கடைசி பதிவு
By சதீஷ் குமார் :
July 31, 2019
(சோத்துக்கே சுண்ணியை ஊம்புபவன் நான். உங்களுடன் சமர் செய்ய என்னாலாகாது)
இந்த பதிவோடு இந்த பிரச்சினையை முடித்துக்கொள்கிறேன்.
பதிவை நீக்கியவுடன் நான் பின்வாங்கியதாக நண்பர்கள் சொன்னார்கள். அதுவும் சரிதான். பழைய பதிவை சேர்த்தே பதிவிட்டிருக்கிறேன்.
'இதை ஏன் பொதுவெளியில் பேசுற' என்றால்
"ஏன் பேசக்கூடாது" என்பதுதான் பதில்.
காலையில் இது குறித்து நெகிழன் அழைத்துப் பேசியபோது அவர் கூறிய நியாயங்கள் சரியாகத்தான் தோன்றியது. நான்தான் ஹரியின் உரையாடலை தப்பாக புரிந்துக்கொண்டேன் என்று நினைத்தேன். அதனால் என் பதிவை நீக்கினேன் இன்று.
ஆனால் மீண்டும் அன்று நிகழ்ந்த உரையாடல்களை திரும்ப யோசிக்கையில் அது அப்பட்டமான என்மீது அவர் நிகழ்த்திய உளவியல் வன்முறைதான் என்பது உறுதியானது. இப்படி பேசுவதும் பழகுவதும்தான் ஹரியின் இயல்பு அதில் எந்த உள்ளார்ந்த வஞ்சமோ கெட்ட எண்ணமோ இல்லை என்றார் நெகிழன்.
நல்லது. அப்படி பழகுவதுதான் அவர் இயல்பெனில் அதை நான் ஏன் ஏற்க வேண்டும்? அல்லது அதை சகித்துக்கொண்டு போகவேண்டும்.
அப்பறம் ஏன் அவர்கூட அவ்வளவு நேரம் இருந்த? என்ற கேள்விக்கு
முதலில் பொதுத்தளத்தில் நடந்துக்கொண்டிருந்த விவாதம்
ஆறுமணிக்குப் பிறகு தனிமனித பேச்சாக மாறுகிறது.
அவர் அப்போது யோசிக்கும் நிலையை எனக்கு அளிக்காத அளவுக்கு அவர் பேச்சு தீவிரம் அடைந்திருந்தது. அவர் சொன்னவற்றை ஜீரணித்து எழுத மூன்றுநாட்கள் ஆனது.(அவரை சந்தித்துவிட்டு வந்த நான்காம் நாளோ அல்லது ஐந்தாம் நாளோதான் அதைப்பற்றிய எழுதக்கூடிய தெளிவை மனம் அடைந்தது )
நெகிழன் இன்னொன்றையும் இன்று காலையில் என் பதிவில் பின்னூட்டத்தின் வழியாக கேட்டார்
"பஸ்ஸுக்கு 500 வாங்கிப்ப, அவர் காசிலேயே சோறு திண்ணுவ, சிகரெட்டும் குடிப்ப அவர் மேலயே அவதூறும் வைப்ப. அவர் செய்த தவறு உன்னைப்போன்ற அரைவேக்காடுகளிடம் லூசுக்கூதிகளிடமும் சரிசமமாக பேசியதுதான் " என்றார். மேலும் "நீ கற்புக்கரசன் தான் " என்று வாழ்த்தவும் செய்தார்.
நல்லது நெகிழன் ஐயா .
இரண்டு கேள்விகள் உங்களிடம்
1. என் போன்ற லூசுக்கூதிகளை சோறு வாங்கித்தந்து செலவுக்கும் காசு தந்து ஏன் உபசரிக்கிறார் அவர் ?
2.ஏன் திரும்ப திரும்ப யாரென்றே தெரியாத நேரில் பரிட்சயமில்லாத இந்த லூசுக்கூதிக்கு நாலைந்து முறை போன் செய்கிறார். எப்போது வருகிறாய் வருகிறாய் என.
