17 March 2011

அடுத்தவர் நம்பவேண்டும் என்று எழுதாதீர்கள்.
இலை கதையில் <நோண்டி நோண்டி கேட்கும் பெண்மணி என்பது வாசிக்கும்போது இடறாமல் அமைந்து விடுகிறது.>

இது உண்மைனா

<என்ன பெண்மணியோ... வக்கீலுக்கா படிச்சிருக்கா... ஒரு குழந்தைகிட்ட இப்படிக் கேக்க எந்தப் பெண்ணிற்கு மனசு வரும்? இதெல்லாம் அதீதமான ஜோடனைன்னு சொல்ல முடியுமா? >

இது உங்களின் விதண்டாவாதம்.
<தரமணிக்கும், ஆவடிக்கும் நடுவில் மின்சார ரயில் வசதியான இடமாக நுங்கம்பாக்கம் என்று சொன்னால்.... உடனே ஆவடிக்கும், தரமணிக்கும் நுங்கம்பாக்கத்தோடு இரயில் இணைப்பு இருக்கிறதா என்று போய்விடுகிறீர்கள். பார்க்கோ, பீச்சோ போய் ரயில் மாறிக் கொள்ளலாமே... ஏன் சேத்துபட்டிலோ, எக்மோரிலோ இல்லாமல் நுங்கம்பாக்கம் என்றால்.... இது என்ன டிராவலிங் சேல்ஸ்மென் பிராப்ளமா என்ன Optimized locationலதான் கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும் என்று...>

நேர் இணைப்பைப் பற்றிப் பேசவே இல்லை அந்தக் கிண்டலில்.

<பார்க்கோ, பீச்சோ போய் ரயில் மாறிக் கொள்ளலாமே... >

இது தெரியாமலா அந்தக் கிண்டல். <கொள்ளலாமே> இல்லை அப்படித்தான் போயாக வேண்டும். 

<நுங்கம்பாக்கமும் பழவந்தாங்கலும் ஒரே ரூட்டில் இருக்கற ரயிவே ஸ்டேஷன்கள் இல்லையா? பழவந்தாங்கலில் இருந்து ஆவடிக்கு இரண்டு ரயில் மாறவேண்டிய கஷ்டம் என்றால், நுங்கம்பாக்கத்துல இருந்தது என்ன ஹெலிபேடா? நுங்கையில் இருந்து ஆவடிக்கு நான் ஸ்டாப் ட்ரெய்ன் செளகரியத்தைக் குழந்தையின் பள்ளிப்படிப்பிற்காகத் தியாகம் செய்துவிட்டு பழவந்தாங்கல் வந்தார்களாமா? >

எனது இந்தக் கேள்வியை செளகர்யமாக தாண்டுகிறீர்களா? கதையில் நுங்கம்பாக்கத்துக்கும் பொருளில்லை பழவந்தாங்கலுக்கும் பொருளில்லை. ஸொம்மா எதாவது சொல்லணுமேன்னு சொன்னது. 

டெய்லி அரக்கோணத்துலேந்து செங்கல்பட்டுலேந்து ஆஃபீஸ் வரவங்களோட வாழறவன். 

அவன் கதையெல்லாம் எழுதினா வினவு பேசறதைப் புனைவுலப் பேசறா மாதிரி இருக்கும். 

எழுதக் கோடி அவலம் தவிர்க்கமுடியாத அவலம் கொட்டிக் கெடக்கு. அதுல வைட்டல் எக்ஸ்பீரியன்ஸை எழுதினா மட்டுமே உயர்ந்த எழுத்தா ஆகும். ஸொம்மா என்னத்தையாவது கருத்துருவைக் கதையாக்கிகினா அதுக்கு ஜப்பானியப் பெயிண்டா?

நான்லாம் ரொம்பச் சின்னவன். அழியாச்சுடர்கள்ல மிருகம் http://azhiyasudargal.blogspot.com/2010/11/blog-post_27.html இருக்கு படிங்க.
கொஞ்ச நேரத்துக்கு மூச்சுப் பேச்சே வராது.

ஒடனே எல்லாரும் இப்புடித்தான் கதை எழுதணுமான்னு எவன் கேட்டாலும் அவன் மொக்கை.

படிச்சு ஆழ்ந்து அனுபவிக்கிறவனே எழுதக் கை கூடப்பெறுகையில் எழுதுகிறவனாக முடியும். தன் எண்ணத்தின் மேல் எழுத்தின் மேல் சரியான பிடிமானம் வரும் போது எழுத்தாலன் ஆகமுடியும். இப்படித் தொடர்ந்து மனத்திலும் உழைத்துக் கொண்டிருப்பவனே தான் எழுதும் ஏதோ சிலவற்றில் உச்சத்தைத் தொடமுடியும். அழியாச்சுடர் ஆக முடியும். அழியாச்சுடர்கள் தளத்தில் ஏறிக்கொள்பவனெல்லாம் பெரிய எழுத்தாளனாகிவிட முடியாது.

