19 September 2011

இலக்கியம், கெளரவ ஜெபமாலை உருட்டலில்லை.

சண்டை நம் ஈகோவுக்காக இல்லாமல் நமக்கு சரியெனப்படும் இலக்கிய தரப்பிற்கானது எனில் கட்டாயம் இலக்கியத்தரமாக அமைந்தே தீரும் # ’தரம்’ என்பது உயர்தர ஜெபமாலை உருட்டலில்லை.

Saroja Saroja Nagaikavin Nagaikavin சரிதான் ஆனால் இலக்கியச்சண்டை மட்டும் எப்படி உயர்தரமகும்

தன் சார்பை நிறுவப்பார்ப்பதற்கும். தன்னை நிறுவப்பார்ப்பதற்கும் வித்தியாசம் துல்லியமானது. தனக்குச் சரியெனப்பட்ட சார்பை நிலைநிறுத்தப் போராடினால் தமிழின் முன்னோடிச் சாதனையாளர்கள் போல் என்றேனும் ஒருநாள் எதிர்காலத்தில் சிலையாகக்கூடும். தன் சிலையை நிறுவ இடம்தேடி தானே தன் தலைமேல் தூக்கிகொண்டு திரிவது, பாரம் மட்டுமல்ல, பரிதாபம். 

இலக்கிய சண்டை என்று வந்தால் கெட்ட வார்த்தையில் ’மட்டுமேவா’ திட்டிக் கொள்ளப்போகிறோம். ’கூடவே’ ரசனைபூர்வமாகவும் தர்க்கபூர்வமாகவும் நுணுக்கங்கள் சார்ந்தும் விவாத சமர் புரிந்து அவரவர் தரப்பை நிறுவப் பார்க்கையில் இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்கள் நமக்கே பிடிபடும்போது இலக்கியத்தின் தீவிர வாசகர்களுக்கு பொருட்படுத்தத் தக்கதாய் இல்லாமல் போய்விடுமா என்ன? அப்படியே போனாலும் யாருக்கு நஷ்டம். விளக்கு வைக்கும்முன் விற்று முடிய வேண்டுமே என்று விசனப்படுவதா இலக்கிய இயக்கம்?

அசட்டு ஆசா பாசம் என்றெழுதும் ஆபாச நெஞ்சுத்தடவலுக்காய் சப்புக்கொட்டும் ஜனரஞ்சக வாசகர்களுக்கு வேண்டுமானால் இலக்கியச் சண்டைகளைப் பார்த்து அசூயை ஏற்படக்கூடும். 

சம்மட்டி அடிவிழுந்து, நெருப்பாய்க் கனலும் இரும்புத் துண்டம், பளபளக்கும் வாளாகிக்கொண்டிருக்கும் கொல்லன் பட்டறையில், இந்தக் கொசுக்களுக்கு என்ன வேலை?