எனக்கு அவரை இந்த சம்பவத்திற்கு முன்பு யார் என்றே தெரியாது. அவரும் அப்படியே. முகநூலில் முதல் நாள் அவர் நட்பழைப்பை ஏற்றவுடன், மறுநாள் சென்னை கோயம்பேட்டில் எனக்கு ஒரு போன் வந்தது. புதிய நம்பர்.
"வணக்கம் தம்பி. நான் மணல்வீடு ஹரி. மணல்வீடு இதழ் தெரியும் தானே"
"வணக்கம் அண்ணா. மணல்வீடு இதழை கேள்விபட்டிருக்கேன் ஆனா உங்களைத் தெரியாது. இவ்வளவு பெரிய ஆள் போன் பண்ணியது சந்தோசம்"
"பெரிய ஆள்லாம் இல்லீங்க தம்பி. உங்க பதிவுகள், கவிதைகள் எல்லாம் பார்த்தேன். நல்லாயிருக்கு .இன்னும் கொஞ்சம் ஊக்கப்படுத்துனா உங்களால இன்னும் தீவிரமா எழுத முடியும்"
"பாராட்டுனதுக்கு நன்றிகள் ணா. நான் சும்மா பொழுது போறதுக்காக எழுதுறேன். இந்த உலகத்த திருத்தனும் மாத்தனும்னு எழுதலீங்க. தீவிரமா எழுதவும் வராது அண்ணா."
"அப்படியெல்லாம் இல்ல தம்பி. இப்பதானே இந்த வட்டத்துக்குள்ள வந்திருக்கீங்க. போகப்போக தீவிரம் தானாவே வந்துடும்."
"சரிங்க ணா நானும் தீவிரமா எழுத முயற்சி செய்றேன்"
"இப்ப எங்க இருக்கீங்க"
"சென்னைல அண்ணா. சும்மா அப்படியே சுத்திப்பாத்திட்டு எழுத்தாளர்கள் யாரையாச்சும் பார்த்திட்டு போலாம்னு வந்தேன்"
"திருப்பூர்தானே நீங்க"
"ஆமாங்க ணா"
"எப்ப சென்னையிலிருந்து கிளம்புவீங்க"
"இன்னைக்கு நைட். டிரைன் ல"
"டிரைன் திருப்பூருக்கு சேலம் வழியாகத்தான் போவும். உங்களுக்கு நேரமிருந்தா அப்படியே இங்க வந்திட்டு போங்க"
"கண்டிப்பாக அண்ணா. நேரமிருந்தா வரேன்"
தொலைபேசி உரையாடல் முடிந்தது.
அவர் எண்ணை பதிவு செய்துக்கொண்டேன். பிறகு நான் மறந்துவிட்டேன் இந்த விசயத்தை. அன்றிரவே 'ஆலப்புழா எக்ஸபிரஸில்' ரயிலில் திருப்பூர்க்கு திரும்பிவிட்டேன்.
ஒருநாள் சென்று மறுபடியும் அழைத்தார். நானும் "நேரமிருந்தால் கண்டிப்பா வரேங்க" என்றேன். அதன் பிறகு ஒரு தடவையோ என்னமோ அழைத்தார். நான் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டேன். மிஸ்டுகால் வந்திருந்ததை பார்த்தேன். பேசும் மனநிலையில் இல்லாததால் திரும்ப அழைக்கவில்லை அவருக்கு. வேலைதேடி அலைந்து கொண்டிருந்த சமயம் அது. பிற்பாடு நடந்ததைதான் பெயர் குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தேன் .
நேற்று ஏன் பெயரை பதிவிட்டேன் என்றால் "இலக்கியம் பேச வா" என இன்னும் எத்தனை பேரை இப்படி ஒருமாத்திற்கு மேலாக என்னைப்போல் மன இறுக்கத்துடன் அலையவிடப்போகிறார் என்றுதான்.
