02 March 2011

பைத்தியக்காரன் சிவராமன் என்கிற பச்சோந்திக்கு ஆண்டன் செகாவின் பச்சோந்தி தர்ப்பணம்!

செகாவின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று இந்தப் பச்சோந்தி. அநேகமாக இந்தக் கதையை நாடகமாகப் போடாத முற்போக்கு இயக்கங்களே உலகத்தில் இருக்க முடியாது எனத் தன்னம்பிக்கையோடு கூறலாம். மனிதர்களாகப் பிறந்த  எல்லோருக்குமே பச்சோந்தியாக நடந்து கொள்ளும்படியான நிர்பந்த தருணங்கள் வாய்க்காமலோ அல்லது அப்படி துர்பாக்கியமாக வாழாமலோ எளிதாகத் தப்பிவிட முடிவதில்லை.

இந்தக் கதை, நாடு மொழி காலம் கலாச்சாரங்களைக் கடந்து, எப்போதுமே பச்சோந்தியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறவர்களைப் பார்த்து பரிகசித்துக் கொண்டு இருக்கிறது காலாகாலமாக.

ஆண்டன் செகாவ், கதையில் இருந்து கையை நீட்டி, வாசகனின் விலாவில் கிச்சு கிச்சு மூட்டி, நீ சிரித்தால்தான் ஆயிற்று என்று அழிச்சாட்டியம் பண்ணவில்லை.

இந்தக் கதையை எழுதிய போது , 1860ல் பிறந்த செகாவுக்கு வயது 24. இந்தக் கதையாய் வாழும் செகாவுக்கு வயது 125.