பேர் ஜாதி தனி நபர் அடையாளங்களுடன் துல்லியப்படுத்தி வேறு காட்டுவது எழுத்தாளனின் அற்பத்தனம்.

புலியூர் முருகேசன் செய்த தவறைத்தான் ஏற்கெனவே செய்திருந்தார் பெருமாள்முருகன்.

இலக்கியவாதிகளில்லை என்பதே இவ்விருவரின் பிரச்சனையும். இருவருக்குமே பிரச்சனை வந்திருப்பதற்கான காரணமும் அதுவே.

கிண்டில் புத்தகம்: https://amzn.to/3Cw2c8K