நெகிழன் திரும்ப திரும்ப "அவர் உன்ன உடல்ரீதியா தொடலீல அப்பறம் என்ன பெரிய இவன் மாதிரி மனச சிதைச்சு அனுப்புனாரு சிதைச்சு அனுப்புனாருனு பெரிய யோக்கியன் மாதிரி பேசுற" என்கிறார் .
நல்லது ஐயா. உங்களுக்கு இது சாதாரணமாக தோன்றலாம். எனக்கும் அது சாதாரணமாகத்தான் தோன்றவேண்டும் அல்லது சாதாரணமாகத்தான் அதை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூற உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
"அவர் பெயரை நீ வெளிப்படையா பேசுனது தப்பு" என்கிறார் நெகிழன். ஹரி நல்லது செய்தால் அவர் பெயர் வெளியில் தெரியலாம். ஆனால் தப்பு செய்தால் (என்வரையில் இந்த சம்பவம் தப்புதான் வன்முறைதான்) பெயர் தெரியக்கூடாதா?
மேலும் நீங்கள் கூறியவை உண்மை என்றுதான் நான் நினைத்தேன் நெகிழன், உங்களிடம் உரையாடிய போது. பொதுவாக எனக்கு சிந்தனை வேகமாக செயல்படாது. மகா மந்தம் என் மூளை. அந்த நேரம் அப்படித்தான் தோன்றியது. அதனால் தான் பதிவை டெலிட் செய்தேன் .
ஆனால் நேரம் ஆகஆகத்தான் உங்களுடனான உரையாடலை திரும்ப அசைப்போடுகையில் நீங்கள் முழுக்க முழுக்க அவர் சார்பாக மட்டுமே பேசியிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. அவசர நேரங்களில் கூட சரியாக எல்லாக் கோணங்களிலும் சிந்திக்கத் தெரியாத என்னுடைய இந்த மகா மந்தமான மூளையால் நான் மிகவும் அவதிப்படுகிறேன். மேலும் அவர் நிறைய உதவி செய்வதாகவே இருக்கட்டும். அதற்காக அவர் எது செய்தாலும் உங்களை போன்றவர்கள் பரிந்து பேசலாம். எனக்கு எந்த அவசியமும் இல்லை. ஹரி அவர்களால் எனக்கு ஆகவேண்டியதும் ஒன்றுமேயில்லை .
அவர் இந்தப் பதிவிற்கு எதிராக அவரது நிலைப்பாட்டை என் தவறான, அவதூறான இந்த பதிவிற்கு மறுப்பு தெரிவித்து ஒரு பதிவிடலாம். அதைத்தான் நான் அவரிடம் எதிர்பார்த்ததும் கூட. இல்லையெனில் நான் லூசுக்கூதியென அவர் கண்டுக்காமல் விட்டுவிடலாம்.
நேரில் சந்திக்கிறேன். தன்னிலை விளக்கமளிக்கிறேன் என சொல்ல வேண்டாம். காரில் நானகைந்து பேரை அழைத்துக்கொண்டு திருப்பூர் வரவேண்டாம் என்னிடம் பஞ்சாயத்து பண்ண.
நான் சோத்துக்கே சுண்ணியை ஊம்பிக்கொண்டிருக்கும் இந்திய குடிமகன்களில் ஒருவன். என்னால் உங்களைப்போன்ற அதிகாரங்களுடன், பண பலத்துடன் மோதவியலாது .
ஆதலால் என்னை புறரீதியாக ஏதேனும் துன்புறுத்த நினைத்தால் இந்த பதிவைவிட விரிவான ஒரு பதிவெழுதி "எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் இன்னார்தான் காரணம் என" தெரிந்த வக்கீல் ஒருவருக்கு இன்று காலையே மெயில் அனுப்பிவிட்டேன்.
நான் எழுதியிருந்த பதிவு என் மனசாட்சிப்படி சத்தியம் நிறைந்தது. நீங்கள் இதை மறுத்து ஒரு பதிவிடுங்கள் .இவன் இந்த லூசுக்கூதி என்மேல் அவதூறு பரப்புகிறான். யாரும் நம்ப வேண்டாம் என.
