25 June 2011

சுஜாதாவுக்கு நெரி கட்டுவதன் மர்ம விளக்கம்.


இருபதாம் தேதி ஜெமோவின் அலெக்ஸா ரேட்டிங்கை ட்விட்போட்டு பஸ்ஸ்விட்டு ஃபேஸ்புக்கில் எழுதினால் இருபத்து நாலாம் தேதி சுஜாதாவுக்கு நெரி கட்டுவதன் மர்ம விளக்கம்.

@maamallanவிமலாதித்த மாமல்லன்
இணையத்தின் முடிசூடா மன்னன் எழுத்தாளர் ஜெயமோகனை இன்னும் அதிகமாய் எழுத வைப்பது எப்படி? # அலெக்ஸாவின் தற்போதைய நிலவரம் 197,887 - 25,968

சுஜாதா June 24th, 2011

தளம் காத்து வாங்கும்போதெல்லாம் ஏதாவது சர்ச்சையை இணையத்தில் கிளப்பிக்கையில்பிடி தத்துவம்.

எழுதியது எவராலும் பாராட்டப்படுமா என்பதல்ல, பிரசுரமாவதற்குக் கூட சாத்தியம் இல்லை என்றாலும் எழுதுபவனுக்குப் பெயர்தான் இலக்கியவாதி. எழுதாதபோதும் எழுதிக் கொண்டு இருக்கமுடிபவனே இலக்கியவாதி.

அலெக்ஸாவைப் பார்த்தே பதற்றத்துடன் வாழும் அமரிக்கைப் பிழைத்தோற்ற இலக்கியவாதி ஜெயமோகன்.

ஏற்கெனவே ஒருமுறை பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்திற்கு அடியில் அலெக்ஸா பற்றியும் கைமுட்டி மணிக்கட்டுகள் தேய எழுதிக் குவித்தாலும் அலெக்ஸாவில் சவுக்கு சாரு வினவுக்குப் பின்னாலேயே, ஜெயமோகன் இடம்பெறுவதையும் அவரது பாஷ்யப் பதிப்பாளரிடம் குறிப்பிட்ட இரண்டாம் நாள், சிவராம் என்பவர் அலெக்ஸா ரேட்டிங் பற்றிக் கேள்வி கேட்க, ஜாக்கிசேகரின் நாமத்தால் காலட்சேபிக்கிறார் ஜெயமோகன். பாவம்! வரலாற்றைத் தாண்டிய இலக்கிய இமயம் இறங்கி வந்து பதில் சொல்வதைப் பாருங்கள்.

<சாரு நிவேதிதாவின் இணையதளம் பற்றிச் சொன்னீர்கள். ஆனால் அவரது இணையதளத்தைவிட ஜாக்கி சேகர் என்பவரது இணையதளம் அலெக்ஸா மதிப்பீட்டில் உயர் இடத்தில் இருப்பதை நீங்கள் காணலாம்.>


அதற்கு ஜ்யோவ்ராம் சுந்தரின் பஸ்ஸில்,

விமலாதித்த மாமல்லன் - அலெக்சா ரேட்டிங்கில் சவுக்கு, சாரு, வினவு போன்றோருக்குப் பின்னாலெயே ஜெமோ இருப்பதாக சென்னையில் டீகுடித்தபடி பேசியது அடுத்த நாள் சிவராமனாகிவிடுகிறதே! 

இந்தப் பூவை இங்கேப் போட்டால் அது எங்கே போய்ச் சேரும் எனத் தெரியாமலா வீதிக்கு வந்திருக்கிறோம். 

யூகங்களை முதல்கையாக ஊர்ஜிதப் படுத்திக்கொண்டால் தார்மீகம் கூடும். 13 Nov 2010 - Edit

எந்தக் கருமத்தையாவது எழுதிக்கொண்டே இருப்பவன் ஓஸியில் தினந்தோரும் வாசிக்கக் கழுநீர் தொட்டியாய்க் கலக்கி வைத்துக் கொண்டு இருப்பவன் மட்டுமே இணையத்திற்கு இலக்கியவாதி என்பது ஒரு எளிய உண்மை. 

ஆனால், ஏதோ தானே சாம்ராட் என்பது போன்ற, புஜக்கிரீட போஸுக்குப் புகைப்பட ஆதாரம்போல் அலெக்ஸாவைக் காட்டி, வெகுஜனப் பத்திரிகையின் அச்சுவெளிக்கு அப்பால் செவ்வாய்க் கிரகம் நோக்கிய துரித பயணத்தில் இருப்பதான கித்தாப்பு பாவனை.

மும்மூர்த்திகள் இணையத்தின் விஸ்தாரக் குட்டையின் எருமையூறலில் ஏன் திளைத்தவண்ணம் இருக்கிறர்கள் என்கிற புதிருக்கு எளிய விடை.