15 September 2011

குல்லாவுக்கு உள்ளே இருப்பது என்ன?

 Chenthil 

@ 
 I shudder to think of Vinavu/Roza/Maamallan/Ravisrinivas deconstructing what is essentially modern thiruvilayadal.

யார் இவர்? நம்மை ஏன் இவர் வம்புக்கு இழுத்தார்? இது எதற்கானது என்று அவரது ட்விட்டுகளில் தேடப்போய் அது கிடைக்கவில்லை எனினும் இந்த பொக்கிஷம் கிடைத்தது.

 Chenthil 

Before going to SC for Samacheer kalvi, Jeya should learn from history why the previous brahmin CM of TN resigned. 


ஜெயமோகக் கும்பல் விக்கிபீடியாவில் அடித்த கூதலில் விக்கிபீடியாவின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியானது. திரு.சோடாபாட்டில் அவர்களையும் கொழுந்துகளில் ஒருவராய் சந்தேகிக்க நேர்ந்தது. அதற்காக அவரிடம் இந்தத் தருணத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிபீடியாவை இன்னும் கொஞ்சம் ஆழமாய் ஆங்கில விக்கியின் தரத்திற்குக் கொண்டுவர முடியாதா? குறைந்தப்ட்சம் தகவல் பிழைகளையேனும் களையக்கூடாதா? 

1952 வரையில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட மதராச (சென்னை) மாகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

மாநிலங்கள் சீரமைப்பிற்கு முன்பான சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1954 வரை பதவி வகித்தார்.

as Chief Minister of Madras state from 1952 to 1954.

The Modified Scheme of Elementary Education or New Scheme of Elementary Education or Madras Scheme of Elementary Educationdubbed by its critics as Kula Kalvi Thittam (Hereditary Education Policy) (Tamilகுலக் கல்வித் திட்டம்), was an abortive attempt at education reform introduced by the Indian National Congress Government of the Madras State, led by C. Rajagopalachari (Rajaji) in 1953.

The scheme was dropped completely by Rajaji's successor Kamaraj in 1954.

ஆங்கிலத்தில் இரு தரப்பு கருத்துக்களும் 1953ன் சம்பவங்களுட்பட குறைந்த இடத்திற்குள் நன்கு பதியப்பட்டுள்ளன.

எளிதாய் இன்று எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களுக்கும் கூட  ஒரு காலத்தில் எவ்வளவு போராடவேண்டி இருந்திருக்கிறது.

சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே? - பாரதிதாசன்

அரசாங்க அல்லது வங்கி குமாஸ்தா ஆவதே பிராமண மத்தியதர வர்க்கத்தின் உச்சபட்ச இலக்காய் இருந்த காலத்தில் பாலிடெக்னிக் பரவலாக்கப்பட்டபோது ’படிப்பு வராத பசங்களுக்கானது’ என்று ஏளனமாகப் பார்க்கப்பட்டது. குமாஸ்தா ஆவதற்கான படிப்பு மட்டுமே சிறந்தது என்கிற மனநிலையின் வெளிப்பாடு மட்டுமே இது என்பதை காலம் நிரூபித்தது.

இந்த டிப்ளமாக்களால் தொழிற்சாலகளில் நல்ல வேலை கிடைக்கத் தொடங்கியதும் இதே பாலிடெக்னிக்குகளை சுட்டிக் காட்டி, இதே வாய்கள்தான் ‘இதைத் தானே ராஜாஜி அந்த காலத்துலையே தொழிற்கல்வின்னு கொண்டாந்தார். வெட்டிப்பசங்கள்ளாம் ஒண்ணா சேந்துண்டு அதைக் குலக்கல்வின்னு பிராண்ட் பண்ணிட்டா’ என்று தமக்குள் பேசிக்கொண்டதும் நினைவில் இருக்கிறது.

எந்தத் தொழிலுக்கானக் கல்வியையும் எவனும் பயிலலாம் என்கிற பாலிடெக்னிக்கும் அவரவர் பரம்பரைத் தொழிலை அவரவர் வீட்டில் பயிலச் சொல்லிக் ’கட்டாயப் படுத்துவதும்’ ஒன்றாகுமா?

மேலோட்டப் பார்வைக்கு நிறைய விஷயங்கள் ஒன்ருக்கொன்று தொடர்பற்றவையாகத் தோன்றுவது இயல்புதான்.

சமீபத்தில் விஜய் டிவி நடத்திய ஜன்லோக்பால் பற்றிய நிகழ்ச்சியின் ஆதார நிகழ்வாய் எனக்குப்பட்டது இந்தப் பகுதி. ஆனால் ஊழல் ஒழிப்பு ஆவேசிகளால் ஒரு வார்த்தைகூட சொல்லப்படாமல் சாதுர்யமாய் தாண்டிச்செல்லப்பட்ட பகுதியும் இதுவேதான். 

அன்னா குல்லா அணிந்திருந்த ஒருவரிடம் எதிர் தரப்பின் கடைசி வரிசையில் இருந்த ‘கறுப்பர்கள்’ இருவர் ஆவேசமாகக் கேட்ட கேள்வி, ஜன்லோக்பாலில் ரிஸர்வேஷன் உண்டா?

தினந்தோறும் இடப்பட்ட ஸ்ரீசூர்ணத்தின் தழும்போவெனத் தோற்றமளித்த நெற்றியுடன் இருந்த குல்லா இளைஞரின் பதில்: இல்லை.

சட்டெனப் பார்த்தால் இந்த அப்பட்டமான கேள்வி, ஐயே எந்த இடத்தில் என்ன கேள்வி எனத் தோன்றக்கூடும். ஊழலிலும் ஒதுக்கீடு வேண்டுமாம் என்றுகூட இதைக் கேவலப்படுத்தலாம். ஆனால் இதை அமைதியாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லி விளக்கினார் ஓவியா.

எவ்ளோ கஷ்டப்பட்டு போராடி அரசியல் நிர்ணய சட்டத்திற்கு உள்ள யே ரிசர்வேஷனைக் கொண்டுவந்தா, நீங்க வேற ஏதோ ஒண்ணை புதுசாக் கொண்டுவந்து இருக்கற சட்டங்களைக் கேள்வி கேப்போம்னு சொல்லும்போது ஊழலை ஒழிக்கறதுதான் உண்மையான நோக்கமான்னு சந்தேகம் வருவது இயல்புதானே. ஜன்லோக்பால் அப்படிங்கறப் பேர்ல வந்து உக்காரப்போறவங்க யாரு? அவங்களை யார் கேள்வி கேக்கறது.

ஊழலுக்கு எதிராய் நடவடிக்கை எடுக்க, இருக்கிற சட்டங்கள் போதாது போதாது என குரல் கொடுப்பதில் யார் முன்னணியில் நிற்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே விடை தெரிந்துவிடும். சிலவருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்திலும் இதே  குரல்கள்தான் தட்டுப்பட்டன. ஒரே வித்தியாசம் அப்போது அவை குல்லா அணிந்திருக்கவில்லை.

எது ஒன்றுக்கும் ஆதரவு எதிர்ப்பு என்பதல்ல, அதன் பின்னாலும் உள்ளேயும் புதைந்திருக்கும் கருத்தாக்கங்கள் என்ன என்று கவனிப்பதும் மிக அவசியம்.

இன்றைய இளைய தலைமுறை நன்றியுடன் கட்டாயம் உணர்ந்துகொள்ள வேண்டிய வரலாறு. http://en.wikipedia.org/wiki/Hereditary_education_policy