03 March 2023

விகடனில் கோனங்கி விவகாரம்

பாதிக்கப்பட்டவர்:

"எழுத்தாளர் கோணங்கி பாலியல் சித்திரவதை செய்தார். இப்ப புகாரை நீக்கச் சொல்லி..." பாதிக்கப்பட்ட மாணவர்

கோணங்கி

"நான், கோணங்கியால் பாதிக்கப்பட்டதை வெளியில சொன்னதும் பல பேர் பாதிக்கப்பட்டதாக ஃபேஸ்புக்ல் எழுதியிருக்காங்க." - கோணங்கி மீது பாலியல் புகார் கூறியுள்ள மாணவர் பேட்டி

பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது கார்த்திக் என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் பதிவிட்டிருக்கும் பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த மாணவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், "டீன் ஏஜ் காலகட்டத்தில் கோணங்கியை ஒரு காட்ஃபாதராக நினைத்துப் பழகினேன். ஆனால், அவர் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால், நான் மனச்சிதைவுக்கு ஆளானேன். அவரிடமிருந்து போன் அழைப்பு வந்தாலே பயமும் வந்துவிடும். இதனால், தற்கொலை எண்ணத்துக்குத் தள்ளப்பட்டேன். என் வாழ்க்கையே நரகமாகிவிட்டது” என்று தன் வாக்குமூலமாக போஸ்ட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். இது வாசகர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் கார்த்திக்கையே தொடர்புகொண்டு பேசினேன்.

எழுத்தாளர் கோணங்கி
எழுத்தாளர் கோணங்கி

“எனக்கு நாடகம் நடிக்கிறதுல ஆர்வம் அதிகம். அதனால, காலேஜ் படிக்கும்போது கோணங்கியோட தம்பி முருகபூபதி நடத்துற 'மணல் மகுடி' நாடகக் குழுவுல சேர்ந்தேன். அப்போதான், கோணங்கி நேரடியாக அறிமுகமானார். ஒரு பெரிய எழுத்தாளர் நம்மகிட்ட நேரடியா சகஜமா பேசுறது ஒரு சந்தோஷத்தைக் கொடுக்குமில்லையா? அப்படித்தான் எனக்கு இருந்துச்சு. அவரை ஒரு காட்ஃபாதர் மாதிரி நினைச்சேன். நாடகக்குழு வெளியூரெல்லாம் போகும்போது அவரும் கூடவே வருவார். ரொம்ப அக்கறையா பேசுவார். அவர் அப்படி எளிமையா இருக்கிறது எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்கும். ஆனா, போகப் போகத்தான் அவரோட சுயரூபம் தெரிய ஆரம்பிச்சது. அவரோட ஊரு கோவில்பட்டியா இருந்தாலும் எழுதுவதற்காகவே மதுரையில ஒரு ரூம் எடுத்து தங்கியிருந்தார். பிறகுதான் தெரிஞ்சது, அவரு தப்பா நடந்துக்கிறதுக்காக அந்த ரூமை எடுத்து வெச்சிருக்கார் என்பது. 

டைப் பண்ணனும்னு சொல்லி என்னைக் கூட்டிக்கிட்டு போவார். எனக்கு அதுபற்றிய நாலேஜ் கிடையாது. ஒரு பெரிய எழுத்தாளர் கூப்பிட்டா போகாம எப்படி இருக்கமுடியும்?” என்கிறவர் அதற்குப்பிறகு சொல்ல ஆரம்பித்ததுதான் அதிர்ச்சி ரகம். “போனதும் சட்டையக் கழட்டச் சொல்லிடுவாரு. வெறும் துண்டை மட்டும் கட்டிக்கிட்டு உட்காரச் சொல்லுவாரு. வீட்டுல இருக்கிறமாதிரி கம்ஃபர்டபிளா இருக்கணும்ங்கிறதுக்காக சொல்றார்ன்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது, என்கூட தப்பா நடந்துக்கத்தான் அதுன்னு... இரவு ஆகிட்டாலே என்னை ட்ரிங்ஸ் பண்ணச் சொல்வார். அப்போதெல்லாம் எனக்கு குடிப்பழக்கம் கிடையாது. ஆனா, அவர் குடிப்பார். அந்த நேரத்துல என்கிட்ட தப்பா நடந்துக்குவாரு. அவர் இப்படிப் பாலியல் வன்முறையில ஈடுபடுவது எனக்கு அதிர்ச்சியா இருந்தது. மதுரையிலிருந்து கோவில்பட்டிக்குப் போனாலும் போன் செய்து அங்கேயும் வரச்சொல்வார். கிட்டத்தட்ட மூணு வருஷம் என்னை இந்த சித்திரவதைக்கு ஆளாக்கினார். எனக்கு அப்போ 19 வயசு. 'உன்கிட்ட நிறைய திறமை இருக்கு'... அப்படின்னு ரொம்ப என்கரேஜ் பண்ணி ஏமாத்துவார். இப்படித்தான் அவரோட அப்ரோச் இருக்கும். அவரை எதிர்த்துப் பேசமுடியல. தள்ளிப் படுத்தாலும் விடமாட்டார். 

