03 September 2011

கோலி சோடாவும் காலி சோடாக்களும்

ஊழல் செய்யும் உயர் அதிகாரிகள்மேல் வழக்குத்தொடுக்க வேண்டுமென்றால் துறையிலிருந்து அனுமதி வாங்க வேண்டும் - பஸ்ஸில் உதிர்க்கப்பட்ட முத்து.

அதாவது இப்போது இருக்கும் சட்டங்கள் எல்லாம் ஊழலுக்கு சாதகமாகவே உள்ளன. ஊழல் அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய இயலாது. ஆகவே ஹசாரேவின் ஜன்லோக்பால் ஒன்றே தீர்வு.

கட்சிக்காகக் கோலி சோடாவைத் தானே உடைத்துக் குடித்துக்கொண்டு எதிரில் புழுதி அளைந்து விளையாடி குஷித்திருக்கும் சிறுவர்களைத் தன் பேச்சைக் கேட்க உட்கார்ந்திருக்கும் எம் எல் ஏ எம் பிக்களாய் பாவித்துக்கொள்ளும் கடைக்கோடிப் பேச்சாளன் கூட இன்னும் கொஞ்சம் விவரமாய் இருப்பான்.

Speaker's Secretary sacked after CBI registers case

ஐயா மொக்கச் சாமிங்களா சிபிஐ அரெஸ்ட் பண்ணினா இன்னா பக்கோடாவா குடுப்பாய்ங்க. உடனடியா வேலை நீக்கம். 

Later in the day, Mr. Pathak was removed from the post with immediate effect.

பாராளுமன்ற சபாநாயகரின் பி.ஏ என்றால் எவ்வளவு பெரிய ஐஏஎஸ் அதிகாரியாக அவர் இருந்தாக வேண்டும்.

Mr. Pathak joined the Speaker's office in June and had recently been included in the Joint Secretary scale. 

He was earlier posted as COFEPOSA Director under the Ministry of Finance and also worked with a former Union Minister of State.

இவரைக் கைது செய்ய எவரிடம் அனுமதி வாங்கினார்கள்? அதுவும் இவர் ஒன்றும் கையும் களவுமாய்ப் பிடிபடவில்லை. வருமானத்திற்கும் மேலாய் சொத்து சேர்த்த கேஸ் இது.

ஐஏஎஸ் ஐஆர்எஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எல்லாம் சென்ரல் விஜிலென்ஸ் கமிஷன் மட்டும்தான் கிளியரன்ஸ் கொடுக்கணும். அது பர்மிஷன் அல்ல கிளியரன்ஸ். ஆம் இவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டிற்கு அடிப்படை உள்ளது என்று சிவிசி முதற்படியாய் அதனிடம் சமர்ப்பிக்கப்படும் தடயங்களைச் சரிபார்த்துக் கொள்கிறது. தடையங்களை அதன் முன் சமர்ப்பிப்பவர்கள் சிபிஐ. மிக மிக ரகசியமாக சம்பந்தப்பட்ட துறைக்கோ அல்லது எவருக்குமேவோ தெரியாமலேதான் ஃபைல்கள் பரிசீலிக்கப்படும்.

தொடர்புடைய துறைக்குத் தெரியவந்தால் அவ்வளவுதான், குற்றம்சாட்டப்படுபவர் வீட்டில் ஒன்றுமே இல்லாமல் ஒழித்துவிட்டு ஒட்டுத்துணியைக் குண்டிக்கு முன்புறம் பிடித்தபடி அல்லவா சோதனைக்குழுவை வரவேற்பார்.

சிவிசியின் ஆணையைக் கறாராக சிபிஐ நிறைவேற்றியாக வேண்டும்.

The CBI officials on Friday searched the premises of Mr. Pathak after the case was registered against him on reference from the Central Vigilance Commission (CVC).

சிபிஐ அதிகாரிகள் தங்கள் கடமையைச் சரியாய் செய்கிறார்களா என கண்காணிக்க விஜிலென்ஸ் போல சிபிஐயின் சிறப்புப் பிரிவு செயல்படுகிறது.

பல வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்.

காலிஸ்தான் பயங்கரவாதிகள் தீவிரமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஒருவர் தீவிரவாதிகள் இருவருடன் பல லட்சங்களுக்குப் பேரம் பேசிக்கொண்டிருந்தார். இடைத்தரகர் போல இவ்வளவு கொடுத்தால் கேஸ் வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று. பணம் கைமாறும் போது கையும் களவுமாய்ப் பிடிக்கப்பட்டார்.

பணம் வாங்கிக்கொண்டிருந்தவர் யார் என்கிறீர்களா? சிபிஐயின் இணைஉயர் அதிகாரியாய் இருந்த ஐபிஎஸ்காரர்.

பிடித்தவர்கள் யார் தெரியுமோ? கெஸட்டட் பதவியில் கூட இல்லாத இரண்டு சாதாரன இன்ஸ்பெக்டர்கள். இவர்கள் இருவரும் அதிகாரியைக் கண்காணிக்கிறார்கள் என்கிற விஷயம் சிபிஐயின் ஒரே ஒரு அதிஉயர் அதிகாரியைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.

பெர்மிஷன் வாங்கித்தான் ஏதும் செய்யமுடியும் என்பதற்கு இது என்ன ஆத்துக்காரி மேட்டரா ஓய்?

இணையத்தில் எழுத ஒரு புண்ணாக்கு மசுரும் தேவை இல்லை. நாலு ஃபாரம் தேறினால் புக்காக்க காத்துக்கொண்டிருக்கும் காலத்தில் எல்லோரும் எழுதித்தள்ள வேண்டியதுதான்.

அந்தக்கிழவர் இன்னும் இரண்டு வாரம் கூடுதலாக உண்ணாவிரதம் இருந்து ஆறு கிலோவுக்குபதில் பன்னிரண்டு கிலோ இளைத்திருந்தால் இன்னும் அறுபது கட்டுரைகள் சேர்ந்து புக்கு இன்னும் தண்டியாய் ஆகி இருக்கும்.