24 November 2021

அடடே அதுவுமா

இன்று மதியம் 1:29 வரை இலவசம்


வாழ்த்துக்கள் சார்

எதுக்கு

இலவசமா குடுக்கறதுக்கு

இது எந்து இல்லைங்க

உங்களது இல்லே குபராவுதுதான். இருந்தாலும் இலவசமா குடுக்க ஒரு மனசுவேணுமே சார். அடுத்தவனுக்கு உதவணுங்கற மனசு உங்களை மாதிரி இங்க எத்தனைப் பேருக்கு இருக்குது சொல்லுங்க

அது இல்லைங்க. நான் குடுக்கல. நண்பர் குடுக்கறாரு

இருக்கட்டும் இருக்கட்டும். ஆனா சுட்டி நீங்க இல்ல குடுக்கறீங்க

ரைட்டு டவுன்லோட் பன்ணிடுங்க

கண்டிப்பா சார். யாரோ எழுதின புக்க யாரோ போட்ட புக்கை அதுவும் இலவசமா வேற குடுக்கறீங்க. உங்க அர்ப்பணிப்பு இப்பல்லாம் யாருக்கு சார் இருக்கு. ஒரு சின்ன விஷயம் கேக்கலாமுங்களா

சொல்லுங்க

இதை எப்படி வாங்கறது

வாங்க வேண்டியதில்லைங்க. இலவசமா இறக்கிக்க வேண்டியதுதான்

அதான் சார். அது எப்படினு கேட்டேன் கோச்சிக்காதீங்க.

கிண்டில் ஆப் இருக்கா

எதுல

உங்க மொபைல்ல கம்ப்யூட்டர்ல லேப்டாப்ல

கம்ப்யூட்டர் லேப்டாப்லாம் வெச்சுக்கல சார்

மொபைல் இருக்கில்ல. இதை நீங்க மொபைல்ல தானே கேட்டுக்கிட்டு இருக்கீங்க

ஆமா சார்

அதுல டவுன்லோட் பண்ணிக்க வேண்டியதுதான்

அது எவ்ளோ சார்

இலவசம்தான்

அடடே அதுவுமா. கோச்சிக்காதீங்க அதுக்கு சுட்டி இருந்தா குடுங்களேன். ப்ளாக் பண்ணிடாதீங்க சார். உங்களைப் படிக்கலைனா வாழறதே வேஸ்ட்டுனு நினைக்கிற உங்களோட தீவிர பேஸ்புக் வாசகன் சார் நான்

இருங்க இந்த புக்கையே இங்க என் பேஸ்புக்லையே ஒட்டப் பாக்கறேன்

சூப்பர் சார் அதைச் செய்ங்க. அப்படியே சர்ர்ர்ர்ர்னு ஒரே மூச்சுல பதிவாட்டம் படிச்சிருவேன்