மீண்டும் எனது நிலையை சொல்லிக்கொள்கிறேன். நான் சோத்துக்கே சுண்ணிய ஊம்பிக்கொண்டிருக்கும் இந்தியகுடிமகன்களில் ஒருவன். என்னால் உங்களோடெல்லாம் சமர் செய்யவியலாது. முடிந்தால் பதில் பதிவு எழுதுங்கள். மறுப்பு தெரிவியுங்கள். இல்லையேல் "போட லூசுப்புண்ட" என உங்கள் நல்வழியில் நீங்கள் செல்லுங்கள்.
நன்றி வணக்கம் .
கீழ்கண்ட பதிவில் நான் குறிப்பிடும் நபர் "மணல்வீடு ஹரிகிருஷ்ணன்" தான். எனக்கு அவர்மீது எந்த வன்மமும் இல்லை. அவரால் எனக்கு ஆகவேண்டியது என எதுவுமே இல்லை. நான் ஒரு இலக்கிய வாசகன் அவ்வளவே. இந்த ஒரு புள்ளிதான் அவரை நம்பிக்கையுடன் அணுக வைத்தது .
ஆனால் என் போன்ற ஓரளவு புத்திசுவாதீனமுள்ள, தன்னிச்சையாக முடிவுகளெடுக்கும் ஒரு நபரையே இந்த அளவுக்கு உளவியல் ரீதியாக சிதைத்து, தன் ஆசைக்கிணங்க வைக்கும் கீழ்மைதான் வருத்தமளிக்கிறது.
இதை பொதுவெளியில் பேசித்தான் ஆகவேண்டுமென ஒரு கட்டாயம் ஏன் உருவாகியிருக்கிறது எனக்கு என்றால், பின்வரும் காலங்களில் இவர் வாய்ப்பு கிடைத்தால் சிறுவர்களை இந்தமாதிரி வசியம் செய்து மயக்கி தன் இ்ச்சையை தீர்க்கமாட்டார் என எப்படி நம்புவது?
ஹரிகிருஷ்ணன் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?
பசித்த மானுடமும்
உன்னத சங்கீதமும்
.......
நான்கு நாட்களுக்கு முன்னர்
முகநூல் மூலமாக அறிமுகமான ஒரு இலக்கிய அன்பரை திருப்பூரில் சந்திக்க நேர்ந்தது. அவர் அலுவல் காரணமாக திருப்பூர் வந்திருப்பதாக சொன்னார்.
நான் வேலைக்குப் போகாமல் பரதேசி மாதிரி அலைந்து கொண்டிருந்த நாள் ஒன்றில் தான் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.
என் கையில் இருபது ரூபாய்தான் இருந்தது .பொதுவாகவே இலக்கியவாதிகள் பிச்சைக்காரர்களாகத்தான் இருப்பார்கள் எனும் பொதுப்புத்தியில் அவருக்கு ஒரு 'டீ' யாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என சிகரெட் குடிக்காமல் அந்த இருபது ரூபாயை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன் .
அவர் காரில் வந்திருந்தார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. வாங்க சாப்பிடலாம் என ஒரு உயர்ரக உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார்.
நான் வெட்கத்துடனே அவர் வாஙகித்தந்த 'வெஜிடபிள் ரைஸை' தின்றேன்.
அவர் தான் பணம் செலுத்தினார் சாப்பிட்டதற்கு. என் பாக்கெட்டில் இருந்த கசங்கிய இருபது ரூபாய் இயலாமையால் மேலும் கசங்கியது.
காரில் ஏறினோம். "தம்பி ஃபிரியாதான இருக்கீங்க. நம்ம ஊருக்கு போகலாமா" என்றார் .
நானும் வெட்டியாத்தானே போவோம் என நினைத்தேன். ஆனால் திரும்ப திருப்பூர் வருவதற்கு பேருந்துக்குப் பணமில்லை என்பது தயக்கமாக இருந்தது .
அவரிடம் "திரும்ப வர பஸ்ஸுக்கு கூட பணமில்லீங்க" என்றேன் .
