19 March 2011

மயிலாப்பூர் ராயர் கபே!


ராயர் கபே நடக்கிற புது இடத்து முகவரி இருப்பவர்கள் பகிர்ந்தால் பேருதவியாய் இருக்கும். கச்சேரி ரோடு ஜெய்ன் கோயிலுக்கு எதிரில் எனச்சொல்லி மனோஜ் டபாய்ந்து விட்டார்.

தி ஒரிஜினல் ராயர் கபே இட்டலி ருசியின் ரகஸியம் என்று அந்தக் காலத்துப் பெருசுகள் ஒரு காரணம் கூறுவதுண்டு.


“அது வேற ஒண்ணுமில்லே ஓய்! ஓட்டல் ஆரம்பிச்ச அண்ணிக்கி, ராயர் கிட்ட மொதல் ஏடு சாப்டவன், பிரம்மாதமா இருக்குன்னு சொல்லிட்டானாம். செண்டிமெண்டலா அந்த இட்லித் துணிய இன்னும் மாத்தவே இல்லை அதான் அதே ருசி இன்னும் மெய்ண்டெய்ன் ஆயிண்டிருக்கு”

ஒரிஜினல் ராயரிடம் கச்சேரி சாலையில் க.நா.சு மட்டுமல்ல, இதயம் பேசுகிறது மணியனும் ரெகுலர் வாடிக்கையாளர். தீவிர இலக்கியமும் கமர்ஷியலும் பேதமின்றி ருசித்த இடம்.

மணியன் சிபாரிசால் கச்சேரி ரோடில், காருக்குள் உட்கார்ந்து இட்லி சாப்பிட்டிருக்கிறார் எம்ஜிஆர், முதலமைச்சராய் இருக்கும் போது, என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

ராயர், கெத்தேல் சாகேப் போல தர்மவான்லாம் இல்லை. துட்டு எண்ணி வாங்கி கணக்குவழக்கே பார்க்காமல் குதிரைக் குண்டியில் கட்டிவிடுவார். இரத்தம் போலவே காசும் ஓரிடத்தில் தங்காமல் புழங்குவதுதானே பொருளாதாரத்திற்கு நல்லது என்கிற பொருளியல் சிந்தனை போலும்.எங்கப்பன் போல பெரும்பாலான ராயர்களின் உயர் ரசனை குதிரைக் குண்டி.

இப்போது கடை நடத்துபவர் ஜூனியர் ராயரா சப்-ஜூனியர் ராயரா?