Sexual Assault
Sexual Assault
Representative Image 


நான் வந்த பிறகுதான், என்னை மாதிரியே பாதிக்கப்பட்ட இன்னொரு பையனும் கோணங்கியோட தம்பி பூபதிகிட்ட புகார் சொன்னார். அவர், 'அய்யய்யோ, அவர் இப்படியா நடந்துக்கி்றார்'னு புதுசா கேட்கிறமாதிரி கேட்டார். 


ஒருமுறை, நடந்தா பரவாயில்ல. அவரோட தம்பிக்கிட்ட நான் பார்த்து புகார் கொடுத்ததே 3 பேர். இந்த 10 வருசத்துல நிறைய ஆண்கள் கூட தப்பா நடந்துக்கிட்டிருக்காரு. அவரோட தம்பி கண்டுக்கல. அவரும் இதற்கு உடந்தைதான் போல" என்று சந்தேகம் எழுப்புகிறவரிடம், "பத்து ஆண்டுகள் கழித்து தற்போது இதை பிரச்னை ஆக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பப்படுகிறதே? அப்போதே, கோணங்கியின் அண்ணன் ச.தமிழ்ச்செல்வனிடம் சொன்னீர்களா? காவல்துறையில் புகார் கொடுக்காதது ஏன்?" என்று கேட்டேன். 


"அப்போ, அந்த வயசுல இதை வெளியில சொன்னா அசிங்கம்னு இருந்துட்டேன். எனக்கும் ஒரு குற்ற உணர்வா இருந்தது. கோணங்கியால என்னை மாதிரியே நிறைய பேரு பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சதும் இன்னும் கோபம் அதிகமாகிடுச்சு. அதனாலதான், இப்போ தைரியமா வெளியில சொல்றேன். என்னை மாதிரியே பாதிக்கப்பட்டவங்களும் ஃபேஸ்புக்கில் இதுபற்றி எழுதியிருக்காங்க. முக்கியமாக கோணங்கியோட அண்ணன் பையனே எழுதியிருக்கார். அதாவது, கோணங்கியின் அண்ணன் மகனின் நண்பனிடமும் கோணங்கி தவறாக நடந்துகொண்டிருக்கிறார். அவருடைய அண்ணன் ச.தமிழ்ச்செல்வனிடம் நான் இதைச் சொன்னதில்லை. ஏன்னா, அவர் வெளியூரிலிருந்து வந்து செல்வார்” என்கிற கார்த்திக் 'நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வியல்' தொடர்பான ஆராய்ச்சிப்படிப்பை முடிக்க இருக்கிறார். 

பாலியல் அத்துமீறல்
பாலியல் அத்துமீறல்


”கோணங்கி மன்னிப்பு கேட்டு மனம் திருந்தணும். இனி வேறு யாருக்கும் இந்தப் பாலியல் கொடூரம் நடக்கக்கூடாது. கோணங்கியால வேற யாரும் வாழ்க்கையை இழந்துடக்கூடாதுன்னுதான் இதுப்பத்தி எழுதினேன். நான், கோணங்கியால் பாதிக்கப்பட்டதை வெளியில சொன்னதும் பல பேர் பாதிக்கப்பட்டதாக ஃபேஸ்புக்ல் எழுதியிருக்காங்க. இதைப் பார்த்த, கோணங்கியின் தம்பி பூபதியின் நாடகக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி அந்தப் பதிவுகளை நீக்கச் சொல்றாங்க. எங்க அப்பா, அம்மா படிக்காதவங்க. நான், சாதாரண குடும்பத்திலிருந்து வந்திருக்கேன். கோணங்கி பெரிய செல்வாக்கு உடையவர். எங்களுக்கு எந்த சப்போர்ட்டும் இல்ல. தமிழக முதல்வரும் காவல்துறையும்தான் எங்களுக்குத் துணையா இருக்கணும்" என்கிறார் கோரிக்கையாக. 


நன்றி: விகடன் 02.03.2023


குற்றம் சாட்டப்பட்ட கோணங்கி: 


Published:Updated:

"என்மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கிறேன்!" - எழுத்தாளர் கோணங்கி நேர்காணல்


எழுத்தாளர் கோணங்கி
News
எழுத்தாளர் கோணங்கி

"என்மீதான பாலியல் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது. 'மணல் மகுடி' நாடகக்குழு ஓரிரு மாதங்களில் வெள்ளி விழாவைக் கொண்டாடவிருக்கிறது. இப்படி, அவதூறுகளைப் பரப்பி மணல் மகுடியையும் என்னையும் அழிக்க நினைக்கிறார்கள்" - எழுத்தாளர் கோணங்கி நேர்காணல்.

பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் கார்த்திக் மற்றும் பலர் பதிவிட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டு வாசகர்கள், இலக்கியவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து, குற்றச்சாட்டுக்குள்ளான கோணங்கியைத் தொடர்புகொண்டு பேசினேன். 