அவர் "வாங்க தம்பி பார்த்துக்கலாம்" என்றார் .
நானும் "கார்லாம் வச்சிருக்குறாரு பணம் நிறைய இருக்கும் போல" என அல்பத்தனமான சிந்தனையுடன் "சரிங்க" என்றேன் .
கார் கிளம்பிற்று பெருந்துறை சாலையில். அவர் நடத்திக் கொண்டிருந்த சிற்றிதழின் இந்த மாத பிரதியொன்றை படிக்கத் தந்தார். நன்றாகத்தான் இருந்தது. சேலம் நெடுஞ்சாலையில் கார் வேகமெடுத்தது. திடீரென சென்னையில் நடைப்பெற்ற 'Pride day' பற்றி பேச்சை ஆரம்பித்தார்.
"தம்பி மூன்றாம் பாலினத்தவரின் உடல் தேவைகள் குறித்தும் அவர்களுக்கான சமூக அங்கீகாரம் குறித்தும் என்ன நினைக்கிறீங்க. இயற்கைக்கு மாறான இந்த உறவ தப்பு நினைக்கிறீங்களா " என்றார்.
நான் "செக்ஸ் அவுங்க அவுங்க விருப்பம் சார்ந்தது. ஆணோட ஆண் வச்சிகிட்டாலும், பெண்ணோட பெண் வச்சிக்கிட்டாலும் அது அவுங்களோட தேர்வு. நாம யாரு அது தப்பா சரியானு முடிவு பண்ண. அவங்களையும் இந்த சமூகம் அங்கீகரிக்கத்தான் வேண்டும் .அவங்களுக்கும் உரிமை இருக்குல நம்மள மாதிரி வாழ்றதுக்கு" எனக்கு தெரிந்த அரைகுறையான புரிதலை அவரிடம் சொன்னேன்.
"தம்பி உங்களிடம் ஓர்பாலின ஈர்ப்பு உள்ள ஒரு நபர் செக்ஸ் வச்சிக்கலாம்னு கேட்டா என்ன செய்வீங்க" என்று கேட்டார்.
"எனக்கு இயல்பா பெண்கள் மேலதான் ஈர்ப்பு. அதுக்குனு ஓர்பாலின புணர்ச்சி தப்புனு சொல்ல மாட்டேன். என் இயல்பு பெண் மீதான ஈர்ப்புதான்." என்றேன் .அதோடு சில ஆண்கள் என்னை உடல்ரீதியாக தீண்டியதையும் அது தந்த ஒவ்வாத உணர்வையும் அவரிடம் தெளிவாக சொன்னேன்.
அவர் "தம்பி நீங்க செஞ்சது தப்பு. உங்கள அந்த ஆண்கள் எவ்வளவு பசியோட அணுகியிருக்காங்க. நீங்க அவங்களோட உணர்வுகளை மதிச்சிருக்கனும். உங்களுக்கு அந்த உணர்வு ஒத்துக்கலனு சொல்றீங்க. அப்படி சொல்றது தப்பு. அவங்க கூட நீங்க செக்ஸ் வச்சிருந்திருக்கனும் .அதுக்கப்புறம்தான் உங்களுக்கு அந்த உணர்வு பிடிக்குதா இல்லியானு சொல்லலாம். நீங்க அந்த ஆண்கள்ட மனிதாபிமானமே இல்லாம நடந்துகிட்டீங்க" என்றார்.
நான் மீண்டும் "அண்ணா, என்ன பொறுத்தவரைக்கும் செக்ஸ் என்பது முழுக்க முழுக்க என் விருப்பம் சார்ந்துதான் இருக்கனும் னு நினைக்கிறேன். எனக்கு விருப்பமில்லீனா யாரையும் தொடமாட்டேன். தொடவும் விட மாட்டேன்." என்று வீர வசனம் பேசி கடுப்பேத்தினேன் அவரை.
