01 September 2011

வாழும் கணங்களும் - நீலத்திமிங்கலங்களும் - வயிறுவலிக்க சிரிக்கவேண்டுமா!


<நம் காலத்தில் வாழும் மகத்துவமான கவிஞர் தூத்துக்குடியில், கடலுள்ள ஊரில்தான் வசிக்கிறார்.> 

<எல்லொருமே ஒரு ஜென் தருணத்திற்காக காத்திருக்க வேண்டியதுதான் போலும். பூனையோடு எனக்கு ஏற்பட்ட ஜென் தருணத்தைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். பூனையும் நானும் ஒரு மூலையில் மாட்டிக்கொண்டோம். பூனையும் ‘புர்ர்’ என்றது நானும் ‘புர்ர்’ என்றேனே அதே கணம்தான். >

<ஊர் போய் இறங்கியதும் ஹோட்டலில் காத்திருந்த நண்பர்களை சட்டைசெய்யாமல் நேரடியாக கணிணி முன் உட்கார்ந்து குடிக்கு எதிரான என் கட்டுரையை எழுதினேன். ஆவேசமாக டைப் செய்ததில் வழமை போலவே டிவிஸ் கீபோர்ட் உடைந்துவிட்டது.>

<நீலத்திமிங்கலங்களைப் பற்றி இனிமேல்தான் விக்கிப்பீடியாவில் தேட வேண்டும்.>

***

‘அதுதான் ஜென் தருணம்னு சொல்றாங்க’ என்றேன். ‘அப்டீன்னா?’ ‘கடவுள் நமக்கு ஞானத்தைக் குடுக்கிறது கொஞ்சம் கொஞ்சமா இல்ல…சட்டுன்னு ஒரு நிமிஷத்திலே அப்டியே வாசலத் தெறந்திடுறார். அந்த வாசலை நாம தட்டிக்கிட்டே இருக்கலாம். சிலசமயம் ஆயுசுபூராக்கூடத் தட்டலாம். ஆனா நினைச்சிருக்காத நேரத்திலே சட்டுன்னு அது தெறந்திருது…’ ‘ஆமாசார்…நான் இப்பமும் மாசம் ஒண்ணாம்தேதி திருச்செந்தூரு போய்டறது’ என்றார்.

வாழும் கணங்கள் - ஜெயமோகன்