05 November 2021

அமன்: சிறுகதை (2020)

சைக்கிள் வாங்கி இன்னும் முழுசாக ரெண்டு மாதம் கூட ஆகவில்லை. அவருக்கும் உள்ளூர கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் தாட்சண்யம் பார்த்தால் இதைவிட மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது அவரது ஸ்திரமான அபிப்ராயம்.

சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்தவர். ஆசைப்படும் எதையுமே அப்பாவால் வாங்கித்தர முடியாது என்பதைச் சின்ன வயதிலேயே உணர்ந்துகொண்டு எதற்குமே ஆசைப்படாமல் வளர்ந்து பெரியவனாவதைப்போன்ற அவஸ்தை இன்னொன்று இருக்குமா என்பது சந்தேகம். இதில்திருடக்கூடாது பொய் சொல்லக்கூடாது என்று ஆயிரத்தெட்டு அறிவுரைகள். மாட்டிக்கொண்டால் அதைவிட வேறு அவமானமில்லை என்கிற பயம் வேறு பலமாக ஊன்றப்பட்ட கீழ் மத்தியதர பிராமணக் குடும்பம். ஒவ்வொன்றுக்கும் உள்ளூரப் புழுங்கிப்புழுங்கியே வாழ்வதற்குச் செத்தே போய்விடலாம் என்று அந்தச் சின்ன வயதிலேயே அவருக்குப் பல சமயம் தோன்றியிருக்கிறது. வாழவும் முடியாத சாகவும் விடாத வாழ்க்கை. 

முழுவதும் படிக்க: https://amzn.to/3LGO57P