"தம்பி விருப்பமிருந்தாதான் பண்ணுவேன் சொல்றீங்க. கல்யாணம் பண்றீங்க செவ்வாய் கிழமை உங்க பொண்டாட்டி கூட செக்ஸ் வச்சிக்குறிங்க. புதன் கிழம உங்க பொண்டாட்டி செக்ஸ் வேணும்ங்கிறா ஆனா அப்ப உங்களுக்கு விருப்பமில்ல. ஆனாலும் அவ கூட படுப்பீங்க. அந்த மாதிரிதான் சக மனுசன் காமத்தால் தகிக்கிறப்ப நீங்க ஏன் மனிதாபிமான அடிப்படையில் அவங்க கூட செக்ஸ் வச்சிக்க கூடாது?" என்றார்
நான் மீண்டும் "அந்த உணர்வு எனக்கு வந்தா செக்ஸ் வச்சிப்பேன். ஆனா வராதப்ப எப்படி நான் அதுக்கு ஒத்துக்க முடியும், என் இயல்பு அது இல்லீங்க ணா" என மீண்டும் கடுப்பேத்தினேன்.
அவர் கோபமான முகத்துடன் காட்சியளித்தார். உரையாடல் அறுந்து போயிற்று.
மாலை 5.30
அவர் வீட்டுக்கு சென்றோம். பிறகு "வா தம்பி ஊர சுத்திப்பார்கலாம்" என டூவீலரில் அழைத்துச் சென்றார். ஒரு இரண்டு கிலோ மீட்டர் சென்றவுடன் மீண்டும் ஓர்பாலின ஈர்ப்பை பற்றிய பேச்சை ஆரம்பித்தார் . எனக்கு gay, lesbian, தகாத உறவு , என எவற்றின் மீதும் வெறுப்புக் கிடையாது. ஆனால் இவர் என்னை 'குண்டியடிக்க' மறைமுகமான முறையில் சமிக்ஞைகளை, உதாரணங்களை, தனக்கு ஏற்பட்ட ஆணுடனான முதல் புணர்ச்சியை, அதன் வெறியை, காமத்தை ஒரு நாடகம் போல் நிகழ்த்திக் காட்டினார் சொற்களால்.. கடைசியாக ஒரு பள்ளிச்சிறுவனுடன் வைத்துக்கொண்ட உறவு வரை பேசி தீர்த்தார்.
எனக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்திருந்தது. வண்டி எங்கே செல்கிறது என தெரியவில்லை. 'தெரியாம வந்து மாடடிகிட்டடா சதீஷ்'னு மனசு கத்த ஆரம்பிச்சிடுச்சு. நம்மள எங்கயோ காட்டுக்குள்ள அழைச்சிகிட்டு போயி இந்தாளு குண்டியடிக்கப் போறான் என மனம் வேகமாய் இவனிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என கணக்கு போட ஆரம்பித்தது. நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை.
ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள ஒரு சாலையில் வண்டியை நிப்பாட்டினார். மதகுக் கட்டையில் இருவரும் அமர்ந்தோம்.
நான் சிகரெட்டை எடு்த்து பற்ற வைத்துக் கொண்டேன் (அவர் காசில் வாங்கியது தான்). கொஞ்சம் இலக்கியம் பேசினார். இவங்களப் படி. ஒரே ஆளை எப்பவும் கொண்டாடாத. பிரபலங்களை மட்டும் வாசிக்காத. முன்மடிவுகள் இல்லாம எந்த படைப்பாளியையும் அணுகு. இந்த காலத்து பசங்களோட பெரிய குறை எந்த ஒரு விசயத்திலும் தீவிரத்தன்மை இல்லாத விட்டேற்றி அல்லது சோம்பேறி தனம்தான்.
மீண்டும் உரையாடலை செக்ஸ் பற்றி ஆரம்பித்தார். நான் மீண்டும் 'செக்ஸ் விருப்பம் விருப்பம் சார்ந்தது' என சொன்னேன்.
திடீரென பெருங்குரலில் "என்ன நானும் சொல்லிகிட்டே இருக்கேன். விருப்பம் விருப்பம்னுட்டு. உன்ன இப்பவே பக்கத்துல இருக்குற சோளகாட்டு தூக்கிட்டுப் போயி அவுத்து போட்டு ஓக்குறேன். பார்க்கிறியா" என்றார்.