“இந்தக் குற்றச்சாட்டுகளையெல்லாம் மறுக்கிறேன்; நிராகரிக்கிறேன். என்மீது திட்டமிட்டே அவதூறுகளைப் பரப்புகிறார்கள். கார்த்திக் தம்பியின் கவிதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகளை 'கல்குதிரை'யில் வெளியிட்டு, அவரை நான்தான் வளர்த்தெடுத்தேன்.  தொடர்ந்து எழுதச்சொல்லி ஊக்கப்படுத்தியதால்தான் மொழிபெயர்ப்புக் கதைகளை அவரால் எழுத முடிந்தது. இப்போதும், அவருக்கான மொழிபெயர்ப்புப் பணிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இப்படி புகார் சொல்லும் கார்த்திக் தம்பியே, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் என்னைப் பற்றி உயர்வாக எழுதியுள்ளார். அந்த ஸ்கிரீன் ஷாட்டுகளையும் உங்களுக்கு அனுப்புகிறேன். புகழ்ந்துவிட்டு இப்போது இப்படி எழுதுவது நிச்சயம் உள்நோக்கம் கொண்டது.

எழுத்தாளர் கோணங்கி
எழுத்தாளர் கோணங்கி


அவரும் என்மீது புகார் கூறியுள்ள மற்றவர்களும் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இவர்களை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். 'மணல் மகுடி' நாடகக்குழு ஓரிரு மாதங்களில் வெள்ளி விழாவைக் கொண்டாடவிருக்கிறது. இந்தியா முழுவதுமிருந்து கலைஞர்கள் வரவிருக்கிறார்கள். இதனைக் கெடுக்கும் நோக்கத்தில்தான் அவதூறுகளைப் பரப்பி மணல் மகுடியையும் என்னையும் அழிக்க நினைக்கிறார்கள்" என்றவரிடம் "மணல் மகுடியின் பெயரைக் கெடுக்கத்தான் இப்படிச் செயல்படுகிறார்கள் என்றால், அதை இயக்கிவரும் உங்கள் தம்பி முருகபூபதிமீதுதானே புகார் தெரிவித்திருக்கவேண்டும்? உங்கள்மீது ஏன் புகார் கொடுக்கவேண்டும்?”என்று கேட்டேன்.


“மணல் மகுடி குழுவுக்குத் தேவைப்படும்போதெல்லாம் உணவு, பேருந்துச் செலவுகளுக்கு நான்தான் பணம் கொடுத்துவந்தேன். நண்பர்களையும் உதவி செய்ய வைத்திருக்கிறேன். அதனால்தான், எப்படியாவது என்னையும் மணல் மகுடியையும் அழிக்கப்பார்க்கிறார்கள். கடந்த 40 வருடங்களாக என் படைப்புகள் மூலம் சரியான திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். என் படைப்பு மொழி மேஜிக்கல் ரியலிசம் மாதிரி. தமிழில் நம் நாட்டார் மரபிலிருந்து கதை சொல்லும் மரபை நாவல்களில் பிரதிபலிக்கிறேன். தற்போதும், ஐந்தாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அது இன்னும் வாசிக்கப்படும்; பேசப்படும். 


எழுத்தில் மட்டுமே பிரதானமாக இயங்கிக்கொண்டிருக்கும் எனக்கு, இந்தக் குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. கடந்த இரண்டு நாள்களாக வேதனையில் இருக்கிறேன். இதற்காக, கார்த்திக் தம்பிமீது எந்த வருத்தமும் கோபமும் இல்லை. 'வளர்த்த கிடா மார்பில் பாயும்' என்பார்கள். அப்படித்தான், மார்பில் குத்தப்பட்டுள்ளேன்.  

கோணங்கி
கோணங்கி


இதிலிருந்து விடுபட கட்டாயம் நாள்கள் எடுக்கும். காலவெளியில் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று தனது தரப்பு விளக்கத்தை அளிக்கும் கோணங்கி, த.மு.எ.க.ச அமைப்பின் கண்டனத்திற்கும் அறிக்கைக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார். 


நன்றி: விகடன் 02.03.2023


கோணங்கி முருகபூபதி சகோதரர்களின் அண்ணன் ச, தமிழ்ச்செல்வனின் அறிவிப்பு: 


Tamil Selvan 


No doubt i stand with victims.i will do my best to correct konangi with utmost sincerity.மற்றவர்கள் போல கண்டனம் மட்டும் தெரிவித்துவிட்டு நான் சும்மா இருக்க முடியாது.எத்தனையோ எழுத்தாளர்களும் கலைஞர்களும் தோழமையுடன் வந்து கூடும் இடமாக எங்கள் வீடு இருந்துள்ளதுஅது தொடர வேண்டும் என விரும்புகிறேன்.அரவிந்த் சிவா உள்ளிட்டு யாருமே முன்பே என்னிடம் பேசவில்லை. தெரிந்திருந்தால் முன்பே தலையிட்டிருக்கலாம்.பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு என்ன ஆறுதல் தர முடியும் என்று தெரியவில்லை. மணல்மகுடியின் வெள்ளிவிழா நேரத்தில் இக்குற்றச்சாட்டுகள்  என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.இந்தச் சரிவிலிருந்து மீண்டெழுவது எப்படி என்றும் தெரியவில்லை.


தமுஎகசவின் கண்டனம்: