18 September 2011

ஊழலுக்கெதிரான தீவிர தேசப்பணி

வங்கிக் கடன்கூட முதல் வீட்டிற்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கிறது. காரணம்,முதல் வீடு எல்லோருக்கும் அடிப்படை அவசியம். இரண்டாவது வீடு என்பது சொகுசு. 

ஏற்கெனவே சொந்த வீடு வைத்திருக்கும் அரசு ஊழியருக்கு இரண்டாவது வீடு வாங்க, அவருடைய சேமிப்பான GPF / PFலிருந்துகூட திருப்பிக் கட்டவேண்டாத பகுதி இறுதி எடுப்பாகப் பணம் எடுக்க முடியாது. தன் பணத்தையேக் கடனாகப் பெற்று திரும்பச் செலுத்துவதாய் இருந்தால் மட்டுமே பணம் எடுக்க அனும்தி கிடைக்கும். இரண்டாவது வீடு ஆனால் மனைவியின் பெயரில் முதலாவதாய் வாங்குகிறேன் என்றாலும் பணம் கிடைக்காது. காரணம், சொந்த வீடே இல்லாதவர்களுக்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்பதுதான்.

82லையே 2400 சதுர அடியில் தன் பேர்ல வீடு வாங்கி, 1994ல் 9600 சதுர அடியில் (சல்லிசான விலையுள்ள வீடு) வீட்டுமணைக் கூட்டுறவு சங்க விதியை மீறி ரெண்டாவது வீட்டுமணை வாங்கி, 2006ல வூட்காரம்மா பேர்ல 4012 சதுர அடியில் வீட்டுமணை வாங்கி உஸ்ஸப்பா என்று ஊழலை விசாரிக்க வந்து உட்கார்ந்து இருக்கிறார் கர்நாடக லோக் அயுக்தா அவர்கள்.

Conceding that every member of a housing cooperative society is required to file an affidavit stating that he or she does not own any other residential property, Mr. Patil said, “But in the case of judges, we were not required to file any affidavit. Neither were we asked nor did we give an affidavit. I did not file any affidavit for the Nagawara site also.”
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் எல்லோரும், தமக்கு ஏற்கெனவே சொந்த வீடு/வீட்டு மணை இல்லை என்று ஒப்புகை அளிக்க வேண்டும் என்பது முன்நிபந்தனை. ஆனால் இவரோ நீதிபதிகள் என்பதால் இது எங்களுக்கு இல்லை. போகவும் இது பற்றி என்னிடம் யாரும் கேட்கவில்லை நானும் கொடுக்கவில்லை, முதல் வீடு மட்டுமல்ல மனைவிபெயரில் இருக்கும் இரண்டாவதையும் தெரிவிக்கவில்லை என்கிறார்.

மேற்குறிப்பிட்டதெல்லாம் அரசு ஊழியருக்குதான் நீதிபதியான நான் அரசிடம் சம்பளம் வாங்கும் ஊழியன் இல்லை ஆகவே இது எனக்கு செல்லாது என்றால், Section 10 (b) of the bylaws of the Judicial Employees Society states that the allottee must be “an employee of the judicial department” and should have “put in a minimum continuous or intermittent service of five years in Karnataka.” அவருக்கு மட்டுமல்லாது எந்த நீதிபதிக்குமே இந்த வகையில் வழங்கப்பட்ட வீட்டுமணை முறையானதல்ல.

லோகயுக்தா ஆனதும் சொத்து விபரம் தெரிவிக்கையில் வீடுகளிருப்பதைச் சொன்னவர் கூட்டுறவு சங்கத்தின் ஒதுக்கீட்டில் வாங்கப்பட்டதைத் தெரிவிக்கவில்லை. காரணம், RTIயில் எவனாவது கேட்டுவிடப்போகிறானே என்பதைத்தவிர வேறு என்னவாக இருக்கக்கூடும்?

உச்சநீதிமன்றமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குக் கீழ் வருவதையும் அதை நடைமுறைப் படுத்துவதையும் பாருங்கள் http://supremecourtofindia.nic.in/rti.htm. உச்ச நீதிமன்றமும் எல்லா அரசு அலுவலகங்களையும் போல தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பங்கள் பற்றி அதன் தளத்திலேயெ அறிவித்தாக வேண்டும். தொடக்க நிலுவை எவ்வளவு எத்துனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன எவ்வளவுக்கு பதில் கொடுக்கப்பட்டன எவ்வளவு நிராகரிக்கப்பட்டன எந்த அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன இன்னமும் பதிலளிக்கபடாதவை எத்துனை என்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கிறது http://supremecourtofindia.nic.in/rti/rti_apr2011tojune2011.pdf

இப்படி, விவகாரமான விஷயங்களை வெளிக்கொண்டுவருவதன் மூலம் ஊழலைக் கட்டிற்குள் கொண்டுவரலாம் என்கிற நம்பிக்கையில் கொண்டுவரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச்சட்டம். இதுவரை இதை வாளாய் சுழற்றிக் கொல்லப்பட்ட செயல்வீரர்களின் எண்ணிக்கையே இந்த சட்டத்தின் தீவிரத்தன்மைக்கு நிலை சாட்சியம்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் என்னென்ன கேள்விகளை எப்படியெப்படி கேட்கலாம். எடுத்துக்காட்டாய் சந்திக்கு வந்திருக்கும் இந்த லோகயுக்தாவையே எடுத்துக் கொள்வோம். 