குரலில் உஷ்ணம்.
எனக்கு பயமாகத்தான் இருந்தது. ஆனால் சிகரெட்டை புகைத்தபடி இயல்பாக அமர்ந்திருந்தேன்.
பயம் தேகம் முழுக்க பரவத் தொடங்கியிருந்தது.
'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' உக்காந்திருந்தேன்.
மீண்டும் சூட்சுமமாக என்னைப் படிய வைக்க ஏராளமான உதாரணங்கள், கோட்பாடுகள், நல்போதனைகள் என இரவு பத்துமணிவரை தாலியை அறுத்தார். எதுவும் நடக்கவில்லை. அவர் வீட்டுக்கு சென்றோம். சாப்பிட்டோம். பிறகு கூடத்தில் ஒரு கட்டிலில் படுக்கச் சொன்னார். படுத்தேன்.
காலையில் சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது. எழுந்து ஓடிவிடலாமா என்றுதான் இருந்தது. ஆனால் கொஞ்சம் நாகரீகம் கருதி ஓடவில்லை.. கடைக்கு சென்று இரவு பேருந்திற்கு அவர் கொடுத்த ஐநூறு ரூபாயில் நாலு கோல்டுபில்டர் சிகரெட் வாங்கி ஊதிவிட்டு மீண்டும் அவர் வீட்டுக்கு சென்றேன். காபி கொடுத்தார்கள். குடித்தேன்.
அவருடன் ஒரு அரைமணி நேரம் புத்தகங்கள் குறித்தும் இலக்கியவாதிகள் குறித்தும் காரசாரமான உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். முதல் நாள் மதியத்திலிருந்து காலை வரை அவர் மட்டும்தான் முக்கால்வாசி பேசினார். நான் 'ஆம், இல்லை, உண்மைதான், முயற்சிக்கிறேன்' என சில வார்த்தைகளைக் கொண்டு தப்பித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக எட்டரை மணியளவில் '"சரிங்க அண்ணா. கொஞ்சம் வேலை இருக்கு கிளம்புறேன்" என்றேன். அவர் சில புத்தகங்களையும் சிற்றிதழ்களையும் என்னிடம் தந்தார். நானும் வாங்கி வைத்துக் கொண்டேன்.
பேருந்து ஏற்றிவிடும் முன் மீ்ண்டும் ஒரு அரைமணி நேரம் என்னை படிய வைப்பதற்கான ஆசை வார்த்தைகள்.
கடைசியாக "இங்க எல்லாமே எதிர்ப்பார்புகளோடத்தான் நடக்குது தம்பி. இந்த தடவ இல்லினாலும் அடுத்த தடவ இங்க உன்ன நான் கூப்பிட்டா ஓக்க கண்டிப்பா கூப்பிடுவேன்" என்றார்.
என் மனம் கசங்கத் தொடங்கியிருந்தது. குண்டி கொடுக்க விருப்பமில்லாத ஒருவனை குண்டி கொடுக்க சம்மதிக்க செய்வதற்கு மனரீதியாக இப்படி வன்புணர்வது பெரும் உளைச்சலாக இருந்தது. அதுவும் இலக்கியம் நன்கு தெரிந்த ஒருவர் என் விருப்பமின்மையை அறிந்தும் இப்படி மணிக்கணக்கில் என் தாலியை அறுத்தது கசப்பாக மாறிவிட்டது.
பேருந்து திருப்பூர் நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்து..
அவர் மீது வருத்தமிருக்கிறது ஆனால் வெறுப்பில்லை. இலக்கியம் என்ற ஒரே ஒரு புள்ளியை நம்பி உங்களுடன் வந்தவனை இப்படி மனரீதியாக சிதைத்து அனுப்புவது என்னமாதியான இயல்பு?
மணல்வீடும் குண்டியடிக்கக் கூப்பிடும் கலையும் pdf