இது பொதுவாகச் சொன்னது.

<ஆறு வருடம், ஒன்பது மாதங்கள் ஆன சுகு என்னும் பெண் குழந்தை என்று முறைப்படியாக சொல்லாமலேயே சுகுவை உணரமுடிகிறதே. உங்களுக்கு ஏன் அந்த வயது உறுத்திக் கொண்டேயிருக்கிறது என்றுப் புரியவில்லை. >

ஒன்றாம் வகுப்பில் சேர்க்கிறார்கள் அப்ப வயது என்ன?

<ஆறு வருடம், ஒன்பது மாதங்கள் ஆன சுகு என்னும் பெண் குழந்தை> :)))))
கதையிலேயே கிட்டத்தட்ட 3-4 வருடங்கள் சொல்லப்படுகிறது. பாலூட்டுவது அப்ப எப்போது?

இதுதான் நாம் கதை படித்த லட்சணமா?

<சிறுமி கொண்டுவந்த மலர்> ஓ தரலாமே! தனிப்பார்வைக்கு மட்டும். நான் எழுதி இருக்கறதே 30தான் என்பதை இன்னொருமுறை நினைவுபடுத்திகொண்டும் நீங்கள் இதே கேள்வியைக் கேட்டீர்களெனில், வேறு வழியில்லை தருகிறேன்.

நிறைய எழுதி நிறையமுறை புத்தகங்களாக வந்தவற்றை 
அல்லது மிகக்குறைவாகவே அச்சானவற்றையே அவசியம் என நான் நினைக்கிற பட்சத்தில் ஸ்கேன் செய்கிறேன். அந்தப் புத்தகங்கள் எல்லோருக்கும் தெரியவரவேண்டும் என்பதால். உயிர்மை மட்டும் என் புத்தகத்தைப் போடாதிருந்திருந்தால் அத்தௌனையும் வலையேறி இருக்கும்.

ஒரு அவசமான தருணத்தில் நெட் ஒர்க் இல்லாமல் நின்ற புத்தகங்களின் எரிச்சலில் பழைய பேப்பர் கடைக்கு எடைக்குப் போடப்போனவன். முன்றில் மகாதேவன் கடிந்து கொள்ளவில்லை என்றால் போட்டிருப்பேன்.

இதில் எனக்கு அவமானம் இல்லை.

<தவறிருந்தால் பொருட்படுத்தாமல் விட்டுவிடுங்கள்>

தவறாகவெல்லாம் எடுத்துக்கொள்ள மாட்டேன் திருப்பித்தந்துவிடுவேன். வைத்துகொண்டிருந்தல்தான் அவஸ்தை.Edit10:20 am (edited 10:22 am)


எனக்குத் தனிப்பட்ட வன்மம் யார்மேலும் இல்லை. எஸ்.ராவின் ஆடுகளின் நடனம் பற்றி நான் எழுதுவதற்கு 4 நாள் முன்பாகத்தான் அமி பற்றிய அவனது கட்டுரையைப் பாராட்டி அவனுக்கு SMS கொடுத்திருந்தேன். 

ஜெமோவின் ‘நினைவின் நதியில்’ உயிர்மையில் நேரில் போய் வாங்கிப் படித்து அதில் ச்ராவின் குரலை மட்டுமே கேட்டு அவரது ஃபோனுக்காக வசந்தகுமாரிடம் கேட்டபோது,

’இப்ப எழுதவந்த சின்னப் பையனாப்பா நீயி. எதாவது சொல்லி அவமானப்படுத்திட்டா? என்றான். ’

அதையும் மீறி எவ்வளவோ முயன்றேன். கிடைக்கவில்லை. ஆனால் சுரா பற்றிய விம்மல்கள் அடங்கிய மறுவாசிப்பில் படித்தபோது அதிலிருக்கும் விஷங்களும் தெரிந்தன. ஏனெனில் அம்முறை கண்களில் சுராவின் நீர்த்திரை இல்லை.

என் முடவன் வளர்ந்த்த வெள்ளைப் புறாக்கள் கதையை சுட்டது இன்னும் என்னுள் வலியாக இருக்கிறது. ஆனால வன்மமாக இல்லை. இருந்திருந்தால் ஜெமோவின் ‘அஜிதன் பத்தாம் வகுப்புத் தேர்வு’ யுவகிருஷ்ணா சுட்டியபோது படித்துக் கண்கலங்கியிருக்க முடியாது. 

உண்மைக்கு உள்ள குரல் வலிமை எதற்கும் கிடையாது. குறைந்தது நீங்கள் உண்மை என்று மனதார நம்புவதை எழுதுங்கள். அடுத்தவர் நம்பவேண்டும் என்று எழுதாதீர்கள்.