இவரது முதல் வீடு/வீட்டுமணை வாங்கப்பட்ட வருடம் இடம் வீடு கட்டப்பட்ட வருடம் இரண்டிற்கும் செலவிட்ட பணம்வந்தவழி விபரம் மற்றும் அந்த பரிவர்த்தனையில் தொடர்புடைய ஆவணங்களின் நகல்கள். (ஒரு பக்க நகலுக்கு இரண்டு ரூபாய்)

தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்று சொல்லிவிட்டு தெரிந்த தகவலைப்போய் ஏன் கேட்க வேண்டும் என்கிற கேள்வி எழலாம். உங்களுக்குத் தெரிந்த தகவலுக்கு சட்டபூர்வமான ஆதாரமாய் ஆக்கிக்கொள்ளத்தான் தகவல் அறியும் உரிமைச்சட்டம் உதவும். வெறும் கிசுகிசுக்களை வைத்துக்கொண்டு வழக்குத் தொடர முடியுமா? 

இப்போதிருக்கும் சட்டங்களின்படி, அரசு அதிகாரிமேல் வழக்கு போட அரசிடம் அனுமதிவாங்க வேண்டும் ஆனால் ஜன்லோக்பால் அமலுக்கு வந்துவிட்டால் அதற்கான அவசியம் இல்லை என்று இணைய சூப்பர் மேன் விட்ட பஸ்ஸை நினைவுகூர்தல் அவசியம். 

புகாரே கொடுக்க இயலாத இணைய கனபாடிகள் வழக்கு தொடர்ந்து என்ன செய்யப்போகிறார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஆனால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்டபதிலை முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரமாய்க் காட்டி புகார் கொடுக்கலாம். அடுத்து பதினைந்து நாட்கள் கழித்து நான் கொடுத்த புகாரின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று இன்னொரு RTI போடலாம். 

வானம் ஏறி வைகுந்தம்தான் போவேன் என்று அடம்பிடிப்போரை ஓடும் பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்டு நேராக வைகுந்தத்திற்குப் போ என்று அனுப்பி வைப்பதுதான் ஒரே வழி.

சரி, தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம், த.அ.உ.ச மூலம் இதேபோல் இரண்டாவது வீட்டுமணை மற்றும் வரது மனைவிபெயரில் வாங்கப்பட்ட மூன்றாவது வீட்டுமணை விபரங்களைக் கேட்கலாம். இவையனைத்தையும் தனித்தனியேகூட அல்ல ஒரே விண்ணப்பத்தில் வெறும் பத்து ரூபாயில் Under RTI Act, 2005வின் கீழ் கேட்கலாம். ACTன் கீழ் கொடுக்கப்படும் பதில் சட்டபூர்வமானது.

தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005ல் 8 (j) பிரிவின் கீழ் மூன்றாம் நபர் தகவல்கள் துஷ்பிரயோகம் செய்யப்படலாகாது என்று பாதுகாப்பு செய்யப்பட்டிருப்பதை சிலர் குறுக்கேத்தமாய் என்னைப் பற்றிய இந்தத் தகவல் தரப்படக்கூடாது அப்ப்டித்தருவது என் தனிநபர் வாழ்வுரிமையில் அத்துமீறுவதாக இருக்கும் என்று தடைபோடக்கூடும். ஆனால் கேட்கப்பட்ட தகவல் பொது நண்மை சார்ந்தது என மேலிர்ப்பவர் நினைத்தால் தனி நபரின் ஆட்சேபணையை மீறி கேட்கப்பட்ட தகவலைக் கொடுக்கலாம். அப்படியும் மேலதிகாரி தகவல் தர மறுக்கிறார் எனில் அதை எதிர்த்து அதற்கும் மேல் இருக்கும் மேல்முறையீட்டிற்குச் செல்லலாம்.

மேல இருக்கறவங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுபா எந்த காலத்துல ஒரு திருடன் இன்னோரு திருடனைக் காட்டிக் குடுத்துருக்கான் என்று அத்தைப்பாட்டிக் கதை பேசுவோருக்கு எந்த சட்டத்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. மெல்ல கூகுள் பஸ் உழுது மென்றபடி காலம் கழிக்க அவர்களுக்கானது அவல் மட்டுமே.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத்தக்க சட்டபூர்வ ஆதாரம் கொடுத்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் ஊழல் அதிகாரிக்கு உதவிசெய்ய, உயர் பதவியில் இருப்பவர் (அவரும் ஊழலாளரே எனினும்) என்ன ஊழல்காரரின் வைப்பாட்டியா?

ஏற்கெனவே ஒருவீடு இருக்கையில் எப்படி மீதி இரண்டுவீடுகள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து உங்களுக்கு ஒதுக்கப்பட்டது என்று பத்திரிகை கேட்டால் லோகயுக்தாவின் பதில் என்ன தெரியுமா? நம்புங்கள் இது அவரது வார்த்தை.

”அப்படி (விதியை மீறி முறைகேடாய்) வீட்டுமணை ஒதுக்கப்பட்ட நீதிபதி நான் மட்டுமே அல்ல அநேகமாய் உயர்நீதிமன்ற மற்றும் (கர்நாடகாவில் இருந்து சென்ற) உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் இப்படித்தான் வீட்டுமணைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.”

இதில் கேலிக்கூத்து என்னவென்றால், ”In fact, the Supreme Court, in a ruling of November 15, 2010, observed that house building cooperative societies are meant for “the poor and needy.”

அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பாலுக்குக் கீழ் நிர்வகிப்படுகிறபட்சத்தில் லோகயுக்தாவை நிர்வகித்து நீதி பரிபாலனம் செய்வதைவிடவும் லோகயுக்தாவிற்கு தும்பைப்பூ தூய்மையில் ஆட்களைத் தேடிப்பிடிப்பதுதான் படா பேஜாரான காரியமாய் ஆகிவிடும் போல் தோன்றுகிறது.

தமிழ்நாட்டு லோகயுக்தாவுக்குப் பிரச்சனை இல்லை. நோண்புப்படைப் போராளிகள் பட்டியலின் இணைய கோட்டாவில் தூய இலக்கியத்திற்கு ஒருவரும் பரப்பிலக்கியத்திற்கு ஒருவருமாக இருவரை நியமித்துவிடலாம். (இன்னொருவர் ‘குல்லாவுக்கு உள்ளே இருப்பது என்ன’ கட்டுரைக்கு பதில் சொல்லப்போவதாய்க் ட்விட்டரில் கச்சை கட்டிக்கொண்டவர்)

இந்த மூவர் போக, மீதமுள்ள மாவட்டங்களுக்கான லோகயுக்தாக்களை எந்த கிரகத்தில் இருந்து இறக்குமதி செய்யலாம் என, அதிக ஓட்டுவித்தியாசத்தில் வென்ற அரசியல்வாதிகளையும் மணிபர்ஸ் உபயோகிக்காத உயர்மட்ட அரசு அதிகாரிகளையும் கொண்ட ”தூயோர் தேடல் குழு”வை அமைப்பது ஒன்றுதான் வழி. 

தூயோர் தேடல் குழு சமர்ப்பிக்கும் லோகயுக்தாக்களின் பட்டியலை இறுதிசெய்யும் பொறுப்பை இணைய ஹசாரே ஜெயமோகன் அவர்களிடம் விட்டுவிட்டால் கவலையே இல்லை. முதல் ஐந்தாறு இடங்களில் புனைவெழுத்தாளர்-ஜெயமோகன், கட்டுரையாளர்-ஜெயமோகன், விமர்சகர்-ஜெயமோகன், சின்ந்தனையாளர்-ஜெயமோகன், தேசாபிமானி-ஜெயமோகன், சினிமாக்காரர்-ஜெயமோகன்,ஜெயமோகன்-ஜெயமோகன் என்று முன்னொதுக்கிவிட்டு இரண்டே நிமிடத்தில் அகவெழுச்சி கொண்டவர்கள், ஆன்மாவைக் கிளப்பிக்கொண்டவர்கள்,படைப்பூக்கத்துடன் குலுக்கிக்கொண்டிருப்பவர்கள் என்று தரவரிசைப்படுத்தி, பட்டியலை இருபதுபக்கக் கட்டுரையாகப் தட்டச்சியேக் கொடுத்துவிடுவார். 

அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் இரண்டாம் பதிப்பில், லோக்அயுக்தாக்களின் பட்டியலைப் பிற்சேர்க்கையாக்கி, போனஸ் பக்கங்கள் என்று அட்டையிலேயே விளம்பரம் செய்து, மலிவு விலைக்குத் தள்ளிவிட்டால் மண்ணையும் பொன்னாக்கி விடலாம். கூடுதல் உபயோகமாய் நோட்டுக்கு சில்லறை இல்லாத டீக்கடைகளில் பொறை கஜுரேவுக்கு பர்த்தியாய்க் கொடுக்கவும் பயன்படும். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஊழலுக்கெதிரான விழிப்புணர்வை தமிழ்ச்சமூக வாணலியில் கிண்டிவிட்ட தேசப்பணியாகவும் தேசீயப்பணியாகவும் அது அமையும் என